சமீப பதிவுகள்

ஆய்வுகள்

பனாமா வழக்கும் பாகிஸ்தான் நீதித்துறையின் அவலமும்

Panama-Papers

பாகிஸ்தான்பனாமா வழக்கை கையாண்ட உச்சநீதிமன்றம், பல ஆண்டுகள் இத்தீர்ப்பு பற்றி பேசப்படும் என்ற வெற்றி முழக்கம் எழுப்பியது. இத்தீர்ப்பு பற்றி பல ஆண்டுகள் பேசப்படும் என்றாலும் இத்தீர்ப்பனது சந்தேகமின்றி ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் ஒரு அரசியல் வெற்றியை தந்துள்ளது. ஆளும்கட்சியின் பிரதமர்மீது சமர்ப்பிக்கப்பட்ட ஆதார்ங்கள் போதுமானதாக இல்லை என்ற தீர்ப்பால் (PML) பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கிற்கு ஆளும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது, அதேசமயம் (PTI) பாகிஸ்தான் தெஹ்ரிக் ஏ இன்சாஃப், (PPP) பாகிஸ்தான் மக்கள் கட்சி, (JI) ஜமாத் ஏ இஸ்லாமி போன்ற எதிர் கட்சிகளுக்கு ஆளும்கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த வழக்கும் தீர்ப்பும் அமைந்துள்ளது. ஜனநாயக ஆட்சி அமைப்பானது மக்களின் வரிபணத்தையும், சொத்துக்களையும் ஊழல் மூலமாக உறிஞ்சிய நவாஸ், சர்தாரி போன்றவர்களை பாதுகாக்கும் அமைப்பாகவே இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இத்தீர்ப்பானது பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு நீதித்துறையின் மீது வைத்துள்ள அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான சாதாரி ஸ்விஸ் வங்கியில் பதியுள்ள பணம் குறித்த விஷயம் அப்பட்டமாக வெளியானபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, அதேபோல் பாகிஸ்தானின் பிரபல பாடகியான அயன் அலி, பண பரிமாற்ற குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும், பகிஸ்தானிலிருந்து வெளியேறமுடியாத நபர்களின் பட்டியளிலிருந்து (ECR/Exit Control List) அவள் பெயரை நீக்கியதும் இந்த நீதித்துறைதான். ரேமண்ட் டேவிஸ் எனும் அமெரிக்க உளவாளி பட்டப்பகலில் பாகிஸ்தானில் முஸ்லிம்களை சுட்டு கொண்டபோதும் அவனுக்கு தண்டனை அளிக்காமல் அவனை பதுகாப்பாக அனுப்பிவைத்ததும் இந்த நீதித்துறைதான்.

பாகிஸ்தானின் நீதித்துறையை பொறுத்தவரை பணம் படைத்தவர்கள் (வக்கீல்களை நாடுவதைவீட) நீதிபதியை நாடி தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்று சுதந்திரமாக அநீதிகளையும், தவறுகளையும் மேற்கொள்வதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் நீதிமன்ற கதவுகளை தட்டினால் தீர்ப்பு வருவதற்கு முன்பே அவர்கள் ஆயுட்காலம் முடிந்துவிடும் அளவிற்கு மந்தமாக செயல்படும் நிலையிலே நீதித்துறையின் போக்கு இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக இந்த பனாமா தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் சிந்தித்த விதத்திலும், விவாதித்த விதத்திலும், ஒற்றுமை இருந்த போதிலும் தீர்ப்பானது 3:2 என்ற விகிதத்தில் இருந்தது, அதாவது 3 பேர் பிரதமருக்கு சதாகமாகவும் 2 பேர் பிரதமருக்கு எதிராகவும் வழங்கினர். 5 நீதிபதிகளின் வழக்கின் ஆய்வுக்கோணத்தில் ஒற்றுமை இருந்தபோதிலும் 3 பேர் ஆட்சியாளருக்கு ஆதரவாக இருந்த காரணம் என்ன?

இதற்கு முக்கிய பின்னணி என்னவெனில் நியாயமான நீதிபதியையும் தடம்புரள செய்யும் நீதித்துறையை கொண்டு செயல்படும் ஜனநாயக அமைப்பே. இந்த ஜனநாயக அமைப்பானது மனிதனின் அறிவில் இருந்து தொன்றிய அரசியல் சாசனத்தை கொண்டு செயல்படுவதால் இது இயல்பாகவே குறைபாடுடையதாக திகழ்கிறது. இதன் நீதித்துறை மக்களின் பதவிக்கும் செல்வத்திற்கும் மதிப்பளித்து சட்டங்களையும், சாட்சிகளையும் திரித்து அவர்களுக்கு ஏற்ற ஒருதலைபட்சமான தீர்ப்புகளை வழங்குவதில் ஜனநாயக கட்டமைப்பின் நீதித்துறை முன்னோடியாக திகழ்கிறது.

இஸ்லாமிய ஆட்சி அமைப்பான கிலாஃபாவின் நீதித்துறை முற்றிலும் அல்லாஹ்வின் வேதம் அடிப்படையிலும், ரஸூலுல்லாஹ்வின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பை கொண்டது, இஸ்லாமிய அரசின்கீழ் செயல்படும் நீதிபதிகள் எந்தவித அழுத்தமும் இன்றி நீதியான முறையில் தீர்ப்பளிக்க இஸ்லாம் வழிவகையை ஏற்படுத்தி ஊக்கமலிக்கிறது. இதனால் கிலாஃபாவின் கீல் இருந்த நீதிபதிகள் நீதியின் கலங்கரை விளக்காகவும், நடுநிலைவாதிகளாகவும் திகழ்ந்ததை நம்மால் காணமுடியும். கலீஃபா அலி (ரலி) அவர்களின் ஆட்சியில் கலீஃபாவிற்கும் ஒரு யூதருக்கும் ஏற்பட்ட வழக்கு விவகாரத்தில் நீதிபதி அந்த யூத நபருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய வரலாற்றை கொண்டது இந்த இஸ்லாமிய ஆட்சியின் நீதித்துறை.

இதே சட்டம் தான், உமர் இப்னு கத்தாப் அவர்கள் கலீபாவாக இருந்தபோது, தன் மகனையே செய்த தவறுக்காக தண்டிக்க வைத்தது. இஸ்லாமிய அரசின் நீதித்துறையானது முக்கிய பிரமுகர்களுக்கு நாம் காண்பதுபோல் எவ்வித சிறப்பு சலுகையும் வழங்காது.

பலவீனமானவர்களின் உரிமைகள், அவர்களின் அந்தஸ்து, இனம், பாலினம், மதம், போன்றவை எவ்வித பாகுபாடும் இன்றி பாதுகாக்கப்படும். உயர்ந்த குல பெண் ஒருவர் திருடி மாட்டிக்கொண்ட பின், அவரின் குலத்திற்காக அவரை மன்னிக்கும் படி, நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்கபட்ட பொழுது, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை கடுமையாக எச்சரித்தார்கள். உங்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகம் அழிந்ததற்கு காரணமே, அவர்களில் உயர்ந்த குலத்து நபர் திருடினால் மன்னித்து விட்டு விடுவர், அதுவே பலவீனமானவர் திருடினால் அவருக்கு சட்ட ரீதியான தண்டனையை நிறைவேற்றுவர். அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் பாத்திமா திருடி இருந்தாலும் அவரின் கையை நான் வெட்டுவேன்.(புகாரி)

மனிதன் தன் சுய விருப்பு, வெறுப்பை கொண்டு தீர்ப்பளிக்கப்படாமல், நீதிபதிகள் குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்டு தீர்ப்பளிக்க அனுமதிகப்படுவதே, இஸ்லாமிய அரசின் நீதித்துறை அமைப்பின் பலத்திற்கும், செயல் திறனுக்கும் முக்கிய காரணம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீதிபதிகள் மூன்று வகையாக பிரிக்கப்படுவார்கள், அதில் ஒரு சாரார் மட்டும் சொர்க்கத்திற்கு செல்பவர்கள், மற்ற இரு சாரார் நரகத்திற்கு செல்பாவர்கள். சொர்கத்தில் உள்ள நபரை பொறுத்தவரை அவர் உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளித்தவர் ஆவார். மற்றொருவர் உண்மையை அறிந்து அதற்கு மாற்றமாக தீர்ப்பு வழங்கியவர், அவர் நரகத்திற்கு செல்வார். மேலும் மற்றொருவர் மக்களுக்கு மத்தியில் அறியாமையில் தீர்ப்பு வழங்கியவர் அவரும் நரகத்திற்கு செல்வார்.(அபு தாவூத்)

பாகிஸ்தான் முஸ்லிம்களே ! இந்த நீதித்துறை அமைப்பை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். இறந்த குதிரையில் சவாரி செய்து என்ன பயன்? பனாமா தீர்ப்பின் மூலமாக ஏதேனும் நன்மை ஏற்படும் என்று நம்பிக்கையாக இருந்தீர்கள், ஆனால் வெறும் நம்பிக்கை உங்களை ஏமாற்றி விட்டது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இப்பேர்ப்பட்ட சீர்கெட்ட ஆட்சியாளர்களை நம்பி நாம் எப்படி தான் வாழ்ந்து வருகிறோம் என்று ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த நீதித்துறையின் பின் நின்று இவர்கள் ஆசைக்கினங்க சட்டங்களை திரித்து, சட்டப்பூர்வமாக தப்பித்து வாழ்ந்து வருகின்றனர். எந்த பின்விளைவுகளுக்கும் அஞ்சாமல் இந்த அமைப்புகளின் சீர்கேடுகளை எதிர்க்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் உடன் தோளோடு தோள் நில்லுங்கள். மக்கள் மேல் உள்ளஅச்சம், உங்களை சத்தியத்தை எடுத்துறைப்பதை விட்டும் தடுக்க வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் வாழ்நாளை குறைக்க போவதும் இல்லை, உங்கள் ரிஸ்க்கில் அது பாதிப்பு ஏற்படுத்த போவதும் இல்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே! நீங்கள் முஸ்லீம் உம்மாவின் பாதுகாவலர்களாய் இருக்கிறீர்கள். உங்களின் தலைவர்கள் இந்த நாடகங்களின் பொம்மைகளாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியாளர்கள் கைப்பாவையாக இருப்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இஸ்லாத்தின் கோட்டைகளாக இருக்க வேண்டிய உங்கள் நிலங்களில் இம்மாதிரியான சீர்கெட்ட கட்டமைப்புகளை மேலோங்க செய்ய உங்கள் ஆட்சியாளர்கள் முனைகின்றனர். சிறந்த ஆட்சித்திறனுடைய, சட்ட வல்லுனராகிய ஷேக் அதா இப்னு கலீல் அபு அல் ரஷ்தா தலைமையின் கீழ் இயங்கும் ஹிஸ்புத் தஹ்ரீர் உடைய அழைப்பிற்கு பதில் அளியுங்கள். இதன் மூலமாக, இந்த ஊழல் மிகுந்த சட்டங்களை மாற்றி, அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் கிளபாஹ்வை கொண்டு வருவோம். நம்முடைய ரப்பின் நாட்டபடி கிலாபாஹ் வந்து கொண்டிருக்கின்றது என்பதில் உறுதியாக இருப்போம்.

நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு முஃமின்களின் உள்ளங்களை அமைதிபெற செய்யவும், அவர்களின் அச்சங்களை போக்கவும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் போதுமானதாக இருக்கிறது. (சூரா அந் நூர் 24:55)

Comments are closed.