சமீப பதிவுகள்

ஆய்வுகள்

நம்பிக்கையாளர்களாகிய நமது வாழ்வில் சூரா அல்-ஃபாத்திஹா எங்ஙனம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்?

 Surah-fatiha

தோற்றுவாய் என பெயரிடப்பட்டுள்ள ஸூரா அல்- ஃபாத்திஹா, உம்முல்- கிதாப் (நூல்களுக்கெள்ளாம் தாய்) என அறியப்படுகிறது ஏனெனில் அது முழு குர்’ஆனுடைய அர்த்தத்தையும் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை கருத்துகள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கியதாகவும் கொண்டுள்ளது. அபூ ஜ’ஃபர், முஹம்மது பின் ஜரீர், அத்-தபரீ ஆகியோரின் பதிவில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் அல்- ஃபாத்திஹாவை பற்றி இறைதூதர் ﷺ கூறியதாக கூறினார்கள்,

« ﻫِﻲَ ﺃُﻡُّ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻭَﻫِﻲَ ﻓَﺎﺗِﺤَﺔُ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﻫِﻲَ ﺍﻟﺴَّﺒْﻊُ ﺍﻟْﻤَﺜَﺎﻧِﻲ

“இது குர்ஆனின் தாய்,புத்தகத்தின் தோற்றுவாய் (குர்ஆனின் தோற்றுவாய்) மற்றும் அடுத்தடுத்து ஓதப்படும் ஏழு (வசனங்கள்) ஆகும்.”

இப்னு ஜரீர் கூறுகிறார்கள்,

“பல குறிப்பிட்ட பகுதிகளை கொண்ட ஒவ்வொரு விரிவான விஷயத்தையும் அரபியர்கள் உம்மு என்று அழைக்கின்றனர்.” இறைத்தூதர் ﷺ அவர்கள் விவரிக்கிறார்கள் ஸூரா அல்- ஃபாத்திஹா திருகுர்’ஆனிலே உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஸூராவாகும். சஹீஹுல் முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது 1472. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﺴَﻦُ ﺑْﻦُ ﺍﻟﺮَّﺑِﻴﻊِ، ﻭَﺃَﺣْﻤَﺪُ ﺑْﻦُ ﺟَﻮَّﺍﺱٍ ﺍﻟْﺤَﻨَﻔِﻲُّ، ﻗَﺎﻻَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺍﻷَﺣْﻮَﺹِ، ﻋَﻦْ ﻋَﻤَّﺎﺭِ ﺑْﻦِ ﺭُﺯَﻳْﻖٍ، ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋِﻴﺴَﻰ، ﻋَﻦْ ﺳَﻌِﻴﺪِ ﺑْﻦِ ﺟُﺒَﻴْﺮٍ، ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ، ﻗَﺎﻝَ ﺑَﻴْﻨَﻤَﺎ ﺟِﺒْﺮِﻳﻞُ ﻗَﺎﻋِﺪٌ ﻋِﻨْﺪَ ﺍﻟﻨَّﺒِﻲِّ r ﺳَﻤِﻊَ ﻧَﻘِﻴﻀًﺎ ﻣِﻦْ ﻓَﻮْﻗِﻪِ ﻓَﺮَﻓَﻊَ ﺭَﺃْﺳَﻪُ ﻓَﻘَﺎﻝَ ﻫَﺬَﺍ ﺑَﺎﺏٌ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻓُﺘِﺢَ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻟَﻢْ ﻳُﻔْﺘَﺢْ ﻗَﻂُّ ﺇِﻻَّ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻓَﻨَﺰَﻝَ ﻣِﻨْﻪُ ﻣَﻠَﻚٌ ﻓَﻘَﺎﻝَ ﻫَﺬَﺍ ﻣَﻠَﻚٌ ﻧَﺰَﻝَ ﺇِﻟَﻰ ﺍﻷَﺭْﺽِ ﻟَﻢْ ﻳَﻨْﺰِﻝْ ﻗَﻂُّ ﺇِﻻَّ ﺍﻟْﻴَﻮْﻡَ ﻓَﺴَﻠَّﻢَ ﻭَﻗَﺎﻝَ ﺃَﺑْﺸِﺮْ ﺑِﻨُﻮﺭَﻳْﻦِ ﺃُﻭﺗِﻴﺘَﻬُﻤَﺎ ﻟَﻢْ ﻳُﺆْﺗَﻬُﻤَﺎ ﻧَﺒِﻲٌّ ﻗَﺒْﻠَﻚَ ﻓَﺎﺗِﺤَﺔُ ﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺧَﻮَﺍﺗِﻴﻢُ ﺳُﻮﺭَﺓِ ﺍﻟْﺒَﻘَﺮَﺓِ ﻟَﻦْ ﺗَﻘْﺮَﺃَ ﺑِﺤَﺮْﻑٍ ﻣِﻨْﻬُﻤَﺎ ﺇِﻻَّ ﺃُﻋْﻄِﻴﺘَﻪ

ُஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்.

எந்தவொரு ரக்’அத்திலும் சூரா அல்- ஃபாத்திஹா ஒதப்படாவிட்டால் ஸலாஹ் (தொழுகை) முழுமைப்பெறாது, எனவே ஒரு இறைநம்பிக்கையாளர் ஒவ்வொரு நாளும் இதை 17 முறை ஓதுகிறார்.

658. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அவ்விருவரும் கூறினர்:

« ﻣَﻦْ ﺻَﻠَّﻰ ﺻَﻼَﺓً ﻟَﻢْ ﻳَﻘْﺮَﺃْ ﻓِﻴﻬَﺎ ﺑِﺄُﻡِّ ﺍﻟْﻘُﺮْﺁﻥِ ﻓَﻬْﻰَ ﺧِﺪَﺍﺝٌ – ﺛَﻼَﺛًﺎ – ﻏَﻴْﺮُ ﺗَﻤَﺎﻡٍ »

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை

எனவே சூரா அல்- ஃபாத்திஹா இஸ்லாத்தில் உயர்ந்த நிலையை கொண்டுள்ளது இன்னும் பல பாக்கியங்களையும் முஸ்லிமின் இதயத்திலும் அவருடைய அன்றாட வாழ்வின் மையப்பகுதியாகவும் உள்ளது. ஆயினும், ஒவ்வொரு பிரார்த்தனைகளிலும் நாம் உச்சரிக்கும் இந்த அழகான வார்த்தைகள் நம்பிக்கையாளர்களாக தனிநபராகவும் ஒரு உம்மத்தாகவும் வாழும் நம் வாழ்வை எந்தவிதமான முறையில் வடிவைக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு பதிலளிக்க நாம், இந்த ஏழு குறுகிய வசனங்களில் உள்ள வார்த்தைகளின் பொருள், எடை மற்றும் வார்த்தைகளின் தாக்கங்களை உண்மையிலேயே புரிந்துணர வேண்டும்.

பஸ்மலாஹ் (பிஸ்மில்லாஹ்)விற்கு பிறகு, இந்த சூரா ﭐﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﭐﻟْﻌَـٰﻠَﻤِﻴﻦَ ” அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்.” ‘ அல்- ஹம்த்’ என்ற வார்த்தைக்கு அனைத்து புகழ் மற்றும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும் மற்றும் காணும் அருட்கொடைகள் மற்றும் அபிவிருத்திகளுக்கும் அல்லாஹ் سبحان وتعالى விற்கு மட்டுமே அனைத்து நன்றியும்’.

மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு, மற்றும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றி மற்றும் நாம் அடையும் சாதனை, நாம் கொண்டுள்ள அனைத்து திறமை மற்றும் ஆற்றல் இவையனைத்தும் அல்லாஹ் سبحان وتعىال விடமிருந்தே வருகிறது என்கிற மனநிலை ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் திண்ணமாக உருவாக வேண்டும். அல்லாஹ் سبحان وتعالى தன்திருமறையில் கூறுகிறான்,

 

وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ لَـهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ وَلَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏

“மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.”(அல்குர்ஆன் :அல் கஸஸ்:70)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்,

« ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﻚَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻛُﻠُّﻪُ، ﻭَﻟَﻚَ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻛُﻠُّﻪُ، ﻭَﺑِﻴَﺪِﻙَ ﺍﻟْﺨَﻴْﺮُ ﻛُﻠُّﻪُ، ﻭَﺇِﻟَﻴْﻚَ ﻳُﺮْﺟَﻊُ ﺍﻟْﺄَﻣْﺮُ ﻛُﻠُّﻪُ »

“யா அல்லாஹ்! அனைத்து புகழும் உனக்குரியது, எல்லா அதிகாரமும் உனக்கே சொந்தமானது, அனைத்து நன்மைகளும் உன் கையிலே உள்ளது, எல்லா விவகாரங்களும் உனக்கே உரியது.”

அபூ ஜாஃபர் பின் ஜரீர் கூறுகிறார்கள், ” ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠَّﻪِ (அல்- ஹம்து லில்லாஹ்) (புகழ் மற்றும் நன்றி அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே) வின் அர்த்தமானது: நன்றி அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே, அவனை தவிர்த்து வேறு எந்தவொரு பொருளும் அல்லது அவனுடைய எந்தவொரு படைப்பும் வணங்க தகுந்ததல்ல. இந்த நன்றிகள் அனைத்தும் அல்லாஹ்வின் அளவற்ற அருட்கொடைள் மற்றும் வல்லமைகளுக்கு உரியது, அதன் அளவை அவன் மட்டுமே அறிவான். அல்லாஹ்வின் அருட்கொடைகளில் அவனுடைய படைப்புகள் அவனை வணங்குவதற்கு உதவி புரியும் கருவிகளை உருவாக்குவது, அவற்றை கொண்டு அவனுடைய கட்டளைகளை நிறைவேற்ற உதவும் உடற்கூறுகள், இந்த வாழ்க்கையில் அவன் அவர்களுக்கு வழங்கும் வாழ்வாதரங்கள், எந்த விஷயமும் அல்லது எந்த நபரும் கட்டாயப்படுத்தாத நிலையில் அவன் அவர்களுக்கு வழங்கும் சுகமான வாழ்க்கை. இன்னும் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற வழிமுறைகளை பற்றி எச்சரிக்கை செய்கிறான் மற்றும் நித்தியமான இன்பத்தின் தங்குமிடத்தில் நித்தியமான வாழ்க்கையை அடையக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அல்லாஹ் அவனது படைப்புகளுக்கு எச்சரிக்கிறான். தொடக்கத்திலிருந்து முடிவு வரையிலான இவ்வனைத்து வகையான நன்மைகளுக்கான நன்றியும் பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகும்.”

இவ்விஷயத்தை குறித்து நன்றியுடன் பாராட்ட ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠَّﻪِ என்கிற வார்த்தைகள் கொண்டு ஓதும்போது ஏற்படும் விளைவானது அல்லாஹ்விற்கு ஒரு ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கும் மன உணர்ச்சியை தருகிறது மற்றும் ஒருவரால் சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கான நமது இதயங்களில் அவன் மீதான நன்றியுணர்வுடன் கூடிய அதிகப்படியான மரியாதையை ஏற்படுத்துகிறது. அது நாம் அனுபவிக்கும் செல்வங்கள் மற்றும் இன்பமாக இருந்தாலும், நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளாக இருந்தாலும், அல்லது நமது ஆரோக்கியம், நமது குடும்பம், நமது இல்லம், அல்லது நமக்கு அருளப்பட்ட ஒவ்வொரு பிடி உணவாக இருந்ததாலும், மற்றும் மிக முக்கியமாக நமக்கு பாக்கியமாக்கப்பட்ட தீனாக இருந்தாலும் – இந்த உணர்வானது நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு இழப்பு அல்லது சிரமம் அல்லது வேதனைதரும் தருணம் ஆகியவற்றை நமது ரப்பு நம் மீது வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு கடன்பட்டுள்ளதை ஒப்பிட்டு பார்க்கையில் மிக சொர்ப்பமானது. ﺍﻟْﺤَﻤْﺪ ﻟﻠَّﻪُِ எனும் வார்த்தைகள் குறித்து சிந்தித்து பார்க்கும் போது நாம் நமது வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள், சோதனைகள், அல்லது ஏமாற்றங்கள் போன்ற இந்த நிகழ்வுகளின் போது பொறுமை காத்ததின் காரணத்தால் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய முடியும் மற்றும் இதன்மூலம் பாவமன்னிப்பையும் நற்கூலிகளையும் பெறுவதற்கான கதவை அல்லாஹ் திறந்து விடுகிறான் என்பதை உணரும் போது நன்றி செலுத்தும் எண்ணத்தையும் நம்மில் உருவாக்க வேண்டும்.

மாறாக அது அமல்களை நிறைவேற்ற மூட்டுகளில் மூலம் வெளிப்பட வேண்டும் மற்றும் அவனது سبحان وتعالى வின் சட்டங்கள் அனைத்திற்கும் எவ்விதமான வேறுபாடு இல்லாமல் கீழ்படிந்து கட்டுப்படுவதிலும் அதேசமயம் எப்போதும் அவனுடைய திருப்பொறுத்ததை பெறுவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻫِﺸَﺎﻡٍ ﺍﻟﺮِّﻓَﺎﻋِﻲُّ، ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻳَﺰِﻳﺪَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦُ ﻳَﻤَﺎﻥٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﻷَﻋْﻤَﺶُ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺻَﺎﻟِﺢٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ r ﻳُﺼَﻠِّﻲ ﺣَﺘَّﻰ ﺗَﻮَﺭَّﻣَﺖْ ﻗَﺪَﻣَﺎﻩُ ﻓَﻘِﻴﻞَ ﻟَﻪُ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﻏَﻔَﺮَ ﻟَﻚَ ﻣَﺎ ﺗَﻘَﺪَّﻡَ ﻣِﻦْ ﺫَﻧْﺒِﻚَ ﻭَﻣَﺎ ﺗَﺄَﺧَّﺮَ . ﻗَﺎﻝَ : ‏« ﺃَﻓَﻼَ ﺃَﻛُﻮﻥُ ﻋَﺒْﺪًﺍ ﺷَﻜُﻮﺭًﺍ »
4836. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் ‘தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?)’ என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்கான தூண்கள் என்று மாபெரும் அறிஞரான இப்னு அல் கய்யும் கூறுகிறார்கள்:
அல்லாஹ்விடத்தில் ஒரு நம்பிக்கையாளரின் அடிபணிதல் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வது அவனது ஆதரவை ஒப்புக் கொள்வது அவனது அருட்கொடைகளுக்காக அவனை புகழ்வது அல்லாஹ்விற்கு கோபம் ஏற்படுத்தும் விதத்தில் அவனது அருட்கொடைகளை பயன்படுத்துவதை விட்டு தவிர்ந்திருப்பது. அல்லாஹ் سبحان وتعالى வின் மீது நேர்மையான மற்றும் உண்மையான நன்றியுணர்வுடன் இருப்பது ஆகவே அவனது கட்டளைகள் மற்றும் வரையறைகளை நேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடாது மாறாக அவனுடைய கட்டளைகள் மற்றும் வரம்புகளுக்கு கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்வது மற்றும் அவனுடைய அனைத்து விதிமுறைகளையும் கடமைகளையும் ஏற்று செயல்படுத்தவதாகும்.

இஸ்லாத்தின் அத்ஹபை (ஒழுக்கங்கள்) ஏற்றுக்கொண்டு அதேசமயம் நாம் வாழும் சமூகங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக கருதி இஸ்லாத்தின் ஹுதூதை (சட்டப்பூர்வ தண்டனைகள்)அல்லது பலதார திருமணம், பரம்பரை சொத்து, சமய எதிர்ப்பு, ஜிஹாத் அல்லது குடும்பம் சார்ந்த கடமைகள் மற்றும் நமது பொறுப்புகளை நிராகரிப்பது என்பது கூடாது. மற்றும் ஜகாத்தையும் ஹஜ்ஜையும் ஏற்றுக்கொண்டு நமது ரப்பு (சுபு) நமக்கு கடமையாக்கிய முறையில் அரசியல், பொருளாதார, நீதித்துறை மற்றும் சமூக போன்ற அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்ற நபித்துவத்தின் வழிமுறையிலான கிலாஃபத்தை நிர்மானிக்கும் நமது கடமையை நிராகரிக்கக்கூடாது.

சூரா அல் ஃபாத்திஹாவின் மற்ற சொற்கள் மற்றும் வசனங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து அல்லாஹ்விற்கு முழுமையாக அடிபணியும் இந்த கருத்தாக்கத்தையும் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். உதாரணமாக, الحمدلله என்று அல்லாஹ்வின் பெயரை உச்சரிக்கும் போது, நாம் நம்மை படைத்தவனின் பண்புகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟَّﺬِﻱ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَ ﻋَﺎﻟِﻢُ ﺍﻟْﻐَﻴْﺐِ ﻭَﺍﻟﺸَّﻬَﺎﺩَﺓِ ﻫُﻮَ ﺍﻟﺮَّﺣْﻤَﻦُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ * ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟَّﺬِﻱ ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﻫُﻮَ ﺍﻟْﻤَﻠِﻚُ ﺍﻟْﻘُﺪُّﻭﺱُ ﺍﻟﺴَّﻠَﺎﻡُ ﺍﻟْﻤُﺆْﻣِﻦُ ﺍﻟْﻤُﻬَﻴْﻤِﻦُ ﺍﻟْﻌَﺰِﻳﺰُ ﺍﻟْﺠَﺒَّﺎﺭُ ﺍﻟْﻤُﺘَﻜَﺒِّﺮُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻤَّﺎ ﻳُﺸْﺮِﻛُﻮﻥَ * ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﺨَﺎﻟِﻖُ ﺍﻟْﺒَﺎﺭِﺉُ ﺍﻟْﻤُﺼَﻮِّﺭُ ﻟَﻪُ ﺍﻟْﺄَﺳْﻤَﺎﺀ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻳُﺴَﺒِّﺢُ ﻟَﻪُ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻫُﻮَ ﺍﻟْﻌَﺰِﻳﺰُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
“அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.”

(அல்குர்ஆன் : அல் ஹஷ்ர் :22, 23, 24)

மேலும், رب ٱلعلمين (உலகங்களின் இறைவன்) என்ற வார்த்தையில் ‘அர்- ரப்’ என்ற வார்த்தையின் மொழியியல் ரீதியிலான அர்த்தமானது எஜமானன் அல்லது வழிநடத்தும் அதிகாரத்தை உடையவன் மற்றும் அவனது சொத்தின் மீது முழு அதிகாரம் உடைய உரிமையாளர் என்று பொருள்படும்; ‘அல்-ஆலமீன்’ என்பது அல்லாஹ்வை தவிர யாவற்றையும் உள்ளடக்கியது என்று பொருள்படும் ‘ஆலம்’ என்பதன் பன்மையாகும் என்பது – அதாவது வானங்கள் மற்றும் பூமி, நிலம் மற்றும் கடல் ஆகியவற்றில் உள்ள பல்வேறு படைப்புகள் மற்றும் தலைமுறை தலைமுறையாக படைக்கப்படுகின்ற படைப்புகளாகும். “அனைத்து வகையான படைப்புகளும் ‘ஆலம்” என அறிஞர் கத்தாதா رب ٱلعلمين, பற்றி கூறினார்கள், “இந்த வாழ்விலும் மறுவுலகிலும் அல்லாஹ் படைத்த அனைத்தையும் உள்ளடக்கியது.” என அ(Z)ஜ்- சஜ்ஜாஜும் கூறினார்கள். மேலும் இது பற்றி அல்-குர்துபி “ஈருலகிலும் அல்லாஹ் படைத்த அனைத்தையும் உள்ளடக்கியது எனும் இந்த அர்த்தம் தான் சரியானது” என விளக்கியுள்ளார்.

மேலும், ملك يوم الدين என்பதில் உள்ள ‘அல்-மாலிக்’ என்பது எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்குமான உண்மையான உரிமையாளர், அவனுக்கு கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்லது சமமானவர்கள் யாருமற்றவன் மற்றும் அவர் விரும்பும் விதத்தில் விவகாரங்களை செயல்படுத்துவதற்கும், நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் உரிமையுடவன்.

நம்பிக்கையாளராக நாம் சூரா ஃபாதிஹாவை ஓதும்போது இவையனைத்தும் நம்மை அனைத்தின் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் முழுமையான இறையாண்மை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் – அவனுக்கு மட்டுமே கட்டளையிடுவதற்கும் தடுப்பதற்குமான உரிமையும் முழுமையான ஆற்றலும் அவனுக்கு மட்டுமே உண்டு; சட்டமியற்றவும் மற்றும் மனிதகுலத்திற்கு சிறந்ததாக விளங்கும் வகையில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என வரையறுப்பதற்கான உரிமையை அவன் பெற்றுள்ளான் என்று. இந்த விஷயத்தை அங்கீகரித்து உண்மையிலேயே நன்றியுணர்வுடன் நினைவு கூறுவதென்பது முஸ்லிம்களாகிய நாம் மனிதனை அல்லது மக்களை இறையாண்மை உடையவர்களாக ஆக்கும் எந்தவொரு சித்தாந்தம் அல்லது செயலாக்க அமைப்பையும் நிராகரிக்க வேண்டும், ஏனெனில் இந்த நிலையானது மனிதனை அல்லாஹ்வுக்கு போட்டியாகவும் கூட்டாளியாகவும் ஆக்குகிறது.

அதேபோல் ஆட்சி அல்லாஹ் سبحان وتعالى வுக்கு மட்டுமே உரியதென்றும் அவனால் سبحان وتعالى அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஆட்சியமைப்பு என்பது அவனது சட்டங்களை நடைமுறைபடுத்தும் நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தின் செயலாக்க அமைப்பு மட்டுமே என்பதனை சந்தேகத்திற்கு நிழலில்லாமல் ஒப்புக்கொள்வதற்கு அது நம்மை இட்டுச்செல்ல வேண்டும்.

இன்றைய பிரச்சனை என்னவென்றால், அனேக முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களே தவிர, அர் ரப்பு மற்றும் அல்-மாலிகின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் உணரவில்லை அதனால் அவர்கள் தங்களது வாழ்வில் மனிதர்களுடைய சட்டங்களை பின்பற்றி அல்லது முன்னிறுத்தி இறையாண்மை மற்றும் அதிகாரத்தை கொள்வதற்கு பல தெய்வங்கள் இருப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளனர் – அது நண்பர்களாக, குடும்பத்தினராக, அவர்களுடைய சமுதாயம் அல்லது பாராளுமன்றங்கள் எதுவாகினும் – அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறாக அவனுடைய படைப்பை அவனுக்கு போட்டியாளராகவும் மற்றும் பங்குதாரராகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழுகையின் ஒவ்வொரு ரக’அத்திலும் அல்லாஹ் மட்டுமே இறையாண்மை உடையவன் என்றும் அவனுக்கே அதிகாரம் அனைத்தும் உடையது என்று அறிவித்துவிட்டு இவ்வாறு செய்வது என்பதனை நாம் எங்ஙனம் ஏற்றுக்கொள்வது. நாம் ‘ ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴنُ ‘ ‘உன்னை மட்டுமே வணங்குகிறோம் உன்னிடமே உதவியை தேடுகிறோம்’ என்று ஒவ்வொரு முறையும் சூரா அல்- ஃபாத்திஹா ஓதுகையில் கூறிய பிறகு எவ்வாறு நாம் இதை செய்யமுடியும்? ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ எனும் ஆயத்து “அவனை உண்மையில் வணங்குவதற்கும் மற்றும் நமது அனைத்து விவகாரங்களிலும் அவனது உதவியை கோருவதற்கான அல்லாஹ்வின் கட்டளைகளை உள்ளடக்கியுள்ளது” என்று கத்தாதா கூறுகிறார்கள்.

உண்மையில், நாம் சுஜூத் செய்பவரை மட்டும் வணங்குவதாக ஆகாது, மாறாக நாம் யாரிடமிருந்து சட்டத்தை எடுக்கின்றோமோ அல்லது நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று எவர் முடிவு செய்கிறாரோ அவரையும் நாம் வணங்குவதாக ஆகும். உதாரணமாக, அல்லாஹ் سبحان وتعالى கூறுகிறான்,

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهَُ‏

(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? (அல்குர்ஆன் : 45:23)

மேலும் அல்லாஹ் سبحان وتعالى கூறுகிறான்,

ﺍﺗَّﺨَﺬُﻭﺍْ ﺃَﺣْﺒَﺎﺭَﻫُﻢْ ﻭَﺭُﻫْﺒَﺎﻧَﻬُﻢْ ﺃَﺭْﺑَﺎﺑًﺎ ﻣِّﻦ ﺩُﻭﻥِ ﺍﻟﻠّﻪِ ﻭَﺍﻟْﻤَﺴِﻴﺢَ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ ﻭَﻣَﺎ ﺃُﻣِﺮُﻭﺍْ ﺇِﻻَّ ﻟِﻴَﻌْﺒُﺪُﻭﺍ ﺇِﻟَـﻬًﺎ ﻭَﺍﺣِﺪًﺍ ﻻَّ ﺇِﻟَـﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺳُﺒْﺤَﺎﻧَﻪُ ﻋَﻤَّﺎ ﻳُﺸْﺮِﻛُﻮﻥَ

“அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)

இவ்வசனம் இறங்கியதற்கு முன்பு, ‘உதய் பின் ஹாதிம் அவர்கள் கிருஸ்துவராக இருந்தார்கள் அவர்கள் நபி ﷺ அவர்களிடம் கூறினார்கள்” நாங்கள் அவர்களை வணங்கவில்லையே என்று (யூத, கிறித்தவ பாதிரிமார்கள்). ” நபி ﷺ பதிலளித்தார்கள்:

அவர்கள் (யூத கிறித்தவ பாதிரிமார்கள்) அல்லாஹ் அனுமதித்தவற்றை தடுத்ததன் காரணத்தால் நீங்கள் அதை தடுக்கவில்லையா; மற்றும் அல்லாஹ் தடுத்தவற்றை அவர்கள் ஆகுமாக்கியதன் காரணத்தால் நீங்கள் அதை ஆகுமாக்கவில்லையா?” ‘ஆமாம்’ என உதய் பதிலளித்தார்கள்.அதற்கு ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள், “இங்ஙனம் அவர்களை நீங்கள் வணங்கினீர்கள்.”

ஆகவே நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் நாம் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதும்போது நாம் உச்சரிக்கும் வார்த்தைக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதனை நிலைநிறுத்த நாம் நம்முடைய ரப்புடன்سبحان وتعالي கொண்டுள்ள உறவைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்க வேண்டும் – ‘அதாவது உண்மையில் நாம் அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கவில்லை என்று’. இது நாம் உச்சரித்த இந்த வசனங்களுக்கு தேவையான அர்-ரப், அல்- மலீக் மற்றும் புகழும் நன்றியும் எவனுக்கு உரித்தானதோ அவனுடைய அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்படிந்து நம்முடைய வாழ்க்கையை வடிவமைப்பதற்கு உதவ வேண்டும்.

ﻓَﻠِﻠَّﻪِ ﺍﻟْﺤَﻤْﺪُ ﺭَﺏِّ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺭَﺏِّ ﺍﻟْﺄَﺭْﺽِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ * ﻭَﻟَﻪُ ﺍﻟْﻜِﺒْﺮِﻳَﺎﺀ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻫُﻮَ ﺍﻟْﻌَﺰِﻳﺰُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ

ஆகவே வானங்களுக்கும் இறைவனான – பூமிக்கும் இறைவனான – அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன். (அல்குர்ஆன் : 45:36,37)

-நஸ்ஸிரீன் நவாஸ்,
இயக்குனர் மத்திய ஊடக அலுவலக மகளிர் பிரிவு, ஹிஸ்புத் தஹ்ரீர்.

Comments are closed.