சமீப பதிவுகள்

ஆய்வுகள்

இன்னொரு முறை ஜனநாயகத்தின் விஷக்கடியால் நாம் பாதிக்கப்பட வேண்டாம், நபி(ஸல்) அவர்களின் வழிமுறை படி கிலாஃபத்தை நிறுவுவதன் மூலம் வெற்றியே காண்போம்!

பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி நவாஸ் ஷெரிப்பை அகற்றுவதற்கான ஆரம்பத்திலிருந்த எதிர்பார்ப்பு , 01-08-2017 அன்று புதிய பிரதமரைத் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தேர்ந்தெடுத்தப் பின், இப்பொழுது மறைந்துவிட்டது, ஊழல் செய்ததற்கு ஒருவரை அகற்றி, அவருக்கு பதிலாக ஊழல் செய்வோரின் வரிசையிலிருந்தே அடுத்த நபரை தேர்ந்தெடுத்துள்ளனர் இதேப் போன்ற ஏமாற்றத்தை நாம் முன்பும் பெற்றுள்ளோம், 1999-ல் இதே நவாஸ் ஷெரிப் மாற்றப்பட்டார், பிறகு 2008-ல் பர்வேச் முஷர்ரப், 2013-ல் ஆஸிப் அலி ஜர்தாரி, இப்பொழுது 2017-ல் திரும்பவும் நவாஸ்

நபி(ஸல்) நம்மை எச்சரிக்கை செய்யும்போது, கூறினார்:

“ஒரே பொந்தில், ஒரு முஃமின் இரண்டு முறை கொட்டப்பட மாட்டான்” (புஹாரி, முஸ்லிம்)

தற்போதைய அரசின் மூலம் பாக்கிஸ்தானில் உண்மையான மாற்றத்திற்க்கான நம்பிக்கையே இல்லை என்பதே அங்கே இப்பொழுது நிலவுகின்ற உணர்வு அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது மாற்றத்தை கொண்டு வருவோம்! என்று போய் பிரச்சாரங்கள் கூவுகின்ற எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி

ஒவ்வொரு முறையும் ஜனநாயகத்தின் மூலமே உண்மையான மாற்றத்தை தேடுவது நம்முடைய ஏமாற்றத்தை உறுதிப்படுத்துகிறது ஆரவாரமாய் கூக்குரலிடுகின்ற கட்கிகள் மற்றும் ஜனநாயகத்தின் கோட்பாட்டிலேயே மாற்றத்தை கொண்டு வர பார்க்கும் அமைப்புகளின் உதாரணமானது, சமையலறையில் சத்தமாக கொதிக்கும் நீர் நிறம்பியுள்ள பானை போன்றதாகும், கொதிக்கும் பொழுது அதனுடைய சத்தமும், அசைவும் பயங்கரமாக இருக்கும் ஆனால், பட்டினியால் பாதிக்கப்பட்டோரை திருப்தி படுத்தும் திறனை இழந்து விடும் ஜனநாயகமே, ஊழலுக்கு மற்றும் (முதலாளித்துவவாதிகளுக்கு மட்டும்) பணத்தை அநியாயமாக சம்பாதிப்பதற்க்கும் ஒரு வழியாக இருக்கையில், எப்படி மக்களின் கஷ்டங்களை போக்க முடியும்?

பாக்கிஸ்தானை உருவாக்கிய ஆகஸ்ட் 1947 முதல் இன்றுவரை ஏழுபது வருடங்களாக தெளிவாக நிறுவப்பட்டு, மக்களை ஏமாற்றுகின்ற இந்த ஜனநாயகம், எப்படி மக்களை திருப்தி படுத்தும்? மேற்கு நாடுகளில் மொராக்கோ(Morocco) யிலிருந்து, துருக்கி வழியாக, கிழக்கில் இந்தோனேசியாவரை (Indonesia) ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுபவர்கள் ஒவ்வொரு முறையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நமக்கு கொடுத்து பின்னர் ஏமாற்றுக்கின்றனர் அதற்கு பிறகு, ஆட்சியுடைய விஷத்தால் நாம் கொட்டபடுகின்றோம்.

நாம் வருகின்ற காலத்திலும், ஒவ்வொரு முறையிலும் இவர்களின் இவ்விஷத்தால் கொட்டப்படுவோம் அது தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து வந்தாலும் அல்லது இவர்களுக்குப் பின் ஆட்சி செய்ய முயலுகிறவர்களிடமிருந்து வந்தாலும சரியே.

ஜனநாயகத்தின் மூலம் ஆட்சி செய்கிற அனைவருமே ஆட்சியாளர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் இறைவனான அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமல் அவனுக்கு மாற்றமாக, பூமியில் ஊழல் செய்கிறார்கள் ஏனெனில், ஜனநாயகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் தருவாயில் ஆட்சி செய்கிறவர்கள் அல்லாஹ்(சுபு) தங்கள் மீது உத்தரவிட்டதை தெளிவாக புறக்கணித்து, அவன் தடுத்ததை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறார்கள் ஆதலால், ஜனநாயகத்தின் கீழ் இன்னொரு 70 வருடங்கள் நாம் இங்கே பாகிஸ்தானில் இருந்தாலும் அல்லது உலகத்தில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டில் வாழ்ந்தாலும், உண்மையான மாற்றம் காணமுடியாது.

அல்லஹ்(சுபு) இதைப்பற்றி குர்ஆனில் எச்சரிக்கை செய்கிறான்,

قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏ وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِ

பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள் [2:11]

ஜனநாயகத்தில், ஆண்கள் மற்றும் பெண்களின் தேவைகள், இலாபம், இச்சைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு பாரளுமன்றத்தில் கூடி சட்டங்களை உருவாக்குவதினால், நாம் எப்பொழுதும் இதனுடைய விஷத்தினால் தாக்கப்படுவோம்.

இவர்கள் குர்ஆனில் கூறப்பட்ட கீழ்காணும் அல்லாஹ்வின் உத்தரவுக்கு மாறு செய்கின்றனர்

بَعْضِ عَنْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَءَهُمْ اَهْوَا وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ
مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَ‌

இன்னும், அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக [5:49]

குஃப்ராக இருக்கும் இந்த ஜனநாயகத்தின் கீழ் நாம் வாழும் வரை, எப்படி ஒரு நேரான பாதையில் இருக்கமுடியும்?

இந்த ஜனநாயகம், ஆட்சியளர்களை தொடர்ந்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளான, மேற்கத்திய அதிகாரிகளோடு தொடர்புகொண்டு, இரகசியங்களை வெளிப்படுத்தி, அவர்களிடமிருந்து வழிகாட்டலை நாடுவதற்கும் அனுமதிக்கிறது இந்நிலையிருக்கும் வரை, நாம் எப்போதும் ஜனநாயகத்தின் விஷத்தால் கொட்டப்படுவோம்

அல்லாஹ் இச்செயலை தடை செய்கிறான், திருக்குர்ஆனில் வருவதாவது:

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து, உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள் [60:9]

மேலும், மஸ்ஜிதுல் ஆக்ஸாவை கைவிடுவதையும், பாலஸ்தீனம், கஷ்மீர் போன்ற நாடுகள் மற்றும் இவற்றில் பல்லாண்டுகளாக துன்புறுத்தலில் வாழுகின்ற முஸ்லிமான நம் சகோதர சகோதிரிகளை எதிரிகளிடம் ஒப்படைப்பதும், அல்லாஹ் தடை செய்துள்ள இதுப்போன்ற காரியங்களை இந்த ஜனநாயகம் அனுமதிக்கிறது

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ

அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் [8:72]

ஆகவே, எப்படி இப்பேற்பட்ட ஜனநாயகத்திலிருந்து உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

ஆற்றல் வளங்களை (energy resources) பொதுச்சொத்து என இஸ்லாம் தெரிவித்துள்ளது, இதற்கு நேர்மாறாக, இந்த ஜனநாயகம் நமது வளங்களை தனியார்மயமாக்குகிறது (privatization)

நபி(ஸல்) அவர்களின் கீழ்வரும் உத்தரவுக்கு மாற்றமான இந்த ஆட்சிமுறை இருக்கும் வரை, இதனுடைய விஷத்தால் நாம் கொட்டப்படுவோம்

முஸ்லிம்கள் மூன்று விஷயங்களில் கூட்டாளியாக இருக்கிறார்கள்: தண்ணீர், உண்வளிக்கும் மேய்ச்சல் மற்றும் (ஆற்றல் வாய்ந்த) நெருப்பு (Energy resources) (ஹதீஸ்: முஸ்னத் அகமது)

நபி(ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் வரியை (tax) பற்றி கடுமையாக எச்சரித்தும், இந்த ஜனநாயகம் தேவையுடையவர்கள், ஏழைகள் மீதே கஷ்டமான வரியை விதிக்கிறது

சட்டவிரோத வரிகளை சேகரிப்பவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் (ஹதீஸ்: முஸ்னத் அகமது)

அலலாஹ்(சுபு) வட்டியை ஹரமாக்கியும், இந்த ஜனநாயகம் வட்டிக்கு வெளிநாட்டுக் கடன்களை அனுமதிக்கிறது, இது ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் விழுவதை போன்றதாகும்

وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌

அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் [2:272]

மேலும், ஆட்சியாளர்களின் கைகளில் மட்டும் எப்போதும் செல்வம் குவிந்திருக்க வேண்டும் என்பதையும் இந்த ஜனநாயகம் உறுதிப்படுத்துகிறது

அல்லாஹ்(சுபு) உத்தரவிடுகிறான்:

مِنْكُمْ‌ءِبَيْنَ الْاَغْنِيَا كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً
மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக [59:7]

ஆகவே, எப்படி நாம் இதுப்போன்ற இன்னும் இதைவிட அதிகமான ஹராமான விஷயங்களை அனுமதிக்கும் இந்த ஜனநாயகத்தின் மூலம் உண்மையான மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியும்?!

பாகிஸ்தானின் முஸ்லிம்களே!!!

இனிமேலாவது, ஜனநாயகத்தின் மூலமே சமூகத்தில் நல்ல மாற்றத்தை தேடிகொண்டே நேரத்தை வீணடிக்க வேண்டாம் எத்தனை முறை நாம் இதனடிப்படையில் மாற்றத்தை தேடிக் கொண்டுவர பார்த்தாலும், அதனுடைய விஷத்தால் கண்டிப்பாகக் கொட்டப்படுவோம் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியாமை, பாவம் மற்றும் அத்துமீறல் நிறைந்த இந்த ஜனநாயக ஆட்சிமுறை பூமியில் இருக்கும் வரை, நம் வாழ்வில் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருள், ரஹ்மத், பர்கத் ஆகியவற்றை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. ஒடுக்குமுறையான இந்த ஜனநாயகத்தின் பக்கம் நம்மை அழைப்பவர்கள் மீது நாம் எவ்விதத்திலும் சாய்ந்து விடவேண்டாம் ஏனெனில் அல்லாஹ் இதை எச்சரித்து கூறுகிறான்:

ءَوَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَا وَلَا تَرْكَنُوْۤا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُ
ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் – அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள் [11:113]

முஸ்லிம்களே வாருங்கள்! தீனுல் இஸ்லாமை நம் வாழ்வில் முழுமையாக நிறைவேற்றுவோம்!, சமுகத்தில் செயல்படுத்துவோம்! இவ்விரண்டு காரியங்கள் செய்ய நபி(ஸல்) வழிமுறையில் கிலாஃபாவை நிலைநாட்ட வேண்டும் கிலாஃபாவை நிலைநாட்டுவதில் மட்டும் தான் உண்மையான வெற்றிக்கிடைக்கும் சமூகத்தில் சரியான மாற்றம் கொண்டு வர வாருங்கள் ஹிஸ்புத் தஹ்ரீர் (Hizb ut Tahrir) அமைப்பின் தாயிகள் (Dayees) மற்றும் செயல்வீரர்களோடு (Activists) சேர்ந்து செயல்படுவோம் ஏனெனில், இந்த அமைப்பு மற்றும் இதன் உறுப்பினர்கள் மட்டும் தான், பாக்கிஸ்தானை உட்பட பல நாடுகளிலும், நபி(ஸல்)-யின் வழிமுறையில் கிலாஃபாவை நிலைநாட்டும் வேளைகளில், இரவும் பகலுமா ஈடுபட்டு கொண்டுயிருக்கின்றனர் பாக்கிஸ்தான், 1947ல் இந்தியாவை விட்டு பிரியும்போது இஸ்லாமை முன்வைத்து பிரிந்த ஒரு புனித பூமியாகும் இதை மனதில்வைத்து செயல்படுங்கள்

பாகிஸ்தானின் ஆயுத படைகள் மற்றும் வீரர்களே!!!

ஜனநாயகத்தின் உண்மைநிலை, அதன் ஊழல் மற்றும் அடக்குமுறை அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்துள்ளது முஸ்லிம் உம்மத்திற்க்கு இந்த ஆட்சிமுறை துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்களைத் தவிர வேறெதையும் கொடுத்ததில்லை, அதுமட்டும் இல்லாமல், நம் எதிரிகளின் மேலாதிக்கத்தையும் நம்மீது செலுத்தியுள்ளது ஜனநாயகம் என்ற அழுகும் சடலத்தை ஒரேடியாக புதைத்து நபி(ஸல்) அவர்களின் முறையில் கிலாஃபாவை மீண்டும் நிறுவ, உங்கள் நுஸ்ரஹ் (Nussrah) எனப்படும் ஆதரவை தாருங்கள்

இது தான் மாற்றத்தை கொண்டுவருவதற்காண சரியான நேரம், அதனால் வாருங்கள் சகோதரர்களே! அல்லாஹ்(சுபு), அவனுடைய தீன் மற்றும் ஈமான் கொண்டவர்களின் பக்கம் இணைந்து, முஸ்லிம் உம்மத்தை முதன்மையானதாக ஆக்கி, பல நுற்றாண்டுகளுக்கு மிகுந்த வலிமையாக இருந்ததை போல், மறுபடியும் இந்த உம்மத்தை ஆக்குவோம் இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ وَيُؤْتُوْنَ‏ الصَّلٰوةَ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُه
وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَه

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம் நிச்சயமாக உங்களுடைய (உண்மையான) தோழர்கள்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்
[5:55-56]

Comments are closed.