சமீப பதிவுகள்

ஆய்வுகள்

மொசூலை கைப்பற்றுவதற்கான போர்

Mosul

ஜூலை 9ம் தேதி, ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாதி மொசூல் நகரை ஐ எஸ் ஐ எஸ்(ISIS) இடமிருந்து வெற்றிகரமாக கைப்பற்றியதை அறிவிப்பு செய்தார்.மூன்று வருடங்களுக்கு முன்பு ஜூன் 2014ல் வெறும் 1500 ஐ எஸ் ஐ எஸ்(ISIS) போராளிகள் தங்களை விட 20 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஈராக் இராணுவத்தை எதிர்த்து போராடி ஈராக்குடைய 2 வது மிகப்பெரிய நகரத்தை(மொசூலை) கைப்பற்றினர். உடனே ISIS செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அத்னானி கைப்பற்றிய இடத்தில் கிலாஃபத்தை நிறுவியதாக அறிவித்தார். பிறகு ISISன் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி 2014கில் மொசூலில் உள்ள அந்-நூரி மஸ்ஜிதில் வெற்றியுரையாற்றினார். மொசூலுக்கான போர் ஈராக் மற்றும் பூகோள மேற்கத்திய கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக முன்வைக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் இது முடிவு அல்ல

கருத்து

மொசூளுக்கான போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தப்பி ஓடிவிட்டனர், மற்றும் மொசூலின் போரில் பழங்கால அல்-நூரி மசூதி மற்றும் அதனுடைய மினாரெட் உள்ளிட்ட புனிதஸ்தலங்கள் அழிந்துவிட்டன. ISISன் எண்ணிக்கை வெறும் 10000 முதல் 15000 வரை இருந்த நிலையிலும் அவர்களை வீழ்த்தி மொசுளை கைப்பற்ற ஈராக் அரசாங்கத்திற்கு 100000 படைகள் மற்றும் அமெரிக்காவின் உதவி இருந்தும் 9 மாத காலம் எடுத்துள்ளது. ISIS மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இவ்வளவு நாள் மொசுளை கைப்பற்றி ISIS அமைப்பு தங்கள் கைவசம் வைத்திருந்தது, ஈராக் படைகளின் உண்மையான திறனை வெளிப்படுத்துகிறது.

மொசூல் நகரம் முழுவதும் போர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் உயிர் பிழைத்தோர் ISISயை நம்பும் அளவிற்கு கூட ஈராக்குடைய மத்திய அரசை நம்பவில்லை. தற்போதைய உண்மை நிலைமை என்னவென்றால் ஒரு ஷியா இராணுவப் படை பெரும்பான்மையான சுன்னி மக்கள் வாழும் நகரத்தை எடுத்துள்ளது.அதன் மக்கள்தொகை மொசுளை சுற்றியுள்ள ஈரானின் ஆதரவை கொண்ட ஷியா போராளிகளை நம்பும் அளவிற்கு கூட ஈராக் அரசை நம்பவில்லை. இதுவே மொசூல் மக்களுக்கு வழங்கப்படும் விடுதலை.எனவே ஈராக்கின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

அமெரிக்கா ஈராக்கை ஆதிக்கம் செய்ய அந்த மக்களை இன ரீதியாக குர்துகள், ஷியாக்கள், சுன்னிக்கள் என மூன்று தனி நாடாக பிரித்து நிர்வகிக்கும் வழிமுறையை தான் ஆரம்பத்திலிருந்தே பின்பற்றிவருகிறது.இந்த பிரிவு தான் அங்கு நடக்கும் எல்லா பிரச்னைககுக்கும் மூல காரணமாக இருக்கிறது.மேலும் அமெரிக்கா ஈராக்கில் அமைத்த ஜனநாயக பாராளுமன்ற அமைப்பு அந்த நாட்டை இன ரீதியாக பிரித்து அதன் மக்களை இன ரீதியான சண்டையில் ஈடுபடுவதை நிறந்ததர விஷயமாக ஆகியுள்ளது.

ஈராக்கில் ஈரானுடைய செயல்பாடு

2005ல் ஈராக்கில் நடந்த கிளர்ச்சியில் அமெரிக்கா தோல்வியை சந்தித்த போது, அங்கு தனக்கு சாதமான ஒரு அரசியல் அமைப்பை நிறுவ அமெரிக்கா முயற்சி செயதுவந்தபோது, ஈரான்,அமெரிக்காவின் முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் மாறாக தன்னுடைய ஆதரவாளர்களை அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக்கில் உள்ள கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர வேலைசெய்யுமாறு கட்டளையிட்டது.

செப்டம்பர் 2008 ல் ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு வருகை அளித்தபோது நியூயார்க் டைம்ஸுடன் ஒரு பேட்டியில் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கூறும்போது: ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் அமெரிக்காவிற்கு ஈரான் ஒத்துழைப்பு அளித்துள்ளது. …”ஈராக்கில் சமாதானத்தையும், பிரச்சனையில்லாத ஒரு நிலைமையை நிலைநிறுத்த அமெரிக்காவிற்கு நம்முடைய தேசம் உதவி அளித்துள்ளது” .

பல ஷியா பிரிவுகளை அரசாங்க பதவி, லஞ்சம், மற்றும் வெகுமதிகல் போன்ற வாக்குறுதிகள் மூலம் வன்முறைகளைத் நிறுத்தி, அமெரிக்க அரசியல் அமைப்பில் பங்குபெறவைக்க முடிந்தது. அந்த நேரத்தில் ஈரானுடைய செயல்பாட்டை குறித்து ஒரு ஈராக் அதிகாரி கூறும்போது: சமீபத்தில் அமெரிக்கா தன்னுடைய செல்வாக்கு மற்றும் முதலீடுகள் மூலம் ஈராக்கில் ஜைஷுல் மஹ்தியின் செயலை கட்டுப்படுத்த முயற்சி செயகிறது என்று கூறினார்.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்துவந்தாலும், ஈராக்கில் ISISக்கு எதிரான போரில், பாக்தாதுடைய அரசை காப்பாற்ற குத்ஸ் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் காசிம் சோலோமானி தன்னுடைய படையை தரைவழியாகவும், அமெரிக்காவின் உதவியோடு வான்வழியாகவும் அனுப்பினார்.

Comments are closed.