சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப் பார்வை 01.07.2017

kissinger_putin

தலைப்புச் செய்திகள்:

1. வரவிருக்கும் டிரம்ப்-புட்டின் சந்திப்புக்கான முன்வேலைகளை தயாரிப்பு செய்கிறார் கிஸ்ஸிங்கர்.

2. ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலான படையை திரட்ட NATOவிடம் போராடுகிறார் மாட்டிஸ்.

3. ஹைதர் அல்-அபாதி மோசூலில் கிலாஃபாவின்(ISIS) முடிவை அறிவித்தார்.

4. டிரம்ப் விதித்த முஸ்லீம்களின் தடை நடைமுறையில் இருக்க,வரவிருக்கும் தடை விதிகள் இன்னும் மோசமானதாக இருக்கும்.

5. சவூதி அரேபியாவில் குடும்ப கவிழ்ப்பு.

6. ரேமண்ட் டேவிஸ் ஐ.எஸ்.ஐ (ISI) தான் அவரை பாக்கிஸ்தானிலிருந்து தப்பிக்க உதவியது என்று வெளிப்படுத்தினான்.

1. வரவிருக்கும் டிரம்ப்-புட்டின் சந்திப்புக்கான முன்வேலைகளை தயாரிப்பு செய்கிறார் கிஸ்ஸிங்கர்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமர் புட்டின் ஆகியோர் அடுத்த வாரம் நடைபெறகின்ற G-20 சந்திப்பில் தனிப்பட்ட முறையில் சந்திக்க வாய்ப்பு இருகின்ற வகையில் (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் தலைமையில் மாநில செயலாளராக இருந்த) ஹென்ரி கிஸ்ஸிங்கர் முன்பு டிரம்ப்பை சந்தித்த பின் வியாழனன்று மாஸ்கோவில் புட்டினுடன் சந்திப்பதன் மூலம் இருவருக்கும் பயன் தரக்கூடிய விதத்தில் G20யின் சந்திப்பு அமைய முன்வேலைகளை தயாரிப்பு செய்கிறார். Business Insider செய்தி வலைத்தளத்தில் இதைப் பற்றி பதிவானது, அதில்

“மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விவகார மாநாட்டில் பேசிய கிஸ்ஸிங்கர் திட்டமிட்ட டிரம்ப் புட்டின் சந்திப்பை பற்றி கூறும்போது:

“நம் இரு நாடுகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஒரு பொறுப்பு மற்றும் வாய்ப்பு இந்த சந்திப்பில் உள்ளது என்று நான் நம்புகிறேன், உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமல்லாமல், கூட்டுறவு முயற்சிகளால் உலகெங்கிலும் உள்ள சூழ்நிலைகளை மேம்படுத்த வேண்டும்”

“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பெரும்பாலான பிரச்சனைகள் முன் நடந்துள்ளன, அவற்றை தீர்த்தும் வைத்துள்ளன,” என்று 94 வயதான கிஸ்ஸிங்கர் கூறினார்”. அவர் நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை”

உண்மையில் கிஸ்ஸிங்கர் ஏற்கெனவே இருக்கின்ற அமெரிக்க-ரஷ்யா உறவிற்கு அமெரிக்க மக்களின் கருத்துக்களை நிறுவ முயற்சி செய்கிறார். சும்மா பெயரளவில் வெளிப்படையாக ரஷ்யாவை எச்சரிக்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் பல்லாண்டுகளாக ஒருவரையொருவர் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன முக்கியமாக சிரியாவில். உண்மையில், அமெரிக்க மிகவும் பலவீனமானது, அதன் கூட்டாளிகள் மற்றும் கைக்கூலிகளின் நெருக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் தன்னுடைய விவகாரங்களை நிர்வகிக்க முடியாது.

இப்படிப்பட்ட பலவீனமான அமெரிக்க மேலாதிக்கத்தை இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த உலகம் சகித்துக்கொள்ள போகிறது என்று தெரியவில்லை?

2. ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலான படையை திரட்ட NATOவிடம் போராடுகிறார் மாட்டிஸ்:

NATO பாதுகாப்பு மந்திரிகளின் சந்திப்பில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான ஜேம்ஸ் நார்மன் மாட்டிஸ் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலான படைப் பிரிவுகளை அனுப்ப கூறினார்.
Washington Post பத்திரிகையில் பதிவானது:

ஆப்கானிஸ்தானில் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) போர் நடவடிக்கைகள் முடிவடைந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் NATO வில் உள்ள 29 நாடுகளின் கூட்டணி ஆஃப்கானிய இராணுவத்தில் கூடுதலாக படைகளை அனுப்பி மறுபடியும் எழுகிற தாலிபானை வீழ்த்த செய்யும் என்று எதிர்ப்பார்கிறது.கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான படைகளை அனுப்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று NATOவின் பொது செயலாளரான ஜென்ஸ் ஸ்டொல்டென்பெர்க் கூறினார். ஆனால் பிரிவுகளின் கணக்கு அவர் கூறவில்லை. தற்போது ஆஃப்கானிஸ்தானின் அதிக இடங்கள் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்க ஆஃப்கான் இராணுவம் பதட்டத்தில் இருக்கும் இந்த நிலையை மாற்ற தான் கூடுதலா NATOவின் படைகளை ஆஃப்கான் இராணுவத்திற்கு உதவியாக அனுப்புகின்றது. இன்னும் இதைப் பற்றி மாட்டிஸ் கூறும்பொழுது: “இந்த சமயத்தில் முன்போல் நாம் போரில் ஈடுபடாமல் ஆஃப்கான் வீரர்களை பயிற்சி மட்டும் அளிப்போம். இந்த போரில் கலந்து கொள்கின்ற விலையை நாங்கள் செலுத்த தயாராக இல்லை”

ஆப்கானிஸ்தானில் நடத்திய போரை மோசமாக இழந்துவிட்டதும், அதன் கைக்கூலியினுடைய ஆட்சி காபூலில் கவிழ்ந்து வருவதும் அமெரிக்காவிற்கு தெரியும். அதனால் தான் ஆஃப்கானிஸ்தானிற்கான அதனுடைய உண்மையான திட்டம் மேற்கத்திய இராணுவ சக்தியை பயன்படுத்தாமல் அப்பிராந்தியத்தில் அதனுடைய முகவர்களையும் கூட்டாளிகளையும் நிறுவுவதையாகும்.

NDTV இணையதளத்தில்:
போரினால் பாதிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தானிற்கு அதிகரித்த பாதுகாப்பு வழங்குவதில் அமெரிக்காவிற்கு இந்தியா ஒத்துழைக்கும் விதத்தில் வழிகளை ஏற்படுத்த அமெரிக்க சட்டமன்ற குழு பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனிடம் (Pentagon) கூறியது.

“அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்குவதில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் வழிகளை காண பாதுகாப்பு துறைக்கு ஊக்கமளித்துள்ளது” என்ற அறிக்கையை அதிகார சபை அலுவலகம் வெளியிட்டது“

உண்மையில் ஆப்கானிஸ்தானின் பிரச்சினையை தீர்ப்பதற்கான அதிகாரமும் ஆற்றலும் பாகிஸ்தானிற்கு உள்ளது, இதற்கு மாறாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதில் அமெரிக்கர்களை வசதிபடுத்தி வழியையும் ஏற்படுத்தி கொடுத்தது. அமெரிக்காவை ஆஃப்கானிஸ்திலிருந்து வெளியேற்றவும் பாகிஸ்தானிற்கு திறனுள்ளது, இதை செய்ய மேற்கத்திய சக்திகள் மற்றும் நலன்களுக்கு அடிமையாய் இருப்பதற்கு பதிலாக அல்லாஹ்வின் வணக்கத்திற்கு வழிவகுத்துகின்ற நேர்மையான தலைமையை அமைக்க வேண்டும்.

3. ஹைதர் அல்-அபாதி மோசூலில் கிலாஃபாவின்(ISIS) முடிவை அறிவித்தார்

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ்(Reuters) யின் ஒரு செய்தியில்
அமெரிக்க ஆதரவு பெற்ற ஈராகிய படைகள் 30/06/07 வெள்ளிக்கிழமை அன்று மோசுலின் பழைய நகரத்தில் இஸ்லாமிய அரசு(ISIS)யின் மீதமிருந்த கோட்டையை தாக்கினர். இதற்கு ஒரு நாள் முன்பே (ISIS)யின் அதிகாரத்தை காண்பித்த மஸ்ஜிதை கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் முடிவு அறிவித்தனர். உண்மையில், அமெரிக்காவால் இஸ்லாமிய அரசை(ISIS) முற்காலத்திலேயே வேரோடு அறுத்திருக்க முடிந்திருக்கும் ஆனால் அதை செய்யாமல், ஈராக்கின் மக்களை குர்து, சுன்னி மற்றும் ஷியா பிரிவினராக பிளவுபடுத்துவதுடன் தனித்தனி பிராந்தியமாக அவை கவனம் செலுத்துகின்ற வகையில் ஒரு விரிவான மற்றும் முறையான திட்டத்தை மேற்கொண்டது.

ISIS குழுவை ஈராக்கை விட்டு அகற்றுவதற்காக குர்திஷ் அல்லது ஷியா படைகளை மேற்கு ஈராக்கில் நுழைவதற்கு அமெரிக்கா விரும்பவில்லை இதேபோல் முஸ்லீம்களுக்கு எதிரான போர்களில் முந்தைய மோசமான அனுபவங்களை நினைத்தும் அமெரிக்கா இவர்களுடன் தனியாக மோதலில் ஈடுபடவும் தயாராக இல்லை. ஆகையால், தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற உள்ளூர் சுன்னிப் படைகளை உருவாக்க நேரம் எடுத்துக் கொண்டது, இதன் விளைவு தான் இப்போது மோசூலை கைப்பற்ற முடிந்தது.

இன்னும் Reuters யில்:
29/06/17 வியாழன் அன்று ஈராக்கிய பயங்கரவாத எதிர்ப்பு சேவை(CTS) குழுக்கள் போரால் சிதைந்து போன 850 ஆண்டுகால மஸ்ஜிதை கைப்பற்றிய பின். ISIS-யை ஒரு பொய்யான அரசு என்று அழைத்த ஈராக்கிய பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி, இஸ்லாமிய அரசின் கிலாஃபா(ISIS) முடிவுக்கு வந்தது என்று அறிவித்தார்.

தனக்குத் தானே இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொண்ட ஒரு குழு,உண்மையான இஸ்லாமிய அரசு இல்லை என்றும், மோசூலை தற்காலிகமாக தான் ஆக்கிரமித்து இருக்கிறது என்றும் முழு உலகம் அறியப்பட்ட விஷயமாகும்,

அல்லாஹ்வின் அனுமதியுடன், நபி (ஸல்) வழிகாட்டலில் ஆன உண்மையான இஸ்லாமிய ஆட்சியின் வருகை அருகில் உள்ளது. இது வெறும் ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் சிறிய பகுதியாக இருக்காமல், முழு முஸ்லீம் உலகையும் சேர்த்து உலக முழுவதையும் விரிவுபடுத்துகின்ற ஒரு ஆட்சியாக இருக்கும்.

4. டிரம்ப் விதித்த முஸ்லீம்களின் தடை நடைமுறையில் இருக்க, வரவிருக்கும் தடைகள் இன்னும் மோசமானதாக இருக்கும்.

டிரம்ப் விதித்திருந்த முஸ்லீம்களின் தடையில் அதன் நிர்வாகம் புதிய மாற்றத்தை மேற்கொண்டது. அதில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளின் முஸ்லிம்களில் சில தகுதிகள் இருந்தால் அமெரிக்காவில் இருக்கவும் நுழையவும் அனுமதி உள்ளது என்று அறிவித்தது. இந்த சட்டங்கள், தென்னாபிரிக்காவில் வெள்ளையர்கள் கருப்பர்களை நிறத்தை வைத்து பிரிக்க மேற்கொண்ட மோசமான சட்டங்கள் போன்றவையாகும்.

இதனால் அமெரிக்க மற்றும் அதில் வாழும் முஸ்லிம்களுடைய எதிர்க்காலத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. முதலில், நாம் எல்லோரும் டிரம்பின் இந்த “பயண தடை” திட்டத்தை தப்பு என்று சுற்றி காட்டி அரசை சரி செய்வதும், இதுபோல திட்டங்களை அரசு ரீதியாகவே தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை விட வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சிறுபான்மையினரை அநியாயம் செலுத்தும் போது அரசை திருத்துவதை கண்டு வெறுப்பை அடையும் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த தடைக்கு எதிராக நம்மை குரல் கொடுக்க விரும்பிகிறார்கள்.

டிரம்பின் இந்த 6 நாட்டு தடையானது, அமெரிக்காவில் நுழையும் அனைத்து முஸ்லிம்களுக்கு முழுமையான தடை செய்யும் காரியத்தின் முதல் வேலையாகும். இந்த காரியத்தை செய்யப்போவதாக ஏற்கனவே தேர்தல் பிரச்சாரக் குழுவில் அவரை ஊக்கமளித்த ஆதரவாளர்களுக்கு வாக்குறுதியளித்தார். மேலும், குடியரசுக் கட்சியின்(Republican party) முதன்மை வாக்காளர்களில் 65% அவரை இந்த திட்டத்தை அமல்படுத்தவும் விரும்பினர்.

இந்த புது தடைகள் 26/06/17 திங்களன்று தவறாக வழிநடத்தப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து வந்தவையாகும், டிரம்ப்பின் முஸ்லீம் தடையின் முழு வழக்கை விசாரிக்கும் வரை, இந்த தடையின் ஒரு பகுதியை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பிரிவு 2C யின் படி, ஆறு முஸ்லீம் நாடுகளிலிருந்து அமெரிக்காவில் வாழும் நபர் அல்லது நிறுவனத்துடன் நம்பிக்கை சார்ந்த உறவு இல்லாத முஸ்லிம்களை தடை செய்ய டிரம்புக்கு அதிகாரம் அளிக்கிறது. நம்பிக்கை சார்ந்த உறவு என்பது அமெரிக்காவில் வாழும் யாரேனும் ஒருவருடன் “நெருங்கிய குடும்ப உறவு” இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் விளக்கியது.

ஒரு குடும்பத்திலிருந்து யார் யார் அமெரிக்காவிற்கு வர முடியும் என்று டிரம்ப் முடிவு செய்கிறார். டிரம்ப்பின் புதிய விதிகளின் படி, ஒரு நபரின் பாட்டி, உறவினர்கள் அல்லது பேரப்பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால், இவர்கள் நெருக்கமான உறவில் வர்வில்லை. பெற்றோர் மற்றும் குழந்தைகள் தகுதி பெறுவார்கள். இவற்றில் எதுவும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருக்காது.

.இது வெறுமென ஆறு முஸ்லிம் நாடுளிலிருந்து அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களின் தடை அல்ல. ஒவ்வொரு முஸ்லிமையும் விசாரணையில் கொண்டு வந்து அவர்களை தடை செய்யக்கூடிய ஒரு மனிதனால் தயாரிக்கப்பட்ட வலுவான ஆய்வு அமைப்பாகும். இதுதான், வெறுக்கத்தக்க பாகுபாட்டை சட்டப்பூர்வமாக்குவது.

ஒருவேளை, டிரம்ப்பின் ஆறு நாடு முஸ்லிம் தடை வருகின்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், டிரம்ப் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான முஸ்லீம் நாடுகளுக்கு விரிவுபடுத்த முயற்சி எடுப்பார் என்பது எந்தவிதமான சந்தேகம் இல்லை. ஆனால், சில நாடுகளில் மற்றும் முஸ்லிம்களில் யார் டிரம்ப் பணம் சம்பாதிப்பதற்கு உதவியாக இருக்கிறார்களோ அவ்ர்கள் வரவேற்கப்படுவார்கள். இது மட்டுமில்லாமல், இந்தமுஸ்லீம்களின் துன்புறுத்துதலை கருத்தில் கொண்டு டிரம்பின் ஆதரவாளர்களும் அவருக்கு ஊக்கமளிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

ட்ரம்ப் ஆதரவாளர்களில் 64% அமெரிக்க முஸ்லிம்களுக்கு குறைவான அரசியலமைப்பு உரிமைகள் இருக்க வேண்டும் மற்றும் அவர்களை எப்பொழுதும் கண்கானிப்பில் வைக்க வேண்டும் என்று நம்புவதாக 2016 PEW கருத்துக் கணிப்பு காண்பித்தது. CBS செய்தி தென் கரோலினா கருத்துக் கணிப்பில், டிரம்ப் வாக்காளர்களில் 75% அமெரிக்காவில் நுழையும் முஸ்லிம்களின் முழு தடைக்கு ஆதரவு கொடுத்தது.

டிசம்பர் 2015 கருத்துக் கணிப்பின் படி, வட கரோலினாவின் வாக்கெடுப்பில் 51% ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் அனைத்து மஸ்ஜிதுகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பினர். 44% மக்கள் இஸ்லாம் சட்டவிரோதமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான், டிரம்ப் முஸ்லீம் தடை மற்றும் அவரது புதிய பயண விதிகள் மிகவும் ஆபத்தானவை.

இந்த விதிகள் நம்மை (முஸ்லிம்களுக்கு) பாதுகாப்பாக வைத்திருக்காமல், இன்னும் நம் மீது விரோத வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,

முஸ்லீம்கள் மீது டிரம்ப் ஆதரவாளர்களின் கருத்துக்களைக் பார்க்கும் பொழுது, இது எங்கே சென்று முடிவடையும் என்று தெரியவில்லை [ஆதாரம்: Daily Beast]

முஸ்லிம்களை குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வைத்திருக்க போவதும், அமெரிக்காவை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுவதும், அதனுடைய உண்மையான நோக்கம் என்று காலப்போக்கில் தெரியும்.

5. சவூதி அரேபியாவில் குடும்ப கவிழ்ப்பு

சவூது குடும்பத்தின் அவிழ்ந்த கதையைத் பார்த்தால், நோயற்ற அரசன் தனது மகனை ஆட்சிக்கு கொண்டு வர, ஆளும் குடும்பத்தின் சமநிலையை உடைப்பதும், எல்லா விதமான சொத்து ஆலோசகர் மற்றும் வங்கியாளர் ஏமாற்றி கொள்ளை அடிக்கக்கூடிய ஒரு பயனற்ற கர்வம் கொண்ட வாலிபனான அரசனின் மகனை அடுத்த அரசனாக நியமிப்பதுமாகும்.

இதன் பின்னணி அரசு செல்வத்தின் மூல ஆதாரத்திலிருந்து(எண்ணெய்) வருவாயின் வீழ்ச்சியும், மத மோதல்களின் மறுமலர்ச்சி மூலம் பகுதிகளை பிரித்து அண்டை நாடுகளுடனும் மற்றும் நண்பர்களுடனும் விரோதம் கொள்வதாகும்.

Brent crude எண்ணெயின் ஒரு பேரலின்(barrel) விலை $45 ஆக குறைந்ததை பற்றி கேட்கும் பொழுது, சந்தை எதிர்மறையாக பிரதிபலித்தது. எண்ணெய் விலை முக்கியமில்லை என்றும், 2020 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் பொருளாதாரம் எண்ணெய் வருவாயில் இருந்து சுயாதீனமாக இருக்கும் என்றும் சவுதியின் அரசன் முகமது பின் சல்மான் கூறினார்.

இது உண்மையிலேயே சாத்தியம் என்று யாரும் நம்புவதில்லை. ஆனால்,எதிர்காலத்தில் விலைகளை இன்னும் அவர் வீழ்ச்சியடைய செய்வது ஆபத்தானதாகும். அதிக உற்பத்தியில் உள்ள சந்தையை மறுசீரமைப்பு கொண்டு வர, உற்பத்தியை நிறுத்தி தேவையான ஏற்றுமதியை வழங்கும் ஆற்றல் சவுதியை தவிர வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. நமக்கு இது வரை கிடைத்த ஒரே ஒரு ஆறுதல் நாம் முதல் சட்டத்தின் முடிவில் இருக்கிறது தான். இன்னும் பல செய்திகள் சவூதியிலிருந்து வர உள்ளன. பல குறைகள் தெளிவாக தெரியும் நிலையில் இருக்க, ஆட்சியின் முழு அதிகாரம் அரசன் சல்மான் கையில் வந்த சில மாதங்களிலேயே அவற்றை அம்பலப்படுத்துவார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல், சவுதி ராஜ்யத்தின் பொருளாதாரத்தை எண்ணெயை தவிர்த்து வேறு மூலத்திலிருந்து கொண்டு வர பார்த்து கொண்டிருந்தபோது எதுவும் அடையவில்லை. அடுத்த மூலதனம் ராஜ்யம் கண்டது, பிரகாசமான மற்றும் சிறந்த ஆண்களையும், இரண்டாம் விகிதம் குடிமக்களாக கருதப்படுகின்றோம் என்று நினைக்கும் பெண்களையும் தான். பொருளாதாரத்தின் வருவாயை பல்வகைப்படுத்த மற்றும் நவீனமயமாக்க McKinseys (நிர்வாகத்தை பற்றி ஆலோசனை செய்யும் உலகளாவிய நிறுவனம்) பெரும் திட்டங்களை போட்ட பின் கடைசியில் மணல் விட உறுதியான மூலதனத்தை வேற எதையும் தரவில்லை. இது சல்மானாலும் அங்கீகரிக்கப்பட்டது.

முகமது பின் சல்மான் வழங்கிய 2030யின் திட்டங்களுக்கு ஒரு பெரிய பார்வை இருக்கிறது, ஆனால் விநியோக முறை எதுவும் இல்லை. சவுதி அரேபியாவிடம் வாஷிங்டனில்(ஆமெரிக்க) இருக்கின்ற ஒரு நம்பமுடியாத கூட்டாளி இல்லையெனில் அது எப்பொழுதே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

எமனில் சவுதியின் நடவடிக்கைகள் அதன் பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகப்படுத்தியிருக்கவில்லை என்றாலும், ராஜ்யத்தின் சொந்த பாதுகாப்புப் படைகளின் பலவீனத்தை அம்பலப்படுத்தியது.எண்ணெய் விலை வீழ்ச்சியை அனுமதித்த சவுதியின் முடிவுக்கு எதிரான ஆழ்ந்த ஆத்திரம் OPEC மற்றும் அதற்கு அப்பாலும் பரவியது.

அடுத்தாக, சவுதி அரேபியாவுக்கு மிகவும் ஆபத்தானது, மத குழுக்களுடன் உள் பிரச்சனைகளாகும். மறைந்த அரசன் அப்துல்லா மற்றும் இளவரசர் நயீப் ஆகியோரின் நிதானமான முறையில் சீர்திருத்தமும் நவீனமயமாக்கும் செயல்முறையை தொடராமல், தற்போதிய இளவரசன் வழங்கிய பெருமையான பார்வை 2030 மதத்திற்கு சிறிய இடத்தை வழங்குகிறது.

இதில் ஒரே கேள்வி என்னவென்றால், அரச குடும்பத்தின் சீர்குலைவுக்கு அடுத்த அடியானது எந்த பகுதியிலிருந்து வரும்? ஈரானிலிருந்தா? ISIS-யிலிருந்தா? அல்லது சவூதியின் உள்ளே ஒரு சிதைந்த மாநிலத்தைக் காணும் பிற அடிப்படைவாத குழுக்களிடமிருந்தா?

சவுதி Aramco வை தனியார்மயமாக்கலில்,சல்மான் நம்பிய $2.6tn மதிப்பு, அதை வழங்கிய சாத்தியமான முதலீட்டாளர்கள், இப்போது வெளிப்படையான அரசியல் அபாயங்களால் வர்த்தக சிக்கல்களை காண்பார்கள். இந்த நிலையில் Aramco வை விற்க நினைத்தால், அதிகமான மற்றும் அவமானகரமான தள்ளுபடி செய்யவேண்டும். சவுதியின் மேடையில் இன்னும் அதிக நாடகங்கள் நடைபெற உள்ளன.

சவூதி அரேபியா இயல்பாகவே எந்தவிதமான ஜனநாயக வழிமுறை மற்றும் நம்பகத்தனமான நண்பர்களும் இல்லாத பலவீனமான நிலையில் உள்ளது. இப்பொழுது, தன்னை சரியான நிலையில் வைத்துக்கொள்வதே அதன் முக்கிய மைய நோக்கமாக இருக்கவேண்டும். கடந்த நூற்றாண்டு வரை, சவுதி கொள்கையின் அடையாளமாக இருந்தது தன் நிலைத்தன்மையை மற்ற அனைத்து தேவைக்கும் மேலாக வைப்பது தான். இந்த நோக்கம் சல்மான் காட்சியில் வந்த பின் மாறியது.

ஒரு ஆட்சியை பிடிங்கி தன் சக்தியை நிலைநாட்டும் சூழ்ச்சி நீண்ட கால வெற்றியைத் கொடுக்காமல் உறுதியற்ற தன்மையை உருவாக்கும் என்று வரலாறு கூறுகிறது. ஒரு இடத்தில் சட்டரீதியான தன்மை அல்லது நிலை இல்லாவிட்டால், போட்டியாளர்கள் அந்த இடத்தை நிரப்ப விரும்புவார்கள். இறுதியில், உயிர்வாழ்வதற்கான கட்டாயம் வரும் பட்சத்தில் உறுதியான நிலையையும் ஒழுங்கு முறையையும் கொண்டு வரக்கூடியவர்களுக்கு அந்த இடம் கிடைக்கிறது.[ஆதாரம்: Financial Times]

மேற்கத்தியவர்களின் தலையீடு மற்றும் ஆதரவு காரணமாக மட்டுமே தான் சவுதியின் ஆட்சி இதுவரை தப்பிப்பிழைத்தது. மேற்கத்தியவர்களின் சரிவு ஏற்பட்டு இஸ்லாம் மீண்டும் எழுச்சியுற்றால், சல்மானின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த அவருடைய இரண்டாவது சட்டத்தின் முடிவு வேறுவிதமாக இருக்கும்.

6. ஐ.எஸ்.ஐ (ISI) தான் தன்னை பாக்கிஸ்தானிலிருந்து தப்பிக்க உதவியது என்று ரேமண்ட் டேவிஸ் (இரகசியம்) வெளிப்படுத்தினார்

மார்ச்16, 2011 அன்று இரண்டு கொலைகாரர்களின் குடும்பங்களுக்கு $2.4mn டாலர்கள் இரத்த பணமாக (தியா) வழங்கப்பட்ட பின் டேவிஸ் விடுதலை செய்யப்பட்டார். வழக்கின் நீதிபதிகள் அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்ததுடன் டேவிஸ் உடனடியாக அமெரிக்க திரும்பினார்.

“The Contractor” என்கிற அவருடைய ஜீவிய சரித்திரச் சுருக்கத்தில், “நான் எப்படி பாகிஸ்தானிய சிறைச்சாலையில் இறங்கி ஒரு அரசாங்க நெருக்கடியை ஆரம்பித்தேன்” என்றும் பாக்கிஸ்தானில் தனது அனுபவத்தை பற்றியும் விரிவாக கூறியுள்ளார். கடைசி அத்தியாயத்தில், ” ISI தான் என் வெளியேறத்தை திட்டமிட்டது என்று கூறுகிறார். மேலும் அவர் கூறியது, பல காவலாளிகள் நீதிமன்றத்திலிருந்து என்னை பின்வாசல் வழியாக வழிநடத்தினர். அவர்களில் ஒருவர் கதவை திறந்து வெளியே சென்று வழியை காலி செய்த பின் என்னை அழைத்து பாதுகாத்து SUV காரில் ஏற்றிவிட்டனர்.

காரில் டேல் ரஷ் என்ற அமெரிக்க தூதரகத்திலிருந்து ஒரு மருத்துவரும் பாகிஸ்தான் இராணுவத்திலிருந்து ஒரு படைத்தலைவரும் இருந்தன. காரின் ஓட்டுனரும் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்தவர். கார் நேராக விமான நிலையத்திற்கு சென்றது, அங்கே இரட்டை இயந்திரம் கொண்ட Cessna என்ற விமானம் ரன்வேயில் அவரை கொண்டு செல்ல தயாராக இருந்தது. பாகிஸ்தானுக்கு அமெரிக்க தூதுவரான Cameron Munter என்பவரும் விமானத்தில் இருந்தார், அது அவரை காபுலுக்கு அழைத்து சென்றது. ஏனென்றால், விமானத்தில் தூதர் இருந்தால் விமானத்தை எடுக்கும் அனுமதியை தாமதம் செய்ய பாகிஸ்தானியர்கள் தைரியம் கொள்ள மாட்டார்கள் என்று டேவிஸ் கூறுகிறார்.

ஒசாமா பின் லேடனைப் கவிழ்க்க திட்டமிட்டுள்ளதால், அதை மேற்கொள்ளும்போது அவரை வெளியேற்றுவது சாத்தியமற்றது என்று அறிந்திருந்த அமெரிக்க நிர்வாகம், அவரை பாகிஸ்தானை விட்டு வெளியே கொண்டு செல்ல விரும்பியது என்று டேவிஸ் கூறுகிறார். மேலும், ”அமெரிக்க அரசாங்கத்திற்கு விரைவில் என்னைப் வெளியேற செய்வதை விட, உடனே வெளியேற்றும் வேலையை பார்த்தது. என்னை வெளியேற்றும் காரணத்தை விட இன்னும் பல இரகசியமான காரணங்களும் இருந்தன”, என்று அவர் எழுதுகிறார்.

அவரது வெளியீட்டைப் பாதுகாப்பதில் CIA யின் முன்னாள் நிர்வாகி Leon Panetta மற்றும் ISI யின் முன்னாள் நிர்வாகி Ahmed Shuja ஆகியோரின் பங்கு அதிகமாக இருந்தது என்றும் டேவிஸ் கூறுகிறார். முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியையும் அவர் சுருக்கமாக குறிப்பிடுகிறார்.

Leon Panetta யை பற்றி கூறும்போது “ஜனாதிபதி அலுவலகத்தில் சாதாரன அதிகாரிய இருந்தவர். இராணுவம் மற்றும் உளவுத்துறையில் மிகச் சிறிய அனுபவத்தை கொண்டிருந்த அவரை, ஒபாமா 2009 ஜனவரியில் CIA தலைவராக நியமிக்க முடிவெடுத்ததை ஆச்சிரியதிற்கு உள்ளாக்கியது” என்று எழுதியுள்ளார்.

அதேபோல், Pasha பற்றி கூறும்போது “இவர் விற்கு நேர்மாற்றமாக இருந்தார், 1974ல் பாக்கிஸ்தானிய இராணுவத்தில் பணியாற்றி ஒவ்வொரு கட்டமாக இராணுவத்தில் பதவி உயர்வை பெற்றிருந்தார். ஏற்கனவே, CIA மற்றும் ISI. இடையில் உறவுகள் பதட்டமானதாக இருந்தது, என் பிரச்சனை இன்னும் அதை அதிகரித்தது” என்றார்.

தனது புத்தகத்தை வெளியிட அதிலிருந்து நிறைய விஷயங்களை நீக்கி ஒரு வருடத்திற்கு பிறகு, CIA விடம் அனுமதி கிடைத்து. ஆனால், லாஹுர் நீதிமன்றத்தின் ஒரு அறையில் General Pasha வுடன் நடந்த உரையாடலும், அதைப்பற்றி Panetta விடம் கூறியதை பற்றியும், தன் புத்தகத்தில் எழுத அனுமதி கிடைத்தது என்கிறார்.

மற்றொரு அறிக்கையை குறிப்பிடும்போது, “என்னை வெளியேற்றும் திட்டம், General Pasha மற்றும் தூதர் Munter இடையே ஒரு சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. மேலும், இதில் பாக்கிஸ்தானிய இராணுவம், ஜனாதிபதி ஜர்தாரி மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோரின் பங்கும் இருப்பதாக வதந்திகள் பரவியது” எனவும் கூறுகிறார். [ஆதாரம்: Dawn]

பாகிஸ்தானிய இராணுவம் அமெரிக்கவை மகிழ்விக்க தன் நாட்டையும், தன் குடிமக்களையும் துரோகம் செய்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. எப்படி நம் சகோதிரி ஆஃபியா சித்திகியை பர்வேச் முஷாரஃப் கைது செய்து அமெரிக்கர்களிடம் ஒப்படைத்தார் என்று பார்த்தால் புரியும்.

Comments are closed.