சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப் பார்வை 03.05.2017

hamas-assad

பாலஸ்தீனை கைவிட்டது ஹமாஸ்

ஹமாஸ் புதிய அரசியல் ஆவணத்தை வழங்கியுள்ளது, அதில் 1967ல் வரையப்பட்ட பாலஸ்தீன் எல்லையை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேல் நாட்டை அங்கீகரிப்பதில்லை என தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீன் பிரச்சனை மதம் சார்ந்த பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடை, கத்தார் தலைநகரம் தோஹாவில் காசாவை முற்றுகையிடும் பாலஸ்தீன் குழுவின் நாடு கடத்தப்பட்ட அதன் தலைவர் காலீத் மேஷால் தெரிவித்துள்ளார். “நாங்கள் பாலஸ்தீன் மண்ணில் ஒரு அங்குலம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம், தற்போதைய பிரச்சனை எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த ஆக்கரமிப்பு எவ்வளவு நீடித்தாலும் சரி” என மேஷால் இரண்டு வருடமாக உருவாக்கிய இந்த ஆவணத்தை வெளியிடும்போது , பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். “ஹமாஸ் குழு தங்கள் மண்ணை முழுவதுமாக விடுவிப்பதை தவிர வேறு எந்த கருத்தையும் ஏற்று கொள்ள தயாராக இல்லை, இதனால் நாங்கள் யூதர்களை அங்கீகரிப்பதாகவோ, பாலஸ்தீனியர்களின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவோ அர்த்தம் கொள்ள கூடாது.” 1988 ஹமாஸ் உருவாக்கப்பட்ட போது தற்போதைய இஸ்ரேல் உட்பட அனைத்து பாலஸ்தீன நிலங்களையும் மீட்போம் என்ற நிலைப்பாட்டிலிருந்து, இந்த புதிய ஆவணம் 1967ல் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன எல்லையை ஏற்று அதன் தலைநகரமாக ஜெரூசலத்தை ஏற்று அகதிகள் வீடு திரும்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த “தீர்வு” ஒன்றும் புதிதல்ல, இது அமெரிக்கா அளித்த இரு நாட்டு தீர்வை ஒத்துப்போகிறது. இந்த பிரச்சனை மதம் சார்ந்த பிரச்சனை இல்லை என்ற கூற்றே மிகவும் தவறானது, ஏனெனில் பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பே இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டது தான். இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், 1967 ஆண்டு வரையப்பட்ட எல்லையை ஏற்பதே, இஸ்ரேல் நகரத்தை அங்கீகரிப்பதாகும், எனவே இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என கூறுவதும் அவர்களின் செயல்களும் அவர்களுடைய அப்பாவித்தனமான அரசியலை வெளிப்படுத்துகிறது.

இரவு பொழுதுபோக்குக்கு பின் சிரிய வான்தாக்குதல்

டொனால்ட் டிரம்ப் எப்படி விருந்தை குறுக்கிட்டு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிடம் சிரியாவை தாக்கும் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார் என அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் விவரித்தார். கடந்த மாதம் ஏவப்பட்ட 50 ராக்கெட் குண்டுகள் பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளதன் மூலம், இந்த தாக்குதல் ஆற்றலை வெளிப்படுத்தவே தவிர நேர்மையாக இரசாயன தாக்குதல் மேற்கொண்ட அரசை தண்டிக்க அல்ல என பலர் உணர்ந்துள்ளனர். இன்னும் குறிப்பாக ரோஸ், டிரம்ப் இந்த தாக்குதல்கள் மூலம் தங்களுக்கு பெரும் சவாலாக உள்ள ஸீ ஜின்பிங்கிடம், தங்கள் ஆற்றலையும் அச்சுறுத்தலையும் தெரிவித்துள்ளார் என விவரித்தார்.

யமன் பட்டினியின் விளிம்பில் உள்ளது

ஐ.நா வின் தலைவர் உலக தலைவர்களின் முன்னிலையில் மே 2, 2017 அன்று “சராசரியாக, யமனில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மரணத்தை தடுக்ககூடிய அளவிலான காரணங்கள் இருந்தும் மரணிக்கிறது” என உணர்ச்சி பூர்வமாக கூறினார் என அன்டோனியா குட்டர்ஸ் தெரிவித்தார். அதாவது இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் காப்பாற்றப்படக்கூடிய 50 குழந்தைகள் இறக்கும் என்றார். அரபு உலகின் ஏழை நாடான யமன், சவூதி அரேபியா நுழைந்த இரண்டே ஆண்டுகளில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனுடைய நாணயம், விவசாயம், உட்கட்டமைப்பு, சுகாதாரம் மேலும் தேவையான அத்தியாவச விஷயங்கள் அனைத்தும் இந்த போரால் அழிந்துள்ளது. மேலும் 70 லட்சம் மக்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள், அதில் மூன்றில் இரண்டு பேர் மனிதாபிமான உதவியால் வாழ்ந்து வருகின்றனர். இதில் விசித்திரமாக சவூதி அரேபியா 150 மில்லியன் டாலரை யமனுக்கு உதவியளிப்பதாக வாக்களித்துள்ளது. இந்த பாதிப்பின் காரணமே அமெரிக்கா மற்றும் மற்றவர்களின் உதவியோடு சவூதி அரேபியா நடத்திய வான் வெளி தாக்குதல் தான், இதில் கண்மூடித்தனமாக பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் பாராளுமன்றம் புர்காவுக்கு பகுதியான தடைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது

ஜெர்மன் பாராளுமன்றம் அரசு சேவை நீதித்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றில் முழு முகத்தையும் மறைக்கும் இஸ்லாமிய ஆடையை அணிய தடைவிதிக்கும் அரசாணையை ஆதரித்துள்ளது. புர்காவும், நிகாபும் ஒரு சில பணிகளில் இந்த சட்டத்தின் அடிப்படையில் தடைசெய்யப்படும், இது புண்டேசுரத் மாநில அவையில் ஒப்புதல் பெற்றால் அமுலாகும்.ஜெர்மனிய உள்துறை அமைச்சர், தாமஸ் டே மைசியரே, நாட்டுக்குள் நுழையும் அகதிகள் பற்றிய விவாதம் நிகழும் நிலையில் இந்த சட்டம் ஒருங்கிணைப்புக்கு சாதகமாக இருக்கும் என வாதித்தார். ” ஒருங்கிணைப்பு, என்பதன் அர்த்தம் என்னவெனில், நம் மதிப்பும், மற்ற கலாச்சாரத்தின் மீதுள்ள சகிப்புத்தன்மையை பற்றியும் தெளிவாக்க வேண்டும்” என்றார்.”இந்த வரைவு சட்டம் இந்த நோக்கத்தை பூர்த்திசெய்யும்”. சில வலது சாரிகள் முழு புர்கா தடைக்கு அழைப்புவிடுத்துள்ளனர், இத்தகைய தடை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டில் உள்ளது, ஆனால் தாமஸ் டே மைசியரே, இத்தகைய செயல் ஜெர்மன் நாட்டு அரசியலமைப்புக்கு ஒத்துப்போகாது என்றார். இந்த புதிய சட்டப்படி அரசு பணியாளர்கள் முகத்தை காட்ட வேண்டும், மேலும் அதிகாரிகளுக்கு பெண்களின் அடையாளத்தை சோதிக்க உரிமையுள்ளது. இடது சாரி அரசியல்வாதிகள் இதனை எதிர்த்துள்ளனர். விமர்சகர்கள் வாதிட்டது என்னவெனில், புர்கா அணியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் யதார்த்தத்தில் இல்லை எனவும், இந்த சட்டம் தேவையற்றது மற்றும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றனர். இந்த முடிவுக்கு ஏஞ்சலா மெர்க்கல் கடந்த டிசம்பர் முழு முகத்தை மறைப்பது என்பது ஜெர்மனி நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது, முடிந்த இடங்களில் இதை தடை விதிக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்திருந்தார். இவர் நான்காவது முறையாக பதவி ஏற்பதற்கான ஆதரவை திரட்ட குடியுரிமைக்கு எதிரான ஆதரவாளர்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். [மூலம்: தி இண்டிபெண்டெண்ட்]

மெர்க்கெல் நான்காவது முறையாக பதவியேற்க தீவிரமாக போராடி , இஸ்லாத்திற்கு எதிராக இந்த புர்கா தடையை கருவியாக பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாக வாக்குப்பெற எண்ணியுள்ளார். ஐரோப்பா முழுவதும் அரசியல் வாதிகள் இஸ்லாத்தைக்கொண்டே தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர், இதன் மூலம் அவர்களின் சொந்த மேற்கத்திய சுதந்திர கொள்கையையும் அவர்கள் மதிப்பளிப்பதில்லை.

பிரான்ஸ் , ஜெர்மனிக்கு புதிய துருக்கி தேவை ஆனால் ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக ஆவதற்கு ஆதரிக்காது

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, துருக்கி நாட்டுடன் புது ஒப்பந்தத்தை நாடி, அதிபர் எர்துகானுடனான உறவை சீர் செய்ய நினைக்கின்றனர், ஆனால் இவரின் புதிய அதிகாரங்கள் மற்றும் எதிரிகள் மீதான அடக்குமுறை ஐரோப்பிய யூனியன் கனவுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என்பதை பற்றி தெரிவிக்கவில்லை. இவரின் இந்த அதிகாரத்தை பற்றி கவலை கொள்ளும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், அவர்களின் சட்ட வல்லுநர்களை வரவழைத்து, துருக்கி நாட்டின் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் கோரிக்கையை தடை செய்ய ஆலோசிக்கின்றனர், ஏனெனில் இந்நாடு ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டு இல்லை என கூறுகின்றனர். ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல், மால்டாவில் மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் துருக்கியின் அதிகாரி மேலூர் சவுஸோக்லுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உறுப்பினர் கோரிக்கையை தடை செய்வதை தாங்கள் முற்றிலுமாக ஆதரிக்கவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால் அன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு, உண்மையான பிரச்சனை என்னவெனில், துருக்கி நாட்டுடன் புதிய ஒப்பந்தங்ககளுக்கு பிறகே இந்த உறுப்பினர் தொடர்பான பணியை தொடங்க முடியும் என்றார். 2005 முதல் துருக்கி நாட்டின் இந்த கோரிக்கை மூலமாக துருக்கியினுள் பல வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளன மேலும் உலகத்தின் 15வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பின் பேச்சுவார்த்தை தொடரவில்லை. “இந்த உறுப்பினர் கோரிக்கையை புதியதாக ஒரு வாய்ப்பை வழங்காமல் தடை செய்வதால் எந்த பயனுமில்லை” என கேப்ரியல் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். “பேச்சுவார்த்தைக்கான புதிய கதவுகளை திறக்கலாம் ” என கூறி அவர்களின் வர்த்தகத்தை பெருக்க வழி செய்யலாம் என தெரிவித்திருந்தார். இது ஐரோப்பிய உறுப்பினர் நீக்கம் போன்ற எந்த பெரும் அரசியல் தாக்குதலையும் தடுக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆஸ்திரியா இந்த உறுப்பினர் ஆகும் வழிமுறைக்கு தடை செய்ய இந்த மாதத்தின் வாக்கெடுப்புக்கு முன்னரே அழைப்புவிடுத்தது. “உறுப்பினர் ஆகலாம் என்ற மாயையில் கிடப்பது தவறு ” என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் குர்ஸ் கூறியுள்ளார். துருக்கி நாட்டின் 50 வருட கனவான ஐரோப்பிய யூனியன் கனவை தகர்ப்பது மிகவும் பதற்றமான விஷயம், ஏனெனில் மேற்கத்திய உலகம் முக்கியமான நேட்டோ உறுப்பினரை தனிமைப்படுத்துவது ஐரோப்பா மற்றும் ஆசியாவை பாதிக்கும். [மூலம் : ராய்ட்டர்ஸ்]

ஐரோப்பிய யூனியன் துருக்கியின் மிகப்பெரிய முதலீட்டாளர் மற்றும் வர்த்தக பங்குதாரராகும், அதேவேளையில் ஈராக், சிரியா மற்றும் ரஷ்யாவுடன் எல்லையை கொண்டது. ஐரோப்பாவின் தெளிவற்ற எதிர்காலம் துருக்கி மீது மென்மையான போக்கை கையாளச்செய்கிறது. எனினும் துருக்கி இவர்களுடன் இணையும் முடிவை கைவிட்டு விடவேண்டும். இந்த புதிய யதார்த்த நிலை துருக்கி நாட்டுக்கு ஐரோப்பாவின் உருவத்தை மாற்றியமைக்க புதிய வாய்ப்பை கொடுத்துள்ளது, ஆனால் இது தற்போதய குடியரசு ஆட்சியால் நிகழாது, இது நிலைமையை இன்னும் மோசமாக்கும். துருக்கி கிலாஃபத் மாதிரியான ஆட்சிமுறைக்கு திரும்பாத வரையில் , தங்களுடைய உள்நாட்டு நிலைமையை மேற்கத்தியவர்களின் நன்மைக்காக மட்டுமே கையாள பாடுபட்டுக்கொண்டேயிருக்கும்

பென்டகன் ஆப்கான் மற்றும் ஐரோப்பாவிற்கு 5700 படைவீரர்களை அனுப்புகிறது

பென்டகன் கடந்த வியாழக்கிழமை, 5700 படைவீரர்களை ஆப்கான் மற்றும் ஐரோப்பாவிற்கு வழக்கமான படை சுழற்ச்சிக்கு அனுப்புவதாக அறிவித்தது. 1700 வீரர்கள் ஜார்ஜியாவில் உள்ள போர்ட் ஸ்டீவர்ட் மற்றும் வாடா கரோலினாவில் உள்ள போர்ட் பிரேக்கில் இருந்து இந்த கோடையில் ஆப்கானுக்கு புறப்பட்டு அங்குள்ள வீரர்களை மாற்றுவார்கள், மற்ற 4000 வீரர்கள் போர்ட் ரிலேவிலிருந்து ஐரோப்பாவிற்கு இலையுதிர் காலத்தில் செல்வர் என ராணுவ வெளியீடு தெரிவித்துள்ள்ளது. பென்டகன் பேச்சாளர், எரிப்பு பாஷாண இந்த புதிய வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கமாட்டார்கள் என தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஆப்கானில் உள்ள முத்தளபதி ராணுவ ஜெனரல் ஜான் நிக்கோலஸன் சில ஆயிரம் படைவீரர்கள் தேவைப்படுவதாகவும் அதன் மூலம் நேட்டோவுக்கு வலு சேர்க்க முடியும் என கூறி , இல்லையெனில் தாலிபனுக்கு எதிரான போர் சிக்கலாகிவிடும் என கூறியிருந்தார். [ மூலம் : நியூஸ் மாக்ஸ்]

டிரம்ப்பை தனிமைப்படுத்தியதற்கான சான்றுகளுக்கு இதுவே அதிகமாகும். அமெரிக்கர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக டிரம்ப் ஆட்சியில் ராணுவ காலடித்தடங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது, புஷ்தூன்களது அதிகளவிலான எதிர்ப்பபகளால் அதை எதிர்கொள்ள அதிக அளவு வீரர்களை ஆப்கான் நோக்கி விரைய செய்யும் காரணத்தால் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த போர் முடிவதாக தெரியவில்லை. பதவியேற்ற 100 நாட்கள் ஆகிய நிலையில், பென்டகன் டிரம்ப்பின் வெளியுறவு கொள்கையை கடத்திவிட்டது.

Comments are closed.