சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 5.07.2017

Syrian-Refugee-Camp-in-Lebanon

லெபனானில் உள்ள சிரிய அகதி முகாம் தீப்பற்றியது

கிழக்கு லெபனானில் உள்ள சிறிய அகதிகள் முகாமில் பற்றியெறிந்த தீயால் ஒருவர் இருந்துள்ளார், மேலும் பலர் காயமடைந்துள்ளார்கள்.முன்பு வந்த அறிக்கையின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 3 எனவும், மேலும் அதிகமான கூடாரங்கள் தீபற்றி எறிந்ததாக தகவல்கள் வெளியாயின.ரோயிட்டர்ஸ் செய்தி மையம் படி பற்றியெறிந்த இந்த கூடாரத்தில் கிட்டத்தட்ட 102 குடும்பங்கள் வசித்ததாக கூறுகிறது.1.5 மில்லியன் சிறிய அகதிகளில், பலர் இதுபோன்ற மோசமான நிலைமையிலும், ஆபத்திலும் வாழ்கின்றனர்.பல சிரியர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக , லெபனானைச் சுற்றி உள்ள பகுதிகளில் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர்.முகாம்களில் இருந்த அதிகமான கூடாரங்கள் மலிவான பிளாஸ்டிக் மற்றும் மரகட்டையிலிருந்து கட்டப்பட்டவை,அதனால் தான் தீ பரவலாக பரவின.சிறிய நாட்டில் நடக்கும் வன்முறையின் விளைவாக பல மக்கள் அகதிகளாய் வெளியேரியுள்ளனர்.இவர்களுக்கு இடமளிக்க எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இதுவரை சுற்றியுள்ள முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களின் இராணுவதின் மூலம் அந்த மக்களை காப்பாற்றவில்லை, மாறாக அவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

கிறேன்ஃபல் தீ விபத்து பிரச்சனை மூடி மறைக்கப்படுகின்றதா?

இந்த வாரம் கிறேன்ஃபல் டவர் தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் பொது விசாரணை திட்டங்களை மீட்டமைக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மே விடம் ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.பிரச்சனைக்கு காரணம் சரியான நிர்வாகம் இல்லாதது தான் என்று அரசாங்கம் ஒப்புக் கொண்ட போதிலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் ஏற்பட்ட மொத்த பிரச்சனைகளும் மறக்கப்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

இதில் குடியிருப்பாளர்களின் புகார்களை புறக்கணிப்பது, பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்துதல் மற்றும் பொலிஸார் உண்மையான இறப்பு எண்ணிக்கையை ஒப்புக் கொள்ள மறுப்பது போன்ற பல பிரச்சனைகள் மூடி மறைக்கப்படுகின்றன. அரசாங்கம் இத்தகைய பிஈச்சனைமிக்க இந்த சூழ்நிலையின் உண்மை நிலைமையை மறைமுகமாக மறைக்க முயல்கிறது. ஆக இந்த பிரச்னையின் காரணம், ஏழைகளின் பிரச்னையை கண்டுகோலாத வடிவில் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்பு தான்.

பிரஞ்சு பேரரசு

வட ஆபிரிக்காவில் ஐந்து நாடுகளின் தலைவர்கள் மாலியில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனைச் சந்தித்து சஹெல் பிராந்தியத்தில் “பயங்கரவாதத்தை” எதிர்த்துப் போராட புதிய ஆபிரிக்க படைகளை பயன்படுத்துவது பற்றி விவாதித்தனர். மே மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இது மேக்ரோனின் இரண்டாவது சந்திப்பாகும். தற்போது அமைதியை நிலைநாட்டும் ஐ.நா மற்றும் பிரெஞ்சு துருப்புக்களும் ஆயுதக் குழுக்களுடன் போராடுகின்றன. இருப்பினும் மேக்ரோன் கூறுகையில் இந்த போராட்டம் வெற்றிதரவில்லை என்று கூறினார். அவர் ஸஹேல் நிலப்பரப்பில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற விஷயத்திற்கு எதிராக போராட ஆப்பிரிக்கா படையை உதவிக்கு அழைக்கிறார். வடமேற்கு ஆபிரிக்காவின் சஹெல் பிராந்தியத்தில் 5,000 வீரர்களை பங்கிடுவதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் மேக்ரோன் குறிப்பிடுவது போன்று கொலைகாரர்கள், குண்டர்கள், பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி அவர்களை அழிக்கும் பணிக்காக நியமனம் செய்யப்படுவார்கள். இருப்பினும், அவர்யாரை குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். தற்போது ஐ நா பாதுகாப்பாளர்கள் பாலியல் துஷ்பிரயோகதிற்கும், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர். பிரெஞ்ச் படைகளும் இதே போன்று பல போர் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார், குறிப்பாக மாலி உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டபோது பல போர் குற்றச்சாட்டுகள் பிரெஞ்ச் படைகளின் மீது தாகப்பட்டுள்ளது 5000 ஆப்பிரிக்கா படைகளை தங்கள் சொந்த மக்களை எதிர்த்து போராடவும், பிரெஞ்ச் கொள்கையை பிராந்தியத்தில் நிலைநாட்டுவதற்காக திரட்டுவது என்பது கடினமான விஷயம்.இந்த படைகளுக்கு நிதியளிப்பது மற்றும் அவர்களுக்கு பயிற்சி செய்வது மற்றொரு தடையாக இருக்கும்.மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் நடந்த போர்களில் அமெரிக்கா பயிற்சி அளித்த உள்நாட்டு போர் படைகள் மிக்பெரிய ஆயுதங்கள் வைத்திருந்த போதிலும் கடினமான யுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கான சக்தி இல்லை.

Comments are closed.