சமீப பதிவுகள்

கிலாஃபத்தின் மீள் வருகையை தடுக்கும் ரஷியா மற்றும் உலக நாடுகள்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் இரண்டாவது ஜெனீவா மாநாடு  முடிவுற்றதும்  NTV தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “சிரியாவின் அரசியல் நிகழ்வானது தன் தாய்நாட்டின் சிந்தனை கொண்ட ஆரோக்கியமான சக்திகளுக்கிடையே ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டுமே தவிர, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் கிலாஃபத்தினை மீண்டும் நிறுவுவதற்காக  அமையக்கூடாது. தாய்நாட்டின் சிந்தனை கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்து பல வழிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். இதுவே அனைத்து பிராந்தியத்திற்கும்  அனைத்து உலகிற்குமான குறிக்கோளாகும்”. […]

ஷேக் தகியுதீன் நபஹானி(ரஹ்) அவர்கள் ஃபலஸ்தீனில் இருந்தபோது நடைபெற்ற முக்கிய சம்பவம்

காலனி ஆதிக்க பிரிட்டிஷ் தளபதியாக இருந்த க்ளப் பாஷா என்பவர் தன்னுடைய தூதர் ஒருவரை  ஷேக் தகியுதீன் நபஹானி (ரஹ்) அவர்களை வென்றெடுக்க அனுப்பிவைத்தான்.அப்போது நடைபெற்ற உரையாடலை அந்த தூதர் தன்னுடைய நண்பர் அபு காஜி(ஃபத்ஹி  சலீம்)அவர்களிடம் கூறியதை இங்கு தருகிறோம்.  ஷேக் தகியுதின் நபஹானி(ரஹ்) அவர்களின் ஆபத்தை உணர்ந்த ஆங்கில தளபதி க்ளப் பாஷா என்னை ஒரு செய்தியுடன் அவர்களிடம் அனுப்பி வைத்தான்.அந்த செய்தியில், ஷேக் தகியுதின்(ரஹ்) அவர்களை புகழ்ந்தும், தங்களுடன் ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.மேலும் […]

கிலாஃபா பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள்

கிலாஃபா  கட்டாயக் கடமை என்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும்  இமாம்களின் நூல்களில் ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான அறிஞர்கள் இது குறித்து எழுதியுள்ளனர். ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களை இங்கு காண்போம்.  நான்கு  மத்ஹபுகளுடைய  சட்டங்களிலும்  நிபுணத்துவம் பெற்று விளங்கிய  இமாம் ஜுசைரி (ரஹ்)  அவர்கள்  الفقه على المذاهب الأربعة   என்ற நூலில்  கூறுகிறார்கள்:- اتفق الأئمة رحمهم الله تعالى على: أن الإمامة فرض، وأنه لا بد للمسليمن من إمام يقيم شعائر […]