சமீப பதிவுகள்

கென்யாவின் வெஸ்ட் கேட் தாக்குதலிலிருந்து பெறவேண்டிய பாடம்

அண்மையில் கென்யாவின்  தலைநகரான நைரோபியிலுள்ள வெஸ்ட் கேட் வர்த்தக வளாகத்தில் நடத்தப்பட்ட கொடூர   தாக்குதலைக்  கண்டு   உலகமே அதிர்ந்தது. இத்தகைய பயங்கரவாத  தாக்குதலை  அதிர்ச்சியுடனும் வேதனையுடனும்  உற்று நோக்குகின்ற இவ்வேளையில்  சில முக்கிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியமாகும். முதலாவதாக, இந்த தாக்குதல் கென்யாவுடைய பாதுகாப்பு சீரழிந்த நிலையில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்னர் மண்டியர்,புங்கோமா,கரிஸ்ஸா  போன்ற பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் சர்வசாதாரனமாக கொல்லப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.கென்யாவுடைய பெருநகரத்து மக்கள்,குண்டர்களால் தொந்தரவு செய்யப்படுவது  […]

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?

ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில்  கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது.  ஹஜ் கடமையை […]

ஆல்கஹால் கலந்துள்ள வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா?

வாசனைத் திரவியங்களில் பெரும்பாலானவை ஆல்கஹால் கலந்து செய்யப்படுபவையாக இருக்கின்றன. ஆல்கஹால், முக்கியமான கரைப்பானாகவும், எளிதில் ஆவியாகவும், காற்றில் இலகுவாக கலக்கவும், இன்னும் சில பயன்பாடுகளின் அடிப்படையில் வாசனைத்திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹால் என்பது  அறியப்பட்ட போதைப்பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாம் போதைப்பொருள்களை முழுமையாக தடை செய்திருக்கும் நிலையில், ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத்திரவியங்களை பயன்படுத்துவது கூடுமா என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகும். போதையூட்டக்கூடிய ஆல்கஹாலுக்கு என்ன சட்டமோ, அதே சட்டம்தான் ஆல்கஹால் கலக்கப்பட்ட வாசனைத் திரவியங்களுக்கும் பொருந்தும் […]