சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வியட்நாமின் தருணம்

iraq_war-620x330

ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா இதுவரை சந்தித்திராத மிக நெடும்போரின் 17 ஆம் ஆண்டில், அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட அரசு பயனற்று போவதோடு மட்டுமல்லாமல் அது சரிகின்ற காலம் வெகு தூரமில்லை. பாதுகாப்பு விஷயத்தில் தாலிபானின் தலைமையிலான ஊடுருவலை காபூல் தடுக்க தவறியுள்ளது, கைப்பற்றிக்கொள்ள மல்லுக்கட்டிய தாலிபானின் அனைத்து முயற்சியிலிருந்தும் அதன் கைவசமிருந்த நிலப்பரப்பை பாதுகாக்க தவறியுள்ளது. ஒரு பாதுகாப்பு வளாகத்தில் தாலிபான் படையினர் ஏப்ரல் 21 ம் தேதி பாதுகாப்பை அத்துமீறி 150 இராணுவ வீரர்களை கொன்றுள்ளனர். [1] கடந்த சில வாரங்களில், அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதலாமவராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் ஏப்ரல் 16 அன்று பயணம் மேற்கொண்டார். ஒரு வாரம் கழித்து, பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆப்கான் தலைநகருக்கு அறிவிக்கப்படாத ஒரு விஜயத்தை மேற்கொண்டார். அமெரிக்க இராணுவ மற்றும் அரசுத்துறை தாலிபானுக்கு எதிராக போர் புரிய ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 3,000 இராணுவ வீரர்களை கூடுதலாக அனுப்ப வேண்டும் என பரிந்துரை செய்தது இந்த அறிவிப்பானது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மற்றுமல்லாமல் உலகளாவிய அளவிலான அமெரிக்க இராணுவ ஈடுபாடு குறித்து முழுமையான அளவில் மறு ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வெளியானதாகும். தற்போது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஒரு வியட்நாமிய பொழுதை நெருங்கிக் கொண்டிருக்கிறது – தனது நஷ்டத்தை குறைக்க வியட்நாமிலிருந்து வெளியேறியதை போன்று வெளியேற வேண்டுமா.

“பத்து வருடகால போருக்கு பிறகு உலக பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், நூற்றாண்டுகளாக பணியவைக்கும் அயல்நாட்டு முயற்சிகளை எதிர்த்துவரும் நிலப்பரப்பில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அதற்கான கட்டணத்தை உயிராலோ அல்லது பொருட்களாலோ செலுத்த விரும்பவில்லை.”

மே 2012 நேட்டோ உச்சிமாநாட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2001 ஆம் ஆண்டு பான் நகரில் மாநாடு நடந்த நாள் முதல், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் காபூலை தாண்டி அதிகாரத்தை கொண்டிருக்கும் ஒரு செயல்படும் அரசாங்கத்தை உருவாக்க தடுமாறியது. மார்ச் 2013 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பை தொடங்கியபோது அமெரிக்க கைக்கூலியான ஹமீத் கர்சாய் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் 2004 ஆம் ஆண்டு பரவலான அளவில் மோசடிகள் நிறைந்த தேர்தலுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அதிபராக ஆனார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மோசடி நிறைந்த தேர்தலில் அஷ்ரப் கனியை கொண்டு ஹமீத் கர்சாய் மாற்றப்பட்டார். இருப்பினும் பிராந்திய போர்க்குழு தலைவர்களான பால்க் பகுதியை சார்ந்த அட்டா முஹம்மது நூர், உஸ்பெக் பழங்குடி தலைவரான அப்துல் ராஷித் தொஸ்தூம் (உண்மையில் கனியின் துணை அதிபராக இருப்பவர்) , மற்றும் மேற்கு ஹெராத் பகுதியை சார்ந்த இஸ்மாயில் கான் ஆகியோர் காபூலின் மத்திய அரசாங்கத்தை காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள். வியப்பதற்கு ஒன்றுமில்லாத வகையில் அமெரிக்கா அதன் வியூகத்தை மாற்றும் கட்டாயத்துக்கு உள்ளாகி அதன் வெளியேறும் நாளை பலமுறை தள்ளிவைத்தது. இறுதியாக, 2012 மே மாதம் சிகாகோ நகரில் நடந்த ஒரு நேட்டோ உச்சிமாநாட்டில், அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் தோல்வியை ஒப்புக்கொண்டன. ஆப்கானிய துரதிர்ஷ்டவசமான முயற்சிக்கான திரையை இழுத்து மூடுவதற்கான நேட்டோ நாடுகளின் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறப்பிடுவதாவது: “பத்து வருடகால போருக்கு பிறகு உலக பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், நூற்றாண்டுகளாக பணியவைக்கும் அயல்நாட்டு முயற்சிகளை எதிர்த்துவரும் நிலப்பரப்பில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அதற்கான கட்டணத்தை உயிராலோ அல்லது பொருட்களாலோ செலுத்த விரும்பவில்லை.” [2] அமெரிக்கா கட்டமைத்த அரசியலமைப்பு ஒருபோதும் பிடிமானத்தை கொண்டிருக்கவில்லை அது இப்போது கட்டவிழ்வதோடு மட்டுமல்லாமல், தற்போதய போக்கு நீடிக்குமாயின் இந்த அரசு கவிழ்ந்து போவதே அதன் வெளிப்பாடாக இருக்கும்.

இராணுவத்தில், உளவுத்துறையில் அல்லது உள்நாட்டு காவல் படையில் அமெரிக்கா ஒரு சாத்தியமான பாதுகாப்பு சேவையை ஏற்படுத்த முற்றிலும் தவறியுள்ளது. பதினேழு ஆண்டுகள் கழித்து, ஆப்கானிய தேசிய இராணுவம் (ANA), ஆப்கானிய தேசிய காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் (உளவுத்துறை) அனைத்தும் கந்தலான நிலையிலுள்ளது. புஷ்ஷின் நிர்வாகம் தனது செயல்பாட்டு நோக்கங்களை பழங்குடியினரின் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் காலடிதடத்தை குறைத்து பாகிஸ்தானை சிறியளவிலான பங்களிப்பு செய்ய வைப்பதன் மூலம் சாதிக்கலாம் என நம்பியது. மற்றொருபுறம் ஒபாமா, பெருமளவிலான இராணுவ காலடி தடத்தை ஆதரித்தார் அதாவது ஆப்கானிஸ்தானிய மண்ணில் அதிக அமெரிக்க வீரர்களை ஈடுபடுத்துவது மற்றும் பழங்குடியினரின் பகுதிகளில் போரை தொடர்ந்து நடத்திடுவதில் பங்குகொள்ள பாகிஸ்தானை கட்டாயப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒபாமா அமெரிக்க வாக்காளர்களிடத்தில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை 2012 ஆம் ஆண்டில் குறைப்பதாக உறுதிமொழி அளித்திருந்தார். வாஷிங்டன் ஆப்கானிய பாதுகாப்பு படைகளில் பில்லியன் கணக்கில் டாலர்களை இதுவரை செலவு செய்திருந்தும், உண்மை நிலை என்னவெனில் அவர்கள் நாடெங்கும் தாலிபான்களை பின்தொடரும் ஒரு தோல்வியுறும் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் காபூல் அரசாங்கம் சிறிய அளவிலான நிலப்பகுதியில் தான் தனது கட்டுப்பாட்டை கொண்டுள்ளது, அதன் ஆயுதப்படைகள் மாகாண தலைநகரங்கள் மற்றும் மெல்லியதாக இருக்கும் பெருநகரங்களை இணைக்கும் சாலை இணைப்புகளை பாதுகாப்பதற்காக கிராமப்புற சாவடிகளை கைவிட்டுள்ளது. தாலிபான் ஆதிக்க சக்தியாக விளங்கி வருகிறது மற்றும் அது தொடர்ந்து நாடளாவிய அளவில் விரிவடைந்து வருகிறது. முன்பு உட்புக முடியாதிருந்த பதக்‌ஷான் மாகாணம் போன்று வடபகுதிகளில் அவர்கள் இப்போது சென்றடைந்துள்ளனர்.

ஆபிரஹாம் லிங்கன் விமானத்தில் ‘இலக்கு அடையப்பட்டு விட்டது’ எனும் பதாகைக்கு பின் ஜார்ஜ் W புஷ் நின்று ஈராக் வெற்றி குறித்து பேசியதை பலர் நினைவில் கொண்டிருப்பார்கள். ஆனால் 17 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தானிய போரில் தாலபான் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அமெரிக்கா 2005ல் ஈராக்கிய கிளர்ச்சியில் அழிவை சந்தித்து கொண்டிருந்தபோது தாலிபான் மீண்டும் தோன்றியது. தொடக்கத்தில் அமெரிக்கா தாலிபானை அதிகாரத்திலிருந்து எளிதாக அப்புறப்படுத்தினாலும், உண்மையில் நடந்தது என்னவென்று ஸ்டிராட்ஃபோர் கோடிட்டு காட்டியது: “உண்மையில் போர்க்களத்தில் தாலிபானை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வது இன்றியமையாதது. வழமையான போரில் அமெரிக்க வான்படையின் சக்திக்கு தாங்கள் நிகராக மாட்டோம் என்பதை அறிந்தவுடன், அவர்கள் போர்க்களத்திலிருந்து பின்வாங்கி மறைந்து சென்று கிளர்ச்சிப்படை தாக்குதலை தொடுத்தனர்.” அமெரிக்கா புதைக்குழியில் மூழ்கியதையடுத்து தாலிபானுடன் சமரசம் ஏற்படுத்தி கொள்வதற்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தது. தாலிபான் தலைவர் முல்லாஹ் முஹம்மது உமர் 2011 ஈத் அல்-ஃபித்ர் முன்னிட்டு வெளியிட்ட ஒரு நெடுந்செய்தியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதை உறுதிபடுத்தினார். [3] இந்த பேச்துவார்த்தையானது தாலிபானை தோற்கடிக்க முடியாது என்பதை அமெரிக்கா ஒப்புக்கொண்டதற்கான முதல் சமிக்ஞையாக இதை காணலாம். ஆனால் குறிப்பாக அமெரிக்க இராணுவ ரீதியிலான பலவீனத்தை தாலிபான் கண்ட பிறகு இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தானின் அனைத்து நிறுவனங்களிலும் இராணுவப்படை உயர் பதவிகளிலும் தாலிபான் ஊடுருவியது. கடந்த சில வருடங்களில் பாதுகாப்பு அத்துமீறலால் நடைபெற்ற பல தாக்குதல்கள் மூலம் இதை காணலாம். ஏப்ரல் 21ம் நாளன்று, தாலிபான்கள் இராணுவ சீருடை மற்றும் அடையாள நுழைவுச்சீட்டு அணிந்து மற்றும் இராணுவ ஊர்திகளை உபயோகித்து வட பகுதியிலுள்ள பால்க் மாகாணத்திலுள்ள ஒரு முக்கிய இராணுவ தளத்தில் நுழைந்து, அந்த வளாகத்தினுள் 150 வீரர்களை கொன்றனர். [4] ஆபிரஹாம் லிங்கன் விமானத்தில் ‘இலக்கு அடையப்பட்டு விட்டது’ எனும் பதாகைக்கு பின் ஜார்ஜ் W புஷ் நின்று ஈராக் வெற்றி குறித்து பேசியதை பலர் நினைவில் கொண்டிருப்பார்கள். ஆனால் 17 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தானிய போரில் தாலபான் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சோவியத் யூனியனும் பிரிட்டனும் முன்பு வீழ்ந்த அதே யதார்த்தநிலைக்கு அமெரிக்காவும் இரையாகியுள்ளது அதாவது ஒரு ஆக்கிரமிப்பு சக்தியானது ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் நாளடைவில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அதற்கு ஒரு தீர்வு இருந்திருக்குமேயானால், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் நீண்டநாட்களுக்கு முன்னரே அதை நடைமுறைபடுத்தி இருப்பார்கள் மற்றும் அமெரிக்க அயல்நாட்டு இராணுவ படையெடுப்பின் 17 ஆம் ஆண்டு குறித்து நாம் இப்போது எழுதி கொண்டிருக்க மாட்டோம். அமெரிக்கா தன்னால் அரசுகளை நிலைகுலைய வைக்க முடியும் என்பதையும் ஆனால் தேசத்தை உருவாக்கும் ஆற்றலில் அது வழமையாக தோல்வியுற்று வருவதையும் காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து சமாதானப்படுத்த வெல்ல முடியாத இந்த போரில் தொடர்ந்து படையினரை இழப்பதா அல்லது வியட்நாமில் செய்தது போன்று அங்கிருந்து வெளியேறி அதன் நஷ்டத்தை குறைப்பதா என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது முடிவு செய்ய வேண்டும். அது இதை செய்யும் பட்சத்தில் காபூலின் அரசு கவிழ்ந்து விடும் அதன் பின்னர் எஞ்சியிருப்பது என்னவென்றால் உள்நாட்டு போர் தான். வல்லரசுகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கும் போது இறுதியாக தனது நஷ்டத்தை குறைத்து ஒட்டமிடுவது தான் வழமையாக நடந்துள்ளது.

Comments are closed.