சமீப பதிவுகள்

ஆய்வுகள்

வெனிசுலாவின் நெருக்கடியான சூழலிருந்து பெறக்கூடிய படிப்பினைகள்

venezuela

வெனிசுலா, உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ள நாடு, அதன் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது, மின்சாரத்தை சேமிப்பதற்காக பல அரசாங்க அலுவலகங்கள் வாரம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே திறக்க படுகின்றன. உணவுப் பற்றாக்குறை காரணமாக அடிப்படை தேவைகளுக்கு கூட அதிக நேரம் வரிசையில் நின்று பெறக்கூடிய சூழல் உள்ளது. மேலும் தற்பொழுது பணவீக்கம் 1000% க்கும் அதிகமாக உள்ளது.

வெனிசுலாவின் தெருக்கள் முழுக்க பதற்றம் பரவிவிட்டது; ஏனெனில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி இருவரும் ஒருவற்கொருவர் சதித்திட்டத்தை நடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிக்கொள்கின்றன. அரசாங்க விரோத ஆர்ப்பாட்டங்கள் அந்த தேசத்தையே அழித்துள்ளன. பலர் எதிர்ப்பு வன்முறைகளில் காயமடைந்துள்ளனர் மேலும் பலர் கொல்லப்பட்ட்டுள்ளனர்.

வெனிசுலாவின் அரசியல் நிலப்பரப்பு முதன்மையாக சாவிஸ்டாஸால் வடிவமைக்கப்பட்டது; மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு புனைபெயர். 2013ல் அவரது மரணத்திற்குப் பின், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, நிக்கோலா மடோரோ எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான விமர்சனத்தை பெருவதர்காக மட்டுமே சாவிசத்தை அவர் நிரந்தரமாக நிறுவினார்.முஸ்லிம்களாக இருக்கக்கூடிய நாம் வெனிசுலாவில் நடக்கக்கூடிய அரசியல் நிகழ்வுகளிலுருந்து பல படிப்பினைகளை பெறகூடிய விதமாக உள்ளது.

ஒற்றைப் பொருட்களின் மீது சார்ந்துள்ள பொருளாதார அமைப்பு

மடோரோ மோசமாக வெனிசுலாவை நிர்வகிக்கிறார், ஆதேநேரம் அவருடைய முன்னோடிகளும் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. நாட்டிற்குள்ளேயே பல சிக்கல்கள் உள்ளன, அவை சாவிச காட்சியாலும் எதிர்காட்சியாலும் தீர்க்க முடியாது என்பது தெளிவாக உள்ளது. மிகவும் சிக்கலான சிக்கல்களில் ஒன்று எண்ணெய் மீதான தீவிர சார்பு நிலை ஆகும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வெனிசுலாவின் ஏற்றுமதி வருவாயில் 95% உண்மையில், இந்த வருவாய்களில் பெரும்பாலானவை வெகுஜன சமூக திட்டங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டன, மேலும் இந்த வருவாய் மூலம் ஒரு மில்லியன் வெனிசுலா மக்களுக்கு வீடுகள் வழங்க்கப்பட்டது. மிகவும் இலாபகரமானதாக இருந்தபோதிலும், எண்ணெய் மீதான நிதி மனப்பான்மை மிகவும் கவனக்குறைவாக இருந்தது.குறிப்பாக அரசாங்கத்தின் வருவாயை இன்னும் நிலையான ஆதாரத்திற்காக எண்ணெய்யை மாற்றுவதற்கு, குறுகிய காலத்தில் தங்கள் உபரிகளை பயன்படுத்தத் தவறிவிட்டது.உண்மையில், சமீபத்திய எண்ணெய் நெருக்கடி காரணமாக எண்ணெய் விலை 26 டாலருக்கு ஒரு பீப்பாய் என மாறியது, வெனிசுலா பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியது. எண்ணெய் ஏற்றுமதியாளராகளில் முதலிடத்தில் உள்ள வெனிசுலா அதன் வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய பற்றாக்குறையை கண்டது, இது அந்த அரசாங்கத்தை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.வெனீசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை சார்ந்துள்ள பொருளாதாரம் அதன் வரவு செலவு, எண்ணெய் ஒரு பிப்பாய்க்கு 120 டாலராக இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.மடோரா தொலைநோக்கு பார்வையோடு செயல்படாமல் குறுகிய வளர்ச்சியை நோக்கி செல்கிறார் என்பது தெளிவாக உள்ளது.இது முதலாளித்துவத்தின் இயல்பு.

முஸ்லீம்களாக இருக்கக்கூடிய நாம் இதுபோன்ற நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு,வரக்கூடிய இஸ்லாமிய அரசு அதன் பொருளாதாரத்தை நீண்டகாலத்தில் மிகக் குறைவான நிலைத்தன்மை கொண்ட எண்ணெய் போன்ற பொருட்களை சார்ந்துள்ளதாக வைக்கக்கூடாது. அவ்வாறு செய்யும்போது, விலை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் பொருட்களை சார்ந்துள்ள பொருளாதார அமைப்பின் காரணமாக நிலைத்தன்மையற்ற ஒரு பொருளாதார தன்மையை கிலாஃபாக சமாளிக்க வேண்டிய அவசியமில்லை.

இறக்குமதியை மட்டும் நம்பியுள்ள பொருளாதாரம்

எண்ணெய் வருவாய்களின் மீதான பெரும் சார்பநிலை என்பது, வெனிசுலாவின் பொருளாதாரம் இறக்குமதியை சார்ந்துள்ளது என்பதாகும். இது குறிப்பாக வெனிசுலா தனது அதிகாரத்தை இழந்து, அது பொருட்கள் / சேவைகளில் மிது அதிகமாக நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு உற்பத்தி இல்லாமல், வெனிசுலா பொருளாதாரம் அதை தக்கவைத்துள்ளவர்களின் விருப்பங்களை பாதிக்கக்கூடியதாக உள்ளது.இது போன்ற விஷயம் வெனிசுலாவை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

எதிர்கால கிலாஃபா அரசு அதன் பொருளாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வெளிப்புற இறக்குமதிகளை மட்டும் முற்றிலும் சார்ந்திருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசியல் ஊழல்

சாவிஸ்தாஸ் மற்றும் எதிர்கட்சிக்கிடையே இடையே பிளவு பல ஆண்டுகளாக இருந்த போதும்.சமீபத்திய பதற்றம், மார்ச் 29, 2017 அன்று உச்சநீதி மன்றத்தின் ஒரு ஆச்சரிய அறிவிப்பின் காரணமாக கூட இருக்கலாம். என்ன அறிவிப்பு என்றால், தேசிய சட்டமன்றத்தில் எதிர்தரப்புக்கு உள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டது தொடர்பான உச்ச நீதிமன்ற அறிவிப்பு. இது கூட சமீபத்திய பிரச்சங்கான ஓரு காரணமாக இருக்கலாம். இது மக்களுடைய கோபத்திற்கு வழிவகுத்தது; மேலும் நிக்கோலா மடுரோ இதன் மூலம் எதிர்ப்பை கட்டுபடுத்தி அவரது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முயற்சித்தார். உண்மையில், பிரச்சனை இங்கே இரு விஷயங்களில் உள்ளது: ஒன்று ஆட்சியாளரின் ஊழல் மற்றும் அவரது மக்களிடம் அவரை தட்டிகேட்கும் தன்மை இல்லாமை. இந்த சிக்கல்கள் ஒன்று சேர்ந்து மிகவும் ஆபத்தான ஒரு அராஜகம் மற்றும் ஊழல் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது.

இந்த இரு பிரச்னைனையிலிருந்து மீழ வருங்கால கிலாஃபா அரசிடம் சிறப்பான திட்டம் உள்ளது. ஒன்று கலிஃபாவாக இருப்பவர் மக்களுடைய விவாகாரங்களை பூர்த்தி செய்யும் விஷயத்தில் அல்லாஹ் விடம் கேள்வி கேட்கப்படுவார் என்ற பொறுப்புணர்வும், அவ்வாறு அவர் செய்ய தவறும் போது மக்கள் அவரை எதிர்த்து தட்டி கேட்டு போராட வேண்டும் என்ற கடைமையும் சேர்ந்து இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும். அதே நேரத்தில் இவை முறையாக சட்டரீதியாக நடக்க கிலாஃபா அரசில் கலிஃபா தவறு செய்யும் போது அவரை தட்டிகேட்கவும் அவரை அதிலிருந்து திருத்திக்கொள்ளவும் கிலாஃபா அரசில் அதற்கென்றே ஒரு துறை உள்ளது, அதாவது மஹ்கமதுல் மதாலிம் என்ற ஆட்சுயாளர்கள் செய்யும் அநியாய காரியங்களை விசாரிக்கும் நீதிமன்றம் கிலாஃபா அரசில் ஒரு தனி துறையாகவே இருக்கும். இவ்வாறு இருப்பதின் மூலம் வெனிசுலாவின் தெருக்களில் காணப்படும் அரசியல் உறுதியற்ற தன்மை போன்ற பிரச்சனைகளை தவிர்க முடியும்.

இருப்பினும், அந்த பிரச்சினைக்கு ஒரு சிக்கலான அமைப்பு அல்லது சரியான ஒரு துறை இல்லாததின் விழைவு என்று கருதப்படக்கூடாது. வெனிசூலா நெருக்கடி என்பது, அதை நிர்வகிக்கும் சித்தாந்தத்தின் ஒரு வெளிப்பாடும் கூட. வலுவற்ற சந்தைலிருந்து, மோசமடைந்து சமூக ஜனநாயகம அமைப்பு், மதச்சார்பின்மை கருத்துக்கள் இருந்து பிறந்த தவாரான கொள்கைகள் தான் வெனிசுலா பிரச்னைக்கு முக்கிய காரணம். உண்மையில், மக்களுக்கு ஒரே தீர்வு அவர்களின் பிரச்சினைகளை ஒரு நியாயமான மற்றும் விரிவான முறையில் தீர்த்து வைக்கும் ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுவதுதான்.

நாம் பார்த்த பிரச்சனைகளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட படிப்பினைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், வெனிசுலா மக்களுக்கும் தற்போதைய ஒழுங்குமுறையை மோசமாக நிர்வகிக்கும் தன்மையிக்கிருந்து முறையான தீர்வை நோக்கி தங்கள் அழைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் இது இரு படிப்பினையாகும்.

Comments are closed.