சமீப பதிவுகள்

கேள்வி பதில்: இறைமறுப்பாளர்களிடம் உதவி கோருதல்

ottomon

கேள்வி:

இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய கிலாபத் அரசு மற்ற காஃபிர் அரசுகளுடன் நட்புறவு வைத்து கொள்ளுமா அல்லது கூட்டுறவு வைத்து கொள்ளுமா? உதாரணத்திற்கு ஜெர்மனி அரசு, அது கிலாபத் அரசு போர் செய்ய கூடிய நாடாக இருந்தும், அதனுடன் நட்புறவு வைப்பதன் மூலம் மற்ற நாடுகளை பலவீனமாக்கி, அந்நாடுகளை கைப்பற்றி கொள்ள முடியும் என்ற நலனை கருதி அந்நாட்டுடன் நட்புறவு வைத்து கொள்ளலாமா? அல்லது சட்டபூர்வமாக போர் செய்ய படக்கூடிய வெனிசுலா போன்ற நாடுகளின் மீது இந்த கூட்டுறவு அனுமதிக்கப்பட்டதா? நபியவர்கள் போர் செய்யும் அரசாக இருந்த குரைஷிகளிடம் ஹுதைபியா உடன்படிக்கை செய்து கொண்டது போல, போர் செய்ய படக்கூடிய நாடுகளின் மீது கூட்டுறவு வைத்துக் கொள்வதில் அளவுகோளில் அனுமதி ஏதும் உண்டா?

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

உபாதா அஷ்ஷாமி

பதில்:

வ அலைக்கும் சலாம் வரஹ் மதுல்லாஹி வபரகாத்துஹு

உதவி பெரும் நோக்கத்துடன் காஃபிர் அரசுகளுடன் கூட்டுறவு வைத்து கொள்ளலாமா என்ற உங்கள் கேள்வியை பொறுத்த வரை, அது இஸ்லாமிய சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று அல்ல.

அ- ஷக்சியா இரண்டாம் பாகம் புத்தகத்தில் “ இறை மறுப்பாளர்களிடம் உதவி கோருதல்” என்ற தலைப்பில் இதை பற்றி கூறப்பட்டிருப்பதாவது:

தன்னிச்சை நாடாக இருக்கும் இறை மறுப்பாளர்களிடம் உதவி கோருதல் ஆகுமாக்கப்பட்டதில்லை என்பதற்கு ஆதாரம்: அனஸ் (ரலி) அறிவிப்பதாக அஹமத் மற்றும் அந்நசயி பதிவு செய்திருப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

لا تستضيئوا بنار المشركين

“இறைமறுப்பாளர்களின் நெருப்பிலிருந்து வெளிச்சம் தேடாதீர்கள்”

இங்கு மக்களின் வெளிச்சம் என்பது தன்னிச்சையாக இருக்க கூடிய குலத்தையோ அல்லது நாடையோ உவமையாக குறிக்கின்றது. சஹீஹ் தரத்தில் உள்ள ஓர் அறிவிப்பின் படி அல் ஹஃபீஸ் அபூ அப்துல்லாஹ்வின் வாயிலாக அபூ ஹமீது அல் சைதி கூறுகிறார்கள்:

«خرج رسول الله r حتى إذا خلَّف ثنيَّة الوداع إذا كتيبة قال: من هؤلاء؟ قالوا بني قينقاع وهو رهط عبد الله بن سلام قال: وأسلموا؟ قالوا: لا، بل هم على دينهم، قال: قولوا لهم فليرجعوا، فإنّا لا نستعين بالمشركين»

“ நபி (ஸல்) அவர்கள் ‘தனிய்யா அல் வதா’ என்ற இடத்தை கடந்த போது, ஒரு சிறு படையை அவர்கள் கடந்தார்கள். “யார் இவர்கள்?” என நபி (ஸல்) வினவினார்கள். அதற்கு “இவர்கள் தாம் பனூ கைனுகா கோத்திரத்தினர், அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் கூட்டத்தினராவர்” என பதில் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) “ இவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்களா?” என வினவினார்கள். அதற்கு “ (இல்லை) அவர்களுடைய மார்கத்திலேயே இருக்கிறார்கள்” என பதில் அளிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) “ அவர்களை திரும்பி போக சொல்லுங்கள், நிச்சயமாக நாம் இறைமறுப்பாளர்களிடம் உதவி கோர மாட்டோம்” என கூறினார்கள்.

நபி (ஸல்) அப்துல்லாஹ் பின் சலாமின் (ரலி) கோத்திரமான பனூ கைனுகாவை திருப்பி அனுப்பியது, அவர்கள் ஒன்றிணைந்த காஃபிர் சமூகமாக வந்ததுதான். மேலும் தங்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் ஒப்பந்தம் இருக்கும் சமையத்தில், அவர்கள் பனூ கைனுகா என்ற கொடியின் கீழேயே அவர்கள் வந்தார்கள். இதனாலேயே நபியவர்கள் அவர்களை தடுத்தார்கள். இந்த மறுப்பு அவர்கள் தன்னுடைய கொடியை முன்னிருத்தியும் தன்னுடைய சமூகத்தை முன்னிருத்தியும் வந்ததினாலேயே ஆகும். (பின்பு நடைபெற்ற) கைபர் போரில் தனித்தனியே உதவிக்கு வந்த யூதர்களை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டது இதற்கு ஆதாரமாக இருக்கின்றது.அபூ ஹமீது அல் சைதியின் இந்த ஹதீஸில் ஷரியாவின் காரணமான ‘இல்லா’ இடம் பெற்றிருக்கிறது. ஆக இந்த காராணம் இருக்கும் பட்சத்தில், சட்டம் அமுல் படுத்தப்படும். காரணம் இல்லாத பட்சத்தில், சட்டம் அமுல் படுத்தப்படாது. இந்த ஹதீசில் வரும் வாசகத்தில் ‘இல்லா’ (ஷரியாவின் காரணம்) தெளிவாக கூறப்பட்டுள்ளது.

إذا كتيبة قال: من هؤلاء قالوا: بني قينقاع وهو رهط عبد الله بن سلام

“ ஒரு சிறு படை வந்த பொழுது “யார் இவர்கள்” என நபி (ஸல்) கேட்க “இவர்கள் தாம் பனூ கைனுகா – அப்துல்லாஹ் பின் சலாமின் கோத்திரத்தினர்”

இங்கு சிறு படை كتيبة என்பதின் அர்த்தம் அவர்கள் தன்னிச்சையாக செயல் படக்கூடிய படை என்றும், அவர்களுக்கு தனி கொடி இருக்கும் என்றும் அர்த்தம். ஏனெனில் ஒவ்வொரு படைக்கும் தனி கொடி இருக்கும். ஆக, இவர்கள் தாம் தனி கொடி கொண்ட காஃபிர் படை. இவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் வைத்து கொண்டிருந்த பனூ கைனுகா என்ற யூத சமூகத்தின் படை பிரிவினர். இதுவே அவர்கள் உதவியை ஏற்று கொள்ள மறுத்ததற்கு காரணமாகும். அவர்கள் இறை மறுப்பாளர்கள் என்ற காரணத்திற்காக மட்டும் அவர்கள் மறுக்கப்படவில்லை. வெறும் இஸ்லாமை ஏற்றுகொள்ளவில்லை என்பதற்காக மட்டுமே நபி (ஸல்) இந்த படைய திருப்பி அனுப்பினார்கள் என்று கூறமுடியாது. மாறாக அவர்கள் இஸ்லாமை மறுத்து தனிப்படையாக வந்ததுதான் காரணம். இதை வழுசேர்க்கும் விதமாக அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் அமைந்துள்ளது.

لا تستضيئوا بنار المشركين

“இறைமறுப்பாளர்களின் நெருப்பிலிருந்து வெளிச்சம் தேடாதீர்கள்”

இது ஒரு சமூகத்தையே குறிக்கின்றது. இதே உஹதுடைய போர் களத்தில் குஸ்மான் என்ற இறைமறுப்பாளரிடம் நபியவர்கள் உதவி கோரியது, இவ்விஷயத்தை வழுசேர்க்க்கிறது.

இறைமறுப்பாளர்களின் உதவியை மறுத்தல் என்பது அவர்கள் ஒரு சமூகமாக இருக்கும் நிலையில் தான், அதே சமயத்தில் அவர்கள் தனி நபர்களாக இருக்கும் நிலையில் அவர்களுடைய உதவியை ஏற்று கொள்ளலாம்.ஆகையால், காஃபிர் சமூகம் அல்லது காஃபிர் கோத்திரம் அல்லது காஃபிர் நாடு எதுவாகினும் சரி, அவர்கள் தங்களுடைய கொடியின் கீழ் இருக்கும் நிலையில் அல்லது தங்களுடைய நாட்டின் அங்கமாக இருக்கும் நிலையில், இறை மறுப்பாளர்களிடம் உதவி கோருவது முழுமையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். மக்கா வெற்றியின் போது குசா கோத்திரத்தினர், அவர்கள் தன்னிச்சையான கோத்திரமாக இருக்கும் நிலையில், நபியவர்களுடன் போரில் பங்கு கொண்டதை பொருத்த வரை, அது தன்னிச்சையான சமூகத்திடம் உதவி கோரலாம் என்பதை குறிக்கவில்லை. இது ஏனெனில் குசா கோத்திரத்தினர் நபி (ஸல்) அவர்கள் குரைஷிகளிடம் ஹுதைபியா உடன்படிக்கை போட்ட காலத்திலிருந்தே இருந்ததை காண முடியும். அஹ்மத் அறிவிப்பின் படி, அந்த ஒப்பந்தத்தின் வாசகமாவது :

وإنه من أحب أن يدخل في عقد محمد وعهده دخل فيه، ومن أحب أن يدخل في عقد قريش وعهدهم دخل فيه

“ யார் முஹம்மதுடைய ஒப்பந்தத்தில் நுழைய விரும்பிகிறார்களோ, அவர் அந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளலாம். யார் குரைஷிகளுடைய ஒப்பந்தத்தில் நுழைய விரும்பிகிறார்களோ, அவர்கள் அந்த ஒப்பந்தத்தில் சேர்ந்து கொள்ளலாம்.” இந்த வாசகத்தின் அடிப்படையில், குசா கோத்திரத்தினர் “ நாங்கள் முஹம்மதின் ஒப்பந்தத்திலும் உறுதிமொழியிலும் இருக்கிறோம்” என விரைந்து கூறினார்கள். அதே சமயத்தில், பனூ பக்ரு கோத்திரத்தினர் “ நாங்கள் குரைஷியின் ஒப்பந்தத்திலும் உறுதிமொழியிலும் இருக்கிறோம்” என விரைந்து கூறினார்கள். ஆக, குரைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இருந்த ஒப்பந்தத்தில் குசா முஸ்லிகளுடன் இருந்தார்கள். எனவே ஒப்பந்தத்தின்படி, நபி (ஸல்) அவர்கள் குசா கோத்திரத்தினரை தன்னுடைய பாதுகாப்பில் சேர்த்து கொண்டார்கள். எனவே அவர்கள் தன்னிச்சை சமூகமாகவோ அல்லது நாடாகவோ அவர்கள் இங்கு சண்டை போட வில்லை. மாறாக அவர்கள் முஸ்லிம்களின் கொடியின் கீழேயே, இஸ்லாமிய அரசின் அங்கமாகவே சண்டை போட்டார்கள், தனி சமூகமாக இல்லை. சிலர் குசா கோத்திரத்தினர் நபி (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்றும் அல்லது கூட்டுறவு வைத்து கொண்டார்கள் என்றும் விளங்கி வைத்துள்ளனர். இது உண்மையல்ல.ஏனென்றால் ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்களுக்கும் குரைஷிகளுக்கும் தானே ஒழிய நபி (ஸல்) அவர்களுக்கும் குசாவிற்கும் இல்லை.

எனவே, காஃபிர் நாடுடன் கூட்டுறவு வைத்து கொள்வது அனுமதிக்க பட்டதல்ல. ஆனால் இறை நிராகரிப்பாளர்களான இஸ்லாமிய அரசில் குடியுரிமையுள்ள திம்மிகள் இஸ்லாமிய படையில் சேர்ந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும்.

ஆ- இதே விஷயத்தை அரசியல் சாசன வரைவின் (Draft Constitution) 190 கட்டுரையில் கூறப்பட்டிருக்கும். அதில் கூறியிருப்பதாவது:

Article 190. எந்த ஒரு ராணுவ ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ போடுவது முழுமையாக தடுக்கப்பட்டதாகும். ராணுவ தளங்கள், வான் வழி தளங்கள் குத்தகைக்கு எடுப்பது போன்ற அரசியல் உடன்படிக்கைகளும் இதில் அடங்கும். நட்புறவுள்ள, பொருளாதார, வர்த்தக ரீதியான, வணிக , கலாச்சார மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்கு அனுமதி உள்ளது”.

இதன் விளக்கமாவது:

“ ஒப்பந்தத்தின் (treaties) வரையறையாவது, அது நாடுகளுக்கு மத்தியில் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை நிறைவேற்ற சில சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் ஒத்து போடப்படும் உடன்படிக்கையாகும். முஜ்தஹிதுகள் இதை ‘முஆஹதா’ என்று அழைப்பர்…. ஆனால் இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடித்தன்மை ஷரியா அனுமதிக்கப்பட்டதில் உள்ளதா என்று சரி பார்ப்பது முன்நிபந்தனையாக இருக்கின்றது. ஒப்பந்தங்களில் பல வகைகள் உள்ளன…

ராணுவ ஒப்பந்தங்களை பொருத்த வரை, அது ஹராமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இறைமறுப்பாளர்களின் நெருப்பிலிருந்து வெளிச்சம் தேடாதீர்கள்”(நசயீ, அஹமது). இறைமறுப்பாளர்களின் நெருப்பு என்பது அவர்களின் போர் அமைப்பை உவமையாக கூறப்பட்டுள்ளதாகும். மேலும் நபி (ஸல்) கூறினார்கள் “ நான் இணைவைப்பாளர்களிடம் நான் உதவி கோர மாட்டேன்” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்). “நாம் இணைவைப்பாளர்களிடம் உதவி கோர மாட்டோம்”( அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல் : அபு தாவூது, இப்னுமாஜா). “இணைவைப்பாளர்களை எதிர்க்க இறை நிராகரிப்பவர்களிடம் நாம் உதவி கோர மாட்டோம்” (சைத் பின் அல் முந்திரிடமிருந்து இப்னு அபி ஷைபா அறிவிப்பதாகும்)…..”

எனவே, நாடுகளை கொண்ட இணைவைப்பாளர்களிடம் உதவி கோருவதோ அல்லது கூட்டுறவு வைத்து கொள்வதோ, மேலே குறிப்பிட்டது போல அனுமதிக்க பட்டதில்லை.

இ- ஹுதைபியா உடன்படிக்கையை பொருத்த வரை, நபி (ஸல்) அவர்களுக்கும் குரைஷிகளுக்கும் இடயே இருந்த உடன்படிக்கை, இது கூட்டுறவு கிடையாது.ஏனெனில் கூட்டுறவு என்பது இருவரும் சேர்ந்து போர் புரிவது போன்ற விஷயங்கள் இதில் அடங்கும். இங்கு என்ன நடந்தது என்றால் நபி (ஸல்) அவர்களுக்கும், மக்கா எதிரிகளான இறை நிராகரிப்பாளர்களுக்கும் மத்தியில், அவர்களுடைய நிலங்கள் கைப்பற்றப்படும் முன்னர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு போடப்பட்ட சமாதான உடன்படிக்கையாகும். வெற்றி பெறுவதற்கு முன்னர் அவர்கள் தங்களுடைய இடங்களில் நிலைத்திருக்கும் நிலையில், போர் புரியக்கூடிய எதிரி நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால், அந்த இடங்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடமிருந்து பரித்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அவர்களுடன் எந்த உடன்படிக்கைகளிலும் ஈடு படக்கூடாது ஏனென்றால் அவ்வாறு நாம் உடன்படிக்கை செய்து கொண்டால், அவர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை நாம் அங்கீகரித்ததாகும். இது ஷரியாவில் அனுமதிக்கப்பட்டதில்லை. யூத சமூகம் முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது இதில் அடங்கும்.

விதி 189 ன் நான்காவது பத்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

Article 189: தற்பொழுதுள்ள நாடுகளுடன் (இஸ்லாமிய) அரசின் உறவு முறை நான்கு விதமாக இருக்கும்.

நான்காவது: போர் செய்ய கூடிய நாடுகள், உதாரணத்திற்கு இஸ்ரேல் போன்ற நாடுகளில், போர்கால நடவடைக்கைகளாகவே எல்லா உறவு முறைகளும் மேற்கொள்ளபடும். அவர்கள் நம்மிடம் போரில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் நடத்தப்படுவார்கள். அது போர் நிறுத்த காலமாக இருப்பினும் சரியே. அவர்களுடைய எல்லா விஷயங்களும் அரசில் நுழைது தடை செய்யப்படும்.”

இது கீழுள்ளவாறு விளக்கப்படுகிறது:

“…எந்த நாடுகளெல்லாம் போர் செய்ய படக்கூடிய நாடாக இருக்குமோ, அந்த நாடுகள் அனைத்திலும் அமைதி உடன்படிக்கை நிரந்தரமாக போட அனுமதி இல்லை. அதாவது, நிரந்தர போர் நிறுத்தமோ அல்லது நிரந்தர அமைதி உடன்படிக்கையோ அனுமதி இல்லை. அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّه

“(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்;” [அன்ஃபால்-39]

நபி (ஸல்) கூறுகிறார்கள் “நான் தூதராக அனுப்பப்பட்டதிலிருந்து என்னுடைய உம்மத்தின் கடைசி கால மனிதர் தஜ்ஜாலை எதிர்த்து சண்டையிடும் வரை ஜிஹாது என்றும் நடைபெற்று கொண்டே இருக்கும்” (நூல் : அபு தாவூது, அறிவிப்பவர் : அனஸ் (ரலி))

இந்த நாடுகளுடனான தற்காலிக உடன்படிக்கை, தற்காலிக போர் நிறுத்தத்தை பொருத்த வரை, இதை பின் வருமாறு காணலாம்:

உண்மையில் போரில் இருக்க கூடிய நாட்டிடம், அதன் நிலங்கள் இஸ்லாமிய நிலங்களாக இல்லாத நிலையில், அதனுடன் தற்காலிக உடன் படிக்கை செய்து கொள்வது ஆகுமாக்கப்பட்டதாகும். அதாவது தற்காலிகமாக போரை நிறுத்தி கொள்ள, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடைய நலன் கருதி ஷரியா நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இதற்கு ஆதாரம் நபி (ஸல்) மதினாவில் உருவாக்கிய இஸ்லாமிய அரசு, இன்னும் கைப்பற்றப்படாத, இஸ்லாமிய நிலமாக இல்லாத குரைஷிகளின் அரசுடன் ஹுதைபியாவில் உடன்படிக்கை செய்து கொண்டதாகும். அதாவது அந்த நிலம் (மக்கா) இஸ்லாமிய நிலமாக இல்லாத நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

நம்மிடம் போரில் இருந்த நாடு, அது முழுமையாக இஸ்லாமிய நில பரப்புகளில் தன்னுடைய அரசை நிறுவிய நாடாக இருக்கும் நிலையில், அல்லது அதற்கு இஸ்லாமிய நிலப்பரப்புகளை தவிர வேறு எந்த நில பரப்பும் இல்லாத நாடுகளாக இருக்கும் நிலையில், அதனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதில்லை. (உதாரணத்திற்கு இஸ்ரேல் பலஸ்தீனத்தை திருடியது). இது ஏனெனில், அவர்கள் நாடாக உருவானதே ஷரியாவின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்படாத (Invalid) விஷயமாகும். அவர்களுடன் ஒப்பந்தம் வைத்து கொள்வது ,அவர்களுக்கு இஸ்லாமிய நிலத்தை விட்டு கொடுத்து விட்டோம் என்று அர்த்தமாகும். இது தடுக்கப்பட்ட விஷயமாகும், இஸ்லாத்திற்கு எதிரான குற்றமாகும். இந்த நாடுகளுடன் எப்போதும் போர் சூழல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது முஸ்லிம் நாடுகளை ஆட்சி செய்யும் முறைகேடான (Illegitimate Ruler) ஆட்சியாளர்கள் இது போன்ற அரசுகளுடன் ஒப்பந்தம் வைத்து கொண்டாலும் சரியே.

இதனடிப்படையில், யூத அரசுடன் எந்த ஒப்பந்ததின் மூலமாகவும் ஒரு ஜான் அளவு நிலத்தை விட்டு கொடுப்பது ஷரியாவின் அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும். இது ஏனெனில் இஸ்ரேல் முஸ்லிம்களின் முழு நிலங்களையும் அபகரித்து ஆக்கிரமித்து கொண்ட நாடாகும். இது முஸ்லிம்களுடைய நிலத்தை விட்டு கொடுத்து, முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செய்யப்படும் செயலாகும். இது ஷரியாவின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று இல்லை. இஸ்லாமின் படி, ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் இதற்கு எதிராக போராடுவது கடமையாக இருக்கின்றது, எனவே அவர்களுடைய படைகளையும், யாரெல்லாம் போர் புரிய தகுதியுடையவராக இருக்கின்றார்களோ அவர்களை இந்த படைகளுடன் சேர்த்து அனுப்பி வைத்து அதன் மூலம் யூத அரசிடமிருந்து முஸ்லிம்களின் நிலத்தை மீட்பது கடமையாக இருக்கின்றது.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

“மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்”

(4:141)

மேலும் கூறுகிறான்,

فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُم

“ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்.” (2:194)

மேலும் கூறுகிறான்:

وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ

“இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்”

(2:191)

எனவே, ஹுதைபியா உடன்படிக்கை கூட்டுறவு இல்லை: அது இஸ்லாமிய அரசுக்கும் குரைஷிகளுக்கும் மத்தியில் போடப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமாகும். இது மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தமாகும். எனவே இந்த அனுமதி இஸ்லாமிய அரசு, எந்த நாடு தன்னுடைய நிலபரப்பு இஸ்லாமிய நிலமாக இல்லையோ –அந்த நாடுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். அதுவும் இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக இருக்க வேண்டும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நலனுக்காக இருக்க வேண்டும். எந்த நாடு தன்னுடைய அரசை இஸ்லாமிய நிலங்களில் நிருவியதோ, அந்த அரசுடன் , மேலே குறிப்பிட்டது போல, எந்த ஒரு உடன்படிக்கையும் இல்லை.

Comments are closed.