சமீப பதிவுகள்

ஆய்வுகள்

பற்றுறுதி அல்லது விசுவாசம் இஸ்லாத்தின் மீது தவிர வேறெதற்கும் இல்லை?

taqwa

ஈரம் படிந்த கண்கள், உடைந்து போன இதயம், பாவிகளாக, பாவமன்னிப்பு கோருபவர்களாக, தொலைந்து போனவர்களாக் மற்றும் நல்வழி காட்டப்பட்டவர்களாக முஸ்லிம்கள் இன்னுமொரு ரமலானில் அடியெடுத்து வைக்க அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய ரஹ்மத்தும் மற்றும் அவனுடைய அருட்கொடைகளும் பொழிந்து வருகிறது. அல்லாஹ்வை அடையும் பாதையானது எளிதானதல்ல, அதேசமயம் முடியாததும் அல்ல!
இந்த புனித மாதத்தில், நாம் நற்செயல்கள், அடிபணிதல் மற்றும் மாற்றத்திற்காக போராடி வருகிறோம்; நமது பலவீனங்கள், நமது தவறுகள் மற்றும் மதியீனங்களை ஏற்றுக்கொள்ளுமாறு அல்லாஹ்விடம் மண்டியிடுகிறோம்; நமது நெற்றிகள் பணிந்து, மன்னிப்பு கோரி மற்றும் செய்த குற்றத்திற்காக வருந்தி தரையை தொடுகின்றன.

சூரா பகராவில், அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:

ﻳَـٰٓﺄَﻳُّﻬَﺎ ﭐﻟَّﺬِﻳﻦَ ﺀَﺍﻣَﻨُﻮﺍْ ﻛُﺘِﺐَ ﻋَﻠَﻴۡڪُﻢُ ﭐﻟﺼِّﻴَﺎﻡُ ﻛَﻤَﺎ ﻛُﺘِﺐَ ﻋَﻠَﻰ ﭐﻟَّﺬِﻳﻦَ
ﻣِﻦ ﻗَﺒۡﻠِڪُﻢۡ ﻟَﻌَﻠَّﻜُﻢۡ ﺗَﺘَّﻘُﻮﻥَ

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.”
(அல்குர்ஆன் : 2:183)

சுருங்கக்கூறின், ரமலானின் நோக்கமானது தக்வாவை அடைவதற்காகவே.

ஆக, தக்வா என்றால் என்ன? தக்வா என்பது 24 ×7 என அனைத்து நேரத்திலும் தொழுகை மற்றும் நோன்பில் ஈடுபட்டிருப்பதா? நாம் அனைத்து உலக விவகாரங்கள் மற்றும் ஆசைகளை துறந்து, ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைவதற்கு மட்டும் முழு கவனத்தையும் செலுத்துவதால் தக்வாவை அடைந்து விட முடியுமா?

உமர் பின் கத்தாப் (ரலி) ஒருசமயம் தொழுது கொண்டிருந்தவர்களை பார்த்து கூறினார்கள், “நீங்கள் உங்கள் தலைகளை அதிக முறை எழுப்புவதை கொண்டும் தாழ்த்துவதை கொண்டும் என்னை ஏமாற்றி விட முடியாது. [உண்மையான] மார்க்கமானது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது, மற்றும் அல்லாஹ் தடுத்தவைகளை விட்டு விலகியிருப்பதும் அல்லாஹ் அனுமதித்த மற்றும் விலக்கியவைகளின் பிரகாரம் செயல்படுவதாகும்.”

தக்வா என்றால் பாதுகாப்பது, தடுப்பது. எதிலிருந்து? அல்லாஹ்வின் سبحانه وتعالى கோபத்திலிருந்தும் அவனுடைய தண்டனையிலிருந்தும். தக்வா என்பது அல்லாஹ்வை மகிழ்விக்கும் செயல்களை செய்வது அவனை கோபமூட்டும் செயல்களை விட்டு விலகியிருப்பது. தக்வா அதன் சாராம்சத்தில் குறிப்பது என்னவெனில் கடவுள் உணர்வை கொண்டிருப்பது, நமது அனைத்து செயல்கள் மற்றும் விவகாரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திருப்பது.

ஆக நமது தலைகளை எண்ணற்ற முறை தாழ்த்துவதாலும் உயர்த்துவதாலும் நம்மை ‘முத்தக்கூன்’களில் ஒருவராக நம்மை ஆக்கி விடாது, அதேபோல் குர்’ஆனை பற்றி சிந்தக்க தொடங்கி, ஒவ்வொரு வார்த்தையையும், செய்தியையும் ஆழமாக உள்ள அனைத்து படிப்பினையையும் உள்வாங்காத வரை… பலமுறை குர்’ஆனை ஓதி முடிப்பது தக்வாவை அடைவதற்கு உதவாது. ஆக, இந்த ரமலானில், நாம் ‘அல்-வலா’அ வல் பரா’அ’ (விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்விற்காக ஆக்கிக்கொள்வது) எனும் மிகவும் சிதைக்கப்பட்டுள்ள ஒரு இஸ்லாத்தின் கருத்தைப் பற்றி ஆய்வு செய்வோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் நமது விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்காக ஆக்கிக்கொள்ளாத வரை ஒருபோதும் தக்வாவை அடைய முடியாது. இதுதான் ஒரு முஸ்லிமின் மைய பிரச்சனையாகும். இந்த விசுவாசம் தான் நமது அகிதாவின் ஒரு பகுதியாகும். இந்த விசுவாசத்தை தான் அல்லாஹ் سبحانه وتعالى எதிர்பார்க்கிறான். இத்தகய விசுவாசம் தான் முத்தக்கூன் எனும் அந்தஸ்த்திற்கு நம்மை உயர்த்தும்… இத்தகய விசுவாசத்தை தான் முஸ்லிம்கள் அல்லாஹ், ரசூலுல்லாஹ் மற்றும் நம்பிக்கையாளர்களின் மீது வைத்திருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, முஸ்லிம்கள் இன்று செய்து வருவது என்னவென்றால் முந்தயதின் மீது நம்பிக்கை கொண்டு, பிந்தயதை மூர்க்கத்தனமாக நிராகரித்து வருகின்றனர். முஸ்லிம்கள் அல்-வலா’அவின் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ‘அல்-பரா’அ வை அது தொடர்ந்து நிலைபெற்றிருக்காத அளவுக்கு சிதைத்துள்ளனர்!! அவர்கள் சீராவிலிருந்து கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து ரசூலுல்லாஹ் ﷺ அன்பை மட்டுமே வெளிக்காட்டக்கூடியவராக சித்தரிக்கின்றனர்.

நாம் இந்தியராகவோ, ஒரு பாகிஸ்தானியராகவோ, ஒரு அமெரிக்கராகவோ அல்லது ஒரு பிரித்தானியராகவோ இருக்கலாம் ஆனால் தேசம், இனம் அல்லது பாலினம் இவற்றை கடந்து, அல்லாஹ் سبحانه وتعالى நம்மை நம்பிக்கையாளர் மற்றும் இறைமறுப்பாளர் – அல்-மு’மினூன் வல் காஃபிரூன் என இவ்வாறாக தான் பிரிக்கிறான். இங்கு தான் முஸ்லிம்களுடைய விசுவாசம் நிலைபெற்றிருக்க வேண்டும்; அவர்களுடைய குடும்பத்தாரிடத்தில், அவர்களுடைய கோத்திரம் அல்லது வாரிசுகளிடத்தில், தேசங்களிடத்தில் இவைகளில் அல்லாமல் அல்லாஹ் سبحانه وتعالى மற்றும் அவனுடைய தூதர் ﷺ அவர்களிடத்தில் மட்டும் கொண்டிருக்க வேண்டும்.

இது விஷயத்தில் நம்மிடத்திலும், ஒவ்வொரு ரமலானிலும் ஆன்மீக நடத்தையை வெளிக்காட்டி, நமது அகீதாவின் முக்கியமானதொரு கருத்தான, அந்த விசுவாசத்திற்கு ஏற்றவாறு நடக்க தவறிய முஸ்லிம்களிடத்திலும் ஒரு தீவிர சுயபரிசோதனையை செய்வதற்கான அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நாம் நம்மை முஸ்லிம்கள் என்று அழைப்போமேயானால் இது விருப்பத்திற்கு ஒன்றானதல்ல. இது தான் நமது ஈமானின் கட்டமைப்பு நிலைகொள்ளும் அடித்தளம் ஆகும், இதை தான் அல்லாஹ் سبحانه وتعالى சூரா ஹுஜுராத்தில் கூறுகிறான்,

ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﺇِﺧْﻮَﺓٌ

“நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே!”
(அல்குர்ஆன் : 49:10)

மீண்டும், அல்லாஹ் سبحانه وتعالى சூரா நிஸாவில் நமக்கு கட்டளையிடுகிறான்,

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍْ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ ﺃَﻭْﻟِﻴَﺎﺀ ﻣِﻦ ﺩُﻭﻥِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﺃَﺗُﺮِﻳﺪُﻭﻥَ ﺃَﻥ ﺗَﺠْﻌَﻠُﻮﺍْ ﻟِﻠّﻪِ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺳُﻠْﻄَﺎﻧًﺎ ﻣُّﺒِﻴﻨًﺎ

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகின்றீர்களா?”
(அல்குர்ஆன் : 4:144)

பின்பு மீண்டும் சூரா மும்தஹானாஹ்வில் ஒரு கடுமையான எச்சரிக்கை விடுக்கிறான்,

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻟَﺎ ﺗَﺘَّﺨِﺬُﻭﺍ ﻋَﺪُﻭِّﻱ ﻭَﻋَﺪُﻭَّﻛُﻢْ ﺃَﻭْﻟِﻴَﺎﺀ ﺗُﻠْﻘُﻮﻥَ ﺇِﻟَﻴْﻬِﻢ ﺑِﺎﻟْﻤَﻮَﺩَّﺓِ ﻭَﻗَﺪْ ﻛَﻔَﺮُﻭﺍ ﺑِﻤَﺎ ﺟَﺎﺀﻛُﻢ ﻣِّﻦَ ﺍﻟْﺤَﻖِّ ﻳُﺨْﺮِﺟُﻮﻥَ ﺍﻟﺮَّﺳُﻮﻝَ ﻭَﺇِﻳَّﺎﻛُﻢْ

“நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக்கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்முடைய) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள்.”
(அல்குர்ஆன் : 60:1)

இப்னு கசீர் தன்னுடைய தஃப்ஸீரில் இறைமறுப்பாளர்களை நிராகரிப்பதென்பது அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய பாதையையும் (அவர்களுடைய வாழ்க்கையை தொடர்வதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை) நிராகரிப்பதாகும்.

நமது தீனில் நாம் சமரசம் மேற்கொள்ளும் வரை இறைமறுப்பாளர்கள் எங்ஙனம் நம்மை தாக்குகிறார்கள் என்றும், தீமையை கொண்டு எங்ஙனம் நம் மீது அவர்கள் ஆதிக்கத்தை செலுத்த முயல்கிறார்கள் என்றும், மீண்டும் மீண்டும் நமக்கு காட்டியுள்ளான். இது போதாத குறைக்கு, அவர்களுடைய இஸ்லாத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் அரபு நிலபரப்புகளின் மீது குண்டுவீசி, பல லட்சக்கணக்கானோரை கொன்றழித்து வருகின்றன; யூத அமைப்பு அநியாயமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது. ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன மற்றும் காஷ்மீரில் இந்தியாவால் முடிவில்லாமல் அத்துமீறல்கள் நடத்தப்படுகின்றன.

இவையனைத்தும் நடத்தப்படுவதற்கான காரணம் ஒன்று தான்: அவர்கள் இஸ்லாமிய ஷரீ’ஆவை விரும்பவில்லை. இது அவர்களுடைய சதையில் குத்திய ஒரு முல்லாக இருக்கிறது. முஸ்லிம்கள் அவர்களுடைய மதத்தின் ஒரு பகுதியை கைவிட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் அதாவது அறிவார்ந்த மற்றும் அரசியல் பகுதியை, தீனையும் ஆட்சியையும் பிரித்து, இபாதத்துகளில் (வணக்க வழிபாடுகள்) மட்டும் அவர்கள் தங்களை சுருக்கிக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.

இங்கு தான் இன்று முஸ்லிம்கள் தங்களது கவனங்களை செலுத்த தொடங்கியுள்ளனர்! தங்களது விசுவாசங்கள் அனைத்தையும் உலக விவகாரங்களில் பின்னுக்கு தள்ளி விட்டு வெறும் இபாதத் மற்றும் அஹ்லாக்கின் மீது மட்டும் விசுவாசத்தை கொண்டுள்ளனர்.

ஆக, தொழுகையும் நோன்பும் எண்ணற்ற அளவில் இருந்தாலும், நஃபில்கள் மிகுதியாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் எப்படி தக்வாவை அடைய முடியும் ?

இந்த ரமலானின் பொழுதில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் அனைவரும் ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்திருக்கும் இச்சமயத்தில், முஸ்லிம்கள் தங்களது வாழ்வை – தீன் மற்றும் தவ்லா – ஆகிய அவர்களின் வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் குர்’ஆன் மற்றும் சுன்னாவின் அஹ்காம் பிரகாரம் வாழ கடமைபட்டுள்ளான் என்பதனை சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். மற்றும் இந்த அரசானது, முதலாளித்துவ செயலாக்க அமைப்பை கொண்டு ஆளப்படுவது என்பது குர்’ஆன் மற்றும் சுன்னாஹ்விற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. இந்த மதசார்பற்ற-ஜனநாயக கட்டமைப்பானது மனிதனுடைய சட்டமியற்றுதலின் அடிப்படையிலானது, அங்கு இறையாண்மை மனிதனுக்குடையதாக ஆகிறது, அங்கு ‘முழு’ சுதந்திரத்தையும் மனிதன் பெற்றுள்ளவனாக இருக்கிறான், இன்பத்தை அடைவதே அங்கு வாழ்வின் நோக்கமாக உள்ளது, அங்கு எந்தவிதத்திலும் ஷரீ’ஆவின் சட்டத்தை சான்றாக எடுக்காமல் அனைத்தும் ஆதாயத்தின் அளவுகோளை கொண்டு அளக்கப்படுகிறது. அது நமது அகீதாவின் அடிப்படைகளுக்கு முற்றிலும் முரண்பாடானதாக இருக்கின்றது. மேலும் அதனுடன் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிருப்பது என்பது தெளிவான இறைமறுப்பாகும்.

இறையாண்மை என்பது அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதை ஒரு முஸ்லிம் அறிந்துள்ளான். ஆக, இந்த மதசார்பற்ற-ஜனநாயக செயலாக்க அமைப்பை வெறுப்பதும் அவனுடைய பற்றுறுதியை ஷரீ’ஆவிற்கு மட்டும் வெளிப்படுத்துவதும் அவனது கடமையாகும். முஸ்லிம்களில், யாரெல்லாம் ‘முத்தக்கூன்’களாக உள்ளனரோ அவர்கள் இந்த அடக்குமுறை செயலாக்க அமைப்பின் கீழ் ஒருபோதும் அமைதியாக வாழ முடியாது, அவர்கள் மீது ஷரீ’ஆவை தவிர வேறு எதையும் ஆட்சி புரிய அனுமதிக்க கூடாது. அவர்கள் ஒருபோதும் தாகூத் ஆட்சியாளர்களை தங்களுக்கிடையில் தீர்ப்பளிக்க அனுமதிக்கக்கூடாது.

பிறகு, ஏன் இந்த அதி தீவிர பிரச்சனையில் முஸ்லிம்கள் அமைதி காத்து வருகின்றனர்? எவ்விதமான அச்சத்தில் அவர்கள் மூழ்கிப் போயுள்ளனர் ? ஏன் அவர்கள் பல லட்சக்கணக்கான அவர்களுடைய சகோதர சகோதரிகளை கொன்றெடுத்த இந்த அசிங்கமான, அடக்குமுறையான செயலாக்க அமைப்பை ஏற்றுள்ளனர்? ஏன் அவர்கள் திருப்தியடைந்துள்ளனர், மற்றும் அவர்களுடைய கொள்கைக்கு முரண்பாடான விஷயமான இது வெளிப்படையான குஃப்ர் என்று இவ்வளவு காலம் அறியாமல் எவ்வாறு இருக்க முடியும்?

ﺃَﻟَﻢْ ﺗَﺮَ ﺇِﻟَﻰ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺰْﻋُﻤُﻮﻥَ ﺃَﻧَّﻬُﻢْ ﺁﻣَﻨُﻮﺍْ ﺑِﻤَﺎ ﺃُﻧﺰِﻝَ ﺇِﻟَﻴْﻚَ ﻭَﻣَﺎ ﺃُﻧﺰِﻝَ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻚَ ﻳُﺮِﻳﺪُﻭﻥَ ﺃَﻥ ﻳَﺘَﺤَﺎﻛَﻤُﻮﺍْ ﺇِﻟَﻰ ﺍﻟﻄَّﺎﻏُﻮﺕِ ﻭَﻗَﺪْ ﺃُﻣِﺮُﻭﺍْ ﺃَﻥ ﻳَﻜْﻔُﺮُﻭﺍْ ﺑِﻪِ ﻭَﻳُﺮِﻳﺪُ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﺃَﻥ ﻳُﻀِﻠَّﻬُﻢْ ﺿَﻼَﻻً ﺑَﻌِﻴﺪًﺍ * ﻭَﺇِﺫَﺍ ﻗِﻴﻞَ ﻟَﻬُﻢْ ﺗَﻌَﺎﻟَﻮْﺍْ ﺇِﻟَﻰ ﻣَﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻭَﺇِﻟَﻰ ﺍﻟﺮَّﺳُﻮﻝِ ﺭَﺃَﻳْﺖَ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘِﻴﻦَ ﻳَﺼُﺪُّﻭﻥَ ﻋَﻨﻚَ ﺻُﺪُﻭﺩًﺍ

“(நபியே!) உங்கள்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகின்றான். “(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள்.”
(அல்குர்ஆன் : 4: 60-61)

சூரா மாய்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளது போல்,

ﻭَﻣَﻦ ﻟَّﻢْ ﻳَﺤْﻜُﻢ ﺑِﻤَﺎ ﺃَﻧﺰَﻝَ ﺍﻟﻠّﻪُ ﻓَﺄُﻭْﻟَـﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻜَﺎﻓِﺮُﻭﻥَ

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!”
(அல்குர்ஆன் : 5:44)

இப்னு அப்பாஸ் கூறியதாக இமாம் குர்துபி அறிவிக்கிறார்கள், “எவரொருவர் அல்லாஹ் அருளியதை கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர் நிராகரிப்பவரின் செயலைகளை போன்ற செயலை செய்தவராவார்.”

இந்த ரமலானில் நமது நோக்கத்தை அடைய வேண்டும் என்றால் நாம் அல்-வலா’அ வல் பரா’அ எனும் கருத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அல்லாஹ்வின் மார்க்கம், அவனுடைய தூதர், அவனுடைய அஹ்காம் மற்றும் அவனுடைய இறையாண்மை மீது விசுவாசம் கொள்வது. ஆட்சியிலிருந்து பொருளாதாரம் வரை, கல்வியிலிருந்து சமூகம் வரை வாழ்வின் அனைத்து கோளங்களிலும் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துவதற்கான விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும. மற்றும் அல்-பரா’அ, இஸ்லாத்திற்கு அந்நியமான முதலாளித்துவம் அல்லது பொது உடமைக் கொள்கை போன்ற மற்ற அனைத்து சித்தாந்தையும் கைவிட்டு மதசார்பற்ற கருத்துக்கள் மற்றும் விதிகள் அல்லது சட்டங்கள் போன்றவற்றை கைவிட வேண்டும்.

இந்த ரமலானை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்குங்கள், இஸ்லாமிய கருத்துக்களின் மீதான சரியான புரிந்துணர்வுடன், இந்த பூமியில் அல்லாஹ்வுடைய ஆட்சியை நிறுவுவதற்கு உண்மையாக செயல்பட வேண்டும் என்று.

நிச்சயமாக, ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் உரிமையாகும்.

நீலோஃபர் ஷம்சி

Comments are closed.