சமீப பதிவுகள்

ஆய்வுகள்

செய்திப் பார்வை 09.08.17

us-troops-afghanistan

 

ஆப்கான் கொள்கை வகுப்பதில் அமெரிக்கா குழப்பமடைந்துள்ளது

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போருக்கான கொள்கை வகுப்பதில் முன்னேற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆழ்ந்த விரக்தியடைந்துள்ளார்.

NBC செய்திகள் படி:

ஆப்கானிஸ்தானில் புதிய அமெரிக்க போர் திட்டம் வகுக்கும் ஆலோசகர்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதட்டமான சந்திப்பின்போது, தலைமை போர் தளபதியை பதவிநீக்கம் செய்யவேண்டும், என்று டிரம்ப் கூறியதாக முத்த நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 19 கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் தளபதியான ஜெனரல் ஜான் நிக்கல்சன் என்பவரை மாற்ற வேண்டும், அவரால் ஆப்கான் போரில் வெற்றிக்கான முடியவில்லை, இதற்கு மாற்றமாக பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் கூட்டுத் தலைவர்களான ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டின் இவர்களை நியமிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனால் பென்டகன் ஆப்கானிஸ்தானில் ஜெனரல் ஜான் நிக்கல்சன் பதவி காலத்தை நீடிக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

இரண்டு மணிநேரம் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், நேட்டோ நட்பு நாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் ஆப்கானிலுருந்து பெரும் கனிமங்களில் தங்கள் பங்கு குறித்து கேள்வி எழுப்பினார். மேல்மட்ட ராணுவ அதிகாரிகள் பதவி நீக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது அவரின் அதிருப்தியை வெளிப்படுதியது. .

ஆப்கானிஸ்தான் பிரச்சினை டிரம்பிற்கும் அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான H.R.McMaster க்கும் இடையே கருது வேறுபாடு உள்ளது என்று டைலிகாலர் என்னும் வலைதளம் வெளியிட்டது.

“ஜனாதிபதி எதை செய்ய நினைத்தாலும் அதை மெக்மாஸ்டர் (H.R.McMaster) எதிர்க்கிறார்” என்று ஓர் மேல்மட்ட அதிகாரி தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார் – அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் மெக்மாஸ்டர், சிரியாவிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார் – அதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார் மெக்மாஸ்டர், சீனா பிரச்சினையை கையில் எடுக்க டிரம்ப் விரும்புகிறார், அதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார் மெக்மாஸ்டர், இஸ்லாம் குறித்த பிரச்சினையை சமாளிக்க விரும்புகிறார் டிரம்ப், அதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார் மெக்மாஸ்டர், ஈரான் ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பது யாவரும் அறிந்ததே, அதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார் மெக்மாஸ்டர். இத்தகைய கருது வேறுபாடுகள் அனைத்துமே நம்மை அதிர்ச்சில் ஆழ்த்துகிறது.

இது போன்ற செயல்பாடுகள் அனைத்தும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் (தேசியவாதிகளுக்கும்) நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆதரவில் செயல்படும் அரசு அங்குள்ள குறைவான நிலப்பரப்பை தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, மீதம் உள்ள அனைத்தும் முஜாஹிதீன் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் இது அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. இதில் அமெரிக்காவின் தோல்வி வெளிப்படையாக அனைவர்க்கும் தெரிகின்றது, இது டிரம்ப் தேசியவாதிகள் வைக்கும் கருத்திற்கு வலு ஊட்டுகிறது.

ஆப்கானிஸ்தானை தன் கட்டுப்பாட்டில் வைப்பது அமெரிக்காவின் போர்த்திட்டத்திற்கு மிகவும் முக்கியமானது. இதன் புவியியல் அமைப்பு, உலகிலுள்ள மற்ற வல்லரசுகளை(ரஷ்யா & சீனா), எதிர்கொள்ள உகந்த இடமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவில் உள்ள ஒரே தடை, அங்கு உள்ள நேர்மையான முஸ்லிம்கள், இவர்கள் அல்லாஹுக்கு மாறு செய்யும் முஸ்லிமல்லாதவரின் ஆட்சியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பது மட்டும் தான்.

அமெரிக்கா ஏமனில் அதன் ஈடுபாட்டை தீவிரப்படுத்துகிறது

ஆப்கானித்தானில் தோல்விக்கு பின், ஏமனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா.

வாஷிங்டன் போஸ்ட்டின்படி: மத்திய எம்மனை தனது கோட்டையாக கொண்டுள்ள அல் கொய்தா போராளிகளை அங்குஇருந்து அகற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தில் ஒரு அங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று பென்டகனிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு சிறிய புலனாய்வு குழு களத்தில் உள்ளதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் கேப்டன்.ஜெப்.டேவிஸ் தெரிவித்தார், கூடுதலாக வரும் வாரங்களில் படைகள் அனுப்பப்படுமா என்பதைப்பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த செய்தி வெளியாவதற்கு ஒரு நாள் முன்னர், ஐக்கிய அரபு நாடுகள் இதே போன்ற செய்தியை வெளியிட்டது. அதில் ஐக்கிய அரபு நாடுகள் அமெரிக்கா படைகளுடன் இணைந்து ஏமன் ராணுவத்திற்கு துணையாக, அல் கொய்தா வை எதிர்கொள்ளும் என்று அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையானது அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தா பயங்கரவாத குழுவினருக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க ஆதரவிலான நடவடிக்கை ஆகும். டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர், தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்களாக இவை மேற்கொள்ள படுகின்றன.

முஸ்லீம் உலகின் மீதான கட்டுப்பாட்டை தக்கவைக்க அமெரிக்கா போராடி வருகிறது. ஒரு நாட்டிற்குப்பின்னர் மாற்று ஒரு நாடு, அடுத்து அடுத்த நாடுகளாக அவர்களின் இராணுவ தலையீடு, விமான தாக்குதல்களுக்கு பின்னர், “ஆலோசகர்கள்” வைப்பது என்ற நிலைக்கு முன்னேறி வருகிறது, கூடுதல் தரை படைகளையும் அனுப்பிவருகின்றது.

இவை அனைத்தயும் கண்டு அமெரிக்கா பலவீனம் அடைந்துள்ளது என்று கூறிவிட முடியாது. அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் வலுவான மற்றும் மேலாதிக்க சக்தியாக தான் உள்ளது. இது தென் அமெரிக்காவில் தன் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, கொரியா மற்றும் தென் சீனக் கடலில் அமெரிக்கா ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே முஸ்லீம் உலகில் வெளிப்படையான பலவீனம் என்பது உண்மையில் முஸ்லிம்களின் சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு, அமெரிக்காவின் மாற்றமல்ல. முஸ்லிம்கள் மீண்டும் எழ துவங்கியுள்ளனர், முஸ்லீம் மக்களிடம் சிந்தனை எழிற்சி ஏற்பட்டு உள்ளது, அவர்களுக்கு இஸ்லாமிற்கு எதிராய் நடக்கும் சூழ்ச்சிகள் புரிய துவங்கியுள்ளது. மேலும் பல முஸ்லிம்கள் இஸ்லாமின் எழிற்சிக்காக தங்கள் பணம், நேரம் மற்றும் உழைப்பை செலுத்த துவங்கியுள்ளனர், இதற்கான ஆய்வுகளை செய்து மக்களிடத்தில் அவர்கள் கற்றதை எடுதுறைகின்றனர். வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு இயக்கங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க துவங்கியுள்ளனர். ஆமாம், முஸ்லீம் உலகில் அமெரிக்காவின் பிடி வலு இழக்க துவஙகியுள்ளது. விரைவில் நாம் பார்ப்போம், அல்லாஹ்வின் அனுமதியுடன், நபி(SAW) அவர்களின் வழிமுறையில் மீண்டும் இஸ்லாமிய கிலாஃபா (கலிஃபாத்) நிறுவப்படும்.

அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஐக்கிய நாடுகளிடம் (UN) அறிவித்துள்ளது.

Politico செய்திகள் படி:

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தாங்கள் பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஐக்கிய நாடுகளிடம் அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் 2015ஆம் ஆண்டின் உடன்படுக்கையிலிருந்து தாங்கள் விலகுவதாக எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது, இதுவே முதன் முறை. இந்த உடன்படுக்கை ஏற குறைய 200 நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அறிக்கையில், அரசு துறை நிர்வாகம் அறிவித்துள்ளது, அமெரிக்கா நிர்வாகம், பருவநிலை மாற்றம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தையிலும் பங்குயேற்கும் மற்றும் 2015 பாரிஸ் பருவநிலை மாற்றம் உடன்படுக்கையை அமல் படுத்தும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும். அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்கும் தாங்கள் எதிர்கால கொள்கைகளில் மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கவும் இவை உதவும்.

டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜூன் மதம் அறிவித்திருந்தார்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், நவம்பர் 4, 2020 வரை அமெரிக்க இந்த ஒப்பந்ததை முழுமையாக திரும்பப் பெற முடியாது. இது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு நாளுக்கு பின். டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால், அடுத்த ஜனாதிபதி இந்த ஒப்பந்தத்தை மீண்டும் பெற முடிவு செய்யலாம்.

கூடுதலாக, அமெரிக்கா 2019 ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கமுடியாது. பின்வாங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக, எழுத்துபூர்வமாக 2019 ஆண்டு வரை ஐ.நா.வை அணுகவும் முடியாது. இதன் விளைவாக, வெள்ளிக்கிழமை அறிவிப்பு என்பது ஒரு குறிப்பிடத்தக்க அடையாள அறிக்கை ஆகும். இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடையாது.

பருவநிலை மாற்றத்தின் சிக்கல் குறித்து உலகளாவிய ஒருமித்த கருத்து நிலவும் நிலையில், அமெரிக்காவின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் குழம்பியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வலிமை, உள்நாட்டு அமெரிக்க பொருளாதார உற்பத்தித் திறன் அல்ல, உண்மையில், உலகின் இயற்கை வளங்களை அதன் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு கீழ் வைத்துள்ளதே அமெரிக்காவின் வலிமை காரணமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக எண்ணெய் (புதைபடிவ எரிபொருளின்) மீது ஆதிக்கம் செலுத்துவது. இதன் விளைவாக, பருவநிலை மாற்றத்தில் புதைபடிவ எரிபொருளின் தாக்கம் பற்றிய விவாதத்திலிருந்து, அமெரிக்காவின் இழப்பு மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது.

ஒபாமா ஏற்கெனவே பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை பலவீனமானதாக ஆக்கினார் , இந்த உடன்பாட்டில் இணைவதை தன்னார்வமனதாகவும், இதனுடன் எந்த உடன்பாட்டையும் பிணைக்காமல், இதனை சர்வதேச ரீதியாக அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், உள்நாட்டு அமெரிக்க வளர்ச்சிகளுக்கு ஏற்ப அமைத்தார். இருப்பினும், இதனால் உடனடியாக சட்டரீதியான விளைவு இல்லை என்றாலும். அமெரிக்காவின் வெளியேற்றத்தை அறிவிப்பதன் மூலம் உடன்பாட்டை சிதைப்பதன் மூலம் டிரம்ப் மேலும் முன்னெ செல்ல விரும்புகிறார்.

பருவநிலை மாற்றத்தின் காணக்கூடிய ஆபத்துக்கள் முதலாளித்துவ சித்தாந்தத்தின் நேரடி விளைவு ஆகும். இந்த சித்தாந்தம் அதன் மக்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் பொருளசையையும், பேராசையையும் மட்டுமே வளர்கிறது. முதலாளித்துவம் மூன்று நூற்றாண்டுகளுக்கும் குறைவாகதான் உலகத்தை ஆளுகிறது, ஆனால் உலகை அழிவின் விளிம்பில் கொண்டு சேர்த்துவிட்டது.

ஒரு வல்லரசு என்பது தான் ஆதிக்கம் செலுத்தும் நிலங்கள் மட்டும் இல்லாமல் முழு உலகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் அது ஆதிக்கம் செலுத்திய போது உலகம் சமாதானமாக இருந்தது. இஸ்லாம் மறுபடியும் நிறுவப்பட்டால் மட்டுமே உலகம் சமாதானத்திற்கு மீண்டும் திரும்ப முடியும்.

Comments are closed.