சமீப பதிவுகள்

ஆய்வுகள்

‘தவக்குல்’ – அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்தல்

dua

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(அல்குர்ஆன் : 9:51)

وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِۙ‏

இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
(அல்குர்ஆன் : 26:217)

فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)

இஸ்லாமிய அகீதா வின் அடித்தளமாக ‘தவக்குல்’ உள்ளது. ‘தவக்குல்’ என்பது இறைநம்பிக்கை சார்ந்ததும் நம்முடைய வாழ்க்கையின் கண்ணோட்டத்தை வடிவமைக்கக்கூடியதும் ஆகும். ‘தவக்குல்’ என்பது அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்தல் மற்றும் நிபந்தனையின்றி அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதல் ஆகும்.

‘தவக்குல்’ என்பது அல்லாஹ்விற்கு கட்டுப்படுதல் மற்றும் அவனுடைய(சுபு) கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவதும் ஆகும்.

முஸ்லிம்களின் முந்தைய சமுதாயம் ‘அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்தல்’ என்ற விஷயத்தை தெளிவாக புரிந்துகொண்டது. ஆகவே அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும், வாய்ப்புகள் அரிதாக அமைந்தபோதிலும், கஷ்டங்கள் அவர்களை சூழ்ந்த போதிலும் அவர்கள் காலசூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் தங்களை வலைத்துக்கொள்ளமல் அல்லாஹ்வின்(சுபு) மீதான நம்பிக்கையின் காரணமாக அந்த கொடூரமான கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டனர். இந்த புரிதலின் காரணமாக பெரும் பெரும் சவால்களையும் எதிர்த்து வெற்றிகண்டனர்.

அம்மார் பின் யாசிர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதன் காரணமாக குறைஷி காபிர்கள் அன்னாரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையாக சித்திரவதை செய்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த ரசூல்(ஸல்) அவர்கள் யாசிர் குடும்பத்தாரை நோக்கி இவ்வாறு கூறினார் ” ஓ யாசிர் குடும்பத்தாரே, சுப செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்கத்தில் இடம் பதிவுசெய்யப்பட்டுவிட்டது”. இந்த நம்பிக்கை அவர்களுடைய ஈமானையும், உறுதியையும் வலுப்படுத்தியது.

அல்லாஹ்வின் மீதான இந்த பரிபூரண நம்பிக்கையின் காரணமாக மூன்று மடங்கு அதிக எண்ணிக்கை கொண்ட படையையும் அவர்கள் பத்ர் யுத்தத்திலும், அகழ் யுத்தத்திலும் வெற்றிகண்டனர்.

இஸ்லாமிய வரலாறுகள் நெடுக இம்மாதிரியான சம்பவங்கள் நிறைந்துள்ளன, தாரிக் பின் ஜியாத் அவர்கள் அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை கொண்டதன் காரணமாக தான் வந்த கப்பலை எரித்துவிட்டார் மேலும் ஸ்பெயினையும் வெற்றிக்கொண்டார், இதே போன்று முஹம்மத் அல்பாதிஹ் போர்க்கப்பல்களை மலைகளின் மீது ஏற்றி இறக்கி கான்ஸ்டாட்டினோபிலை வெற்றிக்கொண்டார்.

சந்தேகமின்றி அல்லாஹ்வின் மீது ‘தவக்குல்’ வைப்பது கடமையான செயல் மேலும் அதை அல்லாஹ்வின் கட்டளைகளோடு இணைத்து செயல்படுவதும் கடமையான செயல்.

‘தவக்குல்’ என்பதன் நேரடி வெளிப்பாடு அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் அமைந்துள்ளது. ஆக முதலில் நாம் ஒரு செயலை மேற்கொள்வதற்கு காரணமாக ஒன்று அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவது அல்லது அவன்(சுபு) தடைசெய்ததை விட்டும் தவிர்த்து இருப்பதும் ஆகும் இதன் பொருட்டு அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நாம் ஆளாகமுடியும். இரண்டாவதாக நம்முடைய செயல்களின் வெற்றிக்கான முடிவை அல்லாஹ்விடமே பரம்சாற்றவேண்டும். சுருக்கமாக கூறவேண்டுமெனில் ‘தவக்குல்’ என்பது எந்த பயமுமின்றி அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை வைத்து அடுத்து நடப்பவை பற்றி கவலைப்படாமல் இருப்பது.

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள், ‘தவக்குல்’ என்பது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது என்பதில்லாமல் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவது என்பதாகும்.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில், ஒருவர் அல்லாஹ்வுடையை திருபொறுத்தத்தை நாடி இந்த இஸ்லாமிய அழைப்புபணியின் வெற்றிகிரிடமான கிலாபா ராஷிதாவை நிலைநாட்டுவதற்காக உழைக்கக்கூடியர்களின் ஒரே நோக்கம் அல்லாஹ்வின் மீதான பரிபூரண நம்பிக்கை மட்டுமே( ‘தவக்குல்’).

இந்த நிபந்தனை அற்ற அல்லாஹ்வின் மீதான பரிபூரண நம்பிக்கையே இஸ்லாமிய அழைப்புபணியாளரின் குறிக்கோள்களையும் அவர்கள் அழைப்புபணியில் முழுமனதோடு ஈடுபட்டுயிருப்பதையும் வலுப்படுத்தி அவர்களின் முயற்சியை மேலும் வீரியப்படுத்துகிறது. ஆக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் இவ்வாறு கண்ணியப்படுத்துகிறான்

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏
பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:159)

முஸ்லிம்கள் கட்டாயம் தெளிவுபெற வேண்டிய விஷயம் யாதெனில் ‘தவக்குல்’ என்பதன் சராம்சம் அல்லாஹ்வின கட்டளைகளின் மீதே முழுமையாக சார்ந்தியிருப்பதும் மற்றும் அந்த கடமையை நேசிப்பதும் ஆகும்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வை சார்ந்தும் அவனுடைய(சுபு) கட்டளைகளை நிறைவேற்றியும், அதன் முடிவில் அல்லாஹ்வை நம்பியும் இருப்பாரோ அவர் மிகப்பெரும் வெற்றியை சந்திப்பார். முடியாத காரியங்களையும் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிகாண்பார். அவர் காபிர்களுடைய எண்ணிக்கையையும், காபிர்களுடைய பலத்தையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ் கட்டளையிட்டதுபோல் இந்த உம்மத்தை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க தன்னிடமுள்ள எல்ல சக்திகளை கொண்டும் பாடுபடுவார்.

எனவே இந்த முஸ்லீம் உம்மத்தை உயிரோட்டத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துஇருக்கூடிய ஒரு கொள்கையாக இந்த ‘தவக்குல்’ அமைந்துள்ளது. இது இஸ்லாத்தின் வலுவான கொள்கையாகவும் உள்ளது.

اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173)

Comments are closed.