சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்தி பார்வை – 19.07.2017

al-aqsa

தலைப்பு செய்திகள்:

1. நவாஸ் ஷெரிபின் சொத்து ஊழல்

2. ஆக்கிரமப்பு படைகளால் அல்-அக்ஸா மஸ்ஜித் மூடப்பட்டது

3. அமெரிக்க மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி ஒப்பந்தம்

1. நவாஸ் ஷெரிபின் சொத்து ஊழல்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறது, பெருகிவரும் அவரது குடும்ப செல்வத்தின் மீது அழுத்தம் தரக்கூடிய விதத்தில் விசாரனை நடைபெறுகிறது. லண்டனில் அடுக்குமாடி வீடுகளை வாங்க, இவர் வைத்திருந்த Bank Accountsயின் ரகசியம் 2016ல் “PANAMA PAPERS” மூலம் வெளிவந்த பிறகு தான், இந்த நடவடிக்கை ஆரம்பித்தது. இந்த செய்திக்கு பின், நவாஸ் ஷெரீப்பின் நிறுவனங்கள் எல்லாம் சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்வத்தை சேர்க்கின்றன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. நவாஸ் ஷெரீப்பின் வருவாயும், அவரது குடும்பத்தால் குவிக்கப்பட்ட செல்வத்தின் அறியப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட ஆதாரங்களில், நிறைய இடைவெளிகளும் வேறுபாடுகளூம் உள்ளன என்று JIT விசாரனை குழு அறிவித்தது. மீண்டும் விசாரணைகள் தொடர்ந்தாலும், தற்போதைய ஆட்சியின் ஊழல் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெறிகிறது. வறுமை, பஞ்சம் மற்றும் பரவலான சமத்துவமின்மை போன்ற தீவிர நிலைகளில் அவதிப்படுகின்ற இந்த நாட்டில், தங்களுடைய சொந்த இலாபத்திற்காக மக்களுடைய செல்வத்தை சூழ்ச்சித் திறத்துடன் கையாள்வதில் ஆட்சியாளர்களுக்கு எந்த வரம்புகளுமில்லை என்று இதிலிருந்து தெளிவாக புரிகிறது.

2. ஆக்கிரமப்பு படைகளால் அல்-அக்ஸா மஸ்ஜித் மூடப்பட்டது
14-7-17 வெள்ளிக்கிழமை அன்று ஆயுதமேந்திய மூன்று பாலஸ்தீனியர்கள், யூத இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலுக்கு பின், அந்த மூவரை கொன்ற பிறகு, யூத ஆக்கிரமப்பு படைகளால் அல்-அக்ஸா மஸ்ஜித் மூடப்பட்டது. அடிக்கடி மஸ்ஜிதில் தொழுகிறவர்களை தொல்லை கொடுக்க நுழையும் இந்த யூதர்களின் அரசு, இந்த முறை மஸ்ஜிதுக்கு ஒரு தற்காலிக மூடலை அறிவித்தது. இந்த செயலுக்கு பின், பாலஸ்தீனத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் கோபப்பட்டு, ஜோர்டான் போன்ற நாடுகளிலிருந்து வெடித்த எதிர்ப்புக்களைக் தெரிவித்தனர். இதற்கடுத்து, ஆக்கிரமிப்புப் படைகள் மஸ்ஜிதை திரும்ப திறந்து பாதுகாப்பு நுழைவாயில்களால் பாலஸ்தீனியர்களை நுழைய வேண்டும் என்று கூறியதால், அவர்கள் நுழைய மறுத்துவிட்டு மஸ்ஜிதுக்கு வெளியே தொழுகை நடத்தினர். கத்தார் போன்ற மற்ற நாடுகளை முஸ்லிம்கள் என்றும் பார்க்காமல், அவர்களை தாக்கி, அவதூறை பரப்பி, புறக்கணிக்க தயாராக உள்ள சில் முஸ்லிம் நாடுகள், ஜெருசேலத்தில் முஸ்லிம்கள் மீது நடக்கிற அநீதியை கண்டும், அமைதியாய் இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. அல்-அக்ஸா மஸ்ஜிதில் இந்த பிரச்சனையால், இதுவரை 18 பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காஸாவிலிருந்து அறிக்கை வெளியானது.

3. அமெரிக்க மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி ஒப்பந்தம்:
டிரம்ப் நிர்வாகம் இரண்டாம் முறையாக, அணுசக்தி உடன்படிக்கையை “ஈரான்” கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது, ஆனால், ஒப்பந்தத்தின் உணர்வையும் அதனுடைய கோட்பாட்டையும் மீறினால், முன் சொன்னதை விட இன்னும் அதிகமான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படும் என அச்சுறுத்தியது. 2015 ஆம் ஆண்டின் அணுசக்தி உடன்படிக்கையின் விதிகளை ஈரான் கடைபிடித்ததா இல்லையா என்பதை பற்றி காங்கிரஸிடம் தெரிவிக்க, டொனால்ட் டிரம்ப்பிற்கு கொடுத்திருந்த கடைசி நாளின் முடிவுக்கு முன்னதாக இந்த அறிக்கை அறிவிக்கப்பட்டது. “மிக மோசமான நிலையில் இருக்கும் ஒப்பந்தங்களை முறிவு செய்வது” என்று டிரம்ப்பின் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்றானது. இதன் அடிப்படையில், “இந்த அணு ஒப்பந்தத்தின் குறைபாடுகளை சரிசெய்யவும், சில அணுசக்தி கட்டுப்பாடுகளின் காலாவதியை பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலாக அதிகரிப்பதும்”, அமெரிக்க நிர்வாகம், கூட்டு நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா தெஹ்ரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் எனவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளை அபிவிருத்தி செய்து, பிராந்தியத்தில் பதட்டங்களை உருவாக்கியதற்காக ஈரான் தண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அமெரிக்கா தற்போது 200 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. இது பிராந்திய பதட்டங்கள் மட்டும் அல்லமல் உலக பதட்டங்களையே உருவக்கும் இடத்தில் உள்ளது. உதாரணத்திற்கு, சிரியாவில் அமெரிக்க பங்கு தான் போரை நீடித்தது, ஈரானுடைய பங்கு மிகச் சிரியளவில் இருந்தது. மேலும், ஈரானைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறும் பொழுது, ஈரானில் “மனித உரிமை மீறல்கள்” தொடர்பாக பல நீண்டகாலமாக அமெரிக்கவின் கவலைகள் உள்ளன எனவும் ஈரான் தன் பிராந்தியத்தில், தானே “பயங்கரவாதத்திற்கு” ஆதரவளித்தது வருவதை எனவும் வலியுறுத்தினர். வழக்கம் போல், மீண்டும் ஒருமுறை அமெரிக்கவின் நயவஞ்சகத்தனம் அனைத்து எல்லைகளையும் மீரியது. தானே சில அளவுகோல்களை நிறைவேற்றாமல் தோல்வியடையும் நிலையில் இருந்துக்கொண்டு, மற்ற நாடுகளை சரியில்லை என்று அமெரிக்க மதிப்பிடுகிறது. நன்கு ஆவணப்படுத்தப்பட்ட CIA செய்த சித்திரவதைகளின் பதிவுகளும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் எண்ணற்ற குற்றங்களும் இதற்கு சாட்சியளித்துள்ளது.

Comments are closed.