சமீப பதிவுகள்

கேள்வி பதில்: மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கீழ் ஷரியாவின் தண்டனைகளை நிறைவேற்றுதல்

scales
கேள்வி:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
தன் செய்த பாவத்திற்க்காக மரணத் தண்டனையை விரும்பும் ஒருவர், கிலாஃபா திரும்ப நிலைநாட்டப்படுவதற்கு காத்திருக்க வேண்டுமா? உதாரணத்திற்கு, மதச்சார்பற்ற நாட்டில் வாழும் ஒருவர், ஷரியாவின் கீழ் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை செய்து, நம்பகமான மக்களால் ஷரியாவின் படி தன்னை தண்டிக்க விரும்பினால். அது சரியானதா?

பதில்:
வ அலைகும் அஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு…

நீங்கள் ஒரு பாவத்தையும், அந்த பாவத்தால் மறுமையின் வேதனையையும் அகற்றுவதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை உங்கள் கேள்வியிலிருந்து தெளிவாக தெரிகிறது. நீங்கள் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், மறுமையின் அதிகமான மற்றும் மிகக் கடுமையான தண்டனையை அது அகற்றும், அதனால் தான் நீங்கள், தண்டனையை நிறைவேற்றுவதற்காக தகுதியானவர்கள் இருக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். என் சகோதரே, சில விஷயங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதலாவது, மறுமை நாளில் பாவத்தை நீக்கி விடுகின்ற இவ்வுலக தண்டனை, ஒரு இஸ்லாமிய அரசால் நிறைவேற்றக்கூடிய ஷரியா தண்டனையாக இருக்க வேண்டும். அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தால் ஆட்சி செய்யாமல், அல்லாஹ்வின் சட்டங்களால் நிர்வகிக்கக்கூடிய ஒரு மாநிலமா இருக்க வேண்டும். இதற்கு ஆதாரமானது, உபாதா இப்னு அஸ்-சாமித் சொன்னதாக முஸ்லிமில் பதிவானது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் இருந்தோம், அப்பொழுது, அவர் கூறினார்:

நீங்கள் அல்லாஹ்விற்கு இணைவைக்கமாட்டீர்கள், இன்னும் விபச்சாரம் செய்யமாட்டீர்கள், திருடமாட்டீர்கள், அல்லாஹ் தடை செய்த எந்த உயிரையும் எந்த ஒரு காரணமில்லாமல் கொல்ல மாட்டீர்கள் என்று எனக்கு பையத் என்னும் பிரமாணம் கொடுப்பீர்களா. எவர் தன்னுடைய பங்கை நிறைவேற்றுகிறாரோ, அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது. ஒருவர் பாவத்தை செய்து இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டால், மறுமையின் தண்டனைக்கு அது பரிகாரமாகும். அதேப்போல், ஒருவர் ஒரு பாவத்தைச் செய்தப்பின், அதை அல்லாஹ்வும் மறைத்து வைத்தால், அவருடைய விஷயம் அல்லாஹ்விடமே இருக்கும், அல்லாஹ் நினைத்தால் அவரை மன்னித்து விடலாம் அல்லது தண்டிக்கலாம்.

மேல் காணப்பட்ட ஹதிஸிலிருந்து கிடைத்துள்ள தெளிவான விளக்கம் என்னவென்றால், ஒருவர் தன் பாவத்திற்க்காக இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால், மறுமையின் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார். மேலும், பாவத்தை மன்னிக்கக்கூடிய தண்டனையானது, முஸ்லிம் உம்மத்தால் பையத் கொடுக்கப்பட்ட கலிஃபா, இஸ்லாம் முறைப்படி ஆட்சி செய்கின்ற ஒரு இஸ்லாமிய அரசால் கொடுக்கப்பட வேண்டும்.

நபி(ஸல்)யின் மேல் காணப்பட்ட ஹதிஸிலும், “பையத் என்னும் பிரமாணம் கொடுப்பீர்களா, எவர் தன்னுடைய பங்கை நிறைவேற்றுகிறாரோ, அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது. ஒருவர் பாவத்தை செய்து இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டால், மறுமையின் தண்டனைக்கு அது பரிகாரமாகும்.” என்று வருகிறது.

பையத் என்கிற விஷயத்தை சார்ந்து தான், பாவத்தின் பரிகாரம் கிடைக்கும். அதாவது, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்யும் ஒரு இஸ்லாமிய அரசால் கொடுக்கக்கூடிய தண்டனையால் தான், ஒரு முஸ்லிம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கும்.

இரண்டாவது, சில முஸ்லிம்கள் பாவம் செய்தபோது, இந்த உலகின் தண்டனையே விட மிகக் கடுமையான மறுமையின் தண்டனையை அகற்ற, நபி (ஸல்)யிடம் சென்று தம் மீது தண்டனையே நிறைவேற்றிக் கொண்டார்கள்., சுலைமான் பின் புரைதாஹ் வின் தந்தை தன்னிடம் கூறியதாக இமாம் முஸ்லிமிடம் அவர் கூறிய ஹதீஸில் வருவதாவது: மாயிஜ் இப்னு மாலிக் நபி (ஸல்)யிடம் சென்று: “அல்லாஹ்வின் தூதரே, என்னை சுத்தப்படுத்துங்கள்” என்றார், அப்போது, நபி (ஸல்) கூறினார்கள் “உன் மீது நாசம் உண்டாகட்டும், திரும்பிச் செல், அல்லாஹ்விடம் மனம்வருந்தி மன்னிப்பு கோரு”, அவர் சென்றுவிட்டார், உடனே திரும்பி நபி (ஸல்)யிடம் “அல்லாஹ்வின் தூதரே, என்னை சுத்தப்படுத்துங்கள்” என்றார், அப்போது, நபி (ஸல்) கூறினார்கள் “உன் மீது நாசம் உண்டாகட்டும், திரும்பிச் செல், அல்லாஹ்விடம் மனம்வருந்தி மன்னிப்பு கோரு”, அவர் சென்றுவிட்டார், மீண்டும் திரும்பி நபி (ஸல்)யிடம் “அல்லாஹ்வின் தூதரே, என்னை சுத்தப்படுத்துங்கள்” என்றார், அப்போது நபி (ஸல்) அதே கூறினார்கள், நான்காவது முறையில், நபி (ஸல்),“ உன்னை எதிலிருந்து சுத்தப்படுத்த என்னிடம் விரும்புகிறாய்” என்று கேட்டார்கள், அவர் “விபச்சாரத்திலிருந்து” என்றார், இதைக் கேட்டு நபி (ஸல்) “இவர் பைத்தியமா” என்று மக்களிடம் கேட்டார், இல்லை என்று அவரிடம் கூறப்பட்டது, பிறகு நபி (ஸல்) “இவர் மது அருந்து இருக்கிறாரா” என்று வினவினார், அப்பொழுது, ஒரு மனிதர் சென்று வாசனை மோந்து, அவரிடம் மது வாசனை வரவில்லை என்றார், நபி (ஸல்) “நீங்கள் விபச்சாரம் செய்தீர்களா” என்று கேட்கும்பொழுது, அவர் “ஆம்” என்றார். பிறகு தான், நபி (ஸல்) அவரை கற்களால் அடித்துக் கொள்ள உத்தரவிட்டார். பிறகு நபி (ஸல்) மக்கள் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்து, சலாம் கூறி “மாயிஜ் இப்னு மாலிக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பை கேளுங்கள்” என்றார், அவர்களும் “அல்லாஹ்(சுபு) மாயிஜ் இப்னு மாலிக்கை மன்னிப்பானாக” என்றார்கள். நபி (ஸல்) “அவர் மனந்திரும்பி கேட்ட மன்னிப்பை மக்களிடையே பகிர்ந்தால், அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து நீங்கள் பார்த்தால் புரியும், இந்த நேர்மையான முஃமின் மறுமையின் வேதனையிலிருந்து தப்ப நபி (ஸல்) யிடம் சென்று தன் மீது ஹுதூதை(Hudood) நிறைவேற்றிக் கொண்டார். இந்த செயல் ஒரு உண்மையான மனந்திரும்புதல் என்று நபி (ஸல்) கூறினார்கள். “அவர் மனந்திரும்பி கேட்ட மன்னிப்பை மக்களிடையே பகிர்ந்தால், அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்” என்று நபி (ஸல்) கூறியதை நாம் பார்த்தோம்.

நீங்களும் இந்த ஹதீஸை படித்தீர்பீர்கள், உங்களுக்கும் இதேப்போன்ற செயல் செய்து பெரிய அந்தஸ்து பெற ஆசையிருக்கும், ஆனால், இதில் உள்ள வேறுபாடு தெளிவாக தெரிகிறது, அந்த மனிதர் ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரிடம் சென்று தம் மீது ஹுதூதை(Hudood) தண்டனையை நிறைவேற்ற கூறினார். ஆனால், தற்போதைய முஸ்லிம் நாடுகளிலுள்ள தண்டனைகள் மனிதனால் உருவாக்கிய சட்டங்களையும், அமைப்புகளையும் சார்ந்ததே ஆகும். இவை அனத்தும், நாம் மேல் கூறிய முதல் விஷயத்தின் நிபந்தனைகளில் சேராது.

மூன்றாவது, ஆகவே, தற்போதைய எந்த ஒரு முஸ்லிம் நாடுகளுக்கோ, எந்த ஒரு இயக்கம் அல்லது சங்கமிடமோ சென்று தண்டனையை பெற்றுக்கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை, ஏனெனில், இவற்றில் எதுவும் இஸ்லாத்தின் சட்டங்களை கொண்டு ஆட்சி செய்யும் ஒரு இஸ்லாமிய அரசும் இல்லை, இவர்கள் தரக்கூடிய தண்டனைகளும் ஷரியாவின் அடிப்படையில் இல்லை. ஒருவேளை, இவர்களிடம் தண்டனைப் பெற்றுக் கொண்டாலும் மறுமையில் அதற்கு பரிகாரம் ஆகாது. இந்த காலத்தில், அல்லாஹ்வின் உதவியால் மீண்டும் கிலாஃபா நிலைநாட்டப்படும் வரை, ஒரு பாவத்திலிருந்தும், மறுமையின் தண்டனையிலிருந்தும் தப்பிக்க கீழ்காணும் வற்றை செய்வது உங்கள் மீது கட்டாயமாகும்:

1. அல்லாஹ்விடம், உங்கள் பாவத்தை மன்னிக்க, மனம்விருந்தி நேர்மையான முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்குவான்…. (அத்-தஹ்ரிம்:8)

2. நற்செயல்களை அதிகமாக செய்யவேண்டும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக – நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் – (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும். (ஹுத் – 114)

இஸ்லாமிய கிலாஃபாவை நிலைநாட்டும் பணி, அனைத்து நற்செயற்களில் மிகப் பெரியதாகும். இந்த கிலாஃபா மட்டும் தான், பாவம் செயதவர்கள் மீது ஷரியாவின் முறைப்படி தண்டனைகளை நிறைவேற்றி, செய்த பாவத்திலிருந்தும், மறுமையின் தண்டனையிலிருந்தும் அவர்களை காப்பாற்றும்.

ஆகவே, இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்கிற ஆட்சியாளர் (கலிஃபா) இப்பொழுது இல்லாமலிருக்க, இந்த ஆட்சியாளரை கொண்டுவர அனைத்து முஸ்லிம்கள், தம்மால் முடிந்த வரை முழு முயற்சிகளை செலுத்த வேண்டும். கலிஃபா முஸ்லிமகள் மத்தியில் எப்பொழுதும் இருப்பது ஒரு ஃபர்ளான கடமையாகும். இவர் தான் அல்லாஹ்வுடைய பிரதிநிதியாக இவ்வுலகில் செயல்பட்டு, இருஉலகின் எஜமான் ஆன, அல்லாஹ்(சுபு) கட்டளையிட்ட ஹுதுதையும் நிலைநாட்டுவார். ஹுதுதை நிலைநாட்டுவது நம் மீது கடமையாகும், ஏனெனில், அதை நிலைநாட்டுவதில் தான் உம்மத்தின் நேரான பாதைக்கும், அதனுடைய தவறுகளை சரிசெய்வதற்கும் இது ஒரு வழியாக இருக்கும். மேலும், ஒரு கடமைக்கு வழிவகுக்கக்கூடிய செயலும் கடமையாக இருக்க, இந்த ஹுதுதை நிலைநாட்டும் கலிஃபாவை, நாம் முதலில் கொண்டுவர வேண்டும்.

இப்னு மஜாஹ் தன்னுடைய சுனன்-யில் அபு ஹுறைராஹ்(ரழ்) சொன்னதாக குறிப்பிடுவதாவது:

“ஹத் (ஷரியா தண்டனை) ஒரு நிலத்தில் நிலைநாட்டப்படுவது என்பது, பூமியில் வாழும் மக்களுக்கு 40 நாட்களுக்கு மழை பெய்வதை விட சிறந்ததாகும்”

எனவே, மதசார்ப்பற்ற நாடுகளில் வாழக்கூடிய எந்த மனிதரிடமும், தம் மீது ஷரியா தண்டனையே செயல்படுத்த கேட்கக்கூடாது (அது ஒரு நம்பகமான மக்களிடமிருந்து நிலைநாட்டப்பட்டாலும் சரியே), என்பதை உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இப்படி தண்டனையே செயல்படுத்துவது பாவத்தை மன்னிக்காது. நாம் முன்னே விளக்கிய படி, பாவத்தை மன்னிக்கக்கூடிய தண்டனை இஸ்லாமின் சட்டப்படியான ஷரியாவின் தண்டனையாக இருக்க வேண்டும்…

Comments are closed.