சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 13.05.2017

saudi-arms

டிரம்பின் வருகையை முன்னிட்டு, அமெரிக்காவுடன் பெரும் ஆயுத ஒப்பந்ததில் கையெழுத்திடும் சவூதி அரேபியா

சவூதி அரேபியா டிரம்பின் முதல் வருகையை மட்டும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, நூறு பில்லியன் டாலர் ($100 billion) மதிப்புள்ள அமெரிக்காவுடனான பெரும் ஆயுத ஒப்பந்ததையும் தான். ராய்டர்ஸின் அறிவிப்பின்படி:

“சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான (77.6 பில்லியன் பவுன்டு) அடுத்தடுத்து வரவிருக்கும் சவூதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தம் இறுதி கட்ட நிலைக்கு வந்திருப்பதாக வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இது அதிபர் டிரம்பின் சவூதி வருகைக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட அறிவிப்பாகும்.
பெயர் வெளியிடப்பட விரும்பாத அதிகாரி ஒருவர் ராய்டர்ஸுக்கு அறிவிக்கையில், சவூதி அரேபியாவுடனான இந்த ஆயுத ஒப்பந்தம் பத்து வருடத்திற்குள் சுமார் 300 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். அண்டை நாடான இஸ்ரேலுடன் அமெரிக்கா நட்புறவு (ally) நாடாக இருக்கும் நிலையிலும் அமெரிக்கா சவூதி அரேபியாவிற்கு ராணுவ உதவியளிக்கிறது என அவர் கூறினார்.

ஆயுத ஒப்பந்தங்கள் இறுதி கட்ட தருவாயில் இருப்பதாக அவர் கூறினார். வருகின்ற மே 19 ல் அதிபர் டிரம்ப் முதல் உலக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் முதலில் செல்லும் நாடு சவூதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில்தான் ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.”

அமெரிக்கா அரசு சவூதியுடன் ஒப்பந்தங்கள் வைத்து கொள்வது வெறும் வருமானத்திற்கு மட்டும் இல்லை. மாறாக, சவூதியை முக்கிய பிராந்திய நட்புறவு நாடாக (regional ally) ஆக்கும் ஒபாமா அரசின் முயற்சியை வலுப்படுத்தும் செயலாகவே இருக்கின்றது. இது போன்ற ஆயுத ஒப்பந்தங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் அமெரிக்கா சவூதியிடம் என்ன எதிர்பார்க்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். ராய்டர்சின் அதே அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

“அமெரிக்க ஆயுதங்கள் வழங்குதல், அதனை பராமரித்தல், கப்பல்கள், வான் ஏவுகனை பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இந்த ஒப்பந்தங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இதில் நாம் கணிசமான ஒத்துழைப்பை காணமுடியும்….பல வகையில் அவர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வல்லமையை உருவாக்குவதற்காக இது போடப்பட்டுள்ளது” சொல்லபோனால், சீனாவின் கடல் பட்டு வழிதளம் (Silk Sea Route) அரேபிய தீபகற்பத்தின் தெற்கு பகுதியையே மையமாக வைத்திருக்கும் நிலையில், எமனில் போர் நடந்து கொண்டிருக்க அங்கு கடற்படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையிலும், கடல் வணிகப் பாதைகளை குறிவைக்கும் சீனாவை எதிர்க்க சவூதிக்கு இந்த ஒப்பந்தங்கள் உருதுணையாக இருக்கும்.

“ஐ.எஸ் தீவிரவாதகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பது, எமெனில் நடக்கும் போர், பாலிஸ்டிக் ஏவுகனை மற்றும் செங்கடலில் இருக்கும் அச்சுறுத்தல்கள் போன்றவைகள் பற்றி டிரம்ப் பேச உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்”.

அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தின் இயலாமையை தற்பொழுது உணர்ந்து வருகின்றது, அதனாலேயே தன்னுடையை கங்கானிகளை வைத்து போரிட ஆயத்தமாகியுள்ளது. இன்று அமெரிக்கா சவூதியை முஸ்லிம்களுக்கு எதிரான போரில் மட்டும் உபயோகிக்க வில்லை, மாறாக, சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான மூலோபாய கட்டுப்பாட்டிலும் (strategic control) சவூதியை பயன்படுத்தி கொண்டுள்ளது.

சிரிய குர்துகளுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது எர்துகானை வெறுப்படைய செய்துள்ளது

சிரிய புரட்சியில் துருக்கியின் துரோகத்தினால் கிழக்கு அலெப்போ வீழ்ந்ததற்கு பிறகு, எர்துகானையே ஏமாற்றும் விதமாக அமெரிக்கா சிரியாவின் குர்து படைகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவி வழங்க ஆயத்தமாகியுள்ளது.‘The Guardian’ நாளிதழின்படி :

“ஐ,எஸ். தீவிரவாதிகளின் கடைசி முக்கிய இடமான ராக்காவில் அவர்களை அழிப்பதற்கு குர்து இன படைகளுக்கு ஆயுத உதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. இதனையடுத்து இத்திட்டம் தவறானது என்றும் குறுகியபார்வை உள்ளது என்றும் துருக்கி பிரதமர் அறிவித்தார். மேலும் அதிபர் டிரம்ப் இத்திட்டத்தை மாற்றிக்கொள்ள தாம் வேண்டுகோள் விடுக்க போவதாகவும் அவர் கூறினார்.

சிரியாவில் உள்ள குர்து படையான “People’s Protection Units (YPG)” என்ற படைக்கு நேரடியாக ஆயுத உதவி அளிக்கப்போவதாக இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர். இப்படைகளை பொருத்தவரை, துருக்கி அரசு இதை நீண்டகாலமாக தீவிரவாத அமைப்பாக கூறிவருகின்றது. மேலும் இப்படை துருக்கியில் உள்ள ‘the Kurdistan Workers’ party (PKK)’ என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் துருக்கி அரசு கூறிவருகின்றது.

லன்டனில் கடந்த வெள்ளிகிழமை பேசும்பொழுது, துருக்கியின் பிரதமர் பின்யாலி யில்திரிம் Binyali Yıldırım கூறுகையில் “அமெரிக்கா மனித பிறவியே இல்லாத ஒருபடையுடன் கூட்டுறவு வைத்துள்ளது. அவர்கள் எப்படிபட்டவர்கள் என்றால் காசுக்காக எந்த அரசுக்காகவும் சண்டை போடக்கூடிய இயந்திரங்கள்” என அவர் கூறினார்.”

சிரியாவின் புரட்சியில் துரோகம் இழைத்த துருக்கி அரசு அமெரிக்காவை பார்த்து எவ்வாறு துரோகம் இழைக்கிறார்கள் என்று சொல்ல முடியும்? மறுபடியும், அமெரிக்கா தன் இயலாமையை மறைக்க மற்ற நபர்களை போரில் உபயோகம் செய்துள்ளதை காணலாம்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை மன்றம் (Belt and Road Forum) மேற்கத்திய பொருளாதார ஏகாதிபத்தியத்தை சீன பொருளாதார ஏகாதிபத்தியம் மாற்றியதையே குறிக்கின்றது

சீனாவின் தலைமையில் நடந்த மிக பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமான பெல்ட் மற்றும் சாலை முயற்சியில் (Belt and Road initiative BRI) உலக தலைவர்கள் பங்கு பெற்றது, உலக ஆதிக்கத்தில் அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிக்கும் மற்றுமொரு அறிகுறியாக இருக்கின்றது. ‘Foreign Policy’ என்ற இணையதளத்தின்படி:

“அமெரிக்கா சீர்நிலையற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் சீனாவில் the Belt and Road Forum இந்த வாரம் தொடங்கியிருப்பது, ஆசியாவில் அமெரிக்காவின் தலைமைத்துவம் அழிவில் இருக்கும் அபாயகரத்தை குறிக்கின்றது. இரு நாட்களில் மட்டும் சுமார் 1200 பிரநிதிகளை சீனா வரவேற்க உள்ளது. இதில் 29 நாட்டு தலைவர்கள் உள்ளடங்கும். ஆசியா , மத்திய கிழக்கு, ஐரோப்பா போன்ற நாடுகளை இணைக்கக்கூடிய “ஒரு பெல்ட் ஒரு சாலை” (One Belt One Road) என்று சொல்ல கூடிய “பெல்ட் சாலை தொடக்கம்” (BRI) என்ற திட்டமே இவ்விழாவின் முக்கிய அம்சமாகும் .

2013 ல் சீனாவின் அதிபர் ஜி ஜிங்க்பிங்க் கூறுகையில் “அருகிலுள்ள சுமார் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள 65 நாடுகள் பங்கு பெற்றால் மட்டுமே BRI திட்டம் சாத்தியமாகும். இதில் பெரும்பாலான திட்டங்களில் அதன் புதுமை, மதிப்பு, சாத்தியக்கூறு போன்றவை பற்றிய சந்தேகங்களை உலக தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலையை சீனா மேற்கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் ஆதிக்கம் முன்பில்லாதது போல் குறைவாக இருக்கும் நிலையில் சீனாவின் தலைமைத்துவத்தின் வெளிப்பாட்டையே குறிக்கின்றது.” என கூறினார்.”

பெரும் நிலபரப்புகளை கொண்ட ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா போன்ற முஸ்லிம் நிலங்களை இணைத்து, செழிப்பை தந்த வரலாற்று சிறப்பு மிக்க ‘பட்டுவழி சாலையே’ இவ்வளவு பெரிய திட்டத்திற்கு தூண்டுகோளாகும். ஆனால் இதற்கு முன்னர் இருந்த இஸ்லாமிய முன்னோடிக்கு மாற்றமான ஒன்றே இந்த சீனாவின் முயற்சியாகும். இது ஏனெனில் சீனா மேற்கின் பொருளாதார கொள்கையான முதலாளித்துவ கொள்கையை ஏற்று கொண்டதேயாகும்.

தாராளவாத விற்பனையயும் திறந்தவெளி சந்தை போன்ற கொள்கைகளை உள்ளடக்கியதும்தான் முதலாளித்துவ பொருளாதார கொள்கையாகும். ஆனால் உண்மையில், இவ்வணிக கொள்கைகள் பெரும் பொருளீட்டும் ஆசையுள்ள ஏகாதிபத்திய நோக்கத்தையே மறைத்து வைத்திருக்கின்றன. அதேசமயம் இஸ்லாமிய பொருளாதரம் எல்லோருக்கும் உண்மையான செழிப்பை கொடுக்க கூடியதாக இருக்கின்றது. முதலாளித்துவமோ காலனி நாடுகளின் செல்வத்தை சுரண்டி தன்னுடைய நாடுகளுக்கு எடுத்து செல்ல கூடியதாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்து ரயில்கள், கால்வாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் அமைத்து அதன் மூலம் இந்திய நாட்டின் வளங்களை எடுத்து செல்ல கூடியவர்களாக இருந்தனர். இது கடந்த ஒரே நூற்றாண்டில் செல்வ செழிப்பு மிக்க இந்திய துணை கண்டம் ஏழை நாடாக அமையும் அளவிற்கு இருந்தது.

இஸ்லாமிய சித்தாந்தம் மட்டுமே உண்மையில் எல்லோருக்கும் செழிப்பை வழங்க முடியும். இது ஏனெனில் முஸ்லிம்கள் இயல்பாகவே உலக ஆசைகளால் தூண்டப்படாத ஆன்மீக சிந்தனை உடையவர்கள். மீண்டும் நபி வழி மூலம் நிலைநாட்டப்படும் கிலாபா அரசின் மூலமாகவே உலகம் நீதியையும் செழிப்பையும் காணமுடியும்

Comments are closed.