சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப்பார்வை 12.05.2017

islamophobia_america

தலைப்பு செய்திகள்:

1. புதிய தகவலின்படி, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த வருடம் 57% சதவிதமாக உயர்ந்துள்ளது.

2. முக்கிய போர் தந்திரத்தின் மாற்றமாக, அதிகப்படியான அமெரிக்கா துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்ப கருதியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

3. இந்தியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக, ஹிந்து கண்காணிப்பு அமைப்பு நடத்திய தாக்குதல்.

1.புதிய தகவலின்படி, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த வருடம் 57% சதவிதமாக உயர்ந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகளும், குற்றங்களும் கடந்த ஆண்டு உயர்த்துள்ளது, இது அதிகப்படியான சமீபத்திய அளவை விட அதிகம் என்று முன்னணி முஸ்லீம் தனியார் சட்ட உரிமை அமைப்பின் தகவல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Council on American-Islamic Relations (CAIR) என்ற அமைப்பின் தகவலின்படி, 2015 ஆம் ஆண்டை விட, கடந்த வருடம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 57% சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதலின் பட்டியலில் இறையில்லங்களை தீக்கிரையாக்குதல், ஹிஜாப் அணிந்து செல்லக்கூடிய முஸ்லிம் பெண்களின் ஹிஜாபுகளை களைதல், முஸ்லிம் இயக்கங்களுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புதல் மற்றும் தங்களுடைய இறைநம்பிக்கையின் காரணமாக வேலைகளை மறுத்தவர்கள், பதவி உயர்வை மறுத்தவர்கள் ஆகியோரை குறிவைத்து FBI-யும் மற்ற அரசு விசாரணை அமைப்புகளும் அவர்களை விசாரணைக்கு உட்படுத்துதல் என இந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலின் தகவலை ஆவணப்படுத்த CAIR என்ற அமைப்பு, அமெரிக்காவை சுற்றியுள்ள தங்களது அலுவலகத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்களையும், மின்னஞ்சல்களையும் ஆராய்ந்தும், தேசிய மற்றும் உள்ளூர் ஊடகத்தகவல்களை பரிசீலனை செய்தும் இந்த தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

இந்த ஆராய்ச்சியில், பாதிக்கப்பட்டவர்களையும், காவல்துறையினரையும் CAIR நேர்காணல் செய்தும் தகவல்களை பதிவிசெய்துள்ளது.

சட்ட அமலாக்கத்துறையாலும், காவல் துறையாலும் அனைத்து தாக்குதல்களும் பதிவு செய்யப்படவில்லை.

CAIR கூறுகிறது “இந்த ஆவணம் என்பது அமெரிக்க முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனையின் ஒரு சிறிய முன்னோட்டமே!!!”.

இந்த CAIR-ன் அறிவிப்பு காவல் துறையின் அறிவப்பை விட மிக துல்லியமாக உள்ளது என்று அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர் காரணம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சட்ட அமலக்காத்துறையாலும், சமுதாய அமைப்புகளாலும் குறைந்த அளவிலேயே பதிவுசெய்யப்படுகின்றன.

“நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்துவரும் இந்த மனபோக்கை சரிசெய்ய டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்” என்று இந்த அறிவிப்பின் துணை எழுத்தாளரும் CAIR-ன் இஸ்லாமிய எதிர்ப்பை கண்காணிக்கும் மற்றும் எதிர்க்கும் துறையின் இயக்குனரான ‘கோரே சயலார்’ கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதல், டிரம்ப்பின் கடந்த வருட தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு கணிசமான அளவு அதிகரித்துள்ளது தெரியவருகிறது, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களின் பிரயாணத்தை தடை செய்தல், இஸ்லாம் நம்மை வெறுப்படைய செய்கிறது போன்ற டிரம்ப்பின் வார்த்தைகள் இதற்கு அடிப்படையாக உள்ளது.

” டிரம்ப்பின் நச்சு கலந்த பிரச்சாரங்கள், நாட்டின் முக்கிய முடிவெடுக்கும் பதவிகளில் இஸ்லாமிய எதிர்ப்பு எண்ணம் கொண்டவர்களை அமர்த்துதல், இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கைகளை சட்டமாகுதல் முஸ்லிம்களின் பிரயாணத்தை தடைசெய்தல்” ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்க செய்துள்ளன என மேலும் அவர் மேற்கோள் காட்டுகிறார்[ஆதாரம்: LA times]

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது எதிர்பார்த்த ஒன்றே, இருப்பினும் டிரம்ப் ஒருவர் மட்டும் குற்றவாளியல்ல, செல்வசிறப்புடைய முதலாளித்துவவாதிகளுக்கு சொந்தமான ஊடகங்களை கொண்டு தொடர்ந்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக விதைக்கப்பட்ட துரோக மனப்பான்மை ஆகியவை , முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைபோக்குக்கும், இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் செயலுக்கும் வெளிப்படையாக உரிமம் அளிக்கும் செயலாக உள்ளது.

2. முக்கிய போர் தந்திரத்தின் மாற்றமாக, அதிகப்படியான அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானிற்குள் அனுப்ப கருதியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

பாரக் ஒபாமாவின் முக்கிய போர் தந்திரத்தின் முன்னேற்றமாக 3,000 அமெரிக்க துருப்புகளையும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையையும் ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்ப முடிவெடுத்துள்ளது டிரம்ப்பின் புதிய போர் கொள்கை யுக்தி.

தாலிபான்களை பின்தள்ளுவதற்க்கு, ஆப்கான் பாதுகாப்பு படையை பலப்படுத்தவும் பயிற்சியளிக்கவும் கூடுதல் அமெரிக்க படைகளை அனுப்ப வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளும், டிரம்ப்பின் நிர்வாகமும் பரிந்துரைத்துள்ளது.

மே 25-ஆம் தேதி புரூசல்ஸில் நடக்கவிருக்கும் நேட்டோ கூட்டத்திற்கு முன்பே அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 13,000 நேட்டோ துருப்புகள் ஆப்கானில் உள்ளன அவற்றுள் 8,400 துருப்புகள் அமெரிக்காவுக்குரியது.

200க்கும் மேற்பட்ட துருப்புகள் ஐ.எஸ். ஐ.எஸ், அல் கய்தா ஆகிய இயக்கங்களுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளன, ஆனாலும் அதிகப்படியான படைகள் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி, ஆலோசனை, உதவி ஆகிய விஷயங்களை அளிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆப்கான் தலைநகரை தாலிபான் கைப்பற்றுவதற்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த வருட மோதலில் ஆப்கான் ராணுவம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

டொனால்ட் டிரம்ப் அவரது பிரச்சாரத்தின் போது அடிக்கடி ‘அமெரிக்காவை முதன்மைப்படுத்துதல்’ என்ற விஷயங்களை கூறினார். இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தோடு, அமெரிக்கா வெளிநாட்டு சச்சரவுகளில் ஈடுபடுவதை விமர்சித்தும் வந்தார்.

9/11 தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2001-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது ராணுவத்தை ஆப்கானில் நிலைநிறுத்தியுள்ளது.

2003-ல் இராக்கின் படைகளை ஒப்பிடுகையில் ஆப்கானில் குறைந்த அளவு படைகளே இருந்தன.

2009-ஆம் ஆண்டு ஒபாமா 30,000 படைகளை கொண்டு ஆப்கான் ராணுவத்தை வலுப்படுத்தினார். 2010-ல் இந்த எண்ணிக்கை 100,000த்தை தாண்டியது.

ஆப்கான் ராணுவம் சுயபலம் பெற்றுவிட்டது என்றும் இனி அமெரிக்கா படிப்படியாக தன்னுடைய படைகளை குறைத்துக்கொள்ளும் என்றும் கூறினார் ஒபாமா. ஒபாமா ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட எந்த ஒரு செயலும் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வழிசெய்யவில்லை.

இங்கு கேள்வி என்னவென்றால் இந்த அமெரிக்கா ஆப்கான் ராணுவத்தின் தாலிபான்களுக்கு எதிரான ‘புதிய போர் யுக்தி’ 16 வருடத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருமா!!!? என்பதுதான்.

ஆப்கான் போரில் அமெரிக்கா வெற்றிபெறவேயில்லை! என்பது வெளிப்படையாக தெரிந்தபின், ஆப்கான் அரசாங்கத்தின் நிலையை தக்கவைக்க உதவுகின்றோம் என்று தன்னுடைய (தோல்வியை) கொள்கையை மாற்றிக்கொண்டது அமெரிக்கா, மேலும் ஐரோப்பிய-ஆசியா பகுதிகளில் தன்னுடைய கட்டுப்பாட்டை செலுத்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

3. இந்திய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக, ஹிந்து கண்காணிப்பு அமைப்பு நடத்திய தாக்குதல்.

ஒரு ஏப்ரல் மதிய வேலையில், காவி உடை அணிந்த கூட்டம் மீரட்டில் உள்ள ஒரு வீட்டில் முரட்டுத்தனமாய் புகுந்து அந்த வீட்டினுள் இருந்த இளம் முஸ்லிம் ஆடவரையும், ஹிந்து பெண்மணியையும் வெளிய இழுத்து வந்து தாக்கினர். அந்த காவி உடை அணிந்த கூட்டத்தின் குற்றச்சாட்டு என்னவென்றால் “அந்த இளம் ஜோடிகள் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள்”.

ஹிந்து இளம்படை அமைப்பு என்ற அமைப்பை சார்ந்த ஒருவன் அந்த முஸ்லிம் இளைஞரை அடித்து உதைத்து அந்த காட்சிகளை படம்பிடித்து ஆபாச குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவதற்காக போலீசாரிடம் ஒப்படைத்தான்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் முகத்தை மறைத்துக்கொண்டால், ” நாங்கள் காதலுக்கு எதிரானவர்களல்ல, ஆனால் இந்த பெண்ணை ஏமாற்றுவதற்கு இவன் தன் பெயரை ஹிந்து பெயரை போன்று மாற்றிக்கொண்டான் என்றும் இனி இதை போலீஸ் விசாரித்துக்கொள்ளும்” என்பதாக அந்த பெண்ணிற்கு எச்சரிக்கை செய்து அந்த அமைப்பின் தலைவன் நாகேந்தர் பிரதாப் சிங் அனுப்பிவைத்தான்.

மீரட்டில் ஏப்ரல் 12 அன்று அதிகளவில் ஹிந்துக்கள் வாழும் நாடான இந்தியாவில் நடந்த இந்த நிகழ்வே முஸ்லிம்களை ஹிந்துத்துவா அமைப்பினர் தாக்கிய சமீபத்திய சம்பவம், குறிப்பாக ஆளும் பாஜகவினர் மார்ச் மாதம் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அரங்கேறியது.

நாட்டின் மொத்த ஹிந்து மக்கள் தொகையின் மைய்யப்பகுதியாக திகழ்கிற உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் எதிர்ப்பு எண்ணம் கொண்ட யோகி அதித்யநாத்தை, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் முதலமைச்சராக ஆக்கியப்பின் இதுபோன்ற அநேக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதேபோல ஏப்ரல் மாதம், வடமாநிலத்தில் நடைபெற்ற மாடுகளின் சந்தையில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம் பால் வியாபாரிகளை, ஹிந்து பசுவதை கண்காணிப்பாளர்கள் கடுமையாக தாக்கினார் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டும் மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

1.3 பில்லியன் மக்கள் தொகையில் 80% சதவிகிதமாக இருக்கும் ஹிந்துக்கள் பசுவை புனிதமாக கருதுகின்றனர்,

ஹர்யானவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 27 வயதே ஆன அஸ்மத் கான் தனது படுக்கையில் இருந்து கூறியதாவது” நாங்கள் பால் பண்ணைக்காக மாட்டுச் சந்தையில் இருந்து மாடுகளை சட்டபூர்வமாக வாங்கி வந்து கொண்டிருந்த வழியில் எங்கள் வாகனத்தை வழி மறித்த சில நபர்கள் எங்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர் அதில் எனது தோழர் கொல்லப்பட்டார்”.

2014-ல் ஹிந்துத்வ அமைப்பான பாஜக ஆட்சிக்கு வந்தபின் முஸ்லிம்கள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மானு சிங்வி கூறியதாவது: “ஆத்திரமூட்டும், பிரிவினையை ஏற்படுத்தும் வாக்குமூலங்களால் மிகவும் அச்சம் சூழ்ந்த மற்றும் பாதுகாப்பில்லாத உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது”.

மேலும் அவர் கூறியதாவது:”அவர்கள் மக்களின் கலாச்சாரம்,உணவு, உடை, சிந்தனை ஆகிய அனைத்து விஷயங்களின் மீதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகின்றனர்”.

“அரிதான மற்றும் தனித்துவமான சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை என்னும் பிம்பத்தை எதிர் கட்சிகளும், ஊடகத்தின் சில பிரிவுனரும் சித்தரிக்க முயற்சிப்பதை மோடியின் அரசு கடுமையாக எதிர்க்கிறது” என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: “தனிப்பட்ட பலனுக்காக செய்யப்பட்ட பிரச்சாரங்கள் மோசமான தோல்வியை சந்துத்துள்ளது, காரணம் இந்த பிரச்சாரம் கற்பனையும், புனையப்பட்டதும், பொய்யும் நிறைந்த ஒன்றே அன்றி வேறில்லை!!!”.[US TODAY]

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதன் காரணமாக அவர்களை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்கிறது.

ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் என்றும் ஆசியாவின் சகிப்புத்தன்மை என்றும் தன்னை பெருமைப்படுத்திக்கொள்ளும் இந்திய நாட்டின் உண்மை நிலை இது தான். மேலும் உணர்வில்லாமல் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை அது ஆதரிக்கிறது. இந்நிலையில் ஆசிய கண்டத்தை தலைமை தாங்க இந்தியாவிற்கு அருகதையுள்ளதா!!!.

Comments are closed.