சமீப பதிவுகள்

வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரிப்பு மக்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும்?

sudan-cash

பொது இலக்குகளை அடைவதற்கும் மக்களின் சிறந்த வாழ்க்கைக்கும் வருவாயை அதிகரிப்பது தொடர்பான சூடானின் நிதி அமைச்சகத்தின் அக்கறையை நிதி அமைச்சர் அல்-ரகாபி உறுதிப் படுத்தியுள்ளார். இணைப்புகளை அதிகரிப்பதற்கான இலக்கை வரி வினியோகத்தை விரிவு படுத்துவதன் மூலம் அடைய வரித்துறையினரை சந்தித்த போது அவர் கட்டளையிட்டார். 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் 120% மற்றும் அடுத்த ஆண்டு 200% வரை இணைக்க கோரிக்கையை நீதிமன்றம் கோர வேண்டும் என்றும் கூறினார். சூடானிலிருந்து பொருளாதாரத் தடைகள் நீங்கிய பின்னர் அதிக கடன்கள் மற்றும் மானியங்களை எதிர்பார்த்து அந்நாட்டின் நிதி கொள்கை முந்தைய நிதி அமைச்சகத்தின் திட்டத்தின் படி தொடரும் என்று அல்-ரகாபி தனது முந்தைய சந்திப்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதனை எப்படி குறிப்பிடுவது என்று நமக்கு தெரியவில்லை: மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட வரித் தொகையை உயர்த்துவது மேலும், முந்தைய நிதி அமைச்சகத்தின் நிதிக் கொள்கையை தொடர்வது அதற்கு உரித்தாகிய துயரங்கள் மற்றும் எவ்வாறு இந்த ஆட்சிமுறை இந்த நிலத்தை பாதிப்புக்குள்ளாகியதை நினைவூட்டும் ஏனெனில் முந்தைய நிதி அமைச்சகத்தின் திட்டங்களானது சர்வதேச நாணய நிதியின் (IMF) திட்டங்களாகும்; அவை எப்படி வட்டி அடிப்படையிலான கடன்கள் (ஹராம்) மூலம் செல்வங்களை கொள்ளையடிப்பத்தில் கவலையற்றதோ அதுபோல் மக்களின் வாழ்க்கையை குறித்து ஒரு துளி அளவும் அக்கறையற்றது. எப்படி முந்தைய மந்திரிகள் கடந்த ஆண்டுகளில் எரிபொருள், கோதுமை, எரிவாயு மற்றும் பிறவற்றின் விலையை மெம்மேலும் உயர்த்தி, வாழ்க்கையை தாங்க முடியாத அளவுக்கு கொண்டு சென்றார்களோ அதுபோல் இங்கு நிதி அமைச்சரின் இந்த நடவடிக்கையான வரி உயர்வு மற்றும் முன்னாள் நஷ்டஈடர்களின் பாதைகளைப் பின்பற்றுவது மேலும் அதிக துன்பங்களையே விளைவிக்கும். சரக்குகள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தாவிடில் நிதியை தீர்மானிக்க முடியாது என்று முன்னரே பிரதமர் பாக்ரி எச்சரித்துள்ளார். இது அதிக வறுமையையே குறிக்கிறது (லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லா). இது ஒன்றும் விசித்திரமானதல்ல ஏனெனில் தேசிய உரையாடல் பரிந்துரைய்கள் ஆவணத்தின்படி “வரி மற்றும் சுங்க நிர்வாகத்தை பலப்படுத்தியும், நவீனமயமாக்கியும் மற்றும் வரி வினியோகத்தை விரிவு படுத்தி இதனை எல்லா தகுதியான நிதியாளர்களிடம் அடையச் செய்து அவர்களை நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் செலுத்த வைப்பதும் மற்றும் வரி விகிதத்தை உயர்த்தாமல் சேகரிப்பு செயல்திறனை உயர்த்துவதுமே ஆகும்”.

மக்களின் வாழ்க்கை இஸ்லாமிய சட்டங்களின் மூலமாக தான் மேம்படுத்த முடியும்; அது சரக்குகள் மற்றும் சேவைகளின் மறைமுக வரிகளையும், அல்லாஹ் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிரான போராக இருக்கக்கூடிய வட்டியையும், பிரத்தியேக உரிமையையும் மற்றும் மக்களின் பணத்தை வீணாக பயன்படுத்துவதையும் தடைசெய்கிறது. இது இறைத்தூதரின் வழிமுறைப்படி அமைந்த இரண்டாவது கிலாஃபா ராஷிதா மாநிலத்தின் (நேர் வழிப்பெற்ற கிலாஃபா) நிழலில் மட்டுமே செயல் படுத்த முடியும். அது இஸ்லாமிய சட்டங்களை நிலைப்படுத்திய பின் மக்களை கவனிப்பதிலும், நாட்டின் வழங்களை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்துவதிலும் தனது கடமையை நிறைவேற்றுமே தவிர அதற்கு மாறாக இன்று நிலவுகின்ற வட்டிக்கடன்கள் மூலம் எவ்வாறு வழங்களை மேற்கத்திய காஃபிர்கள் சூறையடியும் நாட்டின் வழங்களை முழுமையாக வடிகட்டியும் அதனால் காலனித்துவர்களின் பிணைக்கைதிகளாக மாறும் இந்த நிலையை ஒருபோதும் செயல்படுத்தாது.

ஓ சூடானிய மக்களே, உங்களின் அலட்சியத்திலிருந்து விழித்துக் கொண்டு துனியாவின் மேன்மைக்காகவும் ஆகிராவின் வெற்றிக்காகவும் ஹிஸ்-புத்-தஹ்ரீருடன் இணைந்து இறைத்தூதர் வழிமுறையிலான கிலாஃபா ராஷிதா (நேர் வழிப்பெற்ற கிலாஃபா) பாதுகாவல் மாநிலத்தை உருவாக்குவதற்கும் செயல்படுங்கள்.

– இப்ராஹிம் உதுமான் (அபு கலீல்)
சூடான் மாகாணத்திலுள்ள ஹிஸ்-புத்-தஹ்ரீரின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்

Comments are closed.