சமீப பதிவுகள்

நாங்கள் எங்கே செல்கிறோம்?

எப்போதும் நடைமுறை உலகம் எனும் மாயை சில உண்மைகளையும், நியாயங்களையும் புறந்தள்ளி பயணிக்க தலைப்படுகின்றது. அதன்போது பல புதிய பிரச்சனைகளையும், தீர்வுகளற்ற விளைவுகளையும் கொடுத்து இயல்பு வாழ்க்கையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றது. இன்றைய முஸ்லிம் சமூகமும், அது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளும் இதற்கொரு சிறந்த உதாரணங்களாகும்.

‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலை

பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி “அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள், சங்கங்கள், கழகங்ககள், நாடுகள் (அவர்களின் வரைவிலக்கணப்படி) பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பன போன்ற பல தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த சட்டங்களும், பாகுபாடுகளும், எந்நாடுகள் இவற்றை இயற்றினவோ, அந்நாடுளின் அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَஅல்லாஹ் அல்லாதவர்களை (தங்களுக்கு) பாதுகவலர்களாக எடுத்துக்கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியின் உதாரணத்தைப் போன்றதாகும், அது (தனக்காக) வீடு ஒன்றைக் கட்டடிக்கொண்டது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும் இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே. ( 29 : 41 )