சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 07-06-2016

qatar-saudi

மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகிய பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை (Blasphemy) சட்டம்

பாகிஸ்தானின் தலைசிறந்த மாணவர் ஒருவர் தெய்வ நிந்தனை செய்தார் என குற்றம் சாட்டி ஒரு கும்பல் அவரை கொலை செய்தது. அதிகாரிகளின் அறிவிப்பின்படி, ‘இக்கொலைக்கு அவருக்கு எதிராக இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் தான் காரணம்’ என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வடமேற்கு மர்தானில் உள்ள அப்துல் வாலி கான் பல்கலைகழக மாணவர் மாஷல் கான் (வயது 23) என்பவர் ஆடைகள் அகற்றப்பட்டவராக, கடுமையாக தாக்கப்பட்டு, சுடப்பட்டவராக விடுதியின் இரண்டாம் தளத்திலிருந்து வீசி எரியப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து இக்கொலையை பற்றி விசாரிக்க காவலர்களையும், விசாரணை அதிகாரிகளையும் உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றை அமைத்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்க அந்நாட்டின் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. “மாஷல் கானின் மீதான (அல்லது அவரது நண்பர்கள்) அப்துல்லா, ஜுபைருக்கு எதிராக உள்ள தெய்வ நிந்தனைக்கு ஆதரவாக வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லை” என அறிக்கையின் 308 ஆம் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாக, அதன் நகல் தன்னிடம் வைத்திருக்கும் AFP செய்தி நிருவனம் தெரிவித்தது. பல்கலைகழகத்தின் ஊழலை கடுமையாக எதிர்த்து, கல்வி கட்டண உயர்வை விமர்சகம் செய்த மாஷல் கானின் வளர்ச்சியை பிடிக்காத சக ‘Pakhtun Students Federation’ பக்துன் மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் ஆசிரியர்களே இக்கொலையை தூண்டிவிட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது. மாஷலின் தந்தை முஹம்மது இக்பால், திங்கள் கிழமை பத்திரிக்கையாளர்களுக்கு கூறுகையில் ‘இவ்விசாரணை தன்னுடைய மகனை நிரூபணமாக்கியுள்ளது’ என்று கூறினார். “இதுவே என் மகன் தெய்வ நிந்தனையாளன் (blasphemer) இல்லை என்பதை நிரூபிக்கின்றது” என அவர் கூறினார். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

இப்படி மக்கள் நீதி கிடைப்பதற்காக பொதுமக்களின் நீதிமன்றத்தை விட்டு ராணுவ நீதிமன்றத்தை நாடுவது, பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு மக்களை ஏமாற்றிவிட்டது என்பதையே குறிக்கின்றது. தெய்வநிந்தனை சட்டம் மக்களின் மனோ இச்சைக்கு வழிவகுக்காமல் சரியாக நடைமுறை படுத்த அரசின் எல்லா வட்டங்களிலும் இஸ்லாம் அவசியமாக இருக்கின்றது என்பதை இப்பிரச்சணை தெளிவாக காண்பிக்கின்றது.

அண்டை அரபு நாடுகள் கதாரை தனிமைபடுத்தியது

சவூதி அரேபியா , எகிப்து போன்ற நாடுகளை உள்ளடக்கிய அரபு நாடுகள் கதாருடனான எல்லா ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டன. கதார் குடிமகக்கள் 48 மணிநேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேர கட்டளை பிறப்பிக்கபட்டுள்ளது. இத்தடை கதார் ஐ.எஸ்.ஐ.எஸை ஆதரித்ததும், ஈரானின் தீவிரவாத கும்பளை ஆதரித்ததும் தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கதார் அரசு மறுத்துள்ளது. மேலும் இவ்வளவு பெரிய தடை எதற்கு என கதார் திகைப்புக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவால் ஆயுதம் வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும், வெகு காலமாக கதார், மற்ற நாடுகளை போல் இல்லாமல், அமெரிக்காவிற்கு மாற்றமாக செயல் பட்டு வந்துள்ளது. அதன் பிரபல்யமிக்க செய்தி நிருவனமான, அல் ஜசீரா வெளிப்படையாக ஹமாசை ஆதரித்ததும், மறை முகமாக இக்வானுல் முஸ்லிமீனை ஆதரித்ததும், அமெரிக்காவின் கொள்கைக்கு (policy) மாற்றமாகவே இருந்து வந்துள்ளது. எனவே இத்தடை கதாரை வழிக்கு கொண்டுவந்து, அதன் மூலம் அமெரிக்கா வளைகுடாவை தன் முழு கட்டுபாட்டில் வைக்க நாடுகிறது என்பதை கணிக்க முடிகின்றது.

அமெரிக்கா சீனாவை எச்சரிக்கின்றது

தென் சீன கடலில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட தீவை, சீனா ராணுவ தளமாக மாற்றுவதை அமெரிக்கா ஒரு போதும் ஏற்று கொள்ளாது என பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் எச்சரித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அவர் கூறுகையில், ‘இவ்வாறான செயல்பாடுகள் பிராந்தியத்தின் சிறத்தன்மையை (stability) சீர்குழைக்க கூடியதாக இருக்கின்றது’ என அவர் கூறினார். வளங்கள் நிறைந்த தென் சீன கடல் பகுதிகளில் சீனா உரிமை கோறுவதில் பல நாடுகள் போட்டி போடுகின்றன. வருடாந்திர ‘Shangri-La Dialogue forum’ என்ற மாநாட்டில் ஜெனெரல் மாட்டிஸ் கூறுகையில் : “செயற்கை தீவுகளை ராணுவமையமாக்குவதையும், கடல்வழி பாதைகளில் அளவுக்கு அதிகமாக உரிமை கோரும் நாடுகளையும் நாம் எதிர்க்கின்றோம். தற்பொழுது இருக்கும் நிலைமையை ஒருதலையாக, வழுக்கட்டாயமாக மாற்றுவதை ஒரு போதும் நாம் ஏற்று கொள்ள மாட்டோம்”. இதிலிருந்து சீனா தன்னுடைய சொந்த நிலபரப்புகளை தாண்டி மற்ற பிராந்திய எல்லைகளிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அமெரிக்காவை பொருத்தவரை, இது முக்கிய வணிக வழி பாதையாக இருப்பதனால், தனக்கு சாதகமாக இருக்கும் தற்போதைய சூழல் அமைப்பு மாறாமல் இருக்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். இருப்பினும், இயற்கையாகவே இவ்வழிதளங்கள் சீனாவிற்கு அருகாமையில் இருப்பதனால் இதனை தக்க வைத்து கொள்ள அமெரிக்காவிற்கு கஷ்டமாக இருப்பது, அப்பகுதியை போட்டிகள் நிறைந்த பகுதியாக ஆக்கியுள்ளது.

Comments are closed.