சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 01.04.2017

 US-Secretary-of-State-Rex-Tillerson

1) நேட்டோ உறுப்பினர்களுக்கு மத்தியிலிருக்கும் சண்டை மேற்கின் இயலாமையை குறிக்கின்றது.

நேட்டோ உறுப்பினர்களுக்கான முதல் சந்திப்பில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ராணுவத்திற்கான செலவீனத்தில் மற்ற நாடுகளின் மீது கடும் போக்கை கையாண்டுள்ளார், அதனால் அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக சந்திப்புகளின் தேதியை மாற்றும் நிலமை உருவாகியள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின்படி:
28 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூடிய மாநாட்டில் டில்லர்சன் கூறுகையில் ‘வரக்கூடிய மே மாத மாநாட்டில் இந்த ஆண்டின் ராணுவ பட்ஜட்டிற்கான வழிமுறையில் தெளிவான திட்டங்களை கூட்டமைப்பின் தலைவர்கள் கொண்டுவர வேண்டும்’ என அவர் வேண்டுகோள் விடுத்தார்.நேட்டோ உறுப்பினர்கள் நேட்டோவின் ராணுவ செலவுகளுக்கு அதிகம் பங்களிக்க வேண்டும் என்ற டிரம்பின் அழைப்புக்கு மத்தியில் நடந்த இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளியன்று தொடங்கப்பட்டது.இதில் டில்லர்சன் ‘வருகின்ற வாரம் டிரம்பிற்கும் சீன தலைவருக்கும் மத்தியில் முக்கிய சந்திப்பு இருப்பதால் தாம் மாநாட்டை தொடரப்போவதில்லை’ என்ற தகவலை தெரிவித்தார். இதனால் மாநாட்டு கூட்டம் அவசர நிலையில் நடைபெற்றது “ஏற்கனவே அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியதால்,பாரபட்சமாக செலவு செய்யப்படும் நேட்டோவின் ராணுவ செலவீனங்களுக்கு அமெரிக்கா இனிமேல் ஒத்துழைக்காது. கூட்டுறவு நாடுகள் ராணுவ செலவீனங்களுக்கு அதிகம் செலவு செய்ய முன்வர வேண்டும்” என அவர் கூறினார்.அமெரிக்காவின் இந்த முயற்சியை ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கேப்ரியல் (Sigmar Gabriel) வன்மையாக எதிர்த்தார்.அவர் கூறுகையில் ‘அமெரிக்காவின் இந்த கோரிக்கை உண்மைக்கு புறம்பானது மேலும் ராணுவ செலவீனங்கள் பற்றிய விளக்கமும் தவறானதாகும்.இதற்கு கட்டுப்படுவது அவசியமில்லாத ஒன்றாகும்’ என அவர் கூறினார். ஜெர்மனியை பொறுத்தவரை, அது பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து இருக்கும் நேட்டோ உறுப்பினராகும். இருப்பினும் நேட்டோவின் ராணுவ செலவீனத்தில் அது பின்தங்கியே உள்ளது. ஜெர்மனி நேட்டோவின் ராணுவ செலவீனங்களை அதிகரித்து அதன் மூலம் அமெரிக்கா தன்னுடைய செலவீன சுமையை ஐரோப்பாவிற்கு தள்ளி விடுவதே டிரம்பின் முக்கிய குறிக்கோளாகும்.

இறைமறுப்பாளரான மேற்குலக நாடுகளை பொருத்தவரை, அங்கு சண்டை சச்சரவுகள் தொற்று நோய் போல பரவி வருகின்றது.அவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே சண்டை போட்டுக்கொள்கின்றனர்.அதேசமயத்தில் முஸ்லிம்களை பொறுத்தவரை, அவர்களுக்கு இஸ்லாத்தின் மூலம் ஒன்றுபடும் திறன் அதிகமாகவே காணப்படுகின்றன. இந்த ஒன்றுபடும் திறன் மூலமாகத்தான், இதற்கு முன்னர் கிலாஃபத்துடைய அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வல்லரசாக இருந்துள்ளது. என்றைக்கு முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மூலம் ஒன்றுபடுதல் பற்றிய புரிதலில் குறைவு பெற்றார்களோ அன்றைகுத்தான் முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்தார்கள்.

2) சிரிய கொடுங்கோலன் அசாதை பதவியிலிருந்து விலக்க தாம் விரும்பவில்லை என அமெரிக்கா ஒத்துக்கொண்டது

ரைட்டர்சின் ஓர் அறிக்கையின் படி :

வெள்ளை மாளிகையின் முக்கிய உறுப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்தின்படி அமெரிக்கா சிரியாவில் அசாத் பதவி விலகுவதைப்பற்றி கவனம் செலுத்தவில்லை என்றும் அமெரிக்காவின் முக்கிய இலக்கு ஐ,எஸ். ன் போராளிகளை தோற்கடிப்பதே என்றும் தெரிய வருகின்றது. கடந்த வியாழக்கிழமை தேசிய செயளாலர் டில்லர்சனும் ஐ.நா.விற்கான தூதுவர் நிக்கி ஹாலேயும் சிரியாவின் ஆறு வருட நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவின் நீண்ட கால குறிக்கோளான அசாத் பதவி விலக வேண்டும் என்பதை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கவில்லை என விமர்சனம் செய்யப்பட்டனர்.அதற்கு ‘அசாதின் எதிர்காலத்தை சிரிய மக்களே தேர்ந்தெடுப்பார்கள்’ என டில்லர்சன் கூறினார். அதே சமயம் இதை பற்றி ஹாலே கூறுகையில் “இனிமேல் அமர்ந்து சிரியாவில் அசாதை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துவது எங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்காது” என கூறினார்.வழக்கமாக நாள்தோறும் செய்தியாளர்களுக்கு அளிக்கும் பேட்டியில் வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் சான் ஸ்பைசர் (Sean Spicer) அசாதைப்பற்றி கூறுகையில் “இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் எந்த முடிவில் இருக்கின்றோமோ அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்”. என கூறினார்.இதற்கு முன்னிருந்த அதிபர் பராக் ஒபாமா அசாதை பதவியிலிருந்து விலகவைக்க இயலாதவராக இருந்தார் என ஸ்பைசர் குற்றம் சாட்டினார்.ஒபாமாவின் ஆட்சியின் கடைசி காலத்தில், 2014 ல் இருந்தே சிரியாவிலும் ஈராக்கிலும் பெரும் நிலபரப்பை கைப்பற்றியிருந்த ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான போரில் முழு மூச்சில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் கூட ரஷியாவுடன் ஒப்பந்தம் வைத்து அதன் மூலம் அசாதை அப்புறப்படுத்த முயற்சி செய்தது ஒபாமா அரசு.“நமக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன, நாம் தற்பொழுது ஐ,எஸ்.ஐ.எஸ் ஐ வீழ்த்த முழு கவனம் செலுத்த வேண்டும்” என ஸ்பைசர் கூறினார். “சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்காவுக்கு முக்கிய முன்னுரிமைகள் இருக்கின்றன. இந்த முன்னுரிமைகளில் தீவிரவாதத்தை எதிர்ப்பது, குறிப்பாக ஐ,எஸ்.ஐ.எஸ் ஐ வீழ்த்துவதே முதன்மையானதாகும் என தெளிவு படுத்துகிறோம்”. என அவர் கூறினார்.

உண்மையில், சிரிய புரட்சி ஆரம்பித்ததிலிருந்தே அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள் புரட்சியை நசுக்குவதாகும், எவ்வாறு இதற்கு முன்னர் நடந்த அரபுப்புரட்சியை நசுக்கினார்களோ அது போல.

3) ஆப்கானில் ரஷ்யாவின் விருப்பம் அமெரிக்காவின் இயலாமையையே குறிக்கின்றது:

நியூ யார்க் டைம்ஸில் வெளியான AP (அசோசியேடட் பிரஸ்) ன் அறிக்கையின்படி :

“சாம்ராஜ்யங்களின் சுடுகாடு (graveyard of empires)” என்று சொல்லக்கூடிய ஆப்கானில் அமெரிக்கா 16 வருடமாக போராடியும் போரை முடிவுக்கு கொண்டு வர இயலாத சூழ்நிலையில் புதிதாக ரஷ்யா அந்நாட்டின் மீதான தன்னுடய விருப்பத்தை மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடனோ அல்லது ஆதரவு இல்லாமலோ தாலிபான்களுடன் சந்தித்து ஆப்கானின் எதிர்காலத்தைப்பற்றி ரஷ்யா அரசியல் தீர்வு காண முயற்சிப்பதும் இதில் அடங்கும். வருகின்ற மாதம் நடக்கவிருக்கும் சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகள் பங்குகொள்ளும் ரஷியா தலைமையிலான ஆப்கான் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் உள்நோக்கம் தெரியாததால், அமெரிக்கா சரியான நேரத்தில் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள மறுத்து விட்டது. ஆனால் ஆப்கான் அரசு இதில் பங்குபெறுகின்றது. தாலிபானுக்கு யாரும் அழைப்பு விட்டதாக தெரியவில்லை.

ரஷ்யாவை பொருத்தவரை, இதற்கு முன்னர் 1980 களில் சோவியத் ஐக்கியமாக இருந்த ரஷ்யா ஆப்கான் மிதான ஆக்கிரமிப்பின் காரணமாக சந்தித்த பேரழிவுகள் இன்னும் நினைவிலிருந்து மறையவில்லை. அதே சமயம் தற்பொழுது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் செயல்பாடுகளும் – அது சிரியாவின் போரில் கலந்து கொண்டு அசாதுக்கு சாதகமான தீர்வுகளை எடுத்ததாக இருக்கட்டும் சரி அல்லது இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் மூக்கை நுழைப்பதாக இருக்கட்டும் சரி-இவ்வாறான செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கதிற்கு சவால் விடும் செயலாகத்தான் காணப்படுகின்றது.

அமெரிக்காவின் இயலாமையாகினும் சரி அல்லது ரஷியாவின் வளர்ச்சியாகினும் சரி, அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீறி ரஷ்யாவின் இதுபோன்ற ஊடுருவல்களால் பாதிக்கப்படுவது என்னவோ முஸ்லிம் நாடுகள் தான். இன்று வரை அமெரிக்கா தான் வல்லரசு நாடாக இருந்து வருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மூன்றாவது விஷயம் முஸ்லிம் உம்மத்தில் தற்பொழுது வளர்ந்து வரும் இஸ்லாமிய சிந்தனை. ஒட்டு மொத்த முஸ்லிம் உலகிலும் அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்தை கட்டுபடுத்த பல போர்களை தொடுத்து வருகின்றது. அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஆப்கான் முஸ்லிம்கள் போராடுவது என்பது ஒரு உதாரணம் தான். அமெரிக்கா தான் வல்லரசாக இருந்தும் கூட ஆப்கானை அவர்களால் முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை.

தற்போதய சூழல் இஸ்லாத்துக்கு ஆதரவாக இருப்பதையும், அல்லாஹ்வின் துனையால் நபிவழியில் மீண்டும் அமைக்கப்படும் கிலாபத்துக்கு மிக அருகாமையில் நாம் இருக்கிறோம் என்பதையும் பார்ப்பவர்களுக்கும் சிந்திப்பவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கின்றது

Comments are closed.