சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ஜனநாயக முகத்தை மாற்றுவது ஒருபோதும் தீர்வாகாது

sharif-family

ஊழல் மற்றும் கொடுங்கோன்மையின் பாதுகாவலர் – ஜனநாயகம், முடிவுக்கு வரும்

28 ஜூலை 2017, வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப்பை பொது அலுவலகத்தில் இருந்து அகற்றியதுடன், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆளும் பரிவாரங்களுக்கும் எதிராக ஊழல் எதிர்ப்பு வழக்குகளை பரிந்துரைத்தது. முஸ்லீம் உலகம், ஊழல் மற்றும் அடக்குமுறைகளில் மூழ்கியுள்ள இக்காலகட்டத்தில், நீதியை கானும்போது முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆயினும், ஊழலின் பாதுகாவலரான ஜனநாயகம் முடிவுக்கு வரும்வரை, நாம் அனைவரும் ஒருபோதும் முழுமையான நீதியைக் காண மாட்டோம். ரஸுல்அல்லாஹ்(ஸல்) நம்மை எச்சரித்துக் கூறியதாவது,

“لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ”

“விசுவாசிகள், ஒரே புற்றில் இருமுறை தீண்டப்படமாட்டார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

உண்மையில், ஜனநாயகத்தின் முகம் மாறும்போதெல்லாம், நாம் தீண்டப்படுகிறோம், ஆனால் ஜனநாயகம் நிலைத்திற்கிறது. 1999 இல் நவாஸ் ஷெரீப்பின் முடிவை காணும்போது, நாம் மகிழ்ச்சியடைந்தோம் பின் முஷாரஃப்பை வரவேற்றோம். பின்னர் முஷாரஃப்பின் முடிவை காணும்போது, நாம் மகிழ்ச்சியடைந்தோம் பின் ஜர்தாரியை வரவேற்றோம். பின்னர் ஜர்தாரியின் முடிவை காணும்போது, நாம் மகிழ்ச்சியடைந்தோம் மீண்டும் நவாஸை வரவேற்றோம். இப்போது நாவாஸ் முடிவில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் விரைவில் நாம் புதிய முகத்தால் தாக்கப்படுவோம், ஏனென்றால் ஜனநாயகம் இன்னும் நம்மிடையே இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் நாம் ஜனநாயகத்தை நம்பப்போகிறோம், அது நம்மை முலுமையாக அழிக்கும் வரையா ?!

நினைவிருக்கட்டும், ஜனநாயகம் எங்கு இருக்கிறதோ, அங்கு ஊழல் இருக்கும். பாகிஸ்தான் மட்டும் அல்ல, ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா வரை உலகெங்கிலும் உள்ள ஜனநாயகக் கட்சிகளில் ஊழலை பனாமா பத்திரிகை வெளியிட்டது. மேலும், நிதியியல் மற்றும் அனைத்து வகையான ஊழல்களுக்கும் (ஃபஸத்), பாதுகாவலர் ஜனநாயகம் ஆகும். அல்லாஹு (சுபு)வின் கோபத்திற்கு ஆளான ஆட்சியின் பாதுகாவலர் தான் ஜனநாயகம், மேலும் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أنزَلَ ٱللَّهُ فَأُوْلَـٰئِكَ هُمُ ٱلظَّالِمُونَ
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக்கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! – (சூரா அல்-மாய்தா 5:45)

மக்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான பொருளாதாரத்தை தடுக்கும் பேராசைக்காரர்களின் பாதுகாவலர் தான் ஜனநாயகம், மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகிறான்.

كَىْ لاَ يَكُونَ دُولَةً بَيْنَ ٱلأَغْنِيَآءِ مِنكُم
உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே ( செல்வம் ) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக ( இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது ) – (சூரா அல் ஹஷ்ர் 59: 7)

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளுடைய கூட்டணியின் பாதுகாவலர் தான் ஜனநாயகம், மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகிறான்.

يَـۤأَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ ٱلْيَهُودَ وَٱلنَّصَارَىٰ أَوْلِيَآءَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ وَمَن يَتَوَلَّهُمْ مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُم
“ முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ( உங்களுக்கு விரோதம் செய்வதில் ) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான்.” – (சூரா அல்-மாய்தா 5:51)

மஸ்ஜீத் அல் அக்ஸா மற்றும் காஷ்மீர் முஸ்லிம்களை கைவிடப்படுவதற்கான காரணிகளின் பாதுகாவலர் தான் ஜனநாயகம், மேலும் அல்லாஹ் (சுபு) கூறுகிறான்.

وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْر
“அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்.” – (சூரா அன்-ஃபால் 8:72)

எனவே, நாம் மீண்டும் ஜனநாயகத்தால் தாக்கப்பட கூடாது. அல்லாஹ்(சுபு) வின் கட்டளைப்படியும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படியும் ஆச்சிசெய்யும் கிலாஃபா கீழ் உண்மையான மகிழ்ச்சிக்கான ஹிஸ்புக் தஹரீர் உடன் இணைந்து போராடுங்கள், மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

” ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيَّةً فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ ثُمَّ سَكَت”َ

“ அதன்பின் அடக்குமுறை ஆட்சி அல்லாஹ் விரும்பும் வரையிலும் இருக்கும், அதன்பின் அவன் விரும்பினால் அதை நீக்கிவிடுவான். அதன்பிறகு நபிவழியில் கிலாஃபா தோன்றும். என்கிறவரை கூறி அமைதிகாத்தார்கள். ” – (அஹ்மத்)

Comments are closed.