சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ஹிஜ்ரி 1438 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈத் உல்-ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்

eid-mubarak

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வ லில்லாஹ் அல்ஹம்த்

புகழனைத்தும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே மற்றும் அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அவரையும் அவருடைய வழிமுறையை பின்பற்றி மற்றும் இஸ்லாமிய அகீதாவை தனது நம்பிக்கையாக வைத்து இஸ்லாமிய சட்டங்களை தனது செயல்களுக்கு அடிப்படையாக வைத்து மற்றும் தனது விதிமுறைகளுக்கு ஆதாரமாக வைத்திருப்பவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக…

முஹம்மது பின் ஜியாத் அவர்களிடமிருந்து அஹமதில் பதியப்பட்ட அறிவப்பில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா கூறியதாக

“ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீதும் சாந்தி உண்டாவதாக அல்லது அபூ அல் காசிம் ﷺ கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) கூறியதை கேட்டதாக:

«صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِيَ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ»

“பிறையை கண்ட பின் நோன்பு பிடிக்க தொடங்குங்கள் [ரமலானின் பிறை], மற்றும் அதை கண்டவுடன் விட்டு விடுங்கள் [ஷவ்வாலின் பிறையை கண்டவுடன்], ஒருவேளை வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டால் (உங்களால் பார்க்க முடியாமல் போனால்), ஷா’பானின் முப்பது நாளை பூர்த்தி செய்யுங்கள்.”

இந்த புனிதமிக்க ஞாயிறன்று மாலை ஷவ்வால் மாதத்தின் பிறையை காண்பதற்கான விசாரணைக்கு பிறகு, பிறையை காண்பதற்கான ஷரீ’ஆவின் தேவைகளை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் சில முஸ்லிம் நாடுகளில் பிறை தென்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது, ஆகவே நாளை, ஞாயிற்றுக்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும் மற்றும் புனிதமிகு ஈத் உல்-ஃபித்ரின் முதல் நாளாகும்.

புனிதமிகு ஈத் உல்-ஃபித்ரின் இத்தருணத்தில், ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும், மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ ரஷ்தா, அல்லாஹ் அவரை பொறுந்திக்கொள்வானாக, புனிதமிகு இஸ்லாமிய உம்மத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள் மற்றும் அல்லாஹ் சுபுஹானுவிடம் அல்லாஹ்வின் ஷரீ’அத்தை (சட்டங்கள்) நடைமுறைபடுத்தி இஸ்லாமிய செய்தியை வழிகாட்டியாகவும் வெளிச்சமாகவும் பூமியின் அனைத்து பகுதிக்கும் எடுத்து செல்லக்கூடிய மற்றும் நிலப்பரப்புகளை விடுவித்து மக்களுக்கு நீதியை பெற்றுத்தரக்கூடிய நீதியின் அரசாங்கமாக திகழும், மற்றும் வெற்றிவாகைகளை தொடர்ந்து சூடும் ஜிஹாதின் ஆட்சிமுறையான மற்றும் ஈதுகளிலும் வெற்றிகளிலும் மக்கள்: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வ லில்லாஹ் அல்ஹம்த் என்று முழங்கக்கூடிய நபித்துவ வழிமுறையின் அடிப்படையில் நேர்வழி பெற்ற கிலாஃபத்தை நிறுவி அவனது கருணையை புரியுமாறு வேண்டுகிறார்கள்.

அதேபோல இந்த புனித ஈதிற்காக ஹிஸ்புத்தஹ்ரீரின் மத்திய ஊடக அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதில் செயலாற்றும் அனைவருடைய வாழ்த்துக்களையும் ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும், சிறந்த அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தா அவர்களுக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பரிமாறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்; இந்த தருணத்தை அல்லாஹ் நோன்பாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியானதாகவும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான ஒரு அறிகுறியாகவும், மற்றும் மற்ற மனிதர்கள் அனைவருக்கும் அப்பாற்பட்டு இவர்கள் ஒரே உம்மத்தை சார்ந்தவர்கள் என்று இவர்களுக்கு ஞாபமூட்டும் விதமாகவும் அனுப்பியுள்ளான்.

அனைத்து இடங்களிலும் உள்ள முஸ்லிம்களே:

நான் அல்லாஹ்விடம் உங்களுடைய மற்றும் என்னுடைய நோன்பு மற்றும் கியாம்(இரவு தொழுகை), ருக்ஊக்களை மற்றும் சுஜூதுகளை மற்றும் அனைத்து நற்காரியங்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். அவரின் மூலம் பாதுகாப்பு பெற்று மற்றும் அவருக்கு பின்னால் நின்று போரிடக்கூடிய, மற்றும் அல்லாஹ்வின் வேதத்தை கொண்டும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் சுன்னத்தை கொண்டும் ஆட்சி புரியக்கூடியவராக இருக்கும் ஒரு நேர்மையான மற்றும் நீதியான கலீஃபாவின் முன்னிலையில் இந்த முஸ்லிம் உம்மத்தின் மீது மீள்வருகையை ஏற்படுத்துமாறு அவனிடம் நான் வேண்டுகிறேன், அது அல்லாஹ்விற்கு எளிதானதே.

ஈத் உல்-ஃபித்ர் என்பது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அ(z)ஜ்ஐ வ ஜல்லின் புறத்திலிருந்து வந்த கருணையாகும், மற்றும் ஈதுகள் அனைத்மிற்கும் ஈதானது எப்போதென்றால் அல்லாஹ்வின் வாக்குறுதி மற்றுமர ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் நற்செய்தி வெற்றியின் மூலமும் அதிகாரத்தின் மூலம் நிறைவேறி , மற்றும் அல்லாஹ்வின் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சிபுரியும் நபித்துவத்தின் வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதா அரசை கட்டமைக்கும் தினமாகும்.

இந்த மகிழ்ச்சி முழுமை பெற வேண்டும் என்றால், நாம் இந்த மனிதனால் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களையும், காஃபிர்களின் கைப்பாவைகளையும் மற்றும் அல்லாஹ், அவனுடைய தூதர் மற்றும் அவனுடைய நம்பிக்கையாளர்களின் துரோகிகளான காலனியாமிக்கவாதிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த மகிழ்ச்சி முழுமை பெற வேண்டும் என்றால், முஸ்லிம் உம்மத்தின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும்.

இந்த மகிழ்ச்சி முழுமை பெற வேண்டும் என்றால், இராணுவங்கள் தங்களது ஆதரவை (வெற்றி) இஸ்லாத்தின் வெற்றிக்காக உண்மையாக உழைத்து வருபவர்களிடம் தர வேண்டும்.

இந்த மகிழ்ச்சி முழுமை பெற வேண்டும் என்றால், அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கல்வி ஆகிய வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய வழிமுறையை மீண்டும் திரும்ப கொண்டு வர வேண்டும்.

இந்த மகிழ்ச்சி முழுமை பெற வேண்டும் என்றால், நபித்துவ வரிமுறையின் அடிப்படையிலான இரணரடாம் நேரிய கிலாஃபத்தான அந்த மாபெரும் இஸ்லாமிய கட்டமைப்பை நிறுவ வேண்டும்.

ஈதுகளுக்கெல்லாம் ஈதான அதை அடைவதற்காக உழைப்பதற்கும், அல்லாஹ்வின் சட்டங்களுக்கு அடிபணிவதை ஒரு முடிவாக உமது ஈதில் உறுதி எடுத்துக்கொள்ளவும், உண்மையாக உழைத்து வருபவர்களுடன் சேர்ந்து இந்த தீனுக்கு வெற்றியையும் அதிகாரத்தையும் கொண்டு வருவதற்காக உழைக்கவும் மற்றும் வெற்றிபெறும் நாளில் அல்லாஹ்வை புகழ்ந்து மற்றும் அவனிடம் மன்னிப்பு கேட்டு முழங்கும் வெற்றியாளர்களின், கீழ்பனிந்தவர்களின் முழக்கத்துடன் ஒன்று சேர்ந்து முழங்க உங்களை நான் அழைக்கிறேன்,

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வ லில்லாஹ் அல்ஹம்த்

அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்துலில்லாஹி கசீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா

லா இலாஹா இல்லல்லாஹ், வஹ்தஹு, சதக வஹ்தஹு, வ நஸ்ர் அப்து, வ அ(z)ஜ்ஜ ஜுன்துஹ், வ ஹ(z)ஜ்ஜம் அல் அஹ்(z)ஜாப் வஹ்தஹு

லா இலாஹ இல்லல்லாஹ்… வ லா ந’புத் இலா இயாஹ்… முக்லிசீன் லஹு அத்-தீன் வ லவ் கரிஹல் காஃபிரூன்

ஈத் முபாரக் மற்றும் அல்லாஹ் உமது மற்றும் எமது நற்காரியங்களை ஏற்றுக்கொள்வானாக

வஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

ஞாயிறு மாலை, ஷவ்வால் மாதத்தின் முதல் தாள், 1438 ஹிஜ்ரி, ஆங்கில ஆண்டு 25/6/2017

டாக்டர். ஒஸ்மான் பகாஷ்

இயக்குனர், மத்திய ஊடக அலுவலகம், ஹிஸ்புத்தஹ்ரீர்.

Comments are closed.