சமீப பதிவுகள்

இந்தியா-சீனா(வுக்கு) மத்தியிலான எல்லை பிரச்சனை

china-india-border

ஜூலை 4, 2017 அன்று இந்திய ராணுவம் ஆத்திரமூட்டும் வகையில் சீன எல்லைகளை மீறுவதாக குற்றம் சாட்டியது சீனா. இந்த குற்றச்சாட்டானது ஜூன் 29 அன்று, ‘இந்தியா ராணுவம் தங்களுடைய படைகளை சீன எல்லைகளிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் இது மட்டுமே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க ஓர் முன் நிபந்தனை ஆகும்’ என்ற சீன அறிக்கையை தொடர்ந்து மேற்கூறிய குற்றச்சாட்டு வெளியானது. சீனா வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: ‘இந்தியா தங்களுடைய படைகளை இந்திய எல்லைக்கு திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம் மேலும் கூடுதலாக இதுவே இந்த பிரச்சனையின் தீர்வுக்கு முன் நிபந்தனையும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு அடித்தளமும் ஆகும்’.

சீனா-இந்தியா எல்லை பிரச்சனை என்பது ஒரு நவீன கால முரண்பாடு அல்ல மாறாக பெரும் வரலாறுகளை கொண்டதகும். 4000 கிமி எல்லைகளை இரு நாடும் பகிர்ந்துகொண்டுள்ளன. இரு நாடுகளின் பிரச்சனையாக இருப்பது தங்களின் எல்லைகளை வரையருப்பதே!. இந்த பிரச்னையானது பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானித்தல் தொடர்பாகவே ஆரம்பமானது. எனினும் பெய்ஜிங் அந்த இடம் தங்களுடைய இறையாண்மைக்குரியது என்று வாதிடுகிறது. இந்த காரணத்தை முன்னிட்டே முதல் இந்தியா-சீனா போர் 1962 ஆம் ஆண்டு மூண்டது. இந்த குறுகிய கால போரில் இந்தியா பெரும் சேதத்தை சந்தித்தது ஆனாலும் அருணாச்சல பிரதேஷை தக்கவைத்துக்கொண்டது, சர்வேதச நாடுகளின் அழுத்தத்தால் சீனா தங்களுடைய ராணுவத்தை அருணாச்சல பிரதேச பகுதியிலிருந்து பின்வாங்கிக்கொண்டது. 1987 ஆம் ஆண்டு இந்தியா அதனுடைய 29 வது மாநிலமாக அருணாச்சல பிரதேஷை அறிவித்தது. இந்த அறிவிப்பை சீனா மறுத்தது மேலும் அடுத்த போருக்கான சூழல்கள் உருவாகும் என்று ஊடகங்கள் கணித்தன ஆனால் இரு நாடுகளும் ராஜதந்திர தீர்வை எட்டின மற்றும் எல்லை பதட்டத்தை போக்க ஒரு புதிய திட்டம் இரூ நாடுகளால் வடிவமைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் நீண்ட கால பிரச்சனையின் தொடராக எல்லையில் ஆசிய கண்டத்தின் இரு பெரும் நாடுகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. சீன கட்டுமான டிரக்குகளும் அதனுடன் சீன படைவீரர்களும் சர்ச்சைக்குரிய பகுதியான டோக்லாம்(Doklam)-ஐ நோக்கி புதிய சாலை அமைப்பதற்காக தெற்கே பயணித்ததை தொடர்ந்து இந்த எல்லை சர்ச்சை துவங்கியது. இந்தியாவும்,பூடானும்(Bhutan) இந்த பகுதி Bhutan-க்கு சொந்தமானது என்றும், ஆனால் சீனா அது தனக்கு சொந்தமான பகுதி என்றும் வாதிட்டுவருகின்றன.

Bhutan-க்கு பகரமாக நாங்கள் இந்த சர்ச்சையில் தலையிடுகின்றோம் என்று நியூ டெல்லி கூறுகிறது, Beijing-ஓ இந்தியா தனது எல்லைகளை மீறுகிறது என்றும் கூறுகிறது, Bhutan-ம் தனது பங்குக்கு சீனா 1998 ஆம் ஆண்டு உடன்படிக்கையை மீறி இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறது.Beijing-ன் கண்ணோட்டத்தில், இந்த Doklam பகுதியை அது தனக்கானது என்று நிரூபிக்கும் பொருட்டு சீன வெளியுறவு அமைச்சகம் பல ஆவணங்களை கடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காட்டியது.

Doklam-ஐ சொந்தம்கொண்டாடுவதற்கு 1890 ஆம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தத்தையே சீன வெளியுறவு அமைச்சகம் ஆதாரமாக முதன் முதலில் காண்பித்தது.Sikkim-Tibet மாநாட்டு அறிக்கையின் முதல் விதியை 1890ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று Henry Petty-Fitzmaurice என்ற அந்நாள் இந்தியாவுக்கான பிரிட்டிஷ்ன் இராஜபிரதிநிதிக்கும்,Tibet-ஐ சார்ந்த Sheng Tai, the Qing Dynasty’s “Imperial Associate Resident” என்பருக்கும் மத்தியில் கையெப்பமானது. கூடுதலாக ‘ எல்லை ஒப்பந்தத்தை ஏற்ற இந்தியாவின் ஒப்புதல் பத்திரம் ‘ 1960-ல் வெளிடப்பட்டு சீனாவில் உள்ள இந்தியா தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளதையும் சீனா மேற்கோள்காட்டுகிறது.
இந்தியாவின் கண்ணோட்டத்தில், சீனாவின் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்தால் Gamochenபகுதியை அது அடைவது லேசாகிவிடும் மேலும் சீனா-இந்தியா-பூட்டான் ஆகியவற்றின் மும்முனை சந்திப்பை மேலும் தெற்கு நோக்கி நகரச்செய்யும் இது முக்கியம் வாய்ந்த Siliguri Corridor-க்கு ஆபத்தாக அமையும்.

Chumbi Valley-ல் உள்ள Yatong என்ற பகுதி வரை இரயில் பாதையை விரிவுபடுத்த சீனா விரும்புகிறது. இந்த Yatong பகுதியானது பூட்டான் நாட்டின் Doklam plateu-வின் Dokla la pass-க்கு அடுத்து உள்ளது. இதற்கு பின்னணியில் சீனா கொண்டுள்ள உள்நோக்கம் என்னவென்றால் Chumbi Valley-யை இந்தியா ராணுவ தாக்குதலின் சேதரத்தில் இருந்து பாதுகாக்கவே!. இந்த Doklam plateu-வை Bhutan-னிடம் இருந்து பெற சீனா அளவுக்கு அதிகமான தொகையையும் கொடுத்து பெற முயற்சித்தது என்பதே சீனாவிற்கு இந்த இடம் எவ்வளவு முக்கியமானது என்று நாம் உணரலாம்.

பின்வரும் குறிக்கோள்களை அடையவே இந்த கிழக்கு பகுதியின் எல்லைகளை நோக்கிய சீனாவின் திடீர் படையெழுச்சி அமைந்துள்ளது.

1. Chumbi Valley-ல் சீன நிலைகளை இராஜாதந்திர அடிப்படையில் ஆழமாக்க!. முன்பே பல அறிக்கைகளில் பார்த்ததுபோல இந்த Chumbi Valley என்ற இடம் மிகவும் குறுகிய வழியும் இருபுறமும் செங்குத்தான மலைகள் சூலவும் அமையப்பெற்ற இடம், ஆகவே மேற்கின் சிக்கிம்-திபெத் எல்லைகளில் நிலைகொண்டிருக்கும் இந்தியா ராணுவத்தை எதிர்க்கமுடியாத வகையில் உள்ள காரணத்தால் சீனா இந்த திட்டத்தை தீட்டியுள்ளது.

2. Chumbi Valley மற்றும் YaDong பகுதிகளை அடையக்கூடிய முக்கிய வழியாக தற்போது இருப்பது S-204. Chumbi Valley-ஐயும் அதை சுற்றியுள்ள இடங்களையும் ஆழமாக்கி கொள்வதால் எளிதில் இந்திய படைகள் முன்னேற வருவதை தடைசெய்ய முடியும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் சீனா சொந்தம்கொண்டக்கூடிய பகுதிகளையும் S-204 மூலம் அடையும். இதன்மூலம் இந்தியாவின் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து சீனா போதுமான பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

சீனாவுக்கு எதிரான மோதலை இந்தியா முதலில் துவங்கியது ஜூன் 2017-ல் மோடியின் அமெரிக்க பயணத்தில் டிரம்ப்-ஐ சந்தித்தபிறகே. சீனாவின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட இதலாசிரியர் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது ” அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மத்தியிலான நெருக்கம் பல ஆபத்தான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும்”. மேலும் கூறியதாவது ” சீனாவின் முன்னேற்றத்தை கண்டு அமெரிக்காவும் இந்தியாவும் ஏங்குகின்றன”. சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தற்போது இந்தியாவுடன் கதகதப்பான உறவை மேற்கொண்டுவருகிறது அமெரிக்கா. எனினும் ஜப்பான், ஆஸ்திரேலியா-வை போல இந்தியா அமெரிக்காவிற்கு நட்பு நாடு அல்ல. அமெரிக்க தந்திரத்திற்கு உட்பட்டு சீனாவை எதிர்க்க ‘முதல் நிலை’ பகடைக்காயாக இந்தியா தேர்ந்தேடுக்கபடாது காரணம் அது இந்தியாவின் நலனுக்கும் அபயாமாக ஆகிவிடும். ஒருவேளை அவ்வாறு இந்தியா பயபடுத்தப்பட்டால் அது தெற்கு ஆசியாவில் பெரும் அதிர்வையும், புவிசார்அரசியலில் பெரும் உராய்வையும் ஏற்படுத்தும். இருப்பினும் டிரம்ப்-ம் மோடி-யும் தெற்கு ஆசிய அமைதியையும், அதன் ஸ்திரத்தன்மையையும் அடிப்படையாக கொண்டே தங்களுடைய உறவை மேற்கொள்வதாக “News18.com.” என்ற இந்திய ஊடகம் தகவல் அளித்தது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பு சீனாவுடனான இந்தியாவின் உறவை கொண்டே உறுதியளிக்கப்படும் என்றும் அந்த ஊடகம் கூடுதல் தகவல்களை அளித்தது.

ஆகையால், உலகத்தின் முன்னணி நாடுகளும், ஆசிய கண்டத்தின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் மத்தியில் நீடித்து வரும் இந்த மாபெரும் முரண்பாடு, நபித்துவத்தின் அடிப்படையில் கிலாபத் ஏற்படுவதை ஒருபோதும் இந்த நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க முடியாது. மேலும் இந்த நாடுகளில் சமூகம்,பொருளாதாரம்,உள்நாட்டு விவகாரம் என அனைத்திலும் தொய்வும், வீழ்ச்சியையும் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை புவியியல் ரீதியாக மொழிவாரியாகவும், மதம், ஜாதி என்ற பேதங்கள் அடிப்படையிலும் பிளவுபட்டு காட்சியளிக்கிறது, சீனாவும் கிட்டத்தட்ட இதே அம்சங்கள் கொண்டதாகவே உள்ளது. எனவே முஸ்லிம்களாகிய நாம் மறுமலர்ச்சிக்கான குறிக்கோளில் நபித்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமிய கிலாபாத்தை ஏற்படுத்த உழைக்க முன்வர வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உதவியோடு ஏற்படவிருக்கிற இஸ்லாமிய கிலாபத்துக்கு முன் தோன்றி எதிர்க்க இந்த நாடுகளுக்கு திராணியில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

Comments are closed.