சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை 08.07.2017

trump-putin

1) டிரம்ப் – புடினுடனான முதல் சந்திப்பில் சிரியா தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும்பொழுது சிரியா பற்றி விவாதித்தனர். நியூயோர்க் டைம்ஸ் செய்தியின் படி “அமெரிக்கா,ரஷ்யா, மற்றும் ஜோர்டான் ஆகியோர் சிரியாவின் எல்லைப்பகுதியில் ஒரு போர்நிறுத்தத்தை ஊக்குவிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன. இது ஞாயிறு மதியம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறினார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் தில்லெர்சன் வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப்பிற்க்கும் புடினுக்கும் இடையேயான சந்திப்பிற்கு பிறகு தெரிவித்தார்”. இந்த மூன்று நாடுகளுக்கிடையே பல மாதங்கள் பேர்ச்சுவார்த்தை நடந்தபின் இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

“அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை சிரியாவில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றிய நமது முதல் அறிகுறி என்று நான் நினைக்கிறேன்”

ஹாம்பர்க், ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை இரவு டிரம்ப் புடினுக்கும்மான 2 மணி நேர சந்திப்பிற்கு பின் டில்லர்சென் செய்தியாளர்களிடம் கூறியது “அதன் விளைவாக, சிரியாவில் உள்ள மற்ற பகுதிகளை பற்றிய ஒரு மிக நீண்ட விவாதத்தை நாங்கள் வைத்தோம், மேலும் ISIS ஐ வீழ்த்தியபிறகு சிறிய மக்களை பாதுகாக்க அங்கு ஒரு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள ஒன்றுகூடி செயல்படவேண்டும் என்று தீர்மானித்தோம்.”

உண்மையில் தற்போதுள்ள டிரம்ப் தனக்கு முன்னிருந்த ஒபாமாவுடைய திட்டத்தை தான் அமல்படுத்துகிறார். அதாவது சிரியாவுடைய பிராந்தியத்தை முழுமையாக பஷார்ருல் அசாதிடம் ஒப்படைக்காமல் , தென்மேற்கு பகுதியை மட்டும் பஷார் கட்டுப்பாட்டில் உள்ளவாறு , மீதி பகுதிகளை வெவ்வேறு குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்யவது தான் இந்த ஒப்பந்தம்.இதற்கு முன்பு பல போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுதிதிடப்பட்டது , ஆனால் இதை பொறுத்தவரை , பஷார் அஸாதிர்கு சிரியாவுடைய சில பகுதிகளை ஒதுகீடு செய்தது தான் முக்கிய அம்சமாக உள்ளது.

முஸ்லீம் உலகில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. சிரியாவுடைய விஷயயத்தில் அமெரிக்கா தனியாக அங்கு இரு தீர்வு கொண்டு வர இயலாமல் பல குழுக்கள் மற்றும் பல நாடுகளை சார்ந்து உள்ளது. அமெரிக்கா தனது ஆதிக்க சக்தியிலிருந்து குறையவில்லை, மாறாக முஸ்லீம் உலகில் எழுந்த, அமெரிக்க மற்றும் மேற்கத்திய கொள்கைக்கெதிரான போராட்டம் அமெரிக்காவை கோபமடைய செயது இப்படி பட்ட நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளது.

2) அமெரிக்கா வட கொரியாவின் செயலை காரணமாக காட்டி அந்த பிராந்தியத்ததில் மேலும் தன்னுடையு இராணுவத்தை அதிகப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் உள்ள தனக்கு தேவையற்ற பிரச்சனைகளுகளுக்கு அமெரிக்கா தீர்வு கொடுப்பதாக தன்னை ஒரு அப்பாவியாக சித்தரித்து வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் அமெரிக்கா உலகம் முழுவதும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாடட்டுவது தான் அதனுடைய எண்ணம். எந்த அழவிற்கென்றால் ஒரு சில பகுதிகளில் பிரச்னையை உருவாக்கி அதை காரணமாக காட்டி அங்கு தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும். வட கொரியா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அமெரிக்கா வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான பிரச்னையை பயன்படுத்தி அங்கு தன்னுடைய இராணுவத்தை நிலைநிறுத்தி ஆதிக்கம் செய்கிறது.

அமெரிக்கா தனது “THAAD” பாதுகாப்பு ஏவுகணை மூலம் ஒரு புதிய சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது. :- வெள்ளிக்கிழமை அன்று 2 அமெரிக்க அதிகாரிகள் REUTERS (ராய்ட்டருக்கு) தேரிவித்தது.

அமெரிக்காவுடைய இந்த ஏவுகணை சோதனை, ஜூலை 4ம் தேதி வட கொரியா ஒரு சர்வதேச அணுசக்தி ஏவுகணையை அறிமுகப்படுத்தியதற்கு எதிரான ஒரு முக்கியம்வாய்ந்த செயலாக உள்ளது.மேலும் அமெரிக்கா பியோங்கியாங்கின் அச்சுறுத்தலைக் குறித்து கவலை கொண்டுள்ளது.

வடகொரியாவின் இடைநிலை-தூர ஏவுகணை (IRBM) மூலம் உருமாற்றப்பட்ட தாக்குதலுக்கு எதிரான் THAADன் முதல் சோதனையாக இது இருக்கும் என்றும் THAAD குறுக்கீடுகள் அலாஸ்காவிலிருந்து வெளியேற்றப்படும் என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

வட கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த ஏவுகணை தாக்குதலுக்கு எதிராக பாதுகாக்க அமெரிக்கா, குவாமிலும் ஒரு THAAD குருக்கீடுகளை வைத்துள்ளது. வடகொரியாவுடன் முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் இலக்கு உண்மையில் சீனா ஆகும். சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு முந்திய நிர்வாகங்களின் திட்டத்தையே ட்ரம்ப் நிர்வாகம் தொடர்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வியட்நாம் போறும் உண்மையில் இதே காரணங்களுக்காக (சீனாவை கட்டுப்படுத்த)தான் நடந்தது. பின்னர் அது நிக்சன் மாவோ உடனான பேச்சுவார்த்தைக்கு பின் அது முடிந்தது.

முதலாளித்துவ ஏகாதிபத்திய அமெரிக்கா வல்லரசாக இருக்கும் வரையில் உலகம் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் காணாது. இஸ்லாம் நடைமுரைப்படுத்தப்பட்ட காலத்தில் முழு உலகமும் இஸ்லாமிய கலாச்சார வாழ்க்கை முறையின் கீழ் நெறிமுறையான, மனிதாபமான மதிப்புகளால் நிர்வகிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வழிமுறைபடி மீண்டும் கிலாஃபா அரசை நிலைநாட்டுவதின் மூலமே மீண்டும் அந்த நிலைமைக்கு திரும்ப முடியும்.

3) போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் கங்காணி அரசான காத்தாரை காப்பாற்ற முயற்சிகிறார்.

சவூதி மற்றும் கத்தார் இடையேயான மோதல்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் நிலையில், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் இந்த சர்ச்சைக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்.

பிரிட்டனின் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை மத்திய கிழக்கில் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் குவைத் பிரதிநிதிகளை சந்தித்து கத்தார் மற்றும் பிற அரபு நாடுகளுக்கு இடையில் உள்ள பிளவைக் குணப்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடந்த மாதம் கத்தார் உடன் இராஜதந்திர உறவுகளை உடைத்து. ஈரானுக்கு உதவி செயகிறது என்பதை காரணம் காட்டி எரிபொருள் தயாரிக்கும் மாநிலத்தை புறக்கணிப்பதற்கான ஒரு முயற்சியைத் இந்த நாடுகள் தொடங்கின.

டிரம்ப்பின் டீவீடெர் பக்கத்தில் வெளியான செய்தியிலிருந்து சவூதி காத்தார் மீதான இந்த நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா தான் என்பது நன்கு தெரிகிறது. கத்தார் மீதான இந்த விரோத தன்மைக்கு அது கொண்டுள்ள சில கொள்கை சார்ந்த அணுகுமுறையல்ல.

இன்னும் நாம் சற்று ஆராய்ந்தால், பிரிட்டன் கிலாஃபா அரசை உடைத்து முஸ்லீம் நாடுகளை துண்டாக்கிய பிறகு கடைசியாக மீதமுள்ள தன்னுடைய கங்காணி அரசு கத்தார் ஆகும். பிரிட்டனும் அமெரிக்காவும் சில விஷயங்களில் ஒன்றாக செயல்பட்டாலும் பல விஷயங்களில் இரண்டு நாடும் முரானான கொள்கையை கொண்டுள்ளது. குறிப்பாக முஸ்லீம் நாடுகளின் மீதான கொள்கையில். பிரிட்டன் முஸ்லீம் நாடுகளின் வெளியுறவு விவகாரங்களில் தன்னிச்சையாக செயல்பட முயற்சிக்கிறது. இது அமெரிக்காவை கோபமடைய செயதுள்ளது. சவுதிக்கும் கத்தாருக்கு இடையேயான மோதல் உண்மையில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கு உள்ள போராட்டம்.

முஸ்லிம்களின் தற்போதைய தலைவர்கள் தங்கள் திறமையின்மை, ஊழல் மற்றும் மேற்கத்திய சக்திகளின் மீதான முழு சார்பு ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் உம்மத் இந்த தலைவர்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும், அதற்கு பதிலாக அதன் அணிகளில் ஏற்கனவே உள்ள நேர்மையான, திறமையான தலைமைக்கு திரும்ப வேண்டும். இந்த தலைமை அரசு கட்டுப்பாடற்ற ஊடக தளங்களில் காணப்படாது, ஆனால் உம்மாவின் உடலுக்குள் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு, பார்க்க விரும்புவோரால் எளிதாக பார்க்க முடியும்.

4) ஆபத்தான தீவிரவாதிகள் மற்ற மக்களை தங்களுடைய கொள்கையால் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க பிரிட்டனின் முதல் ஜிஹாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆபத்தான தீவிரவாதிகள் மற்ற மக்களை தங்களுடைய கொள்கையால் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க பிரிட்டனின் முதல் ஜிஹாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட பன்னிரண்டிற்கும் மேலான பயங்கரவாதிகள் துர்ஹாமில் HMP பிராங்பேண்டில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டு்ள்ளனர் மற்றும் மற்ற கைதிகளிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளனர். இவர்களுக்கு சிறைக்குள் சிறை மற்றும் இவர்களுக்கென்று தனி அறை, தனி பார்வை நேரம் தனி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் மற்ற சிறைவாசிகளை இவர்களின் கொள்கைகலின் மூலம் ஆதிக்கம் படுத்தப்படாமல் தடுக்கமுடியும். லீ ரிக்பி கொலைகாரன், மைக்கேல் அடெபொலோஜோ மற்றும் அதி தீவிர பிரசங்கர் அஞ்ஜெம் சௌத்ரி ஆகியோர் அவர்களில் அடங்குவர். சிறைச்சாலைகளின் அதிகாரி சாம் கீமா கூறுகையில், பயங்கரவாதிகளுக்காண தனி சிறை என்பது சிறைச்சாலைகளில் தீவிரவாதத்தை தடுக்க மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நமது பரந்த முக்கியமான திட்டம் என கூறினார்.

எந்த சிறைவாசிகளை தனி சிறைக்கு அனுப்ப போகிறார்கள் என்ற விவரத்தை நீதி துறை அமைச்சகம் தெரிவிக்க மறுத்துவிட்டது. கடந்த மாதம் அடெபொலோஜோ என்ற நபரை பற்றி கூறுகையில் அவர் மற்ற சிறைவாசிகளை தனது கருத்தால் ஈர்க்க முயல்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரிக் கருத்தியல்கள் வாதிகள் போன்ற அனைத்து விதமான தீவிரவாத இயக்கங்களை சார்ந்த மக்கள் அனைவரும் இந்த தனிமை சிறையில் அடைக்கப்படுவர். அதிகாரிகள் கூறுகையில் 1000 க்கும் மேலான தீவிரவாதிகள் கண்டெக்கப்பட்டு இந்த தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.(டெய்லி டெலிகிராஃப் மற்றும் டெய்லி மிரர்).

ஒரு புறத்தில், இங்கிலாந்தின் அரசாங்கம் சமுதாயத்தில் முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கும், மறுபுறம், அவற்றை தனிமைப்படுத்த முற்படுவதுமான ஒரு முரணான செயலை செய்கிறது.

இங்கிலாந்து அரசாங்கம் இஸ்லாமிய சிந்தனையை தங்களுடைய சிந்தனையின் மூலம் எதிர்கொள்ளமல், அவர்களை சிறையில் அடைக்கும் அழவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டாத?

5) சவுதி அரேபியா ‘பிரிட்டனில் இஸ்லாமியவாத பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் பட்டியலில்’ சந்தேகத்திற்கு இடமின்றி முதலிடத்தில் உள்ளது.

பிரிட்டனில் பயங்கரவாத இஸ்லாத்தை பரப்புவதில் சவூதி முடலிடத்தில் உள்ளது. ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் ஆய்வின் படி பிரிட்டன் முஸ்லீம் சமூகங்களில், சவூதி வஹாபி இஸ்லாம் என்ற தனது பயங்கரவாத சிந்தனையை பரப்ப 60 ஆண்டுகளாக பல மில்லியன் டாலர் செலவு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இது மஸ்ஜிதுகளுக்கு நிதி அளிப்பது மற்றும் இஸ்லாமிய பள்ளி.மற்றும் கல்லூரிகளுக்கு நிதி அளிப்பது மூலியமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் வளைகுடாவிலிருந்து வரும் இந்த பணத்திற்கும் பிரிட்டனில் நடைபெறும் தீவிரவாததிற்கும் தெளிவான ஒரு தொடர்பு உள்ளதாக பிரிட்டன் கூறுகிறது.

மேலும் இந்த ஆய்வின் படி , இந்த நாடுகளின் நோக்கமானது பயங்கரவாத இஸ்லாமிய சிந்தனையை பிரிட்டனில் உள்ள முஸ்லிகளுக்கு விதைப்பது தான் என்றும் தெரியவந்தது. அதேபோன்று இவர்களுக்கு பணம் எங்கிருந்து எவ்வளவு வருகிறது என்பதெல்லாம் மறைமுகமாக உள்ளது ஆனால் பணமாற்றம் அதிகமாக உள்ளது என்பது மட்டும் பிரிட்டனில் இவர்களுடைய எண்ணிக்கை மற்றும் செயல்களை கொண்டு தெரிகிறது. மேலும்பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் மார்க்க பிரச்சார இமாம்கள் இவர்களுக்கெல்லாம் சவுதியில் சென்று படிப்பதற்கு பல உதவித்தொகையெல்லாம் வழங்கி ஆர்வப்படுத்துகிறது சவூதி அரசாங்கம். இந்த செயல் நடுத்தரமான எந்த பயங்கரவாத சிந்தனையும் இல்லாத முஸ்லிம்களுக்கு ஒரு சவாலை உருவாக்கியுள்ளது.

ஹென்றி ஜாக்சன் சொசைட்டி இந்த விஷயத்திற்கு ஒரு பொது விசாரணை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. மேலும் பணமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சவூதியை குறிவைத்து இந்த செயல்பாடு உள்ளதை நம்மால் புரிந்துகொல்லமுடிகிறது.

ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் அறிக்கையை எழுதிய டாம் வில்சன் கூறுகையில் ” பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் நாங்கள் கண்டிருக்கின்ற இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் வெளிநாட்டு நிதியுதவிக்கும் இடையே தெளிவான மற்றும் வளர்ந்து வரும் இணைப்பு உள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக ஆராய ஒரு பொது விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றார்(டெய்லி மெயில்).

அமெரிக்காவின் தலைமையின் கீழ் சவூதி கத்தாரை தனிமைப்படுத்திய செயலுக்கு , கத்தாரை காப்பாற்றும் பிரிட்டனின் முயற்சிசெய்யும் வேலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.மத்திய கிழக்கிற்கான ஆங்கிலோ-அமெரிக்க போராட்டம் அப்பிராந்தியத்தில் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

6) ஆஃப்கானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் உத்துழைக்க வேண்டும் என்று மக்காய்ன் வேண்டினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிம்மதி பாக்கிஸ்தானின் உதவியின்றி சாத்தியமில்லை என்று அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெய்ன் கூறியுள்ளார்.இதை அவர் பிரதமருடைய வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தார் அஜீஸிடம் ஞாற்று கிழமை பேசும்போது கூறினார். செனட்டர்களான லிண்ட்ஸே கிரஹாம், ஷெல்டன் வைட்ஹவுஸ், எலிசபெத் வாரன் மற்றும் டேவிட் பெர்டு ஆகியோரும் குழு உறுப்பினர்களாக இதில் இருந்தனர். பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகள், பிராந்தியதின் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலைநாட்டால் மற்றும் நான்கு நாடுகளின் ஒருங்கிணைப்பு குழுவில் அமெரிக்காவின் பங்கு பற்றி பல விஷயங்களை இருசாராரும் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வில் பேசும்போது செனட்டர் மெக்கெய்ன், காஷ்மீரில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறினார்.

“அமெரிக்கா அதன் தற்போதைய கொள்கையை காஷ்மீரில் தொடரும்,”. மேலும் செனட்டர் மெக்கெய்ன் கூறுகையில் “ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு பாக்கிஸ்தானின் பங்கு முக்கியமானது” என்று கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட பங்களிப்புகளையும் தியாகங்களையும் அவர் பாராட்டினார்.

பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஈடுபடுவது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.கூட்டத்தில் அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோனதன் பிராட் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தையின் போது, வெளியுறவு விவகாரங்களுக்கானஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் , பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பங்காண்மை, இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும், நிலைத்தன்மையையும் அடைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். இரண்டு நாடுகளுக்கும் நீண்டகால ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், இந்த கூட்டாண்மை வேறுபட்ட மற்றும் பல பரிமாணங்களை உருவாக்க வேண்டிய அவசியத்தின் முக்கியத்துவத்தையும் ஆலோசகர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கெதிரான ஜர்ப்- இ – அஸ்ப், மற்றும் ரத்தே – ஃபசாத் போன்ற போராட்டங்கள் பற்றி கூறி பாராட்டினர். ஆப்கானிஸ்தானில் நிலைத்திருக்கும் சமாதானத்திற்கும் ஆதரவு கொடுப்பதற்கு பாக்கிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஆலோசகர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், இந்த கூட்டணியை வேறுபட்ட மற்றும் பல பரிமாணங்களையும் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய கவலையும் ஆலோசகர் எழுப்பினார். காஷ்மீர் மக்களின் சட்டபூர்வமான சுயநிர்ணய உரிமைக்கு காஷ்மீர் மக்களின் அமைதியான போராட்டத்தில் பாக்கிஸ்தான் துணைநிற்பதாக கூறினார்.

ஒரு கேள்விக்கு , காஷ்மீர் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் சமாதான வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜான் மக்கெயின் கூறினார். காஷ்மீர் வன்முறைக்கு அமெரிக்கா ஒரு முடிவு கொண்டுவரும் என்று கூறினார். இதற்கிடையில் அமெரிக்க செனட் குழுவிடம் பேசிய இராணுவத் தளபதி் கமர் ஜாவித் பஜ்வா, பாக்கிஸ்தான் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டிற்கான தனது முயற்சிகளை தொடர்ந்து செய்யும் என்று வலியுறுத்தினார். இந்த விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தைக்கு வந்த செணட்டருக்கு நன்றி செலுத்தினார்.

ஆப்கானிஸ்தான் உட்பட சுற்றியுள்ள பிராந்திய பாதுகாப்பு நிலைமை பற்றி பேச்சுவார்த்தையில் விவாதித்தனர். இப்பகுதியில் அமைதி நிலவ பாக்கிஸ்தான் சாதகமாக எவ்வாறு பங்களித்தது என்பதை பிரதிநிதி குழு விவரித்தது. பயங்கரவாதத்தின் மீதான போரில் பாக்கிஸ்தான் இராணுவத்தின் பங்களிப்புகளையும் தியாகங்களையும் செனட்டர் மெக்கெயின் பாராட்டினார் மற்றும் ஒப்புக் கொண்டார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை செனட்டர் ஒப்புக் கொண்டார் (pakistan observer)

ஆப்கானிஸ்தானில் சமாதானம் நிலவ வேண்டும் என்றால் காபூல் மற்றும் இஸ்லாமாபாத் தங்களுடைய இராணுவத்தை ஒன்றிணைத்து இப்பகுதியில் ஒரு தசாப்தங்களாக நிலவிவரும் அமெரிக்காவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதை நிறைவேற்ற நடைமுறை வழி, நேர்மையான வழிகாட்டுதலான கிலாஃபா அரசு மீண்டும் நிறுவப்படுவதன் மூலமே ஆகும்.

Comments are closed.