சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ஒவ்வொரு செயலுக்கும் ஷரியாவின் சட்டம் தேவைப்படுகிறது

learn-quran

“ஒவ்வொரு செயலுக்கும் ஷரியாவின் சட்டம் தேவைப்படுகிறது” என்ற இந்த கூற்றானது முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டிய இஸ்லாத்தின் மிக முக்கியமான கருத்தாகும்.

மதச்சார்பற்ற சமுதாயத்தில் வளர்ந்து வரும் போது, இளம் வயதிலிருந்தே, மதச்சார்பின்மையிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை நீங்கள் கற்பிக்கிறீர்கள்.இந்த கருத்துகளில் ஒன்றானது “மனிதன்” சட்டம் இயற்றுபவன், தனக்கு நல்லது எது கெட்டது எது மற்றும் நன்மை எது தீமை எது என்று தீர்மானித்து கொள்பவன். அதாவது, ஒரு செயலை மேற்கொள்ள தன்னை அதன்படி வடிவமைத்து முடிவு செய்கிறான்.

இந்த மதச்சார்பற்ற கருத்துகளில் உள்ள ஆபத்தானது “மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள்” என்ற கருத்து முஸ்லிம்கள் யோசிக்கின்ற விதத்தை மாற்றி அல்லாஹ்வின் வெறுப்பை நாடும் விதத்தில் அவர்களை மாற்றிவிடலாம்.

உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தில் அல்லாஹ் அருளியவற்றை கொண்டு நடத்தையை மாற்றுவதை விட நம்முடைய பொருத்தத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறோம். இதன் விளைவு தான் பெண்கள் ஹிஜாபை எப்பொழுது அணிய வேண்டும் என்ற அல்லாஹ்வின் சட்டத்தை பார்ப்பதை விட தாம் அணிந்து கொள்ள தயாராக இருப்பதாக உணர்கையில் அணிந்துகொள்கிறார்கள்.

இஸ்லாம் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும் பதில்களை வழங்கும் ஒரு விரிவான மார்க்கமாகும். வாழ்வின் எல்லா துறைகளின் நவீன பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தின் கொள்கை, சட்டங்கள் மற்றும் தீர்வுகள் காண்ப்படுகின்றன. நம் அனைத்து செயல்களுக்கும் சட்டங்களை வழங்கும் ஆற்றல் வாய்ந்தது இஸ்லாம்.

இதை பற்றி அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான்:

(இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. (6:38)

மேலும், அல்லாஹ் தன் சட்டங்களைப் பொறுத்து நம் நடத்தையையும் செயல்களையும் வடிவமைக்க வேண்டும் என்று பலமுறை நமக்கு நினைவூட்டுகிறான். இந்த ஷரியா சட்டங்கள் குர்ஆன் மற்றும் சுன்னத்(ஹதீஸ்) மூலம் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒருவேலை நாம் ஷரியாவை பேணி நடக்காவிட்டால் சத்தியத்தை ஏற்றுக் கொண்ட உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் ஆக மாட்டோம் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்,

இதை பற்றி பின்வரும் வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (59:7)

மேற்கண்ட இரு வசனங்களில் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து ஆதாரம் பெற்ற ஷரியாவின் சட்டம் இருக்க வேண்டும். இந்த கொள்கை உசூலுல் ஃபிக்ஹ்யின் (usul ul fiqh) ஆரம்ப சட்டங்களிலும் விளக்குகிறது, நம் செயல்களை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இணைக்கும் பொழுது அந்த செயல் ஃபர்ளு, மன்தூப், முபாஹ், மக்ரூஹ், ஹராம் ஆகிய இந்த ஐந்து சட்டங்களில் ஒன்றாக கருதப்படும்.

இந்த சிக்கலற்ற வகைப்படுத்தலுடன், நாம் மேற்கொள்கின்ற செயல் ஃபர்ளாக இருந்தால் அதை தொடரவும், மன்தூப் அல்லது முபாஹ்வாக இருந்தால் அதை செய்ய தேர்ந்தெடுக்கவும், மக்ரூஹ் அல்லது ஹராமாக இருந்தால் அதை விட்டுவிடவும்பு ரிந்து கொள்ள முடியும்

எனவே, எந்த ஒரு காரியத்தைத் தீர்மானிப்பதிலோ அல்லது அதை பற்றி விவாதிக்கும்போது, தன்னை நினைவில் கொண்டு சரியான முடிவுகளை எடுக்க இறை நம்பிக்கையாளர்களான முஃமின்களுக்கு அல்லாஹ் நினைவூட்டி இதன் மூலம் அவர்களை உதவி செய்கிறான்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி அல்லாஹ் நமக்கு என்ன அறிவித்துள்ளான் அல்லது நம்முடைய நபி (ஸல்) அதை பற்றி நமக்கு என்ன கற்றுக் கொடுத்துள்ளார் என்பதை கண்டெடுப்பதை நாம் முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என குர்ஆன் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த மனநிலையுடன் இருப்பவர்கள் தான் “நான்” (மனிதன்) தனிச்சியாக எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள். மேலும், இது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் அடைய நமக்கு உதவியளிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான்,

இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. (24:42)

Comments are closed.