சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 22-03-2017

g20

வடகொரியா ஒன்றும் ஈரான் அல்ல

கிம் ஜோங் உன் (kim jong un ) சக்தி வாய்ந்த புது ஏவுகணையை சொஹெ(sohae) செயற்கைகோள் தளத்தில் இருந்து மேற்பார்வையிட்டதாக, வடகொரிய அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. ஞாயிற்று கிழமை அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய தலைவரை “அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக” விமர்சித்தார். அதற்கு கிம் ஜோங் உன் “முழு உலகும் கூடிய விரைவில் இந்த மகத்தான வெற்றியின் முக்கியத்துவத்தை காண்பார்கள்.” என்று கூறினார். சந்தேகமேயின்றி வடகொரியா, அமெரிக்கா சொல்லும் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்துள்ளது. எனினும் இதற்கு அமெரிக்காவின் பதில் வெறும் சொல் வன்மையுள்ள அலங்கார பேச்சாகவே உள்ளது. இதே போன்ற பிரச்சனைக்கு ஈரான் மற்றும் ஈராக்கை ஜார்ஜ் புஷ்-யின் நிர்வாகம் கையாண்டதை போன்று இல்லாமல் வேறு விதமாக கையாள்கின்றனர்.

எண்ணெய் வளம் மிக்க நாடுகளை படையெடுத்து ஆக்கிரமித்த அமெரிக்கா, வடகொரியா விவகாரத்தில் இந்த பாணியை கையாளவில்லை. வடகொரியாவில் அமெரிக்காவிற்கு மூலோபாய (strategic) முக்கியத்துவம் என்னவெனில், அது அதிக அளவில் பாதுகாப்பிற்கும், ராணுவத்திற்கும் செலவு செய்வதும், சீனாவிற்கு அருகில் இருப்பதுமே. இதனாலேயே, அமெரிக்கா வடகொரியாவை படையெடுப்பதைவிடவும், அதை கடுமையாக விமர்சிப்பதில் மட்டுமே திருப்திக் கொள்கிறது.

யூத பயங்கரவாத நாடு இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லாஹ் படையை குறிவைத்து தாக்குகிறது.

இந்த வாரத்தில் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே தாக்குதல் அதிகபட்சமாக ஏற்பட்டதை நம்மால் காண முடிந்தது.இஸ்ரேல் அதிகமான ஏவுகணைகளை அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வீசியது. ரஷ்யா இத்தாக்குதல் குறித்து விளக்கம் தருமாறு இஸ்ரேல் அரசு தூதுவரை கேட்டு இருந்தும், ஆயுதங்கள் ஹிஸ்புல்லாவிற்கு கைமாறுவதை தடுக்கவே இவ்வாறு செய்ததாக இஸ்ரேல் அரசாங்கம் தனது தாக்குதலை நியாயப்படுத்தியது.

ஊடகங்கள், இஸ்ரேலிற்கும் சிரியாவிற்கும் உள்ள எதிர்மறையான உறவுகளை பெரிது படுத்தி காட்டினாலும், சிரியா ஒரு நம்பகமான நட்பு நாடாக தனக்கு இருப்பதை இஸ்ரேல் அறியும். எனினும், பஷார் அல் அசாத் இல்லாத சிரியா உருவாகாமல் தடுக்க, அதனை ஆதரித்து பாதுகாக்கும் ஈரானுக்கும், ஹிஸ்புல்லாவிற்குமே இஸ்ரேல் பயப்படுகிறது.

G 20 பொருளாதார சந்திப்பு

உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களின் நிதி அமைச்சர்கள் பாதுகாப்புவாத கொள்கையை (protectionist policy) கைவிட வேண்டும் என்ற உறுதி மொழியை துறந்தனர். இந்த சந்திப்பு முக்கியமாக அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பாக நடத்தப்பட்டது. அனைத்து விதமான பாதுகாப்புவாதகொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் மற்றும் தடையில்லா வர்த்தக (free trade) ஆதரவும் பெரிதாகஇச்சந்திப்பில் கண்டு கொள்ளப்படவில்லை. முன்னெப்போதும் சம்பவிக்காத இச்சம்பவம், டிரம்ப் போன்றவர்கள்முன்னெடுக்கும் பொருளாதார தேசியவாதத்தை நோக்கி ஆதரவு அதிகரிப்பதை நமக்கு காட்டுகிறது. சீனா போன்ற நாடுபாதுகாப்புவாத கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தருணத்தில், அமெரிக்கா தன்னுடைய பாரம்பரியநிலைபாடான உலகமயமாக்கலில்(globalization) இருந்து திரும்பி, பாதுகாப்புவாத கொள்கைக்கு இணங்குகிறது. அமெரிக்காவின் இந்த அணுகுமுறைக்கு ஆதரவு குரல் கொடுக்கின்ற நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அமெரிக்க கருவூலசெயலர் நுசின் (mnuchin) சந்திப்பிற்கு பிறகு பேசும் பொழுது, ” அமெரிக்கா தற்போது வர்த்தக குறைபாட்டில் கவனம்செலுத்தி வருகிறது,வர்த்தகத்தை தொடரும் அதே தருணத்தில், அந்த பற்றாக்குறைகளை காலப்போக்கில் குறைக்கஅமெரிக்கா விரும்புகிறது”. மேலும், அவர் கூறுகையில்,”நம் நாட்டில் புதிய நிர்வாகம் அமைந்துள்ளது, அது வர்த்தகம்தொடர்பாக மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளது” என்று கூறினார்.


Comments are closed.