சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி

ஹிஜ்ரி 1438, 2017 ம் ஆங்கில ஆண்டின் புனிதமிகு ஈத் அல்-ஃபித்ரின் வருகையையொட்டி, ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி

புகழனைத்தும் ஏக அல்லாஹ் ஒருவனுக்கே மற்றும் அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவருடைய குடும்பத்தார் மற்றும் அவரது தோழர்களின் மீது பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்: முஸ்லிம் உம்மத்தின் மீதும், அவர்களை பற்றி அல்லாஹ் கண்ணியப்படுத்தி இவ்வாறு கூறுகிறான்,

ﻛُﻨْﺘُﻢْ ﺧَﻴْﺮَ ﺃُﻣَّﺔٍ ﺃُﺧْﺮِﺟَﺖْ ﻟِﻠﻨَّﺎﺱِ ﺗَﺄْﻣُﺮُﻭﻥَ ﺑِﺎﻟْﻤَﻌْﺮُﻭﻑِ ﻭَﺗَﻨْﻬَﻮْﻥَ ﻋَﻦِ ﺍﻟْﻤُﻨْﻜَﺮِ ﻭَﺗُﺆْﻣِﻨُﻮﻥَ ﺑِﺎﻟﻠَّﻪِ

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 3:110)

அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் சிபாரிசு கோராத, சிறந்த வார்த்தையை உச்சரித்து நேர்மையான காரியத்தை மேற்கோள்ளும் தூய்மையான இறை நம்பிக்கையுடைய இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு, இந்த குணங்களை கொண்டவர்களை பற்றி அல்லாஹ் புகழ்ந்து இவ்வாறு கூறுகிறான்:

ﻭَﻣَﻦْ ﺃَﺣْﺴَﻦُ ﻗَﻮْﻟًﺎ ﻣِﻤَّﻦْ ﺩَﻋَﺎ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻭَﻋَﻤِﻞَ
ﺻَﺎﻟِﺤًﺎ ﻭَﻗَﺎﻝَ ﺇِﻧَّﻨِﻲ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦ

“எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன்” என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?”
(அல்குர்ஆன் : 41:33)

சத்தியத்துடன் உண்மையுடன் வரும் இது கொண்டுள்ள நன்மையை நாடும் இந்த வலைப்பக்கத்தின் வாசகர்களுக்கு, அல்லாஹ் சிறந்தததை கொண்டு அருள்புரிவானாக…

இவர்கள் அனைவருக்கும், ஈத் அல்-ஃபிதரை முன்னிட்டு வாழ்த்துகிறேன் மற்றும் அவர்களுடைய நோன்பையும் இரவுத்தொழுகையும் ஏற்று இந்த புனித மாதத்தில் மீட்கப்பட்டவர்களில் சார்ந்தவர்களாக இவர்களை ஆக்கி அருள்புரிய அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன். இந்த ஈது முஸ்லிம்கள் மீது பொழியக்கூடிய அருளுக்கும் வளமைக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என அல்லாஹ் (சுபு)விடம் பிரார்த்திக்கிறேன் அதன்மூலம் வரக்கூடிய அதை கிலாஃபா ராஷிதா (நேர்வழி பெற்ற கிலாஃபத்)வின் கொடியான லா இலாஹா இல்லல்லாஹ்வின் கொடியின் கீழ் கொண்டாடலாம், மற்றும் அது அல்லாஹ்வுக்கு கடினமானதல்ல…

இறுதியாக உங்களிடம் சலாம் கூறி விடைபெறுகிறேன் மற்றும் உங்களுடைய ஆரோக்கியத்திற்காக துஆ செய்கிறேன், அல்லாஹ் உங்களுடைய நற்காரியங்களை ஏற்றுக்கொள்வானாக மற்றும் தீங்கிலிருந்தும் மற்றும் அனைத்து விதமான கேடுகளிலிருந்து உங்களை பாதுகாப்பானாக.

ﻓَﺎﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮٌ ﺣَﺎﻓِﻈًﺎ ﻭَﻫُﻮَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ

“…பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்” என்று கூறிவிட்டார்.
(அல்குர்ஆன் : 12:64)

ஞாயிறு மாலை, ஷவ்வால் மாதத்தின் முதல் தாள், 1438 ஹிஜ்ரி, ஆங்கில ஆண்டு 25/6/2017
உங்களுடைய சகோதரன்,
அதா பின் கலீல் அபூ அல்-ரஷ்தாஹ்

Comments are closed.