சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கத்தார் நாட்டின் நெருக்கடியின் காரணங்களும் தற்போதிய நிலையும்

Qatar

05/06/2017 அன்று சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) ஆகிய நாடுகள் கத்தாரின் தலைநகரமான தோஹாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கின்ற குற்றத்தை சாட்டி கத்தாருடன் அரசியல் மற்றும் தூதரக உறவுகளை துண்டித்தனர். மேலும் கத்தாருடன் விமான, கடல், மற்றும் நில போக்குவரத்தை இடைநிறுத்துவதாக கூறி கத்தாரி குடிமக்களை இரண்டு வாரங்களுக்குள் கத்தாருக்கு திரும்ப வேண்டும் என அறிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இந்த செயலை அங்கிகரித்து அதை ஒத்து கொண்டார். அவரது ட்விட்டர் பக்கத்தில் “சவுதி அரேபியா மற்றும் 50 நாடுகளுடன் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, எல்லோரும் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்” என்று கூறினார்.

கருத்து:

உலக வல்லரசான அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கத்தாரை தனிப்படுத்தப்பட்ட நிலையில் தள்ளியதற்கு அப்படி என்னதான் கத்தார் நாடு செயத்து என நாம் புரிந்துக்கொள்வதற்கு பின்வரும் சில நிகழ்வுகளை பார்க்கவேண்டும்!!!

கடந்த சில வருடங்களாக அமெரிக்கவின் திட்டங்களை நாசம் ஆக்கும் விதத்தில் கத்தாரின் செயல்கள் இருந்தன. அமெரிக்கவின் திட்டங்களை தோல்வி அடைய செய்தது மற்றும் தன் பெரும் எரிவாயு செல்வத்தை பயன்படுத்தி பிற நாடுகளில் இருந்த போராளிகளையும், குழுக்களையும் ஒழுங்கமைக்க நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கியது. கத்தார் தன் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்காமல் மத்தியக்கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பிரிட்டனின் அரசியல் திட்டங்களை அமல்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருந்தது, இதை பல்வேறு கண்ணோட்டங்களில் காணலாம்:

சூடானில் கத்தாரின் பங்கு:

சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM/A) என்கிற கிளர்ச்சி குழுவிற்கும் சூடான் அரசாங்கத்திற்கும் இடையே நடந்து கொண்டிருந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர 2005 ஆம் ஆண்டில் “நைவஷா சமாதான உடன்படிக்கையை” அமெரிக்கா கையகப்படுத்தியது.

இந்த உடன்படிக்கையின் மூலம் சூடானின் தெற்கு பகுதியை தென் சூடானாக பிரித்து ஒரு புதிய சுதந்திரமான நாட்டை உருவாக்கி சுயாட்சி கொண்டு வர அமெரிக்க பார்த்தது, போரின் போது சூடானிய அரசாங்கத்தை ஒரு சமாதான தீர்வுக்கு கொண்டுவர தென் சூடானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவ போராளிகளுக்கு ஆயுதங்கள் மூலம் அமெரிக்கா தீவிரமாக உதவியது. இதற்கு எதிராக பிரிட்டனும் பிரான்சும் சாட்(Chad) நாட்டின் மூலம் மேற்கு சூடானில் ஒரு பகுதியான டார்ஃபுரில்(Darfur) கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி டார்ஃபுரை ஒரு பிரச்சினையாக உருவாக்கி வெற்றிகரமாக அமெரிக்காவின் திட்டங்களை சிக்கலாக்கின.

சூடானின் அரசாங்கத்திற்கும் பல்வேறு டார்ஃபுர்(Darfur) கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக கத்தார் செயல்பட்டது. ஆகவே, அமெரிக்கா சூடானில் போட்ட திட்டத்தை சிக்கலாக்குவதற்கு டார்ஃபுரை(Darfur) பயன்படுத்திய பிரிட்டன் பிரான்சின் திட்டத்தின் ஒரு பகுதியாக கத்தார் இருந்தது.

இவை அனைத்தும் தோல்வி அடைந்து தெற்கு சூடான் சரிவு விளிம்பில் இருந்தும் இன்று ஒரு சுதந்திர நாடாக செயல்பட்டு வருகிறது.

லிப்யாவில் கத்தாரின் பங்கு:

2011 ல் கடாஃபி மற்றும் அவரது ஆட்சியை கவிழ்க்க பல்வேறு பிரிவினரையும் போராளிகளையும் பிரிட்டன் ஆதரித்தது. கடாஃபியின் வீழ்ச்சிக்கு பின், பிரிட்டனும் ஃபிரான்சும் திரிப்போலியில் ஃபெப்ரவரி 2011-யில் தேசிய இடைக்கால கவுன்சில் (National Transitional Council – NTC) என்கிற முன்னாள் கடாஃபி ஆட்சியின் முக்கியமான நபர்களை கொண்ட ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவி பிறகு ஜூலை 2012-யில் பொது தேசிய காங்கிரஸ் (General National Congress – GNC) என்ற ஒரு நிரந்தர அரசாங்கத்தை நிறுவியது.

பிரிட்டனின் உத்தரவு படி இந்த கிளர்ச்சிகரமான அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முதல் அரபு நாடாக கத்தார் செயல்பட்டு லிப்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க லிபிய எண்ணெயை கிளர்ச்சியாளர்களின் சார்பாக விற்று அவர்களுக்கு எரிவாயு மற்றும் டீசல் மூலம் மில்லியன் டாலர்கள் வழங்கியது.

கத்தாரின் செய்தி ஒளிபரப்பாளரான அல் ஜசீரா (Al Jazeera), அரபு உலகின் மற்ற புரட்சிகர இயக்கங்களைக் காட்டிலும் லிபிய எழுச்சியாளர்களின் போராட்டத்தை அதிக விரிவாகவும் ஆழமாகவும் காட்டினர்.

கத்தாரின் போக்குவரத்து விமானம் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகள் மற்றும் பெல்ஜிய-தயாரித்த FN தாக்குதல் துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களுடன் வழங்கியது, கத்தாரின் சிறப்பு படைகள் திரிப்போலியில் லிபிய கிளர்ச்சியாளர்களுக்கும், “லிபியா விடியல்” (Libya dawn group) என்ற குழுவிற்கும் அடிப்படை இராணுவ பயிற்சி, ஆயுதம், மற்றும் நிதியளித்தது. இதற்கு சமமாக அமெரிக்காவும் லிப்யாவில் தன் ஆதிகத்தை செலுத்த “டொப்ருக் அரசாங்கத்தை” (Tobruk government) ஜனநாயகத்தின் மூலமாக உருவாக்கியிருந்தது.

ஜூலை 2014 தேர்தலில் பிரட்டனின் GNC தோல்வியடைந்து டொப்ருக் அரசாங்க (Tobruk government) வெற்றி பெற்றது, பல வாரங்களுக்கு பின் “லிபியா விடியல்” (Libya dawn group) லிபயாவின் தலைநகரமான திரிப்போலியை கைப்பற்றி. அமெரிக்காவின் “டொப்ருக் அரசாங்கத்தை” (Tobruk government) லிப்யாவை விட்டு வெளியேற்றியது. இதற்கு கத்தார் மிகப் பெரும்பங்க் காற்றியது

சிரியாவில் கத்தாரின் பங்கு:

சிரியா பிரச்சனையின் ஆரம்ப காலத்தில் பல குழுக்கள் இடையில் மோதல்கள் இருந்தன. இதில் எந்த குழுவிற்கு ஆதரவு தர வேண்டும் என்ற குழப்பம் அமெரிக்க பிரிட்டன் மத்தியில் இருந்தது. இந்த சமயத்தில் அமெரிக்கவால் நிறுவப்பட்ட தேசிய இடைக்கால சபை (National Transitional Council) என்ற குழுவை பிறிக்க தனக்கு விசுவாசமான ஒரு இடைநிலை குழுவை உருவாக்க பிரிட்டன் முயன்றது. இந்த குழு ‘சிரியாவின் நண்பர்கள்’ (Friends of Syria) என்ற குழுவாக அமைந்தது.

ஏப்ரல் 2012ல் பிரிட்டன் மற்றும் பிரான்சின் கீழ் சிரியாவில் இருந்த பல்வேறு குழுக்களையும் பிரிவுகளையும் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் (EU) சார்பாக நடந்த இந்த குழுவின் மாநாட்டில் கத்தார் மையமாக இருந்தது.

இந்த குழுவின் நோக்கம் தோல்வி அடைந்தாலும், பிரிட்டனின் நோக்கங்களுக்கு ஆதரவாக கத்தார் பங்கு தெளிவாக இருந்தது, இது அமெரிக்க விற்கும் தெளிவாக தெரிந்தது.

மேற்கண்ட பிரிட்டனின் அரசியல் திட்டங்களுக்கு கத்தார் ஆதரவாக இருந்ததை கண்ட அமெரிக்க நீண்டகாலமாக மகிழ்ச்சியடையவில்லை இதனால் தான் ட்ரம்ப் வெளிப்படையாக கத்தாரை தாக்கினார். இதை பின் தொடர்ந்து தான் அமெரிக்க ஜனாதிபதியாக தனது முதல் வெளிநாட்டு பயணத்தில் டிரம்ப் சவுதி சென்று மற்ற நாடுகளை சந்தித்தபின் சவுதியும், எகிப்தும் கத்தாருடன் எல்லா உறவுகளையும் துண்டித்தன.

இதை பற்றி நவம்பர் 2014ல், கத்தாருக்காக அமெரிக்க காங்கிரசுக்கு தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் “கத்தார்: பின்னணி மற்றும் அமெரிக்க உறவுகள்” (Qatar: Background and U.S. Relations) என்ற அறிக்கையில் காணலாம், அதில் “பிராந்திய விவகாரங்களுக்கு கத்தாரின் அணுகுமுறை பல திசைகளில் சமநிலைப்படுத்தும் செயலாக (multi-directional balancing act) இருக்கிறது. அண்மையில் உள்நாட்டின் மோதல்கள் மற்றும் அரசியல் பிரச்சனைகள் நிகழ்ந்த ஏமன், லெபனான், சூடான், லிபியா, எகிப்து, காசா, மற்றும் சில நாடுகளில் அமெரிக்காவிற்கு விரோதமாக உள்ள கட்சிகளுக்கு கத்தார் மத்தியஸ்தம் செய்துள்ளது.”

ஆகவே, பிரிட்டனின் செயல்களுக்கு கத்தார் கொடுத்த ஆதரவால் தான் தற்போதைய பதட்டத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அத்னான் கான்.

Comments are closed.