சமீப பதிவுகள்

ஆய்வுகள்

அஸ்-ஸுஹூர்(விடியலுக்கு முன் உண்ணும் உணவு)

suhoor-420x426

இந்த பதிவு ஷேக் அபு இயாஸ் மஹ்மூத் பின் அப்துல் லத்தீப் பின் மஹ்மூத்(“உவாய்தஹ்”) அவர்களின் “அல் ஜாமியூ லில் ஆஹ்காம் மிஸ் சியாம்”(நோன்பு சட்டங்கள் குறித்த முழு வழிகாட்டி) என்ற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டதாகும். இது அரபு மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதில் ஏதேனும் தெளிவு பெற விரும்பினால் மூல அரபு புத்தக வாயிலாக தெளிவுபெற்றுக்கொள்ளவும்.

சுஹூர் பற்றிய சிறப்புகள்

1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!’ இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். எனவே அல்லாஹ் தஆலா வின் கிருபை நம்மீது பொழியப்படுவதற்கு காரணமாக ஸஹர் உணவு உள்ளது. அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் ஸஹர் உணவு உண்பவர்களுக்காக துஆ செய்கின்றனர்.ஸஹர் உணவுடன் பேரிதம்பலம் சேர்த்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மிடர் தண்ணீர் அருந்தினாலும் அல்லாஹ்வின் கிருபையை பெற்றுத்தரும். மேலும் வேதக்காரர்களின் நோன்பிலிருந்து முஸ்லிம்களின் நோன்பை தனித்துக்காட்டுவது ஸஹர் உணவே!. ஸஹர் உணவின் பொருட்டு அல்லாஹ்வின் துஆவும் அவனுடைய மலக்குமார்களின் துஆவும் கிடைப்பதே ஒரு நோன்பாளிக்கு போதுமானதாகும்.

ஸஹர் சம்பந்தமான சட்டங்கள்
இமாம் நவவி மற்றும் இப்னுல் முந்திர் கூறுகிறார்கள் ஸஹர் பரிந்துரைக்கப்பட்ட செயலே அன்றி கட்டாயம் ஆக்கப்பட்ட செயல் அல்ல.

ஸஹர் நேரம் குறித்த விளக்கங்கள்
ஸஹருடைய நேரம் பஜர் ஆரம்பிக்கும் வரை, முஅதின் பாங்கு கூறும் வரை நீடிக்கிறது என்பது நான்கு இமாம்கள் மற்றும் உலமாக்களுடைய கருத்தாகும். மேலும் உலமாக்கள் கூறுகிறார்கள் உணவு உண்பது,நீர் அருந்துவது, மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது ஆகிய செயல்கள் ஸஹர் நேரம் முடியும் வரை ஆகுமாக்கப்பட்டுள்ளது. இமாம் மாலிக் அவர்கள் மட்டும் சந்தேகம் மிகுந்த சஹருடைய இறுதி நேரத்தில் உண்பது ஹராம் என்று கூறுகிறார். இமாம் மாலிக் அவர்களுடைய இந்த கூற்று தவறு என்பதும் இதற்கு மாற்றமாக நான்கு இமாம்கள் மற்றும் உலமாக்களுடைய கருத்தே சரியானது என்றும் கீழ்கண்ட ஹதீஸ்கள் தெளிவுபத்துகின்றன.

1. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
(அல்குர்ஆன் : 2:187)

2. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
“கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!“ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் “மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)“ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் “மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)“ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. “இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்“ என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!“

3அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.
“கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை“ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!“ என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

4அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
“இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை“ என்ற (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள் தாமா?“ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்) தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, “(அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்“ என்று கூறினார்கள்.

5 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
(இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) “இறைத்தூதர் அவர்களே!“ என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)“ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்“ என்று கூறினார்கள்.

6ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார்.
பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!“ என்று குறிப்பிட்டார்கள்.
“அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!“ என்று காஸிம்(ரஹ்) கூறினார்.

7.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.“
இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.
என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

8. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)
“ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?“ என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்“ என்று பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) கூறினார்.

மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து பெறப்பட்ட புரிதல்கள்

1. ஹதீஸில் “தெளிவாக விடியல் தோன்றும்வரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே இது இமாம் மாலிக் அவர்களின் கூற்றான ” விடியலில் சந்தேகம் இருப்பின் ஸஹர் நேரம் முடிவடைந்து விடும்” என்ற கருத்தை பலவினப்படுத்துகிறது.

2. ஸஹர் உணவு சாப்பிடுபவர் அதை பஜ்ர் நேரம் துவங்கும் வரை தாமதப்படுத்தவேண்டும் என்று நபி(ஸல்) அவர்களின் சுன்னத் கட்டளையிடுகிறது.

3.பஜ்ர் பாங்கு கூறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ஸஹர் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று நபிமொழி வாயிலாக தெரிகிறது.

4. ஸஹாபா பெருமக்கள் ஸஹர் உணவை அதன் இறுதிநேரத்திலேயே உட்கொண்டானர். ஸஹாபாக்களுடைய இந்த செயல் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியே அமைந்துள்ளது.

Comments are closed.