சமீப பதிவுகள்

ஆய்வுகள்

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே உள்ள நெருக்கடி

qatar-trump

கேள்வி:-
9/6/2017 அன்று வெள்ளை மாளிகையில் தனது ரொமேனிய நண்பருடன் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது (…….”பிராந்தியத்தில் உள்ள முக்கிய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டனர். அது நிதி, இராணுவம், மற்றும் தார்மிக ஆதரவாக இருந்தாலும் சரி. துரதிஷ்டவசமாக கத்தார் தேசம் வரலாறு ரீதியாக உயர்ந்த அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து வருகிறது. மேலும் அந்த மாநாட்டில், நாடுகள் ஒன்று சேர்ந்து கத்தாரின் செயலுக்கு, அதன் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை பற்றி என்னிடம் பேசினர்.அதில் நாங்கள் என்ன முடிவை எடுக்கலாம் என்று விவாதித்தோம்.கத்தார் மீது எளிதான போக்கை கையாளலாமா அல்லது இறுதியாக கடினமான ஒரு முடிவை எடுக்கலாமா என்று?நாம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும். நான் நம்முடைய வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் இராணுவ தளபதிகளுடன் சேர்ந்து கலந்தாலோசித்து ஒரு முடிவெடுத்தேன். கத்தாரை பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்த கட்டளை இடுவதற்காண நேரம் வந்துவிட்டது (அல்-யூம் — அஸ் சபீ 9/6/17)

ஆக, சவூதி அரேபியாவிற்கும் காத்தாருக்கும் இடையேயான நெருக்கடி டிரம்ப்பி்னால் ஏற்படுத்தப்பட்டதா? அது சரி என்றால், அமெரிக்காவின் மிக பெரிய இராணுவதளம் கதாரில் இருந்தும் ஏன் டிரம்ப் இப்படிபட்ட ஒரு முடிவை எடுத்தார்? மேலும் ஊடகங்கள் அனைத்தும் இந்த நெருக்கடிக்கான காரணமாக, கத்தார் தேசமானது ஈரான், ஹமாஸ், மற்றும் முஸ்லிம் சகோதரதுவ அமைப்புடன் வைத்துள்ள நிலைப்பாட்டை கூறுகிறது. ஆக இப்படிபட்ட ஒரு சூழலில் டிரம்ப்பின் அறிக்கையை எப்படி புரிந்து கொள்வது? மேலும் இந்த நெருக்கடி எதை எதிர்நோக்கி செல்கிறது?இது வளைகுடா குழுவிலிருந்து கத்தாரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு கொண்டு செல்லுமா?

ஜஸாகல்லாஹ்

பதில்:-

ஆம்,
முதலவதாக, கேள்வியில் குறிப்பிட்டது போன்று இந்த இருநாட்டிற்கான பிரச்சனையின் காரணம் அமேரிக்கா தான் அதாவது இந்த நெருக்கடியை உண்டாக்கியது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இதை விரிவாக பார்ப்பதற்கு முன்பு கேள்வியின் கடைசி பாகத்திலிருந்து பார்ப்போம்.

சிலர் ஊடகங்களில் கூறியது போன்று இந்த பிரச்சனையின் காரணமாக கத்தார் , முஸ்லிம் சகோதரத்துவம்(எகிப்து), ஹமாஸ், மற்றும் ஈரானுடன் வைத்துள்ள உறவை கூறுகிறார்கள்.இன்னும் சிலர் இது ஹமாத் குடும்பத்திற்கும் சயீத் குடும்பத்திற்கும் 1970 ல் UAE உருவாக்கப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனையின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். ஆகவே சவூதி தன் கூட்டாளியான UAEக்கு ஆதரவாக கத்தாருக்கு எதிராக செயல்படுகிறது. இன்னும் சில எழுத்தாளர்கள் இந்த பிரச்சனையின் காரணதிற்கு இஸ்ரேலை தொடர்புபடுத்துகின்றனர். உதாரணமாக ஜேக் நோவக் CNBC ல் கூறியதாவது ” மேலோட்டமாக பார்க்கும்போது இந்த பிரச்சனைக்கான காரணம் ஈரானாக தெரியலாம் ஆனால் சற்று ஆராய்ந்து பார்த்தால், சவூதி செய்த இந்த செயல் ,குறிப்பாக இந்த நேரத்தில் பார்க்கும்பொழுது இது இஸ்ரேலை தொடர்புடையதாக இருக்கிறது.”

ஆனால் நாம் ஆழமாக சிந்தித்து பார்த்தால் மேல் கூறிய எந்த காரணங்களும் சரியாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதில் எந்த விஷயமும் புதிதல்ல. அதாவது கத்தார் -ஈரானின் உறவுகள், கத்தார்-ஹமாஸ், மற்றும் கத்தார்-இஸ்ரேல் உறவுகளும் தற்போது புதிதாக உண்டானதல்ல. இவை அனைத்தும் பல ஆண்டுகளாக உள்ளவை. அதே போன்று சவூதிக்கும் இந்த நாடுகளுக்கும் உள்ள உறவையும் நாம் அறிவோம்.இது எதுவும் புதிதல்ல. எனவே இவை அனைத்தும் தற்போதைய சவூதி கத்தார் பிரச்சனைக்கு உண்மை காரணங்களாக இருக்க முடியாது.

இரண்டாவதாக,

1)கத்தார் மீதான நெருக்கடிகாண உண்மை காரணம் அமெரிக்காவும் டிரம்ப்பும் தான். இதை உண்மை படுத்த சில விஷயங்களை நாம் பார்ப்போம்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே கத்தார் பிரிட்டனின் கங்காணியாக செயல் பட்டு வருகிறது.அதே போன்று அல்-ஜசீரா ஊடகம் மூலமாக பிரிட்டன் அமெரிக்காவின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் அதை சீர்குலைக்கும் செயலிலும் கத்தார் பிரிட்டனுக்கு உதவுகிறது.மேலும் கத்தாரின் எண்ணெய் வளம் முலம் வரும் வருமானம்.இந்த இரண்டையும் வைத்து பலஸ்தீன்,எகிப்து, லிபியா, துணிசியா போன்ற நாடுகளில் உள்ள பல நடுத்தரமான இஸ்லாமிய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் கத்தாரின் தலைநகரான தோஹா வில் வைத்து திட்டம் தீட்டுதல், மேலும் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கங்காணிகளை நீக்குவதற்கான செயல்களிலும் கத்தார் பிரிட்டனுக்கு 1991 ல் இருந்தே உறுதுணையாக உள்ளது. அல் உபைத் இராணுவ தளம்,அமெரிக்காவின் போர் திரம்வாய்ந்த விமான தளம் கத்தாரில் உள்ளது. அது மூலமாகவே அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக்,சிரியா, ஏமன் போன்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சமயத்தில் தான் பிரிட்டன் கத்தாரை தனது கங்காணியாக்க முயற்சி மேற்கொண்டது.அதன் பிறகு அதில் வெற்றியும் கண்டது.

பின்பு கத்தார் பிரிட்டனின் கண்காணியாக அந்த பிராந்தியத்தில் செயல்பட்டது.இது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக இருந்தது.இதன் வெளிப்பாடாக தான் ஜார்ஜ் புஷ் அல்ஜஷீரா ஊடகத்தை குண்டு வைத்து அழிக்க யோசித்தார் (DW செய்தி 22/11/2005). Daily mirror பத்திரிக்கை Top secret என்ற தலைப்பில் பிரிட்டனின் பிரதமருக்கு ஒரு குறிப்பானையை வழங்கியது. அதாவது அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ் 2004ல் அல் ஜஸீரா ஊடகத்தின் தலைமையகத்தை குண்டு வைத்து அழிக்க திட்டம் போடுகிறது என்று வெளியிட்டது (DW 22/11/2005). பிறகு சல்மான் சவூதி மன்னராக ஆன பின்பு அமெரிக்கா சல்மானை கங்காணியாக பயன்படுத்தி பல காரியங்களை அமெரிக்கா நிறைவேற்றியது.மேலும் சவூதியை வைத்து அமெரிக்கா கத்தாரை அச்சுறுத்தும் வேளையில் ஈடுபட்டது.தற்போது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதயாக ஆன பின்பு இன்னும் கத்தார் மீதான நடவடிக்கை வீரியம் அடைந்துள்ளது.

2) 20-21/05/2017 அன்று டிரம்ப் ரியாதிற்கு வருகை அளித்த போது,55 நாட்டு தலைவர்கள் ஒன்று கூடி இருக்கும் வேளையில் சல்மானின் தலைமையில், கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கிறது என்று கூறுவதன் மூலம் கத்தார் உணர்ந்துகொண்டது, அதாவது அமெரிக்கா அந்த பிராந்தியத்தில் சவூதியை தலைமையாக காண்பித்து கத்தாரையும் அதன் எஜமானன் பிரிட்டனையும் அங்கு ஆதிக்கம் செலுத்த முடியாமல் செய்ய திட்டம் தீட்டுகிறது என்று உணர்துகொண்டது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் கத்தாரின் அமீர் தமீம் அல் தானி கூறியதாவது “அமெரிக்க ஜனாதிபதியின் சவூதி வருகை மூலம் கத்தாரை பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்துவது தவறானது. யாருக்கும் எங்களை தீவரவாதத்தோடு தொடர்பு படுத்த அதிகாரம் இல்லை.

மேலும் அவர் எகிப்து, UAE, மற்றும் பஹ்ரைனை அவர்கள் எடுத்துள்ள கத்தாருக்கு எதிரான நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.அமெரிக்க நிர்வாகத்தின் தற்போதைய எதிர்மறையான(கத்தார் மீதான) போக்குகள் இருக்கும் போதிலும், கத்தாருக்கும் அமெரிக்காவுக்கும் வலுவான உறவு உள்ளது.ஆனால் அமெரிக்காவின் நிலைமை இதே போன்று தொடர முடியாது ஏனெனில் டிரம்ப்பிர்கு எதிரான முறைகேடுகள் மற்றும் மீறல்கள் சம்பந்தமான நீதி விசாரனை இருப்பதால், மேலும் அல் உபைத் இராணுவ தளம் என்பது அண்டை நாட்டு லட்சியத்திலிருந்து கத்தாருக்கு பாதுகாப்பாகவே உள்ளது மேலும் இப்பிராஞ்சியத்தில் அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கை நிலைப்படுத்தி கொள்வதற்கான ஒரே வாய்ப்பாகும். கத்தாருக்கும் தீவிரவாதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. கத்தார், பாலஸ்தீன மக்களின் சட்ட பூர்வமான பிரதிநிதி, ஹமாஸ், மற்றும் இஸ்ரேல் இடையே சமாதானத்தை ஏற்படுத்தவே முயல்கிறது. கத்தார் அமெரிக்கா மற்றும் ஈரானுடனான உறவை வலுப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது. ஏனெனில் ஈரான் பிராந்தியத்தில் ஒரு முக்கிய நாடாக உள்ளது ஆகையால் இரானிடம் சுமூக போக்கை கையாள்வது தான் புத்திசாலித்தனம்.” கத்தார் அமீரின் இந்த பேச்சு, டொனால்ட் டிரம்ப் (அமெரிக்கா) தான் கத்தார் மீதான நெருக்கடிக்கு காரணம் என்பதை சுட்டி காட்டுகிறது. இவை அனைத்தும் டிரம்ப் முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்களுடன் உச்சி மாநாட்டில் கலந்து அங்கு தன்னுடைய தலைமையின் கீழ் அவர்களை செயல்படவைப்பதில் வெற்றிபெற்ற உடன் கத்தார் இந்த செய்தியை வெளியிட்டது. மேலும் அந்த உச்சி மாநாட்டில் டிரம்ப் கூறியதாவது , சில நாடுகள் கத்தாரை பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக குறிப்பிடன.இதனால் கத்தார் அமீரின் இந்த பேச்சு அமெரிக்காவுக்கு பதில் அளிக்கும் விதத்திலும், மேலும் டிரம்ப் அவர் மீது உள்ள முறைகேடுக்கெதிரான நீதி விசாரணையின் மூலம் அவர் பதவியிலிருந்துது விளக்கப்படுவார் என கத்தார் நம்புகிறது.

3) சவூதி அரேபியா 55 முஸ்லீம் நாடுகளின் தலைவர்களை கூட்டி மாநாடு நடத்தியது எதை சுட்டி காட்டுகின்றது என்றால் சவூதி, அமெருக்காவின் திட்டத்தை நடைமுறை படுத்துவதில் முனைபாக உள்ளதையும், மேலும் தன்னுடைய தலைமைத்துவத்தை அந்த பிராந்தியத்தில் நிலைநாட்வதற்கு முயற்சி செயகிறது.இவை எல்லாம் எதற்கு என்றால் அமெரிக்கா ஈரானின் அச்சுறுத்தலை போழி காரணமாக காட்டி அங்கு உள்ள எண்ணெய் வளத்தை தன் கீழ் வைப்பதற்கும்,மேலும் மற்ற நாடுகளை சவூதி தலைமையின்(அதாவது அமெரிக்காவின்)கீழ் கொண்டு வந்து பிரிட்டனின் செல்வாக்கு அழிப்பதற்கு தானே தவிர வேறு எதற்கும் கிடையாது.

இதனால் சவூதி தன் தலைமைக்கு எதிராக செ்யல்படும் நாடான கத்தாரை தனிமைப்படுத்தும் சந்தர்பத்திற்காக காத்துக்கொண்டிரிக்கிறது. எனவே தான் அமெரிக்கா,சவூதிக்கும் எதிரான கத்தாரின் செயதி அறிக்கையை (23/05/17) சவூதி கடுமையாக எதிர்த்தது. இதன் விழைவாக சவூதி தைரியத்துடன் கத்தாருடன் உள்ள உறவை துண்டிப்பதாக அறிவித்தது.எந்த அளவுக்கென்றால் 23/5/2017ற்கு பிறகு சற்று மேலே சென்று அதிர்ச்சியூட்டும் பல நடவடிக்கைகளை எடுத்தது, கத்தாருடைய தூதர்களை திரும்ப பெறுதல், கிட்டத்தட்ட கத்தார் மீது முற்றுகை இட்டது போலும், கத்தார் மக்களுக்கு வெறும் 48மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு.

இதை தொடர்ந்து எகிப்தும் கத்தாருடைய வர்த்தக விமானத்தை திருப்பி அனுப்பியது, இதே போன்று சவூதியை பின்பற்றி மற்ற நாடுகளும் கத்தார் மீது இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.கத்தார் இந்த நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளது, இதை அது எதிர்பார்க்கவில்லை.கத்தாரின் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அல் தானி 6/6/2017 அன்று BBC பேட்டியில் கூறும்பொழுது ” கத்தருக்கு எதிரான இந்த நடவடிக்கை அதிர்ச்சியலிக்கிறது, மேலும் மூன்று நாடுகள் சேர்ந்து கத்தாரையும் அதன் மக்களையும் முற்றுகை இடும் விதமான முயற்சி கத்தருக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து குடுகின்ற ஒரு தண்டனை போல் உள்ளது.”கத்தார் தனியாக அமெரிக்காவையையும் அதன் கண்காணிகளையும் எதிர்ப்பதற்கு தகுதி இல்லை ஆனால் இவை அனைத்தையும் அது செய்கிறது என்றால் அதற்கு பின்னால் ஒரு வல்லரசு இருந்து அதை இப்படி செய்ய சொல்கிறது, என்று தெளிவாக விளங்குகிறது.அது பிரிட்டனை தவிர வேற எந்த வல்லரசும் இல்லை. பிரிட்டன கத்தார் மீதான இந்த நடவடிக்கையை அதிர்ச்சியாக பார்க்கவில்லை , இதை அது எபொழுதோ எதிர்பார்த்தது தான்.ஆனால் கத்தார் இதை எதிர்பார்க்கவில்லை இதை ஒரு அதிர்ச்சியாகவே பார்க்கிறது.

4) ஆக கத்தார் மீதான இந்த நெருக்கடிக்கு காரணம் டிரம்ப் சவுதி மூலியமாக போட்ட புதிய திட்டம். அதாவது சவூதியை அரபு பிராந்தியத்தின் தலைமையாக ஆக்கி அமெரிக்காவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பிரிடனுடைய ஆதிக்கத்தை அங்கிருந்து எடுப்பதற்க்காக போடப்பட்ட திட்டம். ஏனென்றால் கத்தார் பிரிடனுடைய கண்காணியாக இருந்து செயல்பட்டு, அமெரிக்காவின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் செயல்படுவதால் தான் அமெரிக்கா இப்படி ஒரு செயலை செய்தது. 6/6/2017 அன்று ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி Reuter News Agency ல் குடுத்த அறிக்கையில் கூறும்பொழுது “கத்தாரின் செயல்கல் அதன் அண்டை நாடுககுக்கு மட்டும் பிரச்சனையாக இல்லை மாறாக அது அமெரிக்காவுக்கும் சேர்த்து தான்”….மேலும் வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிரந்தர பிழவு உண்டாவதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை”…… மேலும் கூறும்பொழுது “நாங்கள் சரியான திசையில் அவற்றை கொண்டு வர விரும்புகின்றோம்” “சவூதி மன்னர் மற்றும் 55 நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு மிக நல்லதாக அமைந்தது, அவர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பவர்களின் (கத்தாரை சுட்டி காட்டி) மீது கடும் நடவடிக்கை ஏடுக்கப்போவதாக கூறினார்.ஒருவேலை இது பயங்கரவாத அச்சுறுத்துலக்கு முற்றுப்புள்ளி வைபதின் துவக்கமாக அமையும்.”

09/06/2017 அன்று வந்த டிரம்ப்பின் அறிக்கை, சவூதி அரேபியாவிற்கு பின்னால் அமெரிக்கா உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது

5) கத்தார் மீதான இந்த நெருக்கடி எதை எதிர்நோக்கி செல்லும் என்பது பொருத்தவரை, கத்தார் அமெரிக்காவின் கைப்பாவைகளான சவூதி, எகிப்து மூலமாக வந்த நெருக்கடியினால் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரிடனுடைய கைப்பாவையாக இருக்கும் UAE,பஹ்ரைன் போன்ற நாடுகளும் பிரிட்டன் போட்டு கொடுத்த வழிமுறை படி கத்தாருக்கு நெருக்கடியை உண்டாகியுள்ளார். நாம் முந்தி (9/4/2017) அன்று கேட்கப்பட்ட கேள்வியின் பதிலில் கூறியது போன்று பிரிட்டன் தனது கங்காணிகளுக்கு பிரித்து கொடுக்கும் திட்டம் பார்ப்பதற்கு முரண்பாடாக தெரியலாம், ஆனால் கடைசியில் அது அனைத்தும் பிரிட்டனின் கொள்கையை நிறைவேற்றக்கூடியதாக அமையும்.

6) வளைகுடா குழுவிலிருந்து கத்தார் வெளியேறுவதற்கு இது வழிவகுக்குமா?.
கத்தார் வளைகுடா குழுவிலிருந்து வெளியேறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக (இருந்தாலும், நெருக்கடியை தீர்ப்பதற்கான சாத்தியக்கூறு தான் அதிகம் உள்ளது. ஏனெனில் அமெரிக்காவும் பிரிட்டனும் வெவேறு காரணங்களுக்காக கத்தார் வளைகுடா குழுவில் இருப்பதையே விரும்புகிறார்கள். அமெரிக்காவை பொறுத்தமட்டில் கத்தார் சவூதி தலைமையில் இருந்து அமெரிக்காவின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் , தோஹா வில் உள்ள தன்னுடைய இராணுவ தளத்திற்கு எந்த பிரேச்சனையும் பிரிட்டன் மூலியமாக கதாரிடமிறிந்து நேர்ந்திராமலும் இருப்பதற்கும் கத்தார் வளைகுடா குழுவில் இருப்பது அமெரிக்காவிற்கு அவசியமாக உள்ளது. பிரிட்டனுக்கு கத்தார் வளைகுடா குழுவில் இருந்த்தால் தான் அதை வைத்து தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியும்.ஆகையால் கத்தாருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான முறிவை தீர்வுகாண்பதற்குதான் அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே கத்தார் வகைகுடாகுழுவிலிருந்து வெளியேறுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது.

ஆனால் பின்வரும் காரணங்களுக்காக குறைந்தபட்சம் எதிர்வரும் காலங்களிலல் இது சாத்தியம் இல்லை.

அ) 9/6/2017 அன்று டிரம்ப் பேசியதை பார்க்கும்பொழுது, கத்தாருக்கு சமரசம் பேசுவதற்கு எந்த வாய்ப்பும் அமெரிக்கா வழங்கவில்லை என்று புரிகிறது. டிரம்ப் கூறும்பொழுது ” (…….”பிராந்தியத்தில் உள்ள முக்கிய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டனர். அது நிதி, இராணுவம், மற்றும் தார்மிக ஆதரவாக இருந்தாலும் சரி. துரதிஷ்டவசமாக கத்தார் தேசம் வரலாறு ரீதியாக உயர்ந்த அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து வருகிறது. மேலும் அந்த மாநாட்டில், நாடுகள் ஒன்று சேர்ந்து கத்தாரின் செயலுக்கு, அதன் மீது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை பற்றி என்னிடம் பேசினர்.அதில் நாங்கள் என்ன முடிவை எடுக்கலாம் என்று விவாதித்தோம்.கத்தார் மீது எளிதான போக்கை கையாளலாமா அல்லது இறுதியாக கடினமான ஒரு முடிவை எடுக்கலாமா என்று? நாம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும். நான் நம்முடைய வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் இராணுவ தளபதிகளுடன் சேர்ந்து கலந்தாலோசித்து ஒரு முடிவெடுத்தேன். கத்தாரை பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்த கட்டளை இடுவதற்காண நேரம் வந்துவிட்டது”)

மேலும் பிரிட்டனுடைய கொள்கையை கத்தாரானது நிறைவேற்றிவருகிறது. தற்போதைய சூழலில் பிரிட்டனும், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் சூழலில் அமெரிக்காவை பகிரங்கமாக எதிர்கொள்ளாமல் , பின்னால் இருந்து அமெரிக்காவின் திட்டத்தை அழிக்கும் வேலையை தான் பிரிட்டன் செய்கிறது.

ஆ) டிரம்ப் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, டிரம்ப் எதிர்பார்க்கும் நிதியை கத்தார் கொடுத்தால் டிரம்ப் சல்மானை கத்தாரிடம் சமரசம் செய்ய சொல்ல வாய்ப்பு உள்ளது. ஆக ஒன்று கத்தாரின் பணத்தின் மூலமாக அல்லது கத்தார் சவூதியிடம் சரணடைவதின் மூலமாகவே இதற்கு தீர்வு காண முடியும்.அதே போன்று பிரிட்டன் கத்தாரை வளைகுடா குழுவிலிருந்து வெளியேறவேண்டும் என்று நினைத்தால் அதை செய்யும் இல்லையென்றால் அதை குழுவில் இருக்க சொல்லும்.ஏனென்றால் கத்தார் அதன் கொள்கையை வரையரக்கவில்லை மாறாக பிரிட்டன் தான் வரையறுத்துகொடுக்கிறது.

7) முடிவாக, அமெரிக்காவின் கைப்பாவைகளான சவூதி, எகிப்து, மற்றும் பிற நாடுகளின் கத்தார் மீதான இந்த நடவடிக்கையின் மூலம் எந்த நல்லதையும் எதிர்பார்க்கமுடியது. இவர்கள் அனைவரும் முஸ்லீம் நாடுகளை ஆட்சி அதிகரத்திற்காக அமெரிக்காவிற்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர்.அதே போன்று பிரிட்டனின் சொல் படி இயங்கிக்கொண்டிருக்கும் கத்தாரின் மூழியமாகவும் எந்த நன்மையும் எதிர்பார்க்கமுடியது.

அது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இராணுவ தளத்தை அமைக்க இடம் கொடுத்து அதன் மூலம் சிரியா,ஈராக் முஸ்லிம்களை கொள்ள உதவி செய்தது. மேலும் யூத அரசிடம் சமாதான உடன்படிக்கை செய்ய முயற்சி செய்கிறது.அதே போன்று சிரியாவில் போராடிக்கொண்டிருக்கின்ற குழுக்களை தான் வைத்திருக்கும் பணத்தை வைத்து விலைக்கு வாங்கி அவர்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது.இவை அனைத்தும் பிரிட்டன் கத்தாருக்கு வரையறுத்து கொடுத்த கொள்கைகள்.

ஆக இந்த இரண்டு பிரிவுகளில் அதிக தீமை, குறைந்த தீமை என்ற கண்ணோட்டத்துடன் ஏதோ ஒன்றை சரிகாண்பது என்பது அறியாமையும், முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். முஸ்லீம் உம்மதுடைய விஷயம் குறைந்த தீமை, அதிக தீமை என்ற பார்வையில் பார்க்கப்படாமல், சரி தவறு என்ற கண்டோத்துடன் பார்க்கப்பட வேண்டும். இந்த முஸ்லீம் உம்மத் அல்லாஹ்விற்கு, அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்கும் துரோகம் செய்யும் ஆட்சியாளர்களை நிராகரிக்க வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அநியாய ஆட்சியை தகர்த்து எரிவதற்கு உழைப்பு செய்யும் நபர்களோடு இணைந்து உழைப்பு செய்து இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டவேண்டும்.நபி (ஸல்) வாக்களித்தது போன்று, முஸ்லிம்களுக்கு கண்ணியம் கிடைக்கும் வண்ணமும், காஃபிர் ஆகிறமிப்பாளர்களை தகர்த்து எரியக்கூடியவையாகவும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க வழங்கக்கூடியதாகவும், இஸ்லாத்தை நடைமுறை படுத்த கூடிய ஓரு கிலாஃபத் அரசு நிலைநாடப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் தன் காரியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துபவன்,ஆனால் பெரும்பாலானோர் அறியாமயில் உள்ளனர்.

Comments are closed.