சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப் பார்வை 02.08.17

plane-money

தலைப்பு செய்திகள்:

1. ஸ்காரமுச்சி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

2. ஆஃப்கானிஸ்தானில் 714 பில்லியன் டாலர்கள் செலவு செய்தும்: அமெரிக்க தோல்வியடைந்துள்ளது.

3. சமீப அல்-அக்ஸா வன்முறை முஸ்லீம் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துகிறது.

1. ஸ்காரமுச்சி பணி நீக்கம் செய்யப்பட்டார்:

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காரமுச்சி (Anthony Scaramucci) 10 நாட்களிலேயே அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பால் அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஸ்காரமுச்சியை நியமனத்திற்கு அதிருப்தியடைந்த டிரம்ப் நிர்வாகத்தின் தலைமை பணியாளர் ரீன்ஸ் பிரைபஸ் (Reince Priebus) மற்றும் செய்தித் தொடர்பாளர் ஷோன் ஸ்பைசர் (Sean Spicer) ஆகியோர் தங்களது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தனர். முன்னாள் வால் ஸ்ட்ரீட் (Wall Street) நிதியாளராக இருந்த ஸ்காரமுச்சி, சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளரிடம் தொலைபேசியில் தனது சொந்த சக ஊழியரான பிரைபஸின் பற்றி அவதூறு நிரப்பப்பட்ட வார்த்தைகளை பேசியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவரது பணி நீக்கத்தை செய்ததற்க்கு முன்பே ஏற்கனவே நிறைய பேரை டிரம்ப், அமெரிக்க அரசாங்க பதவியிலிருந்து வெளியேற்றினார். அவர்களில் ஜேம்ஸ் கோமெ (James Comey), மைக்கேல் ஃப்லைன் (Michael Flynn), சால்லி யேட்ச் (Sally Yates), ப்ரீத் பஹாரறா (Preet Bharara) மற்றும் பௌல் மனாஃபொர்ட் (Paul Manafort) ஆவர். அரசாங்கத்தில் இவர்களுடைய எதிர்பார்ப்பு குறுகியதாக மற்றும் பயனில்லாமல் போய்விட்டது, இதைப் பார்க்கும்பொழுது அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய நிலமை மிகவும் மோசமானதாக தெரிகிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்து இன்னும் தனக்கு கீழிருக்கும் அதிகாரிகளை தன் மொத்த கட்டுப்பாட்டிற்க்கு கொண்டு வர முடியவில்லை. டிரம்புடைய செயல்களும் இவர் வெளியேற்றிய நபர்களின் செயல்களும் ஒன்று போலவே இருக்கின்றன.

2. ஆஃப்கானிஸ்தானில் 714 பில்லியன் டாலர்கள் செலவு செய்தும் அமெரிக்க தோல்வியடைந்துள்ளது.

SIGAR என்ற ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு மேற்பார்வை அதிகாரி வெளியிட்ட புதிய காலாண்டு அறிக்கையில், ஆப்கானிய அரசாங்கத்தை பலமாக்க இதுவரை நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை செலவழித்ததில் அமெரிக்கா தோல்வி அடைந்தது என்றும், அதே நேரத்தில் நாட்டில் ஓபியம் (opium) என்கிற அபினி உற்பத்தியின் மதிப்பு ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறியது. கடந்த 15 வருடங்களாக அமெரிக்க, ஆப்கானிஸ்தானில் பல அரசாங்கங்களை ஆதரிப்பதிலும், அதன் ஆயுதப்படைகளை வளர்ப்பதிலும், நாட்டின் அடிப்படைவசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை கட்டியமைப்பதிலும் இதுவரை 714 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது. இவ்வளவு செலவு செய்தும், ஆஃப்கானில் ஊழல் பெருகிய கலாச்சாரம் மற்றும் அமெரிக்கவின் நேரடி கண்காணிப்பு குறைவாக இருந்த காரணத்தால், முடிவுகள் திருப்திகரமானதாக வரவில்லை. அதுமட்டும் இல்லாமல், அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கானிய அரசாங்கம் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களிடையில் சமநிலை 2016 யிலிருந்து இதுவரை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் மொத்த மாவட்டங்களில் 60% அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ், மீதமுள்ள 40 சதவீதம் தாலிபான் அல்லது மற்ற ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இருவருக்குமிடையில் குண்டுவெடிப்புகள் மற்றும் மோதல்களின் எண்ணிக்கை, கடந்த காலாண்டில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்-1 முதல் மே-31,2017 வரை 6,252 அபாயமான சம்பவங்கள் ஐ.நா. பதிவு செய்தது எனவும், இது கடந்த காலாண்டு காலத்திலிருந்து 21% அதிகரித்துள்ளது எனவும் இந்த அறிக்கை தெரிவித்தது. வரவிருக்கும் நாட்களில், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கிய புதிய செயல்திட்டத்தை வழங்கயுள்ளார். சில அறிக்கைகளின் படி, இந்த செயல்திட்டத்தின் நோக்கமானது, ஆஃப்கானிஸ்தானின் படைகளுக்கு இன்னும் அதிகமாக அமெரிக்க படைகளை ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் அனுப்புவதே ஆகும். இதேப் போன்ற செயல், ஏற்கனவே சிரியாவில் செய்து எந்த ஒரு பிரயோசனம் இல்லாமல் அமெரிக்க தோல்வியடைந்தது. ஆஃப்கான் இதுவரை போர்சூழலிருந்து வெளியே வரவில்லை, 16 வருடங்களாக ஆக்கிரமைப்பு செய்த அமெரிக்க, கடைசியாக ஒபாமா தலமையில், ஆஃப்கானில் தன் வெற்றியை அறிவித்து, தன் மொத்த படைகளை திரும்ப சொன்னது. ஆனால், அது இதுவரை வெற்றி பெறவில்லை, தனக்கு சாதகமாக இருக்கும் ஆஃப்கானிய அரசங்கத்திற்கும், தாலிபானுக்கும் உள்நாட்டுப் போர் தொர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் எல்லா செயல்திட்டங்களை நாசமாக்கும் தாலிபானை 15 வருடங்களாக போரில் இருந்தும், இதுவரை தோற்கடிக்க முடியவில்லை.

3. சமீப அல்-அக்ஸா வன்முறை முஸ்லீம் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துகிறது.

சமீபத்தில் பாலஸ்தீனில், “அபாயமின்மை காரணம்” என்ற கருத்தை வைத்து, அல் அக்ஸா பள்ளிவாசலை யூதப் படைகள் மூடியதை, பெரும் பரப்பரப்பை உலகெங்கிலும் உண்டாக்கி, அனைத்து முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக தோன்றியது. பாலஸ்தீன முஸ்லிம்களும் யூத ஆக்கிரமைப்பு படைகளின் முன்னே மிகப் பயங்கரமான அடியை எடுத்து வைத்தனர். பள்ளிவாசலுக்குள் பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் மூலம் முஸ்லிம்களை நுழைய கூறியதால், அவர்கள் கோபமடைந்து பள்ளி உள்ளே தொழாமல், வெளியே தொழுதனர். இவை அனைத்தும் கண்ட முஸ்லீம் ஆட்சியாளர்கள், வழக்கம் போல் பெரும்பாலோர் தங்கள் அணுகுமுறையில் செயலற்ற நிலையில் இருந்தனர். சூழ்நிலையை நிர்வகிக்கவும் மாற்றவும், அங்குள்ள மக்களிடமிருந்தே ஏதாவது ஒரு செயலை தூண்ட பார்த்தனர். உதாரணத்திற்க்கு, துருக்கியின் ஜனாதிபதி ஏர்தோகன், இந்த பிரச்சனைக்கு தன் நாட்டு இராணுவ சக்தியை பயன்படுத்தி, பாலஸ்தீன முஸ்லிம்களை காப்பாற்றும் திறனை வைத்துக்கொண்டும் அதை செய்யவில்லை. மாறாக எந்தவொரு ஆயுதமும் வைத்துக்கொள்ளாமல், கடந்த 70 ஆண்டுகளாக அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வரும் பாலஸ்தீனிய மக்களுக்கே போர் செய்ய ஏர்தோகன் வலியுறுத்தினார். இதைப்போன்றே, மற்ற முஸ்லிம் நாடுகளும், தங்களுடைய பலவீனம் மற்றும் நிலைமை கையாள்வதில் அரசியல் பலமில்லாத காரணத்தால், பெரும்பாலோர் செயலற்ற நிலையில் இருக்கின்றனர்.

Comments are closed.