சமீப பதிவுகள்

பெண்களுக்கு அபாயகரமான உலகம்…!!!

செய்தி :

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி முடிவில் வெளியிட்ட செய்தியில், இந்தியா பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டில் முதலிடத்திலுள்ளது. மேலும் மனித கடத்தல், கட்டாய திருமணம் பாலியல் அடிமைத்தனம் என பல விஷயங்களில் இது அடங்குகிறது.

மேலும் இந்த முடிவின் படி அதிகமான ஆசிட் தாக்குதல், பெண் பிறப்புறுப்பு உருச்சிதைவு, குழந்தை திருமணம் மற்றும் தாக்குதல் என அனைத்திலும் அபாயகரமான நாடாக இந்தியா விளங்குகிறது. இதே கருத்து கணிப்பின் படி 7 ஆண்டுகளுக்கு முன் இந்தியா நான்காவது இடத்திலிருந்தது.

10 நாடுகளில் 9 நாடுகள் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ளது. பத்தாவது நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த முடிவு அனைத்தும்  இயக்கத்தோடு நேரடியாக தொடர்புடையதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்து :

இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கலாச்சார மற்றும் மத நம்பிக்கை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மதசார்பின்மை முதலாளித்துவ சித்தாந்தத்தின் நடைமுறைகளால், இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த கணிப்பின் வலிமை சர்ச்சை கூறியதாக இருப்பினும், பெண்களின் நிலைமை பல இடங்களில் மோசமாகவே உள்ளது.

பெண்கள் மற்ற குடிமக்கள் போல பாதுகாப்பு,கல்வி,மருத்துவம் போன்றவற்றின் தேவை பெற்றவர்கள். இவை அனைத்தும் அடிப்படை உரிமைகள். #மீடூ இயக்கத்தின் மூலம் அமெரிக்கா இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்கத்திய மாதிரியான பெண்களின் முன்னேற்றம் என்பது தவறானது. இந்தியா ஜனநாயகத்தை நடைமுறை படுத்தி, இந்த பகுதியில் சிறந்த பொருளாதாரத்தை கொண்டதாக வெளிப்படுத்தினாலும், பெண்களை நடத்தும் முறையில் மோசமான சாதனையை கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் கூறியதாவது, “உலக தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்ற பிராமனங்கள் படி 2030 ஆம் ஆண்டுக்குள் பெண்களின் மீதான குற்றங்கள் அழிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்க்கையை மேற்கொண்டு, அரசியல் பொருளாதாரம் மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்க முடியும் என்றார்கள். ஆனால் இத்தகைய பிரமானத்திற்கு பிறகும் மூன்றில் ஒரு பெண் தாக்குதலுக்கோ அல்லது பாலியல் தாக்குதலுக்கோ உள்ளாகின்றனர்.” இந்த உலகம் விழித்து கொண்டு உணர வேண்டிய விஷயம் என்னவெனில் பெண்களின் நிலைமை தற்போதைய மத சார்பின்மை அரசியல் முறையை நீக்காமல் மாறாது. தலைவர்களின் உறுதி மொழி அர்த்தமற்றது மேலும் மக்களின் நடைமுறைகள் மாறவில்லை, நடைமுறைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் கூத்து கருத்துகள் மற்றும் சட்டங்கள் உண்மையான மாற்றத்திற்கு தேவைப்படுகிறது.

இந்த பத்து நாடுகளில் முஸ்லீம் நாடுகளும் அடங்கும். சில தருணங்களில் பெண்கள் சரியான முறையில் நடக்கப்படவில்லை. இது பெண்கள் பற்றிய பொதுவான பார்வையாகும், திரைப்பட துறையின் மூலம் பெண்களை காட்சி பொருளாக்குதல், போர் சந்தர்ப்பத்தில் பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல், இஸ்லாத்தின் அடிப்படையற்ற கலாச்சார நடைமுறை என்பன காரணமாகும். இவைகளை மாற்றுவது சாத்தியமற்றது போல் தெரிகிறது.

வருடம் வருடம் இந்த முதலாளித்துவ நாடுகளில் பெண்கள் உரிமைகள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன அதேவேளையில் பெண்களின் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் அதிக அளவில் உள்ளன. ஒரு பக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து சட்டங்கள் இயற்றப்படும் வேலையில், மற்றொருபக்கம் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ வழியில்லாமல் உள்ளனர். இத்தகைய நடைமுறைகள் கிழக்கு நாடுகளிலும் சில பின்தங்கிய வழக்கங்களாலும் , வளர்ச்சிபெற்றதாக கூறும் மேற்கு நாடுகளில் பெண்களை காட்சி பொருளாக பார்ப்பதாலும், துன்புறுத்துவதாலும் நிலவுகிறது. சில சட்டங்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. தலைகீழ் மாற்றங்களை கொண்டுவரும் சிறந்த கருத்துகளே தேவைப்படுகிறது

கடந்த காலத்தில் இஸ்லாம் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து பெண்சிசு கொள்ளுதல், திருமண உறவினால் பெண்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் சமூகத்தில் பெண்களை பாகுபடுத்தல் போன்ற செயல்களை நிறுத்தியது. ஆரம்பத்தில் இத்தகைய செயல்களை குர்ஆன் கேள்வியெழுப்பி அதனை அவமானப்படுத்தியது , இதன் மூலம் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கியது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்களுக்கெதிரான தடைகளை எவ்வாறு நீக்குவது என்பதை செய்து காட்டியுள்ளார்கள். உதாரணம் தன் தத்துப்பிள்ளையின் மனைவியை அவரது விவாகரத்திற்கு பிறகு திருமணம் மேற்கொண்டார், இத்தகைய செயல்கள் அக்காலத்தில் சிந்திக்க முடியாத ஒன்று. மேலும் இஸ்லாமிய சட்டங்கள், பெண்களுக்கு உதவும் வகையில் சொத்துரிமை, திருமணம்,விவாகரத்து,அவதூறிலிருந்து தடுத்தல் போன்ற விஷயங்களுக்கு அருளப்பட்டது. மேலும் இஸ்லாமிய அரசு மதினாவில் நிறுவப்பெற்ற பிறகு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

பெண்கள் மரியாதைக்குரியவர்கள் எனும் கருத்து கிலாஃபத் ஆட்சிமுறையில் உண்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கலீஃபா முஃதஸிம் அவமானப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் குறளுக்காக தன்னுடைய ராணுவத்தை அனுப்பியது மூலம் அறியலாம்.

மேலும் இஸ்லாமிய சமூகம் என்பது பெண்களை சமூகத்தில் ஒரு பகுதியாக பார்த்து அவர்களுக்கு ஷரியா அனுமதித்த அனைத்து துறைகளிலும் பொறுப்பை கொடுத்துள்ளது. உதாரணம் ஒரு பெண் ஆட்சியாளரை கேள்விகேட்கலாம்,நீதிபதியாக செயல்படலாம்,தன்னுடைய செல்வத்தை முதலீடு செய்யலாம் போன்றவையாகும்.

இன்று, இந்த மதசார்பற்ற அரசு முறையே இந்த உலகை பெண்களுக்கு ஆபத்தாக ஆக்கியுள்ளது. முஸ்லீம் நாடுகளில் கூட அல்லாஹ்வின் சட்டங்களை வாழ்வியலிருந்து பிரிக்கும் இந்த கேடுகெட்ட அரசுமுறையே தான் நீக்க வேண்டிய அபாயமாக உள்ளது, இதற்க்கு மாற்றாக மனிதர்களை கண்ணியப்படுத்தும் சட்டம் தேவைப்படுகிறது. இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு செயல்படும் அரசமைப்பும், சட்டங்கள் மட்டுமே இத்தகைய கொடுமைகளை கட்டுப்படுத்த கூடும், மேலும் எவராலும் மாற்ற முடியாத நிலையான சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

துருக்கி நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் என்பது நெடுங்கால ஏமாற்று காலத்தின் முடிவின் தொடக்கமாகும்…!!!

செய்தி :

ஜூன் 24 அன்று, துருக்கி ஜனாதிபதி தேர்தலை சந்திக்கிறது, இதன் மூலம் தற்போதைய அரசை ஜனாதிபதி அமைப்பாக மாற்ற ஜனாதிபதி நாடுகிறார். கருத்து கணிப்பு படி 45 முதல் 55 சதவீதம் மக்கள் ஜனாதிபதி எர்டோகனுக்கே வாக்களிப்பர். இன்னும் எதிர் கட்சிக்கு தேர்தல் நடுத்த நடு நிலையான சூழல் இல்லை என ஹகன் பெர்க்ஜி (எதிர்க்கட்சி தலைவர்) கூறியுள்ளார். துருக்கி அதிகாரிகள் நாட்டினுள் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளனர். 10 சதவீத மக்கள் இந்த கருத்து கணிப்பில் பதில் சொல்ல விரும்ப வில்லை, எதிர்க்கட்சி தலைவர் இந்த இணையதளத்தை அரசுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வருவதற்காக பொய்யான கணிப்பை மேற்கொண்டதாக குற்றம் சாட்டுகிறார்.

கருத்து:

ஜனநாயகம் மக்களின் கருத்தை குழப்புகிறது, அதுவே இந்த துருக்கி தேர்தல் தயாரிப்பு விஷயத்திலும் ஏற்பட்டுள்ளது. எர்டோகன் மற்றும் அவரது கட்சி உதுமானிய கிலாஃபாவின் மரபில் செயல்பட்டு அதனுடைய மகிமைப்பிக்க மகிமையால் மகிமைப்பட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன் எர்டோகன் பொய்யான வெற்றியை பெற்றுள்ளார், உதாரணத்திற்கு ஏபிரீன் (இது அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் இழைத்த துரோகம் ஆகும்), அவருடைய எதிரிகளை ஒடுக்குதல், மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டை மேம்படுத்தியதாக மக்களை ஏமாற்றியது(உள்நாட்டு வட்டி, நாட்டின் வெளி கடனை உள்நாட்டு வங்கியின் கடனாக மாற்றியது), இறுதியாக துருக்கி நாணயத்தின் பணவீக்கம்.

இவ்வாறு, எர்டோகன் மற்றும் அவருடைய கட்சி தேர்தலுக்கான சூழலை உருவாக்கி, அச்சமான மற்றும் ஏமாற்றமான நிலையை உருவாக்கி, மக்களுக்கு இரண்டு விருப்பங்களை கொடுத்துள்ளது, ஒன்று இறைமறுப்பை வெளிப்படுத்தும் மத சார்பின்மை மற்றொன்று மத சார்பின்மைக்குள், மத சாயத்தை உடுத்திக்கொண்டு உதுமானிய அரசை தூக்கிப்பிடிப்பது.

மக்களின் சிந்தனை வீழ்ச்சி , அல்லது சரியான தேர்வு இல்லாமல் இருத்தல் என்ற நிலை மாறியிருந்தால் இரு தரப்பினருக்கும் வெற்றியை சூட முடியாது, ஆனால் மக்களிடமுள்ள சிந்தனை திறனை அழிக்கும் நோயால், துருக்கி மக்களின் தேர்வு அவர்களின் இறை நம்பிக்கையின் முடிவாகவோ, அவர்களின் விருப்பத்தின் பிரதிபலனாகவோ இருக்காது.

எர்டோகனின் வெற்றி என்பது இஸ்லாம் மற்றும் அதன் மூலமாக ஆட்சி செய்வதென்பதை துருக்கி மக்கள் விரும்பவில்லை என பொருள்கொள்ள முடியாது மாறாக இதற்கு எதிரான கருத்தே உண்மையாகும். இஸ்லாம் பற்றிய பொது கருத்து இல்லை எனும் பட்சத்தில், எர்டோகன் மற்றும் அவருடைய கட்சி இஸ்லாத்தின் போர்வையில் மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.

விசுவாசமான கூட்டத்திற்கு அல்லாஹ் (சுபு) கிலாஃபத்தை வழங்கும் நாள் வெகு தூரமில்லை, துருக்கி ராணுவத்தில் அதிகாரம் பெற்ற மக்கள் அல்லது மற்ற முஸ்லீம் ராணுவத்தின் மூலமாக உம்மாவிற்க்கான தலைவரை தேர்வு செய்து, முன்பிருந்த கிலாஃபா ராஷிதா, அவர்களுக்கு பின் உமையாக்கள்,அப்பாஸியாக்கள், மற்றும் உதுமானிய கிலாஃபாவில் பெற்றிருந்த மகிமையே இந்த உம்மாவிற்கு கிடைக்கும்.

(وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا)

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். [65:3]

நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நிரம்பியிருக்கின்றது அவர்களுடைய பைகள்

செய்தி:

பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் அவர்களுடைய நிதி விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை காட்டுவதற்காக தங்களுடைய சொத்துக்களை பாகிஸ்தானிய தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர்களுடைய விண்ணப்பத்தில் அறிவித்துள்ள சொத்துக்களின் விவரத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டதன் மூலமாக வாக்காளர்களுக்கு தங்களுடைய தலைவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்களை காணும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. (ஆதாரம்: the national.ae)

கருத்து:

பாகிஸ்தான் உருவாகிய 71 வருடங்களில் இந்த தேசத்தை வலுவானதொரு பொருளாதாரமாக உருவாக்குவதில் அயராது உழைத்ததன் காரணமாக ஒருவருடைய செல்வம் குறைந்து போனது எனும் நிலையை கொண்ட தலைவர் எவரையும் அதனுடைய மக்கள் இதுவரை கண்டதில்லை. பாகிஸ்தானுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பலவந்தமாக உருவான அரசுகளின் வரலாறு எவர் பதவிக்கு வந்தாலும் பொது மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்கப்படாத நிலையில் அதன் தலைவர்கள் மிகப்பெரிய அளவிலான சொத்துக்களை குவித்துள்ளதாக கூறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மோசமான சேவைகள் மற்றும் தரம் குறைந்த பொருட்களுக்காக அதிக அளவிலான நேரடி மற்றும் மறைமுக வரிகளை செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் அடித்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 17 சதவீதத்தை மறைமுக வரிகளாக (வாங்கும் பொருட்களில்) செலுத்தி வருகின்றனர் அதேவேளையில் மேல்தட்டில் உள்ள 10 சதவீத மக்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 10 சதவீதத்தை மறைமுக வரிகளாக செலுத்தி வருகின்றனர். பிரதம மந்திரியின் வீட்டிற்காக நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2.3 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவது என்பது இந்த வரியின் மூலம் பெறப்பட்ட வருவாய் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சொந்தமானவை என்று அறிவித்த விவசாய நிலங்கள், சொத்துக்கள், சொகுசு கார்கள், குதிரைகள், வங்கி கணக்குகளின் விவரங்களானது உண்மையில் அவர்கள் சொந்தம் கொண்டாடுபவற்றைக் காட்டிலும் மிக சொற்பமானதே. டெய்லி மெயிலின் சமீபத்திய அறிக்கை ஒன்று, மியான் நவாஸ் ஷரீஃப் மற்றும் அவருடைய மகன்கள் £32 மில்லியன் மதிப்புமிக்க சொத்துக்களை லண்டனின் பளபளப்பான முகவரிகளில் கொண்டுள்ளதாக தெரிவித்தது. அனைத்தும் முஸ்லிம்களுடைய தசைகளிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் மற்றும் இந்த உம்மத்திற்காக அல்லாஹ் (சுபு) வழங்கிய வளங்களிலிருந்தும் வடிகட்டி எடுக்கப்பட்டதாகும். தற்போதய ஆட்சியாளர்கள், முந்தய ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களாக ஆகப்போகிறவர்கள், அனைவரும் பகட்டான முறையில் வாழ்ந்து வருகின்றனர், அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர், மற்றும் அவர்களில் நோயுற்றுள்ளவர்கள் வெளிநாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேவேளையில் அவர்களுடைய மக்கள் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கடினமாக உழைக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தலைமைத்துவம் எனும் இந்த பதவியானது நம்பிக்கைக்குரியது என்றும் மாபெரும் பொறுப்பை கொண்ட நிலையை உடையது என்றும் மேலும் இதனை வலுவான ஆளுமை மற்றும் திறமையுடன் “தக்வா” வை உடைய ஒருவரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்பதனை இந்த உம்மத்துடைய மக்கள் உணர வேண்டும். இவ்வகையான மக்கள், தங்களிடத்தில் ஆட்சியமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால், அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வியாபாரங்களில் மேம்பாட்டை கொண்டு வருவதற்கு பதிலாக தாங்கள் ஆட்சி செய்யும் மக்களுடைய வாழ்வில் மேம்பாட்டை கொண்டு வருவார்கள். உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள், தனது பதவியேற்பு விழா நிறைவுற்று, கலீஃபாவாக பைஅத் பெற்று திரும்புகையில், அரசு குதிரைகள் அவருக்காக காத்திருப்பதை கண்டார்கள். “எனக்கு இவை தேவையில்லை,” என உமர் கூறினார்கள். “எனது கோவேறு கழுதையே எனக்கு போதுமானது. இந்த குதிரைகளை விற்று அதன் வருவாயை பொதுக் கருவூலத்தில் (பைத்துல்மால்) சேர்த்து விடுங்கள்.” “நான் எனது மக்களிடமிருந்து விலகியிருக்க விரும்பவில்லை” எனக் கூறி அவர் தனது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட வீரரையும் அனுப்பி வைத்தார்கள். “அனைத்து ஆடம்பர பொருட்களையும் விற்று அதன் மூலம் வரும் பணத்தை பொதுக் கருவூலத்தில் சேர்த்து விடுங்கள்” எனக் கூறி அனைத்து ஆடம்பரங்களையும் தவிர்த்து விட்டார்கள். உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் விட்டுச்சென்ற பாரம்பரியத்திற்கான காரணம் அவர் ரசூலுல்லாஹ் ﷺ வுடைய உதவியாளர் எனும் பொறுப்பை உண்மையாக செயல்படுத்தினார் என்றும் அல்லாஹ் ﷻ வுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று அவர் செயல்பட்டது தான் என்றும் நாம் அனைவரும் அறிவோம்.

எகிப்து பகுதியிலுள்ள மக்கள் ஏற்கனவே எர்துகனை தேர்ந்தெடுத்துள்ளனர் சிரியாவிருந்து வந்த அகதிகள் கூடாரங்களில் அழுகிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் மூக்குக்கு கீழே பாலஸ்தீனர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் அவர் 700 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட மாளிகையில் வாழ்ந்து வருகிறார், அதேநேரத்தில் பாகிஸ்தானிலோ ஆஃபியா ஸித்தீகீயை திரும்ப கொண்டு வருவதாக வாக்குறுதியை அளித்து 2013ல் வாக்குகளை பெற்ற மியான் நவாஸ் ஷரீஃபுக்கும் அதை நிறைவேற்ற தவறியதற்காக அவரை விமர்சித்து வரும் இம்ரான் கானுக்கும் மத்தியில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை தான் இருக்கின்றது. தேர்தலில் போட்டியடுபவர்களில் எவரும் இவ்விஷயத்தை தமது திட்டத்தில் தற்போது கொண்டிருப்பதாக தெரியவில்லை. இந்த கைவிடும் செயலானது மேலும் அதிகமாகி அவர்கள் பாதுகாக்க முற்படும் விஷயங்களை அடையும் காலம் வரை எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் வெற்று கையுடன் நிற்பார்கள். ஆகவே முதலில் இதுபோன்ற துரோகிகளை கைவிட வேண்டும் இதன் காரணமாக எதையாவது நாம் இழப்போமேயானால் அது இழப்பாக இருக்காது ஏனென்றால் நாம் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியான அல்லாஹ் (சுபு)வுடன் வர்த்தகத்தை மேற்கொள்பவராக இருப்போம்.

«إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ وَإِنَّهَا سَتَكُونُ يَوْمَ الْقِيَامَةِ حَسْرَةً وَنَدَامَةً فَنِعْمَتِ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ»

“நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்.பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்” புஹாரி.