சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 07.04.2017

muslims

இஸ்லாம் உலகத்தின் பெரும்பான்மையான மார்க்கமாக 2075 ஆண்டு விளங்கும் என ஆய்வு தெரியப்படுத்துகிறது

முஸ்லிம்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கிருஸ்துவத்தினர் குழந்தைகளை விட இருபது வருடங்களில் அதிகரித்து, இஸ்லாம் உலகத்தின் பெரும்பான்மையான மார்க்கமாக 2075 ஆண்டு விளங்கும். மதங்களை சாராத மக்களின் எண்ணிக்கை குறைவதும் , முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதன் காரணமாகும். இந்த ஆராய்ச்சியின் படி ஐரோப்பாவில் உள்ள கிருஸ்துவர்கள் வயதாகி இறக்கும் நிலையில் தெற்கு பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்கும். 2010 முதல் 2015 ஆண்டு வரை பிறந்த குழந்தைகளில் 31 சதவீதம் முஸ்லிம்களாகவும் 33 சதவீதம் கிருஸ்துவர்களாகவும் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் ஏனெனில், முஸ்லிம்களின் இளைஞர்கள் அதிகமாகவும் அவர்களின் கருவுறுதல் அதிகமாகவும் உள்ளது. 2030 முதல் 2035 வரை, முஸ்லிம்களின் குழந்தைகள் அதிகமாக (2.25 கோடி) இருக்கும் , கிருஸ்துவர்கள் குழந்தைகள் (2.24 கோடி) ஆக இருக்கும். இது 2055 முதல் 2060 வரை, இன்னும் அதிகரித்து வித்தியாசம் 60 லட்சம் அதிகரித்து 2.32 கோடி முஸ்லிம்களும் 2.26 கோடி கிருஸ்துவர்களாகவும் இருப்பர். மேலும் இறப்பு விகிதமும் ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவர்களிடம் அதிகமாக உள்ளது. ஜெர்மனியில் 2010 முதல் 2015 ஆண்டு வரை பிறப்பை விட 14 லட்சம் அதிகம் இறப்பு இருந்தது. இதே விகிதம் ஐரோப்பாவில் இன்னும் சில சகாப்தம் தொடரும் என ஆய்வு கூறுகிறது. கிருஸ்துவர்களிடம் இளம் கருவுருவ கூடிய தொகை அதிகமாக இருப்பினும், கிறிஸ்துவர்களின் இறப்பு உலக இறப்பில் 37 சதவீதமாக கடந்த சில ஆண்டுகளாக இருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் பிறக்கும் குழந்தைகள் , மதம் சாராத மக்களின் குழந்தைகளை விட பெரும் மாறுதலான எண்ணிக்கையை தருகிறது. மதம் சாராத பிரிவினர் 16 சதவீதம் இருப்பினும், உலகில் பிறக்கும் குழந்தைகளில் 10 சதவீதம் மட்டுமே 2055 – 2060 ஆண்டுகளில் இருக்கும், 9 சதவீதம் மற்ற மாதங்களில் இருக்கும், 70 சதவீதம் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மத்தியில் இருக்கும் . மதங்களை சாராத மக்கள் வயதான மக்கள் தொகையினர் மற்றும் குறைவான கருவுறுதல் மத்தியிலும் சீனா, ஜப்பான் , ஐரோப்பா , வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கின்றனர். இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு , துணை சஹாரா பகுதிகளில் இருக்கும் என ஆய்வு கூறுகிறது. 2015 ஆண்டு படி , 730 கோடி மக்களில் , கிருஸ்துவர்கள் 31 சதவீதமும் , முஸ்லிம்கள் 24 சதவீதமும் , ஹிந்துக்கள் 15 சதவீதமும் , புத்தர்கள் 7 சதவீதமும் உள்ளனர். யூதர்கள் மற்றும் குறிப்பிட்ட குழுவினரிடம் உள்ள நம்பிக்கை கொண்டோர் , மிக சொற்ப எண்ணிக்கையை சார்ந்துள்ளனர். இந்த கணிப்பில் குழந்தைகள் மதம்மாறுவதை கணக்கில் கொள்ள வில்லை என ஆராய்ச்சியாளர் பியூ கூறுகிறார். [மூலம் : தி கார்டியன்]

மேற்கத்தியவர்கள் எவ்வளவு பாடுபட்டு இஸ்லாத்தை தடுக்க நினைத்தாலும், அல்லாஹ் (சுபு) சூழ்நிலையை தன்னுடைய ஆதிகதிக்கேத்தவாறு மாற்றுகிறான்.

ஐ.நா. செயல்படவில்லை என்றால் அமெரிக்கா எதேச்சதிகார சிரியா நகர்வுகளை மேற்கொள்ளும் என எச்சரித்துள்ளது

அமெரிக்கா, பல குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லும் வகையில் சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மீது நடந்த வலுவான சந்தேகத்திருக்குரிய வேதியியல் தாக்கத்திற்கு பதிலளிக்க ஐக்கிய நாடுகள் தவறினால், அமெரிக்கா ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கம் என எச்சரித்துள்ளது. “ஐக்கிய நாடுகள் தொடர்ந்து கூட்டாக செயல்படும் கடமையிலிருந்து தோல்வி பெரும் போது, அங்கு நாங்கள் எங்கள் சொந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது ” என்று ஐ.நா. வின் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி புதன்கிழமை கூறினார்.
இந்த எச்சரிக்கை ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம், இட்லிப் மாகாணத்தில் கான் ஷேய்க்ஹௌன் பகுதியில் அதிகாலை செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பின் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அழைத்த அழைப்பின் போது வந்தது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானம் கொண்டுவந்து அதில் அவர்கள் சிரிய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி, முழு விசாரணை கோரினர்.ஆனால் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் கூட்டாளியான ரஷ்யா, “வகைப்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத” வடிவில் இந்த அறிக்கை உள்ளது என்று கூறியதால் இந்த பேச்சுவார்த்தைகள் எந்த வாக்கும் இல்லாமல் முடிந்தது. சிரியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது, ரஷ்யா போராளிகளை குற்றம் சாட்டியுள்ளது, அரசாங்கத்தின் ஏவுகணை போராளிகளின் வேதியியல் நிரப்பப்பட்ட இடத்தை தாக்கிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறியது. ஹேலி ரஷ்யாவை கண்டிக்கும் வகையில் , உயிரற்ற குழந்தையின் சடலம் உள்ள புகைப்படத்தை காட்டி , இன்னும் எதனை குழந்தைகள் ரஷ்யாவின் கவன குறைவால் இறக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ரஷ்யாவிற்கு சிரியா மீது ஆதிக்கம் இருக்குமெனில் , அதை அவர்கள் பயன்படுத்த வேண்டும், இந்த கொடுஞ்செயல்களை நிறுத்தியிருக்க வேண்டும் என்றார். பிரிட்டன் சார்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு குழு 30 குழந்தைகள் உட்பட, குறைந்தது 86 மக்கள், கான் ஷேய்க்ஹௌன் மீது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று கூறுகிறது. நிரூபிக்கப்பட்டால், சிரியாவில் 2013 ஆண்டு டமாஸ்கஸ் போராளிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெற்ற சரின் வாயு தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற மோசமான தாக்குதல் இதுவாகும்.”நாம் செயல்பட தயாராக இல்லை என்றால், இந்த சபை கூட்டம், மாதம் மாதத்திற்கு கூடி இந்த தாக்குதலை பற்றிய கோபத்தை தெரிவித்து களைந்து செல்லக்கூடிய கூட்டமாகவே இருக்கும் ” என ஹேலி கூறினார்.”நாம் சிரியாவில் மேலும் மோதல்களை காண்போம். பார்க்க முடியாத புகைப்படங்களை பார்க்க நேரிடும்” என்றார்.இந்த வரைவு தீர்மானம், இரசாயன ஆயுதங்கள் தடை (OPCW) அமைப்பு நடத்திய ஆய்வை ஆதரிக்கும் அதே வேளை, சிரியா தாக்குதல் நடந்த நாளில் அதன் இராணுவ நடவடிக்கைகளை பற்றிய தகவல்களை வழங்க ஒத்துழைப்பை கோருகிறது.ரஷ்யாவின் துணை தூதுவர் விளாடிமிர் சபிரான்கோவ் , சபையிடம் கூறியதாவது, முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் தேவையற்றது. ஆனால் விசாரணைக்கு ஆதரவு குரல் கொடுத்தார். “நடந்தது என்ன என்ற விசாரணை முக்கியமாக வேண்டும் ” என்று அவர் கூறினார்.முன்மொழியப்பட்ட தீர்மானங்களை கொண்டு புதன்கிழமை முழுவதும் பேச்சுவார்த்தைகள் நடந்தது.வியாழக்கிழமைக்குள் சபையில் வாக்குப்பதிவு ஏற்படலாம் என தூதர்கள் கூறுகின்றனர்.பின்னர் வெள்ளை மாளிகையில், ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரசாயன தாக்குதல் “பல, பல விதிகளை ” கடந்து விட்டது, திடீரென சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பற்றி, அவரது சிந்தனையை மாற்றிவிட்டது என கூறினார்.சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகம் சேர்ந்த பல உறுப்பினர்கள் அசாத் விலகுவது தங்களுடைய பிரதான நோக்கம் இல்லை என கூறியிருந்தனர். ஆனால் டிரம்ப் இந்த செவ்வாய் கிழமை நடந்த தாக்குதல் தன் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என கூறினார்.

அமெரிக்க பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை.அசாத், மீண்டும் மீண்டும் அவரது மக்கள் மீது எண்ணற்ற எரிவாயு மற்றும் சிவப்பு கோடுகள் கடந்த தாக்குதல் மேற்கொண்ட பிறகு அமெரிக்கா இறுதியாக சிரியாவில் தலையிட காரணம் கண்டறிந்துள்ளது. இது மனிதாபிமான அக்கறைகளின் அடிப்படையில் உள்ள காரணம் அல்ல . அமெரிக்கா லேவண்ட் பகுதிகளில் அதன் நலன்களைப் பாதுகாக்க செய்யும் முயற்சி ஆகும்.

பாக்கிஸ்தான் தன்னுடைய எல்லையில் வேலி அமைப்பதற்கு ஆப்கான் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது

பாக்கிஸ்தான் தன்னுடைய எல்லையில் வேலி அமைப்பதை நிறுத்த ஆப்கான் அழைப்பு விடுத்துள்ளது, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் உடன் படுக்கை எட்டவில்லை எனில் போர் ஆயுத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது. பாக்கிஸ்தான் ராணுவம் வேலி அமைக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. எனினும், இது ஆப்கான் மக்களுக்கு எரிச்சல் தந்துள்ளது. 1893 ஆண்டு இந்தியா வை ஆண்டு வந்த பிரிட்டிஷ் மக்கள் ஒரு சர்ச்சை கூறிய எல்லையை ஏற்படுத்தியிருந்தார். ஆப்கான் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சூடான விவாதத்திற்கு பிறகு இந்த அறிக்கையை ஆப்கான் அரசு வெளியிட்டது. காபூலில், அஹ்மத் சாகிப் தனது அறிக்கையில் கூறியதாவது, இந்த சர்ச்சைகுரிய எல்லை பகுதியில் ஒரு தலை பட்சமாக ஆப்கான் அரசை கருதாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் சாத்தியமற்றது மற்றும் பயனற்றது.பல காலமாக ஆப்கான் பாகிஸ்தானுடனான எல்லையை கற்பனை எல்லையாக கருதியது. தீவிரவாதம் என்பது வெறும் சாக்குபோக்கு தான் என்றும் , இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என மோஸ்தகானி கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்க்க முடியாதெனில் , ராணுவ தாக்குதலை பயன்படுத்த கூடும் என ஆப்கான் தனது படையை பயன்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். இவ்வாறு எல்லையில் வேலி அமைப்பதை விட , பாக்கிஸ்தான் தனது நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்பினை அழிக்க வேண்டும் என்றார். [மூலம் : வாய்ஸ் ஆப் அமெரிக்கா ]

பிரிட்டிஷ் ஏற்படுத்திய இந்த நாடுகள் அமைப்பு , முஸ்லிம்கள் மத்தியில் பிளவையே ஏற்படுத்துகிறது. இதில் சமீபத்தியது , ஆப்கான் பாக்கிஸ்தான் மத்தியில் உள்ள இந்த துரன்ட் லைன்ஸ் பகுதி. முஸ்லீம் நாடுகள் மத்தியில் எல்லைகள் தடை செய்யப்பட்டுள்ளது, முஸ்லிம்கள் நாடுகள் மத்தியில் உள்ள எல்லைகள் அழிக்கப்பட்டு கிலாபா ராஷிதா நிறுவப்பட வேண்டும். இதுவே இந்த ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தான் நாடுகள் மத்தியில் உள்ள பிரச்சனைக்கு தீர்வாகவும் மற்ற முஸ்லீம் நாடுகளுக்கான பிரச்சனைக்கு தீர்வாகவும் அமையும்.

Comments are closed.