சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப் பார்வை 05.08.17

kim-jong-un-donald-trump

லஸ்கர் –ஏ- தாய்பா – ஒரு கண்மூடித்தனமான நகர்வு

பாகிஸ்தானில் தொண்டு நிறுவனம் என்றும் ஐ.ந.வால் ஆயுதக்குழு என்றும் அறிவிக்கப்பட்ட “லஸ்கர்-ஏ-தாய்பா” இப்போது ஒரு அரசியல் கட்சி துவங்கியுள்ளது. இந்த அமைப்பு 2008 இல் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது . லஸ்கர்-ஏ-தாய்பா என்பது ஜமாத்-உட்-தாவா என்ற அமைப்பின் துணை அமைப்பு., இந்த அமைப்பு ஐ.நா.வால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அதிகாரத்தில் உள்ள “ஹாபிஸ் முகமத் சயீத்”, என்பவர் 2012 ஆம் ஆண்டு ஐ.நா.வால் தேடப்பட்ட நபர், லஸ்கர்-ஏ-தாய்பா அமைப்புடன் இவருக்கு தொடர்பு உள்ளதால், இவரை கைது செய்ய உதவுபவர்க்கு $10 மில்லின் சன்மானம் அறிவிக்க பட்டுயிருந்தது. தற்போது விட்டு காவலில் இருக்கும் இவர் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சியில் என்ன பங்கு வகிக்க போகிறார் என்பது இன்னும் வெளிவாகயில்லை. 2005 ஆம் ஆண்டு ஐ.நா சபை, லஸ்கர்-ஏ-தாய்பாவை, அல்-கொய்தா, ஒசாமா பின் லாடன், மற்றும் தலிபான் அமைப்புகளுக்கு உதவியதாக கூறி சர்வதேச அளவிலான தடைவிதிக்க பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து. இந்த புதிதாக அமைக்கப்பட்ட MML பார்ட்டி (மில்லி முஸ்லீம் பார்ட்டி) பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம், விண்ணப்பம் கோரி அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அனால் இந்த அமைப்பு ஜமாத்-உட்-தாவா அமைப்புடன் தொடர்புடையதாக உள்ளதால் இது அங்கிகரிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எவ்வாறெனினும் இந்த கட்சியின் கொள்கைகள் ஆனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும், இன்று வரை வெறும் இந்தியா மீதுள்ள வெறுப்பு உணர்வை மட்டுமே இந்த அமைப்பு வெளிப்படுத்தி உள்ளது. இந்திய எதிப்பு மட்டும் தான் இவர்கள் அரசியலுக்குள் வருவதற்கான காரணமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வட கொரியா அமெரிக்காவை அச்சுறுத்துகிறது

வட கொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்கிறது, தங்கள் மீது ஐ.நா. மூலியமாக அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்கு கண்டிப்பாக அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என்று வட கொரியா உறுதி கொண்டுள்ளது. இதற்காக மேலும் பல புதிய அணுசக்தி சோதனைகளை செய்து வருகின்றது. இந்த தடைகளினால் வட கொரியாவின் ஏற்றுமதி வருவாய், மூன்றில் ஒரு பகுதி குறைந்துள்ளது. இந்த தடைகளை பற்றி பிபிசி செய்திகள் குறிப்பாக விவரித்துள்ளது, அதன் படி நிலக்கரி இறக்குமதி, கடல் சார் உணவு பொருட்கள், இரும்பு மற்றும் இரும்பு தாது பொருட்கள், மற்றும் இதர கனிம பொருட்களின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வட கொரியா தொழிலாளர்களை புதிதாக வேலைக்கு நியமிக்கம்கூடாது, வட கொரியா நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளவர்கள் இதற்கு மேல் அந்த நிறுவனங்கள் மீது எந்த ஒரு முதலீடையும் செய்ய கூடாது, இனி வட கொரியா உடன் புதிய கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடக்கூடாது. தனி மனிதர்கள் பயணம் செய்வதில் தடைகளும் அவர்களின் சொத்துகல் முடக்கப்படுவதும் அதிகரித்து உள்ளது. இந்த அணுசக்தி சோதனைகளை காரணங்களாக வைத்து வட கொரியாவை அமெரிக்கா அச்சுறுத்தி வருகிறது. எனினும், இந்த நிகழ்வுகளை நாம் தனிமைப்படுத்தி பார்க்க கூடாது. மாறாக சீன ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்க எடுக்கும் ஒரு முயற்சியாக தான் பார்க்க வேண்டும். சீன எல்லை பகுதிகளின் பதட்டங்களில் ஈடுபடுவதினால், சீனாவின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்தி அமெரிக்கா அதன் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது. தன் உடன் போட்டியிடும் ஆதிக்கசக்திகளை எது வரையிலும் அமெரிக்கா கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

Comments are closed.