சமீப பதிவுகள்

ஆய்வுகள்

அரபு மொழியை குறிவைப்பது இஸ்லாமிய கொள்கையின் மீது நடத்தும் தாக்குதலாகும்

Arabic-Calligraphy

1- அரபு மொழி மீது ஏன் இந்த கொடூர தாக்குதல்?

அரபு மொழியானது குர்’ஆனுடைய மொழியாகும், அது அர்- ரஹ்மானால் இறக்கியறுளப்பட்ட (ஷரீ’ஆ) சிறப்பு மிக்க சட்டத்தின் மொழியாகும். பூமியின் கிழக்கிலும் மேற்கிலும் அதன் நற்கருமத்தை பரவச்செய்யும் தீனின் மொழியாகும். அம்மொழியானது குர்’ஆனின் உருவகத்தை மொழிபெயர்த்த மொழியாகும் மற்றும் அதன் சொற்றிரம் மற்றும் சரளம் ஆகியவையின் மூலம் அதன் அதிசயங்களை வெளிக்கொண்டு வந்த மொழியாகும் அந்த மொழியுடைய மக்களை அதை போன்று ஒன்றை கொண்டு வர இயலாத நிலையை உருவாக்கிய மொழியாகும்

( ﺃَﻡْ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﺍﻓْﺘَﺮَﺍﻩُ ﻗُﻞْ ﻓَﺄْﺗُﻮﺍ ﺑِﺴُﻮﺭَﺓٍ ﻣِﺜْﻠِﻪِ ﻭَﺍﺩْﻋُﻮﺍ ﻣَﻦِ ﺍﺳْﺘَﻄَﻌْﺘُﻢْ ﻣِﻦْ ﺩُﻭﻥِ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻥْ ﻛُﻨْﺘُﻢْ ﺻَﺎﺩِﻗِﻴﻦَ )

இதனை (நம்முடைய தூதராகிய) “அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.”

(அல்குர்ஆன் : 10:38)

அரபு மொழியின் உயர்ந்த அந்தஸ்து மற்றும் புனிதத்தின் காரணமாக முஸ்லிம்கள் அரபு மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்; அவர்கள் அதை அவர்களுடைய தீனின் கட்டளைகளை புரிந்து கொள்ளவும் மற்றும் அவர்களுடைய இறைவனுடைய வேதம் மற்றும் அவர்களுடைய நபியின் அறிவிப்புகளை புரிந்துகொள்வதில் இருக்கும் சிரமங்களை களையவும் பயன்படுத்தினர். மற்றும் இந்த உயர்ந்த அத்தஸ்து மற்றும் இஸ்லாமிய தீனை புரிந்துகொள்வதில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக, மக்கள் அதை தவறாக புரிந்து கொள்வதற்காகவும், மற்றும் அதை கடினமாக்கி, பழையது என கருதவும் அதை விரும்பாத அளவுக்கு செய்திட அதன் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி மற்றும் அதை சிதைத்து ஓரங்கட்டுவதற்கான எதிரிகளின் அம்புகளில் இருந்து அது ஒருபோதும் தப்பிக்கவில்லை.

மேற்கத்தியர்கள் எப்போதும் அரபியர்களை முஸ்லிம்கள் எனவும் மற்றும் இஸ்லாம் மேற்கத்திய நாகரீகத்திற்கு ஒரு உண்மையான அச்சுறுத்தல் எனவும் மற்றும் அதன் மீள்வருகையானது அவர்களுடைய முடிவை குறிக்கின்றது என கருதி வருகின்றனர். எனவே, அனைத்து வகையிலும் மற்றும் வழிமுறையிலும் அவர்கள் அதை எதிர்த்து கடுமையாக போராடி வந்தனர் மற்றும் இன்றளவும் போராடி வருகின்றனர், இதனை அடைவதற்கு அரபு மொழியின் மீதான தாக்குதல் ஒரு சிறந்த மற்றும் பயன்மிக்க யுக்திகளில் ஒன்றாகும். சாமுவேல் ஹன்டிங்டன் கூறினார், “எப்போது இஸ்லாமாக இஸ்லாம் நீடித்திருக்கும் வரை மற்றும் அதில் துளியளவும் சந்தேகமில்லை, மற்றும் எப்போது மேற்காக மேற்கு நீடித்திருக்கும் வரை, இவைகளிடையேயான மோதல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும், அது பதினான்கு நூற்றாண்டு காலம் இருந்தது போல் மற்றும் யாரும் மேற்கு கிழக்காக ஆக வேண்டும் என எதிர்பார்க்கவில்லை”. வாழ்விலிருந்து இஸ்லாத்தை பிரிக்கும் இந்த திட்டத்தை முழுமைப்படுத்த, மேற்கு இந்த மொழியை (இஸ்லாமிய கட்டளைகளை புரிந்து கொள்ள உதவும் சாதனம்) தாக்கும் முயற்சியில் ஈடுபட்டது மற்றும் ஒரு பிரதேசம் சார்ந்த மற்றும் பேச்சுவழக்கு அரபு மொழியை பயன்படுத்த கோரியது மற்றும் இந்த மொழியை கைவிடவேண்டும் எனவும் அந்த இடத்தில் பிரதேசம் சார்ந்த மொழியை பயன்படுத்த அழைப்பு விடுப்பதற்காகவும் வில்ஹெம் ஸ்பிட்டா மற்றும் டஃபரின் போன்ற மற்றும் கீழ்த்திசை நாடுகளின் மொழியை கற்றவர்கள் பலரை பனியமர்த்தியது. அதோடு, இந்த திட்டத்தை பலப்படுத்த தாஹா ஹுசைன் மற்றும் லுத்ஃபி அஸ்- சைய்யத் போன்ற மேற்கினால் தாக்கம் கொண்ட நமது முஸ்லிம்களில் சிலர் மிக முக்கிய பங்காற்றினர்; அவர்கள் கூறுவது போல் – இந்த மொழியை முன்னேற்றுவதாகவும் மற்றும் அதை சுத்திகரிப்பு செய்வதாகவும்- கோரி வருகின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் இதை அழிக்கவும் மற்றும் முஸ்லிம்களுடைய வாழ்விலிருந்து இதை பிரிப்பதற்கும் முயன்று வருகிறார்கள்.

அரசு நிலைபெற்றிருந்தபோது, முஸ்லிம்கள் ஒரு இமாமின் கட்டளைக்கு கீழ் இருந்தபோது, ஆட்சி மொழியாக அரபு விளங்கியது; மற்ற நாடுகளுடனான அதன் உடன்படிக்கைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமானவை அரபு மொழியில் தான் நிறைவேற்றப்பட்டது. இந்த மொழி இந்த மொழியை பாதுகாத்து வந்த அதன் அரசுக்குடைய அதே கவுரவத்தை கொண்டிருந்தது. ஆனால் அந்த இஸ்லாமிய அரசையும் அதன் கட்டுப்பாட்டையும் அதன் எதிரிகள் வீழ்த்திய பிறகு, அதன் பிரிவினையும், மற்றும் அனைத்து எதிரகள் மற்றும் காலனியாதிக்கவாதிகளின் தீர்வுகளை கடந்து… அது (அரபு மொழி) பலவீனமடைந்தது; இஸ்லாமிய சித்தாந்தத்தை புரிந்துகொள்வதற்கான உபகரணமாக காலனியாதிக்கவாதிகள் இந்த மொழியை அணுகினர் மற்றும் அதை ஒதுக்குவதற்கும் தள்ளுபடி செய்வதற்கான வேலைகளை செய்தனர். இதற்கு முரணாக, காலனியாதிக்கவாதிகள் தங்களது மொழிகளை உட்புகுத்தி பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களில் அதிகார மொழிகளாக ஆக்கினர், இவ்வாறு அவர்களுடைய மொழியிலிருந்து தொடர்பில்லாத மற்றும் அவர்களுடைய தீனுடைய மொழியை அறியாத தலைமுறையினராக உருவாக்கினர். அவர்களுடைய மொழிகளை வலுக்கட்டாயமாக திணித்து அதன் மூலம் தலைமுறையினரை மயக்கினர், அதை பெருமைபடுத்தினர், அதன் மீது புலமைத்துவம் பெற்றவர்களை அறிவுஜீவிகளாகவும், நாகரீகம் அடைந்தவர்களாகவும் மற்றும் முன்னேறியவர்களாகவும் பாவிக்கின்றனர். தாய்மொழியை சிறைபடுத்தவும், அரபு மொழி மற்றும் உம்மத்துடைய மகிமை மற்றும் வெற்றியை புதைக்கவும் மற்றும் அவர்களுடைய நினைவுகளிலிருந்து வெளியேற்ற அவர்கள் (காலனியாதிக்கவாதிகள்) பயங்கரமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் அவர்களுடைய பார்வை மற்றும் நம்பிக்கைகள் மீது பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர் மற்றும் அவர்கள் (காலனியாதிக்கவாதிகள்) கொண்டிருக்கும் பார்வை மற்றும் கண்ணோட்டத்தில் அவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர், மற்றும் அவர்களுக்கு இணக்கமுடைய அவர்களுடைய சட்டங்களை நடைமுறைபடுத்தக்கூடிய, அவர்களுடைய கருத்துக்களை பின்தொடர்பவர்களாக மற்றும் அந்த கருத்தின் அடிப்படையில் அவர்களுடைய நடத்தைகளை தழுவும் தலைமுறைகளாக அவர்களை உருவாக்கினர். இதன் விளைவாக, அவர்கள் பல்லியின் பொந்தில் நுழைந்து அவர்களின் காலடிதடத்தை பின்தொடர்ந்தனர்!

2- அரபு மொழியல்லாத நிலையிலான இஸ்லாமிய தனித்துவத்தை முற்றிலும் அழித்தொழித்தனர்

தனித்துவம் என்பது ஒரு பொருளின் சாரம்சம் மற்றும் அதன் யதார்த்தம் என விவரிக்கப்படுகிறது. நாம் ஒரு தேசத்தின் தனித்துவத்தை பற்றி பேசும்போது, அதன் நாகரீக தனித்தன்மையை வெளிக்காட்டும் அதாவது மற்ற தேசங்களிலிருந்து வேறுபடுத்தி காட்டும் அதன் தன்மைகளை தான் குறிக்கின்றோம். ஆகவே, தனித்தன்மை என்பது அந்த தேசம் தொடர்ந்து நீடித்திருக்கவும் அதன் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் மிகவும் அடிப்படையான மற்றும் மையமாக விளங்கும் விஷயமாகும், அது இல்லாமல் அந்த தேசம் பலவீனமாகிவிடும், முக்கியத்துத்தை இழந்து, மற்றவர்களுக்கு கீழான நிலையை அடைந்துவிடும். இதன் காரணமாகத்தான் மேற்கு இஸ்லாமிய அரசை நீர்மூலமாக்கிய பிறகு, அவர்கள் உம்மத்தின் அடையாளத்தை அழித்தொழிக்க, அதன் கலாச்சாரத்தை அப்புறப்படுத்த மற்றும் அவர்களுடைய வாழ்விலிருந்து அதை வெளியேற்ற உதவும் வண்ணமாகவும், மற்றும் உம்மத் அதன் தனித்துவத்தை இழந்த பிறகு அதன் முதலாளித்துவ சித்தாந்தத்தை புகுத்தி அதில் மூழ்கடிக்க நேரடியாக தாக்குதல் நடத்தினர். முதலில், அவர்கள் தங்களது அம்புகளை கொள்கையை நோக்கி பாய்ச்சினர், ஏனெனில் அது தான் வாழ்வு பற்றிய கண்ணோட்டத்தை அமைக்கின்றது, மற்றும் வாழ்க்கைக்கான ஒரு தெளிவான பார்வையை தருகின்றது மற்றும் அந்த வெளிச்சத்தை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள், மற்றும் அவர்களுடைய அனைத்து கருத்துக்கள் மற்றும் நடத்தைகளை அதற்கேற்றவாறு அமைத்து கொள்கின்றனர். இரண்டாவதாக, அந்த கருத்துக்களை வெளிப்படுத்த உதவும் முக்கிய கருவியை -அரபு மொழி- நீக்குவதற்காக செயலாற்றினர், அதை வெளியேற்றி அதற்கு பதிலாக அவர்களுடைய மொழியை உட்புகுத்தினர். மற்றும் மூன்றாவதாக, உம்மத்தின் ஆழ்ந்த வரலாற்றின் மீது கேள்வி எழுப்பி அவ்களுடைய நாகரீகத்தின் வரலாற்றை புகுத்தினர்.

அவர்கள் இந்த அம்சங்களை குறிவைத்து அவர்களுடைய நோக்கங்களை அடைவதில் வெற்றிகண்டனர் மற்றும் இஸ்லாமிய தேசத்தின் தனித்துவத்தை இருளுர செய்தார்கள் மற்றும் அதன் மகிமை மற்றும் வளமை கொண்ட அதன் கட்டமைப்பை தகர்த்தனர். ரிச்சர்ட் நிக்சன் ‘சீஸ் தி மொமென்ட்’ (Seize the Moment) எனும் தனது நூலில், “நாங்கள் ஒரு அணுஆயுத தாக்குதலை கண்டு பயப்படவில்லை, ஆனால் நாங்கள் இஸ்லாம் மற்றும் மேற்கின் சுய-தனித்துவத்தை அழிக்கக்கூடிய அதன் சித்தாந்தத்தின் போரை கண்டு பயப்படுகிறோம்.” என கூறியுள்ளார். முஸ்லிம்கள் தங்களது மகிமை மற்றும் வெற்றியை மீட்கும் ஆற்றலை கொண்டிருப்பதாக அது உணர்ந்துள்ளது, ஒருவேளை அவர்கள் தங்களிடமிருந்து திருடப்பட்டதால் தொலைந்துபோன தங்களது தனித்துவத்தை மீட்டெடுத்து விட்டால்… ஒருவேளை அவர்கள் தங்களது வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க நேரிட்டால் அது அவர்களது சிந்தனையின் எழுச்சியை அடையச்செய்யும் மற்றும் உலகில் படைக்கப்பட்ட மனிதர்களில் சிறப்புமிக்க மனிதர்களாக மீண்டும் அவர்களை உயர்த்திவிடும், அதன் இறைவனுடைய ஒளியின் மூலம் மற்றும் அதன் நபியுடைய வரிகாட்டுதலின் மூலம் உலகின் தலைமைத்துவத்தை அது பெறும். இதன் காரணமாகத்தான் மேற்கு உம்மத்தின் தனித்துவத்தை சிதைக்கும் தனது தீய திட்டத்தை செயல்படுத்த நமது சக முஸ்லிம்களை பணியமர்த்தியுள்ளது. அல்-அஸ்கர் பள்ளியின் முன்னாள் ஷேக் ஜாத் அல்-ஹக் அலீ ஜாத் – அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக – அவர்களை துரோகிகள் எனவும் குற்றவாளிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள், “இஸ்லாமிய உம்மத்திற்கான வேறொரு தனித்துவத்தை தேடுவதென்பது துரோகமாகும், அது ஒரு கடுமையான குற்றமாகும்”. இந்த பட்டியலின் முதலிடத்தில் முஸ்தஃபா கமால் இடம் பெற்றுள்ளான், கிலாஃபத் மற்றும் ஷரீ’ஆ நீதிமன்றங்களை நீர்மூலமாக்கியதில் முதலாமவன் அவன்; அரபு மொழியை லத்தீன மொழியை கொண்டு மாற்றியவன். கிலாஃபத் அரசின் தனித்துவத்தை அழித்தொழிப்பதற்காகவும் உம்மத்தின் எதிரிகளுக்கு அதிகாரமளிப்பதும், இதனால் அதனுடைய தோல்வியை எளிதாக்குவதும் மற்றும் பலவீனப்படுத்துவதும் மற்றும் வேறுபட்ட தனித்துவம் வாய்ந்த இஸ்லாமிய அடையாளத்தை துடைத்தெரிவதற்காகவும் என இது போன்ற குற்றங்களை புரிவதற்கான நோக்கமாகும், இதே வழியில் மேற்குமயமாக்குதலின் தலைவர் தாஹா ஹுசைனும் தொடர்ந்தார். அவர் ” இஸ்லாமிய மதம் நமக்கும் ஃபேரோஹிஸத்திற்கும் இடையே தடுப்பாக இருந்தால், நாம் அதை நிராகரிப்போம்” எனக்கூறி இஸ்லாத்திற்கு மாற்றமாக இருந்தாலும் மேற்கின் ஒவ்வொரு அடியையும் பின்பற்றி தொடர்வதற்காக அழைப்பு விடுத்தார். அது அதை பின்பற்றுபவர்களை தாழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு குருட்டு நம்பிக்கையாகும். அது மேற்கை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி விரைந்து செல்வதாகும் மற்றும் உம்மத்தின் இஸ்லாமிய தனித்துவத்தை அழிப்பதற்கான தவறான கருத்துக்களை பலப்படுத்துவதாகும் மற்றும் உம்மத்தை ஒன்றிணைத்த நிலையான இணைப்பை அழித்து பிரிவினை, தேசியவாதம் போன்றவைகளை பலப்படுத்துவதாகும்… உம்மத்திற்கு அதன் நன்றிகெட்ட தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு, தலைமைத்துவம் மற்றும் இறையாண்மை இவைகள் இஸ்லாமிய தனித்துவம் என்று பரிந்துரை செய்யும் அனைத்தின் மீதும் சிலரை பகைமையுடன் பேச தூண்டியுள்ளது. இதனால், அஹமது லுஃப்தி அல்-சைய்யது அரசியலமைப்பில் இப்பகுதியை “அச்சுறுத்தும் வாக்கியம்” என விவரிக்க வெட்கப்படவில்லை, ஏனெனில் அது அரசாங்க மதமாக இஸ்லாமை வழங்குகிறது. இஸ்லாமிய தனித்துவத்தை அழித்தொழிக்க மற்றும் இஸ்லாமிய அரசை அப்புறப்படுத்தும் அவர்களுடைய திட்டத்தை நிறைவேற்றிட பதவிக்காகவும் அல்லது கைநிறைய பணத்திற்காகவும் பலர் மேற்கிற்கு சேவை புரிந்துள்ளனர்.

உம்மத்தின் கட்டமைப்பை அழிப்பதற்காகவும் மற்றும் அதன் எதிரிகளுக்கு அதிகாரத்தை வழங்கவும், அதை பலவீனப்படுத்தவும், ஒரு தனித்துவம் அல்லாத நிலையில் அதை விடவும், மற்றும் மேற்கத்திய மயமாக்குதல், மதசார்பின்மை மயமாக்குதல் மற்றும் அழுகிப்போன முதலாளித்துவ கருத்துக்களை கொண்டு தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் சேவைபுரிந்திருந்தாலும், இன்னும் சேவை புரிந்து வந்தாலும், இந்த உம்மத்தின் உண்மையுள்ள மகன்கள் மற்றும் உம்மத்தையும் அதன் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர், அம்புகளை அவர்களின் பக்கம் திருப்பிய வண்ணமாக இந்த தனித்துவத்தை ஸ்தாபிப்பதற்கு, அதை பாதுகாப்பதற்கு; இந்த பட்டியலில் முதன்மையானவர்களாக இப்னு தைய்மிய்யா, அர்-ராஃபி’ஈ மற்றும் மஹ்மூத் ஷாகிர் மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.

முஸ்லிம்கள் அவர்களுடைய வாழ்வு எவ்வாறு இருந்திருக்க வேண்டும் இப்போது எவ்வாறு இருந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இடையில் அந்நியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்… ஆகையால், அவர்கள் தங்களது வாழ்வை அவர்களது அகீ’தா (கொள்கை) விலிருந்து வரும் சட்டங்களை கொண்டு வாழ வேண்டும் அதன்மூலம் அவர்கள் சுகத்தையும், பாதுகாப்பையும் உணரலாம், மற்றும் அவர்களுடைய இஸ்லாமிய தனித்துவத்தை மனதில் கொள்ளும் அளவுக்கான ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழ்வார்கள்… ஆனால் அந்த தனித்துவம் அழித்தொழிக்கப்பட்டு அந்த மக்கள் ஏந்திய கொள்கையிலிருந்து வெகுதூரம் கொண்ட மற்ற அடையாளங்களை கொண்டு மாற்றியதனால், அது ஒரு அருவருக்கத்தக்க மற்றும் வேதனையான ஒரு அந்நியப்படுத்தப்பட்ட செயலாகும்.

எந்தவொரு சமுதாயத்தின் அடையாளம் என்பது ஒரு பாதுகாப்பான கோட்டை என்பதாக குறிக்கின்றமு, அது தனது மக்களை குடியமர்த்துகிறது மற்றும் அவர்களை பாதுகாக்கிறது, மற்றும் அவர்களை நிலையற்ற நிலை மற்றும் இரப்பை தவிர்க்க உதவுகிறது, மற்றும் அவர்களை பாதுகாப்பாகவும் பெருமையடைந்தவர்களாக உணரச்செய்கிறது, மற்றும் அவர்கள் மீது நம்பிக்கையையும் வலிமையையும் ஊட்டுகிறது. ஒருவேளை அந்த அடையாளம் தொலைந்து போனால், அதன் பாதுகாப்பு தொலைந்து விடும், அந்த சமூகம் தொலைந்து விடும், மற்றும் சச்சரவுகள் மற்றும் முரண்பாடுகள் அதனை முழுமையாக சூழ்ந்து கொள்ளும் மற்றும் ஒட்டுவதற்கான தன்மை மற்றும் கூட்டமைப்பு ஏதுமில்லாமல் போய்விடும். சமூகம் அதன் அடையாளத்தை பாதுகாக்கவில்லை என்றால், அது தொலைந்துவிடும் மற்றும் மற்றவைகளில் (அடையாளங்கள்) உருகி அதன் பண்புகள் மற்றும் அதன் அனுகூலங்கள் தொலைந்துவிடும். அல்லாஹ் سبحانه وتعالى கூறிகிறான்:

( ﻭَﺩَّ ﻛَﺜِﻴﺮٌ ﻣِﻦْ ﺃَﻫْﻞِ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻟَﻮْ ﻳَﺮُﺩُّﻭﻧَﻜُﻢْ ﻣِﻦْ ﺑَﻌْﺪِ ﺇِﻳﻤَﺎﻧِﻜُﻢْ ﻛُﻔَّﺎﺭﺍً ﺣَﺴَﺪﺍً ﻣِﻦْ ﻋِﻨْﺪِ ﺃَﻧْﻔُﺴِﻬِﻢْ )

“வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான்.

(அல்குர்ஆன் : 2:109)

முஸ்லிம்களுடைய அடையாளத்தை அழித்தொழிக்க அவர்கள் இரவு பகலாக சூழ்ச்சி செய்கின்றனர். இன்றைய உம்மத்தின் இளைஞர்களை பார்க்கையில் வேதனையை தருகிறது: அவர்களுடைய தாய்மொழியின் அறியாமையில் அதை அவர்கள் எந்தளவு தாழ்த்தி பார்க்கிறார்கள் எனவும் மற்றும் அதன் மதிப்பை குறைத்து பார்க்கிறார்கள் என்றும்; பண்பட்டது என்றும், நாகரீகம் மற்றும் முன்னேற்றத்துடன் தொடர்புடையது என கருதி மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதற்கு விரைகிறார்கள், கேலி மற்றும் பரிகசிப்புக்கு உள்ளாவோம் என அஞ்சி பாரம்பரிய (ஃபுஸ்’ஹா) அரபு மொழியை உபயோகிக்க அவமானப்படுகிறார்கள்! அவர்களுடைய சொந்த மொழியின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளது மற்றும் அவர்களுடைய அடையாளத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த பெருமையை குலுக்கியுள்ளது.

இதை தான் மேற்கத்தியர்கள் திட்டமிட்டனர், இதன்மூலம் இந்த வலுவான கூட்டத்தினரை கவர்ந்திழுத்து தாங்கள் நாடியவாறு அவர்களை உருவாக்க எளிதாக்கும்: தங்களது அடையாளத்தை இழந்த, மேற்கத்திய நாகரீகத்தில் மூழ்கி மற்றும் கவரப்பட்டு அதன் கருத்துக்களை தெரிந்தோ தெரியாமலோ பரப்பும் இளைஞர்கள். மேற்கு அதன் அடையாளத்தை பாதுகாத்து மற்றும் எந்தவொரு அச்சுறுத்தலில் இருந்தும் அதை பாதுகாக்க பாடுபடுகிறது; மற்றும் அதற்கு மாற்றமாக இஸ்லாமிய உம்மத்தை கலைத்து அதன் தனித்தன்மையின் ஓரு அம்சத்தை குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அரபு மொழியை இருளடைய செய்ய முயற்சி செய்து வருகிறது, அதன் தனித்தன்மையை இழக்கச்செய்வதற்கும், மற்றும் பின்தங்கி இருக்கும் காரணத்தால் மனம் தளரச்செய்வதற்கும் மற்றும் நாகரீகம் மற்றும் முன்னேற்றத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பதற்கும் அதனுடன் சண்டையிட்டு இன்னும் சண்டையிட்டு வருகிறது. அரபு மொழியை அப்புறப்படுத்துவதின் மூலம் மட்டும் தான் இஸ்லாமை அப்புறப்படுத்த முடியும் என்பதில் மேற்கு உறுதியாக இருக்கின்றது.

3- பேச்சுவழக்கு அரபு மொழியை (அல்- ஆம்மிய்யா) உபயோகிக்க கோருவது அரபு மொழியை நீக்குவதற்கான ஒரு முயற்சியாகும்

இஸ்லாமிய அரசை அப்புறப்படுத்திய பின்னர் மற்றும் ஒன்றுபட்டிருந்த அதன் நிறுவனத்தை சிறு பிளவுபட்ட நிறுவனங்களாக பிரித்த பிறகு – மேற்கு – பாரம்பரிய அரபு மொழி மீது கடுமையான போரை முன்னெடுத்துச்சென்றது மற்றும் தனித்தன்மையுடன் விளங்கச்செய்யும் உம்மத்தின் ஒற்றுமை மற்றும் அடையாளத்தை அகற்றுவதை எளிதாக்கும் வகையில் தேசியவாதத்தை உண்டாக்குவதற்காக வேண்டி பேச்சுவழக்கு வட்டார மொழிகளின் அந்தஸ்தை உயர்த்த நாடியது. இஸ்லாமிய அரசின் பிரிவு மற்றும் சைக்ஸ் மற்றும் பீகாட் வரைந்த எல்லைகளை நிறுவியது அவர்களுடைய குற்றச்செயல்களுக்கு முடிவாக இருக்கவில்லை, ஆனால் அதையும் தாண்டி ஒருவர் மற்றவரிடமிருந்து தனிமைப்படுவதை உறுதி படுத்தவும் மற்றும் உம்மத்தில் பிரிவனை ஏற்படுவதை உறுதி செய்யும் விதத்தில் மொழி ரீதியிலான மற்றும் வரலாற்று ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றது. மேற்கினாலும் அதன் நாகரீகத்தினாலும் தாக்கமடைந்த அறிவு ஜீவிகள் செய்தது துரதிர்ஷ்டமானது மற்றும் அது எப்போதும் அழியாமல் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் ஒரு அவமானச்சின்னமாக இருக்கும். அவர்கள் மேற்கை சந்தோஷப்படுத்துவதிலும் இஸ்லாமிய அடையாளம் மற்றும் அரபு மொழியை காயப்படுத்துவதிலும் சிறந்து விளங்கினர். இதற்காக அழைப்பு விடுவதில் ரஃபா’ அத்- தஹ்தவி முதலாமானவராக விளங்கினார், அவர் “பேச்சுவழக்கு வட்டார மொழி என்றழைக்கப்படும் மொழியில் பேசுவதென்பது, பரிவர்த்தனைகளை புரிந்துகொள்வதற்காக உபயோகப்படுத்துவதாகும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் ஏனெனில் அது எளிதான மற்றும் பொது பயன்பாடுகள் மற்றும் வீட்டு நலன்களை வகைப்படுத்தக்கூடிய கோட்பாடுகளை கொண்டுள்ளது.” என வலியுறுத்தினார். இஸ்லாமிய உம்மத்தின் கூறுகளை தாக்குவதற்காக இந்த சகோதரர்கள் மற்றும் கீழ்த்திசை மொழிப் புலமையாளர்களிடையேயான சந்திப்பு தவிர்க்க முடியாதது போல் அது தொடர்ந்து நடைபெற்று வந்தது! மேற்கினது இந்த பிரதிநிதிகள் தாய் மொழியை தாக்கி பேச்சுவழக்கு மொழியை உபயோகப்படுத்துவதறகு ஊக்கம் அளிக்கும் சேவையை வழங்கியதற்கும் கூடுதலாக, கிழக்கு மொழிப்புலமையாளர்களும் இதற்கு ஆதரவாக ஒரு முக்கிய பங்காற்றினர் மற்றும் எகிப்திய தேசிய நூலகத்தின் இயக்கனர், வில்ஹெம் ஸ்பிட்டா, செய்ததை போன்று அதை வெளியடவும் செய்தனர், அவர் எகிப்திய பேச்சுவழக்கு மொழியின் இலக்கணம் எனும் புத்தகத்தை எழுதினார். உம்மத்தை அழிக்கவும் மற்றும் அதை ஒரே மார்க்கம், மொழி, நிலப்பரப்பு மற்றும் வரலாறு ஆகியவற்றை கொண்டு ஒன்றுபடுத்துவதை நீக்குவதற்காக அரபு மொழியின் மீது மேற்கு ஒரு போரை தொடுத்தது, மற்றும் பல நாடுகளில் தேசியவாதம் மற்றும் பேச்சுவழக்கு மொழிக்கு புத்துயிர் அளித்தது. இந்த அழைப்பிற்கு மொராக்கோவும் பங்கெடுத்தது; காலனியாதிக்கவாதியின் மொழி – பிரஞ்சு பிறகு அரபு மொழி இரண்டாம் மொழியாக ஆகியது. மொராக்கோவின் பிரஞ்சு காரிய குழுவின் அறிக்கையின்படி: “இந்த வழியில் முதற் காரியமானது வட ஆப்பிரிக்காவில் அரபு மொழியின் முக்கியத்துவத்தை குறைத்து, மக்களை அதிலிருந்து திசை திருப்பி, உள்ளூர் பிரதேச மொழிகள் மற்றும் பேச்சுவழக்கு மொழிகளுக்கு புத்துயிர் அளிப்பதாகும்.”

காலனியாதிக்கவாதிகளின் கிழக்கு மொழிப்புலமைவாய்ந்த விஞ்ஞானிகளும் அரபு மொழியை சூழ அமழிக் [Amazigh (Tamazight)]பிரதேச மொழியின் சட்டங்கள் குறித்து புத்தகங்கள் எழுதினர். இது ஷெஹாதெஹ் கௌரியின் எழுத்துக்களில் விவரிக்கப்பட்டுள்ளது, “அல்ஜீரியா நிலப்பரப்பில் அரபு மொழியை வேரறுத்து, பிரஞ்சு மொழியை அதனிடத்தில் விதைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த காலனியாதிக்கவாதிகள், வேறு யுத்திகளை கடைபிடித்தது அதாவது அல்ஜீரியாவின் பெரும்பாலான மகன்களிடம் அல்ஜீரியாவின் அசலான மொழி அரபு அல்ல, மாறாக பெர்பர்களுடைய மொழியான அமழிக் தான் அல்ஜீரிய மக்களின் அசலான மொழியாகும் என பரிந்துரைத்தனர். மற்றும் அதை எழுத்து வடிவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அதன் எழுத்துக்களை வடிவமைக்க பிரான்ஸ் முன்வந்தது.”

தீங்கிழைப்பது மற்றும் தந்திரம் செய்தல் இவையிரண்டிலும் கிழக்கு மொழிப்புலமைவாதிகள் தங்களது எழுத்துக்களை கையாண்டனர், அதனால் நல்ல நோக்கம் இருப்பது போல் அவைகளை அலங்கரித்து தொகுத்தனர், ஆனால் அது இஸ்லாமிய உம்மத்தின் மொழிக்கும், அதன் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் சிதைந்து அதன் மூலம் அதிலுள்ளவை தொலைந்து மற்றும் இந்த உம்மத் வீழ்ந்து மறைந்துவிட வேண்டும் என்கிற அளவுக்கு மிகவும் தீங்கிழைக்கக்கூடிய விஷத்தையே அது கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் “எகிப்தியர்களை புதிய கண்டுபிடிப்புகளிலிருந்து தடுப்பது என்னவென்றால் பாரம்பரிய அரபு மொழியில் எழுதுவது தான்… மனிதநேயத்திற்கு சேவை புரியவேண்டும் என்கிற எனது பிரியமும் அறிவை பரப்ப வேண்டும் என்கிற ஆசையுமே நான் இந்த முடிவை எடுக்க தூண்டியது!!” என கூறி அறிவித்தார். அவர் மேலும் தனது விரிவுரையின் இறுதியில் பேச்சுவழக்கு மொழியின் வாக்குவன்மை போட்டியை அறிவித்து, அதில் சிறப்பான பேச்சை அளித்து வெற்றி பெறும் நபருக்கு நான்கு பவுண்டுகள் அளிப்பதாக அறிவித்தார்!

இது தான் தனது எதிரிகளிடத்தில் அரபு மொழியின் நிலையாகும், அதன் தாக்கத்தையும் அதன் கௌரவத்தையும் அவர்கள் அறிந்துள்ளனர்; இதன் காரணமாகத்தான் அதை அகற்றி அதற்கு பதிலாக பேச்சுவழக்கு அரபியை கொண்டு நிரப்புவதற்காக செயலாற்றினார்கள். வழக்கம்போல், தங்களை படித்த-வர்க்கத்தினர் என்று கூறிக்கொள்ளும் மற்றும் மேற்கத்திய கருத்துக்கள் கொண்டு பாசனம் செய்யப்பட்டு அதன் கடலில் மூழ்கிய நமது சக முஸ்லிம்கள் – சலமா மூசா மற்றும் ஈராக்கிய கவிஞர் ஜமீல் சித்கி அல்- ஜஹாவி போன்றவர்கள் இதை பரப்பி அதன் முழக்கத்தை எழுப்பினர், ஜமீல் சித்கி அல்- ஜஹாவி “நான் முஸ்லிம்களுடைய வீழ்ச்சிக்கான காரணத்தை நெடுநாள் தேடினேன் அதற்கான இரண்டு விஷயங்கள் மட்டுமே இதற்கான காரணம் என்பதை கண்டேன்: முதலாவதாவது ஹிஜாப், இதன் பாதகத்தை எனது முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்!!! இரண்டாவதாவது முஸ்லிம்கள் குறிப்பாக அரபுகள் தாங்கள் பேசும் மொழியில் அல்லாது வேறு மொழியில் எழுதுகிறார்கள்” என கூறினார். சில வெறுப்பாளர்கள் பாரம்பரிய அரபு மொழியை ஒதுக்கி நாட்டின் ஒரே மொழியாக பேச்சுவழக்கு மொழியை ஆக்கவேண்டும் என்று பேசும் அளவுக்கு சென்றனர்: “பேச்சுவழக்கு மொழி குறித்த தவறான புரிதலை ஒதுக்கி வைத்து, அதை நாட்டின் ஒரே மொழியாக ஏற்றுக்கொள்வது அறிவார்ந்த செயலாகும்.” (சில்டன் வில்மோர், தி லோகல் அரபிக் இன் ஈஜிப்ட்).

பேச்சுவழக்கு மொழியை கொண்டு அரபு மொழியை மாற்ற அதன் மீது தொடுக்கப்பட்ட போரில் உபயோகித்த யுத்திகளாவது, செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் புத்தகங்கள் பேச்சுவழக்கு மொழியில் விநியோகித்தது, நாடகங்களை பாரம்பரிய மொழியிலிருந்து பேச்சுவழக்கு மொழியில் மாற்றியமைத்தது போன்றவையாகும். மொராக்கோ மற்றும் துனீசியாவின் பேச்சுவழக்கு மொழி பற்றிய ஸ்டேன்கோவ்ஸ்கியின் ஆய்வு மற்றும் (நல்லினோ) எகிப்தின் பேச்சுவழக்கு மொழி பற்றிய மற்றும் இதர…. போன்று இந்த கிழக்கு மொழிப்புலமையாளர்கள் ஆய்வுகளை பேச்சுவழக்கு மொழியில் வழங்க விரைந்தனர்.

குர்’ஆனுடைய மொழியின் எதிரிகள் பேச்சுவழக்கு மொழியின் பக்கம் அழைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அரபு எழுத்துக்களுக்கு பதிலாக லத்தீன எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என அழைக்கும் அளவுக்கு வரம்பு மீறினர். இது போன்றவைகளை உங்களிடத்தில் உங்களுடைய எதிரிகள் செயல்படுவது, என்னவொரு அவமானம் உங்கள் மீது ஏற்பட்டுள்ளது, ஓ மனிதகுலத்தில் படைக்கப்பட்டவர்களில் சிறப்புவாய்ந்த சமூகத்தை சார்ந்தோரே, இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு மற்றும் இழிவுக்கு ஆளாக்கப்பட்ட உங்களது தாழ்ந்த நிலையை காணும்போது, ஓ இஸ்லாமிய உம்மத்தே? என்னவொரு அவமானம் உங்கள் மீது ஏற்பட்டுள்ளது!!!

4- லத்தீன எழுத்துக்களை உபயோகப்படுத்துதல்: அரபு மொழியின் மீது ஒரு இடையறாத போர்

உம்மத்தின் மறுமலர்ச்சிக்காக வாதாடுவோரின் தொடர்ச்சியான மற்றும் அடிக்கடி அழைப்பு விடுத்துவரும் வேளையில், அவர்கள் அதன் வீழ்ச்சிக்கும் அதை பலவீனப்படுத்துவதற்கும் செயலாற்றி வருகின்றனர் அதற்காக அவர்கள் தீங்கிழைக்கும் மற்றும் இழிவான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
லத்தீன மொழியில் எழுதுவதற்காக கோரிக்கை விடுப்பது அரபு மொழிக்கு அவர்கள் இழைக்கும் என்னவொரு தீங்கான விஷயமாகும்? தங்களது தாய்மொழியை நோக்கி நச்சுத்தன்மையுடைய அம்புகளை நீட்டும் அளவுக்கு நன்றிகெட்ட குழந்தைகள் கொண்டிருக்கும் வெறுப்பு எவ்வளவு ஆழமானது?

அப்துல் அஜீஸ் ஃபஹ்மி, 1913ல் அரபியை லத்தீன எழுத்துக்களை கொண்டு எழுத அழைப்பு விடுத்தவர்களில் ஒருவராவார் மற்றும் ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார், அதன் பதிப்பாளர், “துருக்கி வெற்றிகரமான அனுபவத்தை தந்துள்ளது, அவர்கள் லத்தீன எழுத்தில் துருக்கிய மொழியை படிக்கின்றனர், ஆனால் அதன் மீது கடினமான அபிப்ராயத்தை கொண்டவர்கள் தெய்வ நிந்தனைக்குரியது என்றும் மதங்களுக்கு எதிரானது என்றும் கூறுகிறார்கள்”. என கூறினார். அனீஸ் ஃபரீஹா கௌரியும் இந்த மோசமான அழைப்பில் பங்கு கொண்டுள்ளார், அவர் பேச்சுவழக்கு பிரதேச மொழியை ஏற்று அமல்படுத்த வேண்டும் எனவும் அரபுகளின் அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டும் எனவும், ஏனெனில் அரபு எழுத்துக்கள் – அவருடைய கூற்றின்படி – பிரதேச மொழியை தொகுப்பதற்கு தகுதியற்றவை எனவே அதை லத்தீன எழுத்துக்களை உபயோகித்து எழுத வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அருகிலுள்ளவர்களும் தொலைவிலுள்ளவர்களும் இந்த மொழியின் பால் ஒன்று கூடினர், அது நூற்றாண்டுகளாக தன்னை திணித்துக்கொண்டது மற்றும் அது முதல் மொழியாக திகழ்ந்தது, ஏனில்லை, அது தான் உலகை தலைமையேற்று நடத்திய மிக பலம்வாய்ந்த தேசத்தின் மொழியாகும். அவர்கள் அந்த தேசத்தின் நன்றிகெட்ட குற்றவாளிக் குழந்தைகளின் உதவியுடன் அதன் (அரபு மொழி) தேசத்திற்கு எதிராக ஒன்று கூடி அழித்ததை போன்று இதற்கெதிராகவும் (அரபு மொழி) ஒன்று கூடினர். அவர்கள் உம்மத்தின் உடல் மற்றும் அதன் அடையாளம் மற்றும் மொழியின் மீது வீசுவதற்கு தங்களுக்கு பின்னால் அம்புகளையும் ஈட்டிகளையும் மறைத்து வைத்திருந்த நிலையில் பாசம், அன்பு மற்றும் விசுவாசத்தை வெளிக்காட்டினர். இது மிகப்பெரிய துரோகமாகும் மற்றும் இந்த மொழிக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும் அதாவது அரபு மொழி சங்கம் – இந்த மொழியின் பாதுகாப்பு அரணாகவும் அதன் மீது நடத்தப்படும் தாக்குதலிலிருந்து ரக்ஷிக்கக்கூடியதாக இருக்க வேண்டியதிலிருந்து மாறி அதனை (அரபு மொழி) வெறுக்கும் அதனுடைய சில உறுப்பினர்களை திருப்திபடுத்தும் வண்ணம் மூன்று வருடங்களாக லத்தீன எழுத்துக்களில் அரபு மொழியை எழுதுவதற்கான திட்டத்திற்கான ஆய்வில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை ஏனெனில் இந்த சங்கம் 20 உறுப்பினர்களை ஒன்று கூட்டி துவங்கப்பட்டது, அதில் பாதிபேர் எகிப்தியர்கள் (தாஹா ஹூசைன், அஹமது லுத்ஃபி அல்- சயீது…) மற்றும் இதர பாதிபேர் அரபுகளும் கிழக்கு மொழிப்புலமையாளர்கள். இவ்வகையான முயற்சிகளை இந்த மொழியின் எதிரிகள் மேற்கொண்டனர், மாறாக இஸ்லாமிய எதிரிகள், இந்த மொழியின் மீதான நம்பிக்கையை குலைத்து முஸ்லிம்களின் வாழ்விலிருந்து மறையும் வரை அதை அப்புறப்படுத்துவதற்காக; அதன் மூலம் அதை புரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து நகர்ந்து, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லாமல் தேக்கம் மற்றும் வீழ்ச்சி அடையும் நிலைக்கு அருகில் கொண்டு செல்லும் விதமாக அதன் உபயோகம் ஒரு சில விவகாரங்களில் மட்டும் இருக்கும் அளவுக்கு குறைக்க வேண்டி மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையற்ற அடுக்கடுக்கான முயற்சிகளாகும், ஒரு பழைய, உடைந்துபோன காலாவதியான அழுக்கு படிந்த மொழி, அதனால் மற்ற மொழிகளுக்கு ஈடு கொடுத்து செல்வதற்கு இயலாது… எனும் அளவுக்கு இந்த மொழியின் வீழ்ச்சி இந்த மொழியை நவீனகாலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பொருந்தாத மொழி என்று எண்ணும் அளவுக்கு பலரை சிந்திக்க தூண்டியுள்ளது.

5- குர்’ஆனின் மொழி மனித அறிவியலின் பரிணாமத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லையா?!?!

இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகள் இஸ்லாமும் அரபு மொழியும் இரு கொள்ளளவை உடையது என்றும் ஒன்று மற்றொன்றை முழுமையாக்குகிறது என்றும் அவையிரண்டும் ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான இரு முக்கிய தூண்களாகும் என்று வேறுபடுத்தி காட்டினர். ஆகவே, இவ்விரு கொள்ளளவை பிரிப்பதற்கான காரியத்தை அவர்கள் மேற்கொண்டனர், இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சிமுறையை ஒழித்தனர், மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களை அந்த இடத்தில் வைத்தனர் மற்றும் அரபு மொழிக்கு பதிலாக அவர்களுடைய மொழியை பொருத்தினர். அவர்கள் மீது தங்களது கட்டுப்பாடை இறுக்குவதற்காகவும், அவர்களை எங்கெல்லாம் மற்றும் எப்போதெல்லாம் வேண்டுமோ அவ்வாறு அவர்களை வழிநடத்திட உம்மத்தின் புதல்வர்களிடத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தினர். அவர்களுடைய அகீதாவின் மீதும் அவர்களுடைய மொழியின் மீதும் நம்பிக்கையை குழைக்கும் விதமாக, அது தோற்றுக்கொண்டிருப்பதாகவும் நவீன அறிவியலை உள்வாங்க போதாததாக இருக்கின்றது என்று முத்திரையிட்டனர், ஏனெனில், “முன்னோக்கி செல்வதற்கு மாற்றமாக பின்னோக்கி செல்லும் அதுவொரு முன்னோர்களின் உறுதியான மொழி” என வாதிட்டனர். அரபு மொழியானது ஓரங்கட்டப்பட்டு குறிப்பாக மருத்துவம், பொறியியல் போன்று அறிவியல் சம்மந்தமான அனைத்திலுமிருந்து ஒதுக்கினர், மற்றும் இது போன்ற அறிவியல்களை வெளிப்படுத்துவதற்கான ஆற்றல் அதனிடமில்லை என்று கருதப்பட்டது, அதற்கு பின்பு வந்த தலைமுறையினர் இதனையும் இஸ்லாமிய அடையாளத்தையும் மறுக்க செய்தது, மற்றும் பிற சமூகத்தினருடைய மொழிகளால் தாக்கம் ஏற்படும் விதமாகவும் அவர்களுக்குள் உருகிப்போவதற்காகவும் அந்த மொழிகளின் கடல்களில் விழச்செய்தது. மேற்கிலிருந்து வரும் அனைத்தின் மீதும் தங்களது பார்வையை கொண்ட அந்த தலைமுறையினரின் கண்களுக்கு முன் இந்த அரபு மொழி ஒரு உயிர்நீத்துப்போன மொழியாக மாறியது: மேற்கினது கலாச்சாரம் மற்றும் அதன் மொழி உலகை வெற்றி கொண்டது மற்றும் நவீன அறிவியலை கிரகித்துக்கொள்வதில் அதன் மேன்மையையும் தனித்தன்மையையும் அறிவிக்க அரியணையை கைப்பற்றியது

ஒரு மொழியை குறித்து அதன் சொல்லகராதி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் அரபு அறிவியல்களுக்கு இடமளித்தது என்று கூறுவது பொய்யாகும் மற்றும் தவறான குற்றச்சாட்டாகும்.

அறிவியல்களும், அதன் விஞ்ஞானிகளும் சிறந்து விளங்கினர் மற்றும் அவர்களில் சிலர் புகழ்பெற்றிருந்தனர், மற்றும் வரலாற்றில் மிகப்பெரும் தனிச்சிறப்பை பெற்றிருந்தனர், மற்றும் அனைத்துலகும் அவர்களை கொண்டு நூற்றாண்டுகளாக பயனடைந்தனர். ஷேக் அல்-பஷீர் கூறுகிறார்: “… பாரசீகத்தின் பாரம்பரியத்திலிருந்து அல்- ஃபராபி மற்றும் இப்னு ஸீனா அறிமுகப்படுத்திய கிரேக்க மற்றும் பாரசீகத்தின் சில வார்த்தைகளை நாம் அகற்றிவிட்டாலும் அரபு மொழியானது அரபுகள் சிறந்து வளங்கிய மருத்துவத்தின் சிரிய விஷயத்திற்கும் இடமளிக்கிறது.” இது தான் இந்த அரபு மொழி: அது நிரப்பப்படும் பொழுதெல்லாம் மேலும் மேலும் விரிவடையும் மற்றும் அதிகமான சொற்பதங்கள் மற்றும் வழித்தோன்றல்களுக்கு இடமளிக்கும் ஒரு மாபெரும் கிண்ணமாகும். மற்ற மொழிகளின் மீது தேவையற்ற ஒரு மொழியாகும் ஏனெனில் அது தன்னிறைவு பெற்றதாகும், உள்ளடக்கும் தன்மையை கொண்ட மற்றும் நல்ல உடமையை கொண்டு கவுரவிக்கப்பட்ட ஒரு மொழியாகும்: அர்- ரஹ்மானால் மனிதர்களுக்கு அருளப்பட்ட மொழிகளில் சிறந்ததாகும். குர்’ஆனின் காரணத்தால் உலகில் அறியப்படும் எந்தவொரு மொழியும் அடையாத ஒரு விரிவாக்கத்தை அரபு மொழி அடைந்துள்ளது என பிராக்கல்மேன் கூறினார். நூற்றாண்டுகளாக, அரபு மொழி ஒரு உயரிய அந்தஸ்தை பெற்றிருந்தது மனித அறிவியலில் அது கொண்டிருந்த சூட்சமத்தை நிரூபிக்கிறது, வரலாற்று நூல்கள் இதற்கு சான்றளிக்கின்றன. இதுவொரு சாத்தியமான மற்றும் வளரும் மொழி எனவும், விரிவடைவதற்கு மற்றும் பரவக்கூடிய மொழி என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த நூல்களில் முஸ்லிம் அறிஞர்கள், அவர்களுடைய ஆராய்ச்சிகள், சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கில் அறிவியல்முறையிலான வெளிப்பாட்டை அரபு மொழி தான் அறிமுகப்படுத்தியது, மற்றும் அனைத்து மொழியை காட்டிலும் அரபு மொழி தூய்மையானது, அறிவியல் மற்றும் கலையாற்றல் வெளிப்பாட்டு முறைகளில் தனித்துவத்துடன் விளங்கியது”. இது உள்ளடக்குவதற்கும் மற்றவைக்கு கொடுப்பதற்கும் திறனுள்ளதொரூ பரந்த செழுமையான மொழியாகும்!! (பிரஞ்சு லூயிஸ் மேசிஞோன்)

6- உலகமயமாக்கல் மற்றும் அரபு மொழியை நீக்குவதற்கான அதன் பங்கு

உலகமயமாக்கல் அல்லது நவீன- காலனித்துவமானது மற்ற நாடுகளின் மீதான குறிப்பாக அதன் அரசையும் அடையாளத்தையும் இழந்த பிறகு பலவீனமாகியுள்ள இஸ்லாமிய உம்மத்தின் மீது அதை முன்னேற்றம் மற்றும் மறுமலர்ச்சி அடைய செய்வது போன்ற கோஷங்களை எழுப்பி தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கான மேற்கினது காலனித்தவ பாங்கை மாற்றியுள்ளது. உலகமயமாக்கல் என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான பன்முகத்தன்மையுடைய படையெடுப்பாகும்: அது ஒரு நாகரீகத்தின் அடையாளத்தை தாக்கி அதை அழிப்பதற்கான நோக்கத்தை உடையதாகும். இந்த படையெடுப்பின் நோக்கமானது குறிப்பாக அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை திணிப்பதாகும், அதாவது உலகத்தை அமெரிக்க மயமாக்குதல் மற்றும் உலகை கட்டுப்படுத்தி அதன் மொழி, கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாகரீகம் ஆகியவற்றை அதன் மீது திணிப்பதற்காகவும் மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தூண்டுதல்கள் கொண்டு அல்லது அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தி அதை கடந்து செல்லவும் வேண்டி அதன் (அமெரிக்க) கொள்கைகளின்படி தொடர்ந்து செயல்படுத்துவதாகும். மொழியை உலகமயமாக்குவதென்பது மதசார்மின்மைவாதத்தின் மிகவும் அபாயகரமான ஒரு மாதிரியாகும், அது ஆங்கில மொழி மற்றும் அதன் இறையாண்மையை மற்ற மொழிகளின் மீது நிலைநிறுத்தவும், உலகின் முதன்மை மொழியாக ஆவது மற்றும் முன்னேற்றம் மற்றும் நவீனத்துவத்தின் வாகை சூடிய மொழியாக விளங்க வேண்டும் என்கிற நோக்கங்களை கொண்டது.

கருத்தாக்கங்களின் பாத்திரமாக மொழி விளங்குவதன் காரணத்தாலும் நாடுகள் அதன் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாலும் அவர்கள் காலனியாதிக்கம் மேற்கொண்ட நாடுகளில் பயன்படுத்தும் வண்ணம் அவர்களுடைய மொழியை உட்புகுத்தப்பட்ட மொழியாக்குவதற்காக செயலாற்றினர். இவ்வாறு, உலகமயாக்கலை அமெரிக்கா தனது சட்டங்கள் மற்றும் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக கட்டுப்பாட்டை உட்புகுத்த பயன்படுத்திய முறையாகும். பிரான்ஸ் மற்றும் அதன் மொழியில் பங்கு கொண்டுள்ள நாடுகள் அனைத்தும் பிரஞ்சு மொழி பேசும் அடிச்சுவட்டின் மீது நடக்கலாயினர், ஆகவே, சர்வதேச மாநாடுகளில் பங்கு கொண்டு அவர்களுடைய மொழியை பரப்ப விரும்பினர், மற்றும் பிரஞ்சு மொழி ஒரு இன்றியமையாத முக்கிய பங்காற்றுவதை உறுதிபடுத்தினர் இது இந்த நாடுகளை உலகிற்குள் நுழையச் செய்தது மற்றும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள செய்தது, அரபு மொழி இதை செய்ய தவறிய காலத்திலிருந்து இதை அவைகள் செய்து வருகின்றன. இவ்வாறு, பிரஞ்சுக்காரர்கள் இந்த நாடுகள் உலகிலிருந்து தனிமை படுத்தப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு சிறந்த ஒருங்கிணைப்பாளர்களாக திகழ்ந்தனர்.

25/05/1994 புதனன்று, அனீஸ் மன்சூர் அஹ்ராம் செய்தித்தாளில் எழுதியதாவது: “பிரஞ்சுக்காரர்கள் அவர்களுடைய அழகிய மொழியின் மீது மிகவும் பெருமை கொண்டுள்ளனர், அது தத்துவம், இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அனைத்தையும் தெளிவாக உச்சரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது; அதனால் அவர்களுக்கு தேவையானதை குறிப்பதற்கு அவர்கள் அமெரிக்க வெளிப்பாட்டை அல்லது ஆங்கில பெயர்களை பயன்படுத்த மறுத்தனர், இது பிரஞ்சு மீதான குற்றச்சாட்டாக விளங்கியது. பிரஞ்சுக்காரர்கள் நிராகரிப்பையும் தாண்டி கண்டிக்கவும் செய்தனர், அவ்வாறு செய்பவர்கள் (அதாவது ஆங்கில மற்றும் அமெரிக்க வார்த்தைகளை உரையாடல்கள் அல்லது தங்களது விற்பனைக்கூடங்களுக்கு பயன்படுத்துவது) மீது தடைகள் விதப்பது, அதாவது இந்த மொழியை அவமதிப்பவர்கள் மீது… அரசு பிரஞ்சு மொழியை கொண்டிராத எந்தவொரு விற்பனைக்கூடம் அல்லது நிறுவனத்துக்கும் உரிமம் வழங்க அனுமதிக்காது.”

இது இன்று மனிதர்கள் சாதித்ததை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமற்றுபோன பலவீனமான காலாவதியான மொழி என இகழ்ந்து அவமரியாதை செய்யும் நோக்கில் முத்திரையிட்டு காணாமல் போன சுருதி மறந்துபோன அரபு மொழி மீது நடத்தப்படும் போராகும். இது ஆங்கிலம் (அமெரிக்க), அல்லது பிரஞ்சு அல்லது மற்ற மொழிகளை உட்புகுத்துவதற்கான போட்டியாகும்… மேற்கத்திய நாடுகள் தனது அடையாளத்தை பாதுகாக்கவும் தனது அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை உட்புகுத்தவும் தனது மொழியை உட்புகுத்துவதற்கு முயற்சிகளை துடிப்புடன் மேற்கொண்டது… ஆக, இவையனைத்திலும் இஸ்லாமிய உம்மத் எங்கிருந்தது? குஃப்பார்கள் செயலாற்றிய போது – தனது மொழியை உட்புகுத்தி உம்மத்துடைய மொழியை விலக்கி ஓரங்கட்ட – இன்னும் அது செயலாற்றி கொண்டிருக்கிறது – அச்சமயங்களில் அது எங்கிருந்தது?

இந்த காரியத்தின் மூலம் குஃப்பார்கள் உம்மத்தின் அடையாளத்தையும் தீனையும் தோலுறித்து அதனிடத்தில் தனது கருத்தாக்கம் மற்றும் கலாச்சாரத்தை உருக்க நாடியது, இவ்வாறு தொடர்ந்து தனது இருப்பை உறுதி செய்துகொண்டது… இது தனது வாழ்வை நிலைத்திருக்க செய்யவும், இறையாண்மை மற்றும் தலைமைத்துவத்திற்காகவும் ஒரு நாகரீகம் மற்றொன்றின் மீது நடத்தப்படும் போராட்டமாகும்!!

7- ஊடகத்துறையும் அரபு மொழியை ஒதுக்குவதற்கான அதன் பங்களிப்பும்:

மக்களின் மீது பாதிப்பு ஏற்படுத்தவும் அவர்களுடைய ரசனையை மாற்றுவதில் ஊடகத்துறை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்று அனைவரும் அறிந்ததே… இந்த ஊடகங்கள் மேற்கத்திய நாகரீகத்தின் ஊதுகுழலாக ஆகிவிட்டால் என்னவாகும்? இந்த ஊடகங்கள் இந்த உலகத்தில் தான் சார்ந்த நாகரீகத்தின் அடிப்படையில் தனித்தன்மையுடன் செயல்படுவதற்கான உறுதியுடன் மக்களின் போக்குகளுக்கு உகந்த வழிகாட்டியாக ஆகிவட்டால் என்னவாகும்? இஸ்லாமிய எதிரிகள் மற்றும் அரபு மொழியின் எதிரிகள் செய்துவருவது மிகவும் ஆபத்தானதாகும்: விஷத்தை உட்செலுத்துவதற்கு இந்த ஊடகங்களை பயன்படுத்துவதென்பது அது இந்த நம்பிக்கையின் மீதான நம்பிக்கையை உலுக்கி அதன் தனித்தன்மையையும் உயர்வையும் கிழித்தெறியும், மற்றும் அதை வன்முறை (மற்றும் தீவிரவாதம்) மற்றும் மனித உரிமையை குறிப்பாக பெண்களிடத்தில் மீறுவதாகவும் முத்திரையிடுவதற்கு… இந்த தீனை வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி சில வழிபாட்டு அம்சங்களோடு சுருக்கிய தனிமனித நடைமுறைகளாக மாற்றுவதற்கான அவர்களுடைய தீங்கிழைக்கும் சூழ்ச்சிகளை இவற்றின் மூலம் செயல்படுத்திடும் நோக்கில், அவர்கள் செயலாற்றினர்.

நாம் இன்று மனிதன் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கும் மற்றும் நகரமயமாக்கல், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு மதச்சார்பின்மை தான் பூரணமான தீர்வை தரும் என்று குறிப்பிடுவதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காண்கிறோம், அதேவேளை அதற்கு மாற்றமாக ஹிஜாபில் தொடங்கி தாடி வரை, குர்’ஆனிய ஆரம்பக்கல்வி மற்றும் பாடத்திட்டம் – அடக்கமாக – இஸ்லாமிய கலாச்சாரத்தை குறிப்பிட்டு விளக்கும் சில வசனங்கள் வரை இஸ்லாத்தின்பால் கவர்ந்திழுக்கும் அனைத்தின் மீதும் இவ்வகையான நிகழ்ச்சிகள் தாக்குதல் தொடுக்கின்றன. மேற்கின் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நாகரீகத்தை திணிக்கவும் மற்றும் நூற்றாண்டுகளாக குஃப்பார்களுடைய பலம் மற்றும் உறுதியில் கறைபடிய செய்த இஸ்லாமிய நாகரீகத்தை முற்றிலும் அழிப்பதற்கான ஒரு போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகம் அதன் ஒரு கருவியாகும் என்பதை உறுதிபடுத்த அவையனைத்தும் நம்மை நின்று சிந்திக்க தூண்டுகிறது… இந்த உட்பகையுடன் கூடிய போரில் அரபு மொழி பிழைக்கவில்லை, மற்றும் இதை ஓரங்கட்டுவதற்கு செயற்கைக்கோள் சேனல்களில் அதிகளவிலான விளம்பரங்கள் மூலம் ஊடகம் பெரும் பங்காற்றியது. இந்த விளம்பரங்கள் – முதலாளித்துவ நாகரீகத்தின் தயாரிப்பாகும் – அதன் முதலாளிகளுக்கு பெருமளவு லாபத்தை ஈட்டித்தரும் வகையிலான வசீகரத்தை ஏற்படுத்தி தந்தது. மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய நாகரீகங்களான இவ்விரண்டிற்கும் இடையே பெருமளவிலான வேற்றுமை மற்றும் பரந்த இடைவெளி இருந்தாலும் மேற்கு தனது கலாச்சாரத்தை உட்புகுத்த தீங்கிழைக்கும் மையங்கள் மூலம் ஊடுருவியது, இஸ்லாமிய சமூகங்களிடத்தில் இதன் விளம்பரங்கள் சென்றடைந்தது, அதன் தனித்துவம் வாய்ந்த குணங்கள் மற்றும் அதன் மதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்குள் ஊடுருவி அவர்களுடைய உடலில் பரவியது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வண்ணம் குறிப்பிட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவதிலிருந்து எந்தவொரு ஊடகமும் தங்களை தவிர்த்து கொள்ளவில்லை மற்றும் அதில் பங்கேற்கும் நடிகர்கள் அல்லது பாடகர்களின் அசைவுகளை பின்பற்ற அவர்களை தூண்டி, மற்றும் பாரம்பரிய அரபு மொழியோடு சம்மந்தமல்லாத வாக்கியங்களை மீண்டும் மீண்டும் தொடர்ந்து உபயோகித்து மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சொற்கூறுகளை அவை கொண்டுவந்தன அதில் பெரும்பாலானவை அறநெறிக்கு எதிர்மறையாகவும் அதை மீறுவதாகவும் இருந்தன.

விளம்பரம் என்பது ஒரு சமுதாய மக்களுக்கு பார்க்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய வகையில் செய்தியை வழங்கும் ஒரு செயலாகும், அதன்மூலம் கட்டணம் செலுத்தி ஒரு பொருளை வாங்க வைப்பதற்காகவும் அல்லது ஒரு சேவையை பெற வைப்பதற்காகவும் வேண்டி அவர்களை வசீகரிப்பதாகும், இது அதை பெறுபவரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் அவற்றை கோருவதற்கு அவரை தள்ளுவதற்கும் வெற்றிகரமான ஒரு வழிமுறையாகும். ஊடகங்கள் பெறுபவரிடத்தில் திறம்பட அறிவிக்கவும் அம்மக்களை அணுகுவதற்கும் எளிதாக இருக்கின்றது என்பது போன்ற போலி காரணங்களை கூறி இந்த பேச்சுவழக்கு மொழியை உபயோகிப்பதை அவர்கள் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காதுகளுக்கு பழக்கமாக்கி கொள்ளவும் மற்றும் ரசணையை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவும் அவர்கள் வழங்கும் பொருட்களில் இதை உபயோகிக்க ஒருபோதும் தயங்கியதில்லை. இது போன்ற விளம்பரங்கள் திறன் குறைபாடு மற்றும் பலவீனம் ஆகியவற்றை கொண்டு ஊடுருவப்பட்ட மக்களுடைய மொழியை உயர்த்துவதற்கு பதிலாக மற்றும் சரியான சொல்திறமிக்க வாக்கியங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, அவைகள் உடைந்து போன மொழியை தத்து எடுத்துக் கொண்டதை நாம் காண்கிறோம், மேலும் வேண்டுமென்றே பேச்சுவழக்கு மொழியையும் மக்களின் ரசணையையும் கணக்கில் கொள்ளாத வாக்கியங்களை பரவச் செய்தனர் மற்றும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய நாகரீகத்தின் தனித்துவத்திற்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையும் காண்கிறோம். ஆக முதலாளித்துவ செயலாக்க அமைப்பானது இலாபம் மற்றும் ஆதாயத்திற்கு உதரதிரவாதம் அளிப்பதற்கே தவிர வேறு எவற்றிற்கும் அது செயல்படுவதில்லை. அறிவுக்கூர்மையுடன் தந்திரத்திரத்துடன் “ஒரே கல்லில் பல பறவைகளை கொல்லும்” யுக்தியுடன் செயல்பட்டு; அது (முதலாளித்துவ செயலாக்க அமைப்பு) உம்மத்தை திறனற்றவர்களாக ஆக்கி தனது பொருட்களுக்கான நுகர்வோர்களாக மாற்றுவதற்காக அதன் பொருட்களை சந்தைபடுத்தி, அதன் சந்தைகளை திறந்துவிட்டு தன்னை சார்ந்திருக்கும் கயிற்றை கொண்டு் கட்டியுள்ளது. பிறகு அது அரபு மொழியை அழிப்பதற்காகவும் அதன் அடையாள தோற்றத்தை இருளடைய செய்யவதற்காகவும் அதை தனது உலகில் உருகச்செய்யவும் தனது எடுத்துக்காட்டாக அதை பின்பற்ற செய்யவும் அது பேச்சுவழக்கு மற்றும் இதர மொழிகளை ஊக்குவித்தது… ஆக இவ்வாறு, அதற்கு முடிவு கட்டி மற்றும் அது (அரபு மொழி) தனது உயிரோட்டம், இறையாண்மை மற்றும் தலைமைத்துவத்தை உறுதிபடுத்திக் கொள்ள தனது திருடப்பட்ட மகிமையை மீட்டெடுக்க முடியாத வண்ணம் உறுதி செய்தது.

மொழிபெயர்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம், அது மக்களை அதன் சங்கிலிகளிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு கடினமாக இருக்கும் அளவுக்கு விலங்கிடும் தொடர் இரும்பு சல்கிலிகளாக ஆகிவிட்டது… செயற்கைக்கோள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் பிரத்யேகமாக ஒளிபரப்ப போட்டியிடும் தொடர்கள், அவைகளை மொழிபெயர்ப்பின் மொழியான அரபு மொழியிலள்ளாது பேச்சுவழக்கு மொழியில் வழங்கின. அதை முஸ்லிம்களுடைய வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி அந்நியப்படுத்தும் செயலில் ஈடுபட்டன, இந்த மொழியின் – இஸ்லாமிய உம்மத்தை முழுமையான அளவில் ஒன்றுபடுத்தும் மொழி – தனித்துவமான அம்சத்தை கிழித்து எறிந்து இந்த ஒரு உம்மதை ஒவ்வொன்றும் தனக்கென ஒரு சொந்தமான மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரீக பாரம்பரியத்தை கொண்ட பல சிதறடிக்கப்பட்ட தேசங்களாக மாற்ற தடைகள் மற்றும் எல்லைகளை உட்புகுத்தும் சிதறடித்து பிளவுபடுத்தக்கூடிய மொழிகளை கொண்டு மாற்றி இந்நிகழ்ச்சகள் ஒளிபரப்பப்பட்டன.

8- இஸ்லாமிய உம்மத்தின் கௌரவத்தின் தலைப்பான அரபு மொழி:

“எப்போதெல்லாம் மக்களின் மொழி இழிவுபடுத்தப்படுகிறதோ, அதன் மக்களும் இழிவுபடுத்தப்படுகிறார்கள், மற்றும் எப்போதெல்லாம் அது சீர்குலைக்கப்படுகிறதோ அதன் விவகாரங்களும் விடுபட்டு மறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, காலனியாதிக்க அந்நியர் தான் காலனியாதிக்கம் செய்த நாட்டில் தனது மொழியை பலவந்தமாக திணிக்கின்றன, மற்றும் அதன்மீது ஏறி சவாரி செய்கின்றன, மற்றும் அவர்களை தனது மொழியினால் அவன் கொண்டுள்ள மேன்மையை உணரச்செய்கின்றன, மற்றும் அவர்களை அதன்மூலம் இணைத்துக்கொள்கின்றன. ஆக, அது அவர்கள் மீது ஒரே செயலில் மூன்று தீர்ப்புகளை வழங்குகிறது: முதலாவதாக தனது மொழியை கொண்டு அவர்களுடைய மொழியை வாழ்நாள் முழுவதற்கும் சிறைபிடிப்பது, இரண்டாவதாக துடைத்தழிப்பது மற்றும் மறதி ஏற்படுத்துவதை கொண்டு அவர்களுடைய கடந்த காலத்திற்கு மரணதண்டனை விதிப்பது, மற்றும் மூன்றாவதாக தனது தயாரிப்பை கொண்டு விலங்கிட்டு அவர்களுடைய எதிர்காலத்தை கட்டுப்படுத்துவது, ஆக அவர்களுடைய விவகாரங்கள் தன்னுடைய விவகாரங்களை பின்பற்றியதாக இருக்கும் வகையில் ஆக்குவது. (வஹி அல்- கலம்: முஸ்தஃபா சாதிக் ரஃபீ, ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய உம்மத்தை இகழ்ச்சிக்கு உள்ளாக்கவும் மற்றும் அடக்குமுறை செய்வதற்கான இழிவுபடுத்தும் இந்த முயற்சிகள் விடாமுயற்சயுடன் மேற்கொள்ளப்பட்டன, மற்றும் அதன் அடையாளத்தை துடைத்தழிக்கவும் மற்றும் அதன் மொழியை ஓரங்கட்டவும் மேற்கொண்ட செயல்கள் தீவிரமானவை… இது மறைத்து வைக்கப்பட்ட ஒரு பழைய வெறுப்புணர்வை புதுப்பிக்கப்பட்டதாகும் மற்றும் அது அல்லாஹ் இந்த உலகத்தையும் அதிலுள்ள அனைவரையும் தனது பக்கம் இழுத்துக்கொள்ளும் வரை துண்டிக்காது… அதிலுள்ளவர்கள் அதிகாரத்தின் சுவையையும் பணத்தின் சுகத்தையும் கௌரவத்தையும் ருசி கொண்ட பிறகு தனது வாழ்விற்காகவும் மற்றும் தனது ஏகாதிபத்தியத்தை உட்புகுத்துவதற்காகவும் உலகை கட்டுப்படுத்துவதற்காகவும் வேண்டி போராடி வரும் ஒரு மேற்கத்திய நாகரீகம்… மற்றும் தனது அரசு இல்லாத காரணத்தால் இல்லாமல் இருக்கும் மற்றும் தனது அடையாளம் ஓரம்கட்டப்பட்ட மற்றும் பூமியில் மனிதகுலம் மனநிறைவுடன் மற்றும் பாதுகாப்புடன் மற்றும் மன அமைதியுடன் வாழ அல்லாஹ்வின் ஆட்சியை மீட்டெடுக்க அதன் மீள்வருகைக்காக (அரசு) பாடுபட்டு வரும் ஒரு இஸ்லாமிய நாகரீகம்.

முஸ்லிம்கள் தங்களது மகிமை பொருந்திய மற்றும் வெற்றியுடன் இருந்த நாட்களில் தங்களது இஸ்லாமிய அடையாளத்தையும் அரபு மொழியையும் பாதுகாத்து வத்தனர், மற்றும் ஒருபோதும் அவற்றை விட்டுக்கொடுக்க அல்லது வலுவிழக்கச் செய்யவில்லை. இப்னு தய்மிய்யாஹ், அல்லாஹ் அவர்களின் மீது அருள்புரியப்பட்டுமாக, கூறினார்கள்: ” மாலிக், அல்- ஷாஃபி’யீ மற்றும் அஹமத் ஆகியோர் வரையறுத்ததின் படி தேவையேற்படும் சமயம் தவிர, அரபு மொழியல்லாத வேறொன்றில் பேசும் பரிமாற்றங்களில் கூட அரபுகளுடைய சடங்குகளை மாற்றுவதை சலஃபுகள் வெறுத்தார்கள். மேலும் மாலிக் : “யாரேனும் நமது மஸ்ஜிதில் அரபு அல்லாத மொழியில் பேசுவாரேயானால், அதிலிருந்து வெளியேற்றப்படுவார்” என கூறினார்கள்.

அரபு மொழி எந்த அளவுக்கு ஒரு முக்கிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பதனை அவர்கள் அறிந்துள்ளனர். ஆக, இதை அவர்கள் வீணாக்கினால் அவர்களுடைய மதத்தை அவர்கள் வீணாக்குவது போல் ஏனெனில் இது இந்த இஸ்லாமிய உம்மத்தை அவர்களுடைய நிலங்கள் வேறுபட்டு பிரிந்திருந்தாலும் கடல் முதற்கொண்டு வளைகுடா வரை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரு பலமான இணைப்பாக இருக்கும்:

ﻭﻳَﺠﻤَﻌُﻨﺎ ﺇﺫﺍ ﺍﺧﺘَﻠَﻔَﺖ ﺩِﻳﺎﺭٌ *** ﺑَﻴﺎﻥٌ ﻏﻴﺮُ ﻣُﺨﺘَﻠِﻒٍ ﻭﻧُﻄْﻖُ ‏( ﺃﺣﻤﺪ ﺷﻮﻗﻲ )

நாங்கள் வேறுபாடு கொள்ளும் போது, வீடுகள் மற்றும் வேறுபாடல்லாத வாக்கியங்கள் மற்றும் உச்சரிப்பு எங்களை ஒன்று சேர்த்து விடுகிறது. (அஹமது ஷவ்கி)

இன்று, இப்போதுள்ள இஸ்லாமிய உம்மத்தின் நிலையின் காரணமாக, எதிர்பார்த்த எந்தவொரு முடிவும் கிடைக்காத நிலையில் கண்டனம் தெரிவித்து, இகழ்ந்துரைத்து மற்றும் குற்றஞ்சாட்டி குரல்கள் பல எழுந்துள்ளன; மொழியியல் கட்டுப்பாடு வேண்டி அரபு மொழி அறிஞர்கள் மாநாடுகள் நடத்துகின்றனர், அது உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் சிலுவையுத்த கொடூர தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் நமது நினைவில் புத்துயிர் அளிக்கக்கூடிய மொழியியல் பாதுகாப்புக்காக வேண்டி அச்சுறுத்தும் சத்தத்தை எழுப்பினர், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்க வேண்டி எழுப்பப்பட்ட அந்த சத்தம் நமது செவிகளை செவிடாக்கியது…

அவை சர்வதேசம் அல்லது மொழியியல் ரீதியில், மற்றும் உணவு அல்லது மொழி ரீதியிலான பாதுகாப்பு எதுவாகினும் இவற்றை கண்காணிக்கையில், இவை சூழ்நிலையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம்களுடைய கண்ணியம் அத்துமீறப்படுகிறது, அவர்களுடைய உதிரம் சிந்தப்படுகிறது, பட்டினி, வீடற்றவர்களாக நாடுகளின் எல்லைகளில் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம், அரபு மொழியானது ஓரங்கட்டப்பட்டு நவீன அறிவியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது… இஸ்லாமிய உம்மத்திற்கு நடைபெறுபவைக்கான காரணம் ஒன்றே ஒன்று தான், அது அவர்களுடைய அரசின் இல்லாமையே. இந்த அரசானது நியாயமான (அல்- அதில்) படைப்பாளனின் சட்டங்களுக்கு ஏற்றவாறு மக்களின் விவகாரங்களை நிர்வகிக்கும், மற்றும் இந்த அரசானது முஸ்லிம்களுடைய மதக்கொள்கை மற்றும் அவர்களுடைய பாதுகாப்பு, மொழி மற்றும் அடையாளம் ஆகியவற்றின் பாதுகாவளராக திகழும், அது அவர்களுடைய எதிரிகளுக்கு முன்னால் அவர்களுடைய தலையை நிமிரச் செய்யும் மற்றும் அவர்களுடைய தீனுடைய மொழிக்கு அதன் புனிதம், மரியாதை, தனித்தன்மை மற்றும் அழகை திருப்பித்தரும். மனிதகுலத்தின் வரலாற்றில் நடந்த மிகவும் விசித்திரமான விஷயம் என்னவெனில் அரபு மொழியின் பரவல் தான் என பிரஞ்சு எர்னெஸ்ட் ரெனான் கூறினார். அது முன்னர் அறியப்படாமல் இருந்தது, மற்றும் திடீரென மிகவும் பரிபூரணமாக, மிருதுவாக, செழிப்புடன் மற்றும் விசாலமான முறையில் நிலை கொண்டிருந்தது, அது குழந்தை பருவமோ முதுமையோ கொண்டிருக்கவில்லை. அந்த மொழி அதன் அபரிதமான சொல்லகராதி, துல்லியமான அர்த்தம் மற்றும் அதன் கட்டமைப்பின் நேரிய அமைப்பின் மூலம் அதன் சகோதரிகளை முறியடித்தது.”

அது குர்’ஆனின் மொழியாகும், அதன் குடும்பத்தார் அறிந்த ஆகவே அதனை பாதுகாத்தார்கள், அவர்கள் அதன் மீது அக்கறை எடுத்துக் கொண்டார்கள் மற்றும் அவர்களுடைய தீனை எதிரிகளுடமிருந்து பாதுகாப்பதற்காக அதை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க அரும்பாடு பட்டார்கள்… இருப்பினும், அரசு வீழ்ந்த காரணத்தால் அதன் எதிரிகள் அதை தோற்கடித்தனர் மற்றும் அதை தாக்குவதற்கும், ஓரங்கட்டவும் மற்றும் பலவீனப்படுத்துவதற்கான தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அரபு மொழியை வீணாக்கி விட வேண்டாம், ஏனெனில் அதுவொரு புனித மொழியாகும்; நமது அரசியலைப்பு மற்றும் நமது குர்’ஆன் அரபு மொழியில் தான் அருளப்பட்டது, மற்றும் நமது தீனின் சட்டங்களை நாம் அதன் மூலமாகத்தான் புரிந்து கொள்கிறோம் என்பதனைக்கூறி அனைத்து முஸ்லிம்களுக்கும் இங்கிருந்து எங்களுடைய அழைப்பை விடுக்கிறோம். மற்றும் அல்லாஹ் அருளியதை கொண்டு ஆட்சி செய்வதற்காக நபித்துவ வழிமுறையின் அடிப்படையில் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்வதற்காக இரவும் பகலும் பாடுபடும் நமது உம்மத்திலுள்ள உண்மையுள்ள மகன்களுடன் சேர்ந்து பணிபுரிவோம். இதன்மூலம் – மட்டுமே – அது நமது குர்’ஆனுடைய மொழிக்கு அதன் மகிமையையும் ஒளிர்வையும் மீட்டு கொடுக்கும், மற்றும் இந்த வலுவான கம்பீரமான கட்டிடத்தை கொண்டு – இந்த தீனை பாதுகாக்கும் மற்றும் இந்த மொழியையும் பாதுகாக்கும்.

Comments are closed.