சமீப பதிவுகள்

ஆய்வுகள்

பிலிபின்ஸ் நாட்டிலுள்ள மீண்டனவ்(Mindanao) பிராந்தியத்தில் வாழும் மோரோ(Moro) முஸ்லிம்களை குறிவைத்து அவர்கள் மீது ராணுவத்துறை ஆட்சியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டூட்ரேட்டே(Duterte)

Mindanao-1

பிலிபின்ஸ் நாட்டு அதிபர் ரொட்ரிகோ டூட்ரேட், அந்நாட்டின் மீண்டனவ் பிராந்தியத்தில் உள்ள மராவி நகரத்தின் மீது 23-5-2017 அன்று ராணுவத்துறை ஆட்சியை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பனது அன்னகரத்தை ஐஎஸ் கைப்பற்றியுள்ளது என்ற செய்திக்கு அடுத்த நாள் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரமாக உள்ளது மராவி. 200,000 மேல் மக்கள் அங்கு வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாக மோரோ முஸ்லிம்கள் அங்கு வசிக்கின்றனர்.
பிலிபின்ஸ் அதிபர் மராவி நகரத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள ராணுவத்துறை ஆட்சியால் அங்கு வாழும் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களின் பொருட்களையும் சொத்துக்களையும் சூறையாடுகின்றனர். மேலும் அவர்களை கடுமையாக தாக்கும் செயல்களில் ராணுவமும், மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் மிக கடுமையான துன்பத்திற்கு ஆளக்கப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் இந்த கொடூர செயலால் பலர் மரணத்தை தழுவியுள்ளனர் மேலும் அந்த நாடு பெரும் மனிதநேய சிக்கலை நோக்கி பயணிக்கிறது. பிலிபின்ஸ் அரசாங்கத்தின் அறிவிப்புபடி 330,000க்கும் மேலானோர் தங்கள் வீடுகளை துறந்து அலைகின்றனர். இவ்வாறு சென்ற மோரோ முஸ்லிம்கள் கடுமையான உணவு பிரிச்சனைகளை சந்தித்துவருகின்றனர். மேலும் 475 குடும்பங்கள் அரசாங்க கட்டிடங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர், 1000 குடும்பங்கள் வெளிநகரங்களில் வசிக்கும் தங்களது உறவினர்களை நோக்கி பயணமாகியுள்ளனர். ஈதுல் பித்ர் எதிர்நோக்கியுள்ள இந்த ரமலான் மாதத்தில் இந்த அனைத்து முஸ்லிம்களும் தங்களது உணவு தேவைக்கான உதவிகளை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.

தெற்கு பிலிபின்ஸில் உள்ள சுலு மற்றும் மீண்டனவ் பகுதிகளில் மோரோ முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். இந்த இடமானது சர்வதேச கப்பல்களின் பாதைகளாகவும், சர்வதேச வணிகத்தின் மையமாகவும், ராணுவ பலன்கள் நிறைந்ததாகவும் என பல முக்கிய அம்சங்கள் நிறைந்த இடமாக திகழ்கிறது. இத்தகைய அம்சங்கள் நிறைந்த இந்த பகுதியை தங்கள் வசப்படுத்த பலரும் முயல்கின்றனர். வழக்கம்போல் ஒரு நாட்டில் ஊடுருவ மேற்கத்திய நாடுகள் உபயோகிக்கும் பிரபல்யமான ஒரு வாசகம் அதாவது “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை” என்ற கோஷத்தை பயன்படுத்தியே இங்கும் தன்னுடைய சட்டபூர்வ ஆக்கிரமிப்பை பெரும் செயல்களில் இறங்கிவிட்டது.

இந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை நாம் புரிந்துகொள்வதற்கு, இரண்டு அம்சங்களில் நாம் சில ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலாவதாக: தெற்கு பில்பின்ஸில் முஸ்லிம்களின் கடந்த கால வரலாறு.

இரண்டாவதாக: சமீபகாலமாக இஸ்லாத்தை சில தீவிரவாத அமைப்புகளுடன் இணைக்க முயற்சிப்பது.

முதலாவதாக: தெற்கு பில்பின்ஸில் முஸ்லிம்களின் கடந்த கால வரலாறு:

தெற்கு பில்பின்ஸில் நடைபெற்றுவரும் இந்த பிரச்சனை 13ஆம் நூற்றாண்டுக்கு பின்னிருந்தே ஆரம்பமானது. அந்நாடு சுய முடியரசு அடிப்படையில் ஆட்சிசெயப்பட்டுவந்தது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் வணிகர்கள் தெற்கு பிலிபின்ஸை அடைந்தனர். அன்றிலிருந்து இஸ்லாம் அங்கு விரிவடைய தொடங்கியது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டனவ் நகரம் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதேபோல் சுலு நகரமும் தெற்கு பிலிபின்ஸை ஒட்டியே அமைத்துள்ள காரணத்தால் வணிகத்தும் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கிய பகுதியாக அமைத்தது இதனால் இந்நகரங்கள் பெரும் கவனத்தை ஈர்க்கும் இடமாக மாறியது. இந்த சுலு நகரமும் பின்பு இஸ்லாத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

1565 ஆம் ஆண்டு ஸ்பெயின் காலனியாதிக்கவாதிகள் மீண்டனவ் மற்றும் சுலு நகரங்களில் புகுந்தனர். 350 ஆண்டுகளுக்கும் மேல் இஸ்லாமிய அதிகாரத்திற்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். இரண்டாம் உலக போரில் ஸ்பெயின் தோல்வியடைந்ததை தொடர்ந்து பிலிபின்ஸ் நாடு அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை காட்டிவந்தனர் இறுதியாக அந்நாட்டு முஸ்லிம்களின் சுல்தான் அமெரிக்காவுடன் அமைதி உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டார். இதன்பின் மீண்டனவ் மற்றும் சுலு நகரங்கள் அடங்கிய மோரோ என்ற பிராந்தியத்தை உருவாக்கியது அமெரிக்கா. அன்றிலிருந்து மோரோ முஸ்லிம்கள் இதர நாடுகளிலும் பெரும் அடக்குமுறைக்கு ஆலக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் பிலிபின்ஸ் அரசாங்கம் அவர்களை “கலகவாதிகள்” என முத்திரை குத்தியதே!. மோரோ முஸ்லிம்களை அவர்களுக்குள் ஆட்சிசெய்த்துக்கொள்வதை தடுத்து அவர்களுடைய வளங்களையும் உயிர்களையும் சுரண்டிக்கொண்டுள்ளது பிலிபின்ஸ் அரசு.

இரண்டாவதாக: சமீபகாலமாக இஸ்லாத்தை சில தீவிரவாத அமைப்புகளுடன் இணைக்க முயற்சிப்பது.

அடக்குமுறைக்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டத்தை நாட்டுக்கு எதிரான சதி என்றும் தீவிரவாத செயல் என்றும் முழங்குவது மேற்கத்திய நாடுகளுக்கு புதிதல்ல. இந்த சூழ்ச்சியை கையாண்டு அங்குள்ள மோரோ தேசிய விடுதலை முன்னணி(MNLF) போன்ற முஸ்லீம் இயக்கங்களை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுகின்றன. இதுபோன்ற அநேக செயல்களை சித்தரித்து 330,000 மக்களுக்கு எதிரான மிருகத்தனமான ராணுவத்துறை ஆட்சியை நியாயப்படுத்துகிறது பிலிபின்ஸ் அரசு.

மோரோ முஸ்லிம்களின் இந்த போராட்டத்தை பிலிபின்ஸ் அரசாங்கம் நாட்டுக்கு எதிரான சதி என்று கூறும் இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் சில நிலைப்பாட்டை எடுத்தாகவேண்டும் அதாவது இஸ்லாத்துடன் ஒப்பிட்டு சித்தரிக்கப்படும் தீவிரவாதம், பயங்கரவாதம், கலகம், சதி போன்ற குற்றச்செயல்களை இஸ்லாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை இதற்கும் மேலாக இஸ்லாம் இந்த செயல்களை தடுக்கப்பட்ட ஒன்றாக ஆகியுள்ளது.

அதேநேரத்தில் முஸ்லீம் உம்மத் இந்த பில்பின்ஸ் அரசாங்கத்தின் இந்த கொடூரமான ராணுவத்துறை ஆட்சியை எதிர்த்து கண்டனம் வெளிப்படுத்தவேண்டும். இந்த செயல் முஸ்லிம்களை குறிவைத்தும் முஸ்லிகளுக்கு எதிரான இஸ்லாமோபோபியவை தூண்டவும் வழிசெய்கிறது. மிகத்தெளிவாக இந்த மராவி பிரச்சனையில் சிக்கி தவிப்பது அப்பாவி மொரோ முஸ்லிம்களே. உலகம் முழுக்க செயல்படுத்தப்படும் இந்த தீவிரவாத எதிர்ப்பு என்னும் நாடகத்தில் அற்பமாக உயிர்கள் பலியிடப்படுவதும் இரத்தங்கள் ஒட்டப்படுவதும் உடமைகள் சூறையாடப்படுவதும் முஸ்லிம்களின் உயிர்,இரத்தம்,உடமைகளேயன்றி வேறில்லை.

Comments are closed.