சமீப பதிவுகள்

சேதமடைந்த எகிப்திய ரயில்வண்டி

SisiEconomy

அப்துல் ஃபத்தாஹ் சயீத் ஹுசேன் கலீல் எல்-சிசி ஆட்சியை பிடித்து இரண்டு வருடமாகிறது. பொருளாதார இடர்பாடு, கண்மூடித்தனமாக முடிவெடுப்பது மற்றும் வெகுஜன மக்களிடம் நம்பிக்கை குறைவு போன்றவற்றை கொண்டு முஹம்மது முர்ஸியின் ஆட்சி காலம் குறித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது. பலர் ராணுவத்தின் இரும்புக்கரம் நிலைத்தன்மையை கொண்டு வரும் என நம்பிக்கை கொண்டிருந்தனர், ஆனால் இன்றோ அதற்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கிறது, அரசியல் ரீதியாக அவரை ஏற்காதவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி வருவதாலும் மோசமான நிலையிலுள்ள பொருளாதார நிலையை சரிசெய்ய தவறியதாலும் இப்பொழுது சிசி வெகுஜனத்தின் அனைத்து மூலையிலிருந்தும் விமர்சிக்கப்படுகிறார். தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் உபயோகத்தை குறைக்கக்கூறி பெண்களிடம் அவர் வைத்த சமீபத்திய கோரிக்கை அவருடைய விரக்தி நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது[1] மேலும் வெளிநாட்டு உதவியை சார்ந்திருப்பது, உள்நாட்டு தீவிரவாதத்தை சமாளிக்க தவறியது போன்றவை அவருடைய தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மை குறித்து பலரின் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளது. சிசி நீண்ட நாட்கள் தொடர்ந்திருப்பாரேயானால் எகிப்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் மேலும் இந்த சேதமடைந்த ரயில்வண்டி இவருக்கு முன்னால் ஆட்சி செய்தவரை விட மிகவும் மோசமான நிலையை அடையக்கூடும்.

சிசி நீண்ட நாட்கள் தொடர்ந்திருப்பாரேயானால் எகிப்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் மேலும் இந்த சேதமடைந்த ரயில்வண்டி இவருக்கு முன்னால் ஆட்சி செய்தவரை விட மிக மோசமான நிலையை அடையக்கூடும். எகிப்து பல ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது, மேலும் முன்னால் அதிபர் முர்ஸி பல நாடுகளிடமிருந்து பலமுறை கடன் வாங்கியும் இந்த நிலையை அவரால் சீர்செய்ய முடியவில்லை,[2] இந்நிலை அல்-சிசியின் கீழ் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது பணவீக்கம் 14% ஆக உள்ளது அரசு முன்பு மானிய விலையில் அளித்து வந்த மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை நீக்கியதன் காரணமாக அதன் விலையில் இப்போது 40% வரை அதிகரித்துள்ளது(3). உணவுப்பொருட்களின் மானியம் நீக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொருளாதார வல்லுனர்கள் இந்த நிலைமை மிகவும் மோசமாகக்கூடும் என எதிர்பார்க்கின்றனர் அவ்வாறாயின் கோடிக்கணக்கான மக்களுக்கு விலையேற்றத்தின் காரணமாக உணவு கிடைக்காமல் போகும் ஆபத்திற்கு தள்ளக்கூடும். இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர கடனை உபயோகிக்க முயற்சிப்பது இந்த விஷயங்களை அனைத்து வகையிலும் மேலும் மோசமாக்கக்கூடும். சிசியின் அரசாங்கம் 12 பில்லியன் டாலர் கடனுக்காக சர்வதேச நிதியகத்தின் பக்கம் திரும்பியிருப்பது எகிப்தின் மொத்த கடனை 54 பில்லியன் டாலராக உயர்த்தும்.[4] தற்பொழுது நாட்டின் வருமானத்தின் 60% கடனை திருப்பி செலுத்துவதற்காக செலவிடப்படுகறது அதன் காரணமாக பொது மக்கள் சேவைக்காக சொற்ப அளவிலான தொகையையே விட்டு வைத்துள்ளது.[5] எகிப்து பிரெட்டன் உட்ஸ் நிறுவனத்துடன் ஒரு வறண்ட வரலாற்றை கொண்டுள்ளது. 1990 ல், எகிப்திய பொருளாதாரம் ஒரு உணவு ஏற்றுமதியாளர் அந்தஸ்திலிருந்து உணவு இறக்குமதியாளர் எனும் அந்தஸ்திற்கு மாறும் காட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அது தயாரிக்கும் எந்த உணவுப்பொருளானாலும், அது பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்காக வேண்டி 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்யப்பட்டது. [6] இவையனைத்தும் சிசியின் கீழ் பொருளாதார நிலைமை முன்னேறுவதற்கு பதிலாக, உண்மையில் மோசமான நிலைமையில் இருப்பதையே காட்டுகிறது. சர்வதேச நிதியகத்திடம் செல்வதென்பது ஒரு குறுகிய கால தீர்வாக தான் அமையும் மேலும் அதன் மீது கடன் சுமையை அதிகரிக்கும், அது தற்போது நிலவும் பிரச்சினைகளை நிரந்தரமாக்கும் வண்ணத்திலான பொருளாதார மறுசீரமைப்பை செய்யும் வண்ணம் இட்டுச்செல்லும்.

எகிப்தில் செயல்படுத்த போகும் திட்டங்கள் பற்றிய பல உயர் ரக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சிசி மார்ச்சில் “புதிய கெய்ரோ” உருவாக்கம் குறித்து அறிவித்தார், அது 3 கோடி மக்கள் வாழக்கூடிய அளவிலான ஒரு புதிய நகரத்தை உருவாக்கும் ஒரு சிறப்பு நகரமாகும்.[7] இதனையடுத்து சூயஸ் கால்வாயை அகலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். சவூதி அரேபியாவும் எகிப்தின் அனைத்து பகுதிகளிலும் குடியிருப்புகள் கட்டும் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது, ஆனால் எகிப்தில் ஒருபோதும் குடியிருப்பு பிரச்சினை இருந்தது கிடையாது. உண்மையில், எகிப்தின் ஜனத்தொகையில் 50 சதவிகிதத்தினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர், பிரச்சினை இருக்குமிடம் இது தான். [8] முன்பாக, இந்த அரசாங்கம் வாழ்க்கைத்தரத்தை பேணுவதற்காகவும் சமூக ஒட்டிசைவிற்கும் மானியங்கள் வழங்குவதை சார்ந்திருந்தது ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகள் அதை செய்வதற்கு இனியும் அனுமதிக்காது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த “சிறப்பு திட்டங்கள்” மற்றும் இதர திட்டங்கள் போன்ற இவையனைத்தும் வறுமை போன்று உண்மையான மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக குறுகிய கால பலனை அடைவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

எகிப்திய பொருளாதாரத்திலுள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் உண்மையில் 40% மேலான பொருளாதாரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதை ஒரு தன்னிலைபெற்ற நிறுவனமாக அறிவித்ததிலிருந்து, தொடர்ச்சியாக வந்த அதிபர்கள் அதை பாதுகாத்து வருகின்றனர் அது அவர்களுக்கு தொழில்துறை, உற்பத்தித்துறை மற்றும் நிதத்துறை சேவை ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை கொண்டிருக்க அனுமதித்தது. ராணுவத்துடன் நெருங்கிய கூட்டனியை கொண்டுள்ள இந்த பெரு நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களில் முன்னுரிமை பெற்றிருந்தினர் இதன் காரணமாக அவர்களை பல்வேறு தொழில்துறைகளில் தங்களது ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்தி சிறிய வியாபாரங்களை முன்னேற விடாமல் செய்தது. இது இந்த வகையை சார்ந்த சமூகத்தினர் சொத்துக்களை பதுக்கவும் மேலும் பொருளாதாரத்தில் அவர்கள் சொந்தம் கொண்டாடிய விகிதம் அதிகமாக்கி வளரும் எகிப்திய ஜனத்தொகையினருக்கு குறைந்த அளவிலான சொத்துக்களை மட்டுமே விட்டு வைக்கும் நிலை ஏற்படுத்தியது. சராசரி எகிப்தியன் தொடர்ந்து துயரப்பட அதிகார வர்க்கத்திலுள்ளவர்கள் செழிப்படைந்து வருகிறார்கள்.எகிப்து மீண்டும் முபாரக் காலகட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது.

கொடூரமான ராணுவப்புரட்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் பல உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கியிறுப்பது என்பது பனிக்கட்டியிஅன் நுனியை போன்றது.[10] இத்தாலிய மாணவர் கியுலியோ ரெகெனியை வலுக்கட்டாயமாக கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தது மற்றும் அதில் எகிப்திய போலிசாரின் பங்கு குறித்து உலக ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.[11] சிசியின் கீழ் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எகிப்தின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு நிறுவனம் சிசி ஆட்சியை கைப்பற்றிய 2013 ஜூலை முதல் 2016 ஜூன் வரை 2,811 நபர்கள் காணாமல் போயிருக்கின்றனர் என அறிவித்துள்ளது. [12] அரசியல் எதிர்ப்பு, ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மற்றும் தங்களது முன்வாசலில் சிசியின் புகைப்படத்தை தொங்கவிடாமல் இருப்பது ஒருவரை சிறையில் அடைத்து சசித்திரவதை செய்து திருப்பி அனுப்புவதற்கு போதுமான காரணங்களில் சில காரணங்கள் ஆகும். எகிப்தின் மக்கள் மீண்டும் சாலையில் இறங்குவதை காண நீண்ட தாள் காத்திருக்க தேவையில்லை.

1.http://www.middleeasteye.net/news/sisi-urges-egyptian-women-use-less-electricity-and-water-ease-economic-crisis-616831708
2.http://www.huffingtonpost.co.uk/john-wight/mohammed-morsi-imf_b_3560144.html
3.http://www.dailymail.co.uk/wires/reuters/article-3830627/Egyptian-inflation-eases-14–1-pct-September.html
4.http://www.bloomberg.com/news/articles/2016–10-30/egypt-moves-closer-to-imf-loan-with-china-currency-swap-deal
5.http://countryeconomy.com/national-debt/egypt
6.http://hudson.org/research/12946-egypt-on-the-verge-of-crisis
7.http://www.independent.co.uk/news/world/middle-east/egypts-new-capital-president-al-sisis-300-billion-plan-to-beat-cairo-traffic-10120211.html
8.http://www.wfp.org/content/egypt-status-poverty-food-security-analysis-policy-recommendations-may-2013
9.http://www.theguardian.com/world/2011/feb/04/hosni-mubarak-family-fortune
10.http://www.ibtimes.co.uk/egypt-execute-188-muslim-brotherhood-supporters-1477782
11.http://www.bbc.co.uk/news/world-middle-east-35490825
12.https://www.middleeastmonitor.com/20160907-sisi-is-out-of-favour-for-egypts-sake-the-west-must-persuade-him-to-go/

– முஹம்மது உபைத்

Comments are closed.