சமீப பதிவுகள்

ஆய்வுகள்

முஸ்லிம் உலகில் மதச்சார்பின்மை மயமாக்கப்படும் பாடதிட்டம் (மொழிபெயர்க்கப்பட்டது)

AUC

சமீபகாலமாக, துனீசியா, ஜோர்டான், பாலஸ்தீனம், மொராக்கோ மற்றும் அல்ஜீரியா போன்று அரபுலக பகுதியிலுள்ள பல நாடுகள் தங்களுடைய கல்வி பாடத்திட்டத்திற்கு எதிராக ஒரு தீவிர பிரச்சாரத்தை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறது. இது கல்வியை மேம்படுத்துவதாகவும் அறிவின் வேகத்துடன் போட்டியிட வேண்டும் எனக்கூறி இவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் நமது கல்வி பாடத்திட்டம் முன்னேற்றம் அடைவதற்கான மற்றும் வளர்ச்சி அடைவதற்குமான தேவை தீவிரமாக இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, உண்மையில் ஒரு புதிய கல்வி கண்ணோட்டத்தை உருவாக்கும் மற்றும் ஒரு மேம்பட்ட கல்வி புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது, அது சிந்தனை திறனை வளர்ப்பதிலும் அறிவுத்தறனின் மூலம் மேன்மைதங்கிய புதுமையை படைக்கும் இஸ்லாமிய குணநலனை உடையவர்களை உருவாக்குவதில் உதவி புரியும் மற்றும் இதுபோன்ற முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்துவதற்கு உதவிடும் வகையில் ஆற்றல்வளங்களின் வாயில்களை திறந்துவிடும்.

எனினும், இவ்வாறிருப்பினும், இந்த விவகாரத்தில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் இதுபோன்ற மாற்றங்கள் கல்வி பாடதிட்டத்தினை மதசார்பின்மை ஆக்குவதையும் “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம்” ஆகியவற்றிற்கு எதிரான போர் என்கிற சந்தர்பத்தை பயன்படுத்தி இஸ்லாமிய அகீதாவின் தொடர்பை துண்டிக்கவே அது முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளது. அது எதனால் என்றால் நமது அரபு மற்றும் இஸ்லாமிய பகுதியில் உள்ள பாடதிட்டத்தின் விஷயமானது அறிஞர்கள் மற்றும் சிந்தனைவாதிகளால் ஏற்படுத்தப்பட்டு வல்லுனர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு உள் விஷயம் கிடையாது. மாறாக, இது அதை மதசார்பின்மையாக்க பல்வேறு யுத்திகளை கையாளும் மேற்குலக நாடுகளின் கண்காணிப்புக்கு உட்பட்ட ஒரு உலகளாவிய விஷயமாகும். மதங்களிடையே ஒரு நெருங்கிய உறவை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமிய நிலங்களில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை தொடர்ந்து செய்துவரும் மதநல்லிணக்க மாநாடுகள் போன்று. அல்லது, ஐ. எம். எஃப் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதியுதவி நிறுவனங்களின் நிபந்தனைகள் மூலமாக சில நாடுகளுடைய கடன்களின் சிலவற்றை தள்ளுபடி செய்வதற்கும் அல்லது நிதியுதவி, கடன் பெறுவதற்கு பகரமாக கல்வி பாடதிட்டத்தில் சிலவற்றை புகுத்தியும் சிலவற்றை அகற்றுவது போன்று. ஐரோப்பிய-மத்திய தரைகடல் கூட்டுறவு போன்றும் அதில் ஐரோப்பா மற்ற நாடுகளிடத்தில் தன்னிடம் நதியுதவி பெறுவதற்கும், கூட்டுறவை வைத்துக்கொள்வதற்கும் மற்றும் இதுபோன்ற விஷயங்களுக்கும் பகரமாக தங்களது பாடதிட்டத்தை மாற்றுவதை கடமையாக்கியது போன்றும் இருக்கலாம். கூடுதலாக, UNRWA, UNESCO and UNICEF போன்ற சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்படும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், அவை “உலகமயமாக்கம்” எனும் உலக மதிப்புகளை அதன் கல்வி பாடதிட்டத்தில் ஒன்றிணைக்கவும் ஒரு புதிய உலக செயலாக்க அமைப்பை கோரும் சிந்தனைகளை உறுதிபடுத்துவது. அவர்கள் இரண்டு திட்டங்களில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர்: அவற்றில் ஒன்று மத்திய-கிழக்கு பகுதி சம்பந்தமானது மற்றொன்று மத்திய தரைகடல் தொடர்பானது.

மாற்றம் செய்ய வேண்டும் என பெரும் நாடுகளால் திணிக்கப்படுவது என்பது உலகம் முழுவதும் ஏற்படும் அரசியல் நிகழ்வுகளின் மாற்றத்தினாலும் மற்றும் அடிப்படையில் இஸ்லாத்தை நோக்கிய சர்வதேச நிலைப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதை காணலாம். அதன் விளைவாக, எப்போதெல்லாம் இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் விழுப்புணர்வு உம்மத்திடையே அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் கல்வி பாடதிட்டத்தின் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கின்றது, மற்றும் மேற்கின் மீதி விரோதம் கொள்ளக்கூடாது, ஜிஹாதை தூண்டக்கூடாது, யூத தேசத்துடன் (சட்டவிரோத) அமைதி மற்றும் இயல்பு நிலையை கடைபிடிக்க வேண்டும், சகிப்புத்தன்மை, மற்றவரை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கலகலப்பு காலாச்சாரத்தை நோக்கி அழைப்பதாக குறிப்பிட்டு அதை மாற்றுவதற்கான தேவை குறித்த சர்வதேச பரிந்துரைகளின் பிரச்சாரங்கள் அதிகரிக்கிறது. இவையனைத்தும் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் மீது நடத்திய படையெடுப்பின் போது அமெரிக்காவுக்கு எதிராக ஜிஹாது செய்யும் கருத்தாக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள தங்களது இஸ்லாத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, பாடதிட்டத்தை மாற்றியமைக்க அவர்கள் செயலாற்றியதை போன்று “தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட” உதவி புரிகிறது. இது செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுகளை தொடர்ந்து சவூதி பாடதிட்டத்தில் தவ்ஹீது பாடத்தில் ‘அல்-வலாஅ’ மற்றும் அல்-பராஅ’ (விசுவாசம் மற்றும் கைவிடுதல்) எனும் தலைப்பை முழுமையாக நீக்கி மாற்றம் ஏற்படுத்தியதை போன்றானது. அல்லது மொராக்கோவில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர் ஒவ்வொரு பள்ளி புத்தகத்திலிருந்தும் ஜிஹாது எனும் வார்த்தையை அழிக்கும் அளவுக்கான கோரிக்கைகள் எழுந்ததை காசாபிளாங்காவில் கண்டதை போன்று. இதுவே தான் அமீரகம், குவைத் மற்றும் யமனிற்கும் பொறுந்தும், அங்கு அதிபர் தனது மந்திரிகளிடம்: “அமெரிக்காவிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பாளர் வருவதற்கு முன் நாம் நமது கல்வி பாடதிட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது ஏனெனில் நாம் முஸ்லிம்களாக இருப்பதனால் மதத்தின் அளவை குறைப்பதினால் எவ்வித தீங்கும் ஏற்படாது” என உரக்கக் கூறினார்!

கவிஞரை போன்று தொத்திப் பரவக்கூடிய தற்போதய பெரும் மாற்றங்களை (பாடதிட்டத்தில்) எவரொவர் ஆராய்ந்து பார்க்கும்போது, அல்-அக்தல், இதை குப்பை என விவரிக்கின்றார். இஸ்லாமை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் காலனித்துவத்தை வெளியேற்றவும் குரல் எழுப்பிய பிரசித்திபெற்ற அரபு புரட்சிகள் நடைபெற்ற நாடுகள் மற்றும் அஷ்-ஷாமின் நிலப்பரப்பின் பின்னணியிலிருந்து வந்ததாக அவர் பார்க்கிறார். இது மேற்குக்கும் அதன் நாகரீகத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது என கருதும் இந்த இஸ்லாமிய விரவடைதலுக்கு எதிராக நிற்கும் கடமையை புரிய அழைக்கின்றது. ஆக பள்ளி பாட புத்தகங்களிலுள்ள சித்திரங்களில் ஆண்களின் தாடி மற்றும் பெண்களின் கிமார் (முகத்திரை) மற்றும் ஆடைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு ஜோர்டான் இந்த முயற்சியை கையில் எடுத்தது. அது குர்’ஆன் அல்-கரீமில் எண்ணிக்கை எனும் பாடத்தை ஒரு சிறிய புறா என்று மாற்றியமைத்ததை போன்று சூரா அல்-லைல் பற்றிய முழு பாடத்தையும் நீக்கியது அதை நீச்சல் பற்றிய புதிய பாடத்தை கொண்டு மாற்றியமைத்தது. அதேநேரம், அது சில பாடங்களில் குர்’ஆனுடைய ஆயத்தையும் நபிமொழிகள் சிலவற்றை மனனம் செய்வதை ரத்து செய்தது. மேலும் அது இப்னு பட்டூட்டா பற்றிய பாடத்தின் மாதிரியை மாற்றியமைத்தது, அதில் எவ்வாறு அவருடைய குழந்தை பருவத்திலிருந்து குர்’ஆனையும் கவிதையையும் பயின்றார் என்று குறிப்பிட்டுள்ள வாக்கியத்தை நீக்கியது. பாலஸ்தீனத்திலும் இதே நிலை தான் அவர்கள் யஹூதிகளுக்கு எதிராக போரிட வலியுறுத்தும் பல குர்’ஆன் ஆயத்துகளையும் ஜிஹாது மேற்கொள்ளவும் மற்றும் குஃப்பார்களுக்கு எதிராக போரிடுவது குறித்தான நபிமொழிகளையும் நீக்கினர். அல்ஜீரியாவை பொறுத்தவரை, கல்வி அமைச்சர் பெங்காபிரிட் ஏற்படுத்திய மாற்றங்கள் பெரும் விவாதத்தை தூண்டியது. பிரஞ்சு மொழி உபயோகிக்கும் திசையை நோக்கி ஆழமாக செல்லும் இவருடைய மந்திரிசபை இவ்வருடத்தின் தொடக்கத்தில் அரபு ஃபுஸ்’ஹாவுக்கு (பாரம்பரிய) பதிலாக பேச்சுவழக்கு அல்ஜீரிய தெரு மொழியை கொண்டு பள்ளிக்கூட ஆரம்ப நிலைகளில் உபயோகிக்க முன்மொழிந்தது. கூடுதலாக இந்த முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை பிரஞ்சு வல்லுநர்கள் மேற்பார்வையிடுவார்கள் என அமைச்சகத்தின் துறைகள் குறிப்பிடுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அவர்கள் நடுநிலை பள்ளியின் முதலாம் ஆண்டு புவியியல் பாட புத்தகத்தில் பாலஸ்தீனம் என்பதற்கு பதிலாக ‘இஸ்ரேல்’ என குறிப்பிட்டனர் பின்பு அது பரபரப்பை ஏற்படுத்தியதால் அமைச்சகம் அச்சுப்பிழை ஏற்பட்டதாக கூறி அதை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்தது! துனீசியாவை பொறுத்தவரை, மாணவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டி, இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களின் பலுவை குறைத்து இசை மற்றும் நாட்டியம் ஆகியவற்றை போதிப்பதற்கு போதுமான வாய்ப்பை வழங்கும் திட்டத்தை சமீபத்தில் கல்வி அமைச்சர் முன்மொழிந்தார். அதேபோல், வெட்க உணர்வை மீறும் சித்திரங்களை ஆரம்ப நிலைக்கான பாட புத்தகங்கள் கொண்டிருந்தன அது பெற்றோர்ர்களிடையே ஒரு கோப அலையை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக, அரபு நாடுகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒருவர், “கல்வி சீர்திருத்தம்” எனும் செயல்முறையின் நோக்கமானது அவர்கள் கூறியது போன்று பாடதிட்டத்தை மெருகேற்றுவது மற்றும் மாணவர்களுடைய அறிவுசார் மற்றும் அறிவின் நிலையை மேம்படுத்துவது என்பது கிடையாது என்பதை உணர்வார். மாறாக, அது அடிப்படையில் தீன், மதிப்புகள், வரலாறு மற்றும் ஷரீ’ஆவை குறிவைக்க ஆணையிடும் கருத்தாக்கங்களை அடிப்படையாக வைத்து கட்டமைக்கும் பாடதிட்டங்கள் கொண்டு மாற்றும் செயல்முறையை மட்டுமே குறிக்கின்றது. இஸ்லாமிய அடையாளத்தை முற்றிலுமாக அழிப்பது என்பது இதை தான் குறிக்கின்றது. ஆக பிரச்சனை என்பது சில வாக்கியங்களை மாற்றி உணர்வுகளை அல்லது சினத்தை தூண்டும் விதத்திலான மற்ற ஷரீ’ஆக்களை (வழிகளை) பின்பற்ற வைப்பது அல்ல. மாறாக, தீனுடைய விஷயத்திலும் அறிவின் விஷயத்திலும் எந்தவொரு பயனும் பெறாத விதத்தில் அறிவார்ந்த ரீதியிலும் நாகரீகம் மற்றும் அறிவு ரீதியில் தலைமுறைகளை அழிக்கும் விதத்தில் கல்வித்திட்டத்தை முழுமையாக மதசார்பின்மையாக்குவதாகும்.

நாம் பாடதிட்டத்தில் மாற்றம் ஏற்படுவதை குறிப்பிடும் விதத்தை வைத்து அது ஆரம்பத்தில் சீர்கேடற்று ஆரோக்கியமாக இருந்தது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அது ஏனெனில் பாடதிட்டத்தை மதசார்பின்மையாக்குவது என்பது உதுமானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியின் போதும் வட ஆப்பிரிக்க நாடுகளான மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனீசியா மற்றும் எகிப்து வரை பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்த சமயத்தில் மேற்கத்திய காலனியாதிக்க திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதனை தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் கலாச்சார காலனியாதிக்கம் நடைபெற்றது இதை தான் காலனியாதிக்கத்தின் போது மொராக்கோவின் கல்வித்துறை இயக்குனர் ஜார்ஜ் ஹார்டி உணர்ந்து “இராணுவ வெற்றியானது முழுமையான வெற்றி கிடையாது. படைகள் வல்லரசுகளை உருவாக்குகின்றன ஆனால் தொடர்ந்து நீடிக்கவும் மற்றும் நிலைத்திருக்கவும் அது உத்திரவாதம் அளிப்பதில்லை. பீரங்கிகளுக்கு முன் தலை குனிகின்றன அதேவேளை உள்ளத்தை வெறுப்பாலும் பழிவாங்கும் ஆசையாலும் தொடர்ந்து ஊட்டி விடப்படுகின்றது. உடல்களை அடக்கியதற்கு பின்னர் உள்ளங்களையும் அடக்குவதென்பது அவசியமான ஒன்றாகும். இது மற்றதை காட்டிலும் கூச்சல் மிக்கதாக இல்லையென்றாலும், அதை போன்று இது கடினமானதாக இல்லை என்றாலும், அதற்கு அதிக காலம் தேவைப்படும் (அதை சாதிக்க)” என்று கூறினார்.

அந்த சமயத்திலிருந்து இஸ்லாமிய நிலப்பரப்புகளை மதசார்பற்றவையாக ஆக்கும் பிரச்சாரங்கள் தொடர்ச்சியான முறையில் நடைபெற்றன மற்றும் அவர்கள் உம்மத்தின் கோட்டைகளை உள்ளிருந்தபடியே அழிக்க கல்வியை ஒரு கலாச்சார ஆயுதமாக பயன்படுத்தினர். கீழை நாட்டு நாகரீகம், மிஷனரிகள் மற்றும் மேற்கத்திய மயமாக்குதல் போன்றவை கல்வி பாடதிட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான கோரிக்கைகள் அதிகரித்தன அதனோடு வாழ்விலிருந்து மதத்தை பிரிக்கும் அகீதாவை (நம்பிக்கை) ஊக்குவிப்பதும் சேர்ந்து கொண்டது. அவர்கள் இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமாக இருக்கும் இந்த அகீதாவிற்கு ஊக்கமளிக்க மதசார்பின்மையாக்குதல் (அரபு மொழியில் ‘இல்மானியா’) எனும் வார்த்தையை ‘இல்ம்’ எனும் வார்த்தையுடன் பிணைத்தனர். ஆகையால் அவர்களுடைய அகராதிகளில் இடம்பெற்றிராத ‘ஞானம்’ எனும் ஆங்கில வார்த்தையுடன் தொடர்பில்லாத ‘மதசார்பின்மை’ எனும் வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாக ‘இல்ம் (ஞானம்) எனும் அரபு மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாக ‘இல்மானியா’ (மதசார்பின்மை) எனும் வார்த்தையை வழங்கியது மிகப்பெரிய ஏமாற்றுதல் ஆகும். மாறாக, அது மேற்குலகு ஏற்றுக்கொண்ட மனிதன், பிரபஞ்சம் மற்றும் வாழ்வு குறித்தான முழுமையான கருத்தாக்கத்தின் ஒரு பிரதிநிதியாகும்.

அந்நேரத்திலான ஐரோப்பிய ஆக்கிரமிப்பானது எகிப்திய, அல்ஜீரிய மற்றும் மொராக்கோவின் பள்ளிக்கூடங்களில் நேரடியாக கல்வி செயல்முறையை மேற்பார்வையிடவும் அயல்நாட்டு மாணவர் திட்டங்கள் மூலம் பிற்காலத்தில் கல்வி சீர்திருத்தத்தின் முன்னோடிகளாக திகழக்கூடியவர்களாக கருதப்படும் உள்ளூர் திறனாளிகளை தயார் செய்யவும் வேண்டி பிரஞ்சு மற்றும் ஆங்கில இயக்குனர்களை நியமனம் செய்ய நாடியது. இது எகிப்தில் முஹம்மது அலி பாஷா அயல்நாட்டு மாணவர்களாக ஐரோப்பாவிற்கு அனுப்பிய மாணவர்களின் எண்ணிக்கையை 319ஆக உயர்த்தி ஏற்படுத்திய சீர்திருத்தங்களை போன்றதாகும். அவர்களுடைய மாதிரியும் செயல்திட்டமும் “தி எக்ஸ்டிராக்‌ஷன் ஆஃப் கோல்டு ஆர் ஏன் ஓவர்வீவ் ஆஃப் பாரிஸ்” எனும் நூலின் ஆசிரியரான ரிஃபாத் தஹ்தவி ஆவார். பிரான்சிலிருந்து அவர் திரும்பி வந்த பிறகு, அவர்களுடைய சிந்திக்கும் முறை, கல்வி மற்றும் தனிநபர் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் முறை உட்பட பிரஞ்சு வாழ்விலுள்ள அனைத்து கூறுகள் பற்றி புகழ்ந்து எழுதினார். மற்றும் இந்த அயல்நாட்டு மாணவர் திட்டங்கள் மூலம் மனங்களில் ஊடுருவதினால் மட்டும் எந்த சிறப்பும் கிடையாது என்று அறிவுசார் லார்ட் க்ரோமர் இவ்வாறு கூறினார்: “இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் அறிவியல் கல்வியை பெற்ற இளைஞர்கள் தங்களது தாய்நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்புகளை தொலைத்து விடுகிறார்கள் அதேநேரத்தில் அவர்களுக்கு கலாச்சாரத்தை வழங்கிய அந்த தேசத்திற்கு உடையவர்களாகவும் அவர்களால் ஆக முடியவில்லை. இந்த மாதிரி இவ்விரண்டிற்கும் இடையே பிளவுபட்டுள்ளனர்“.

முஹமது அலியும் அவருடைய குடும்பமும் சமூகக் கல்வியை கட்டுப்படுத்தவும் அஸ்(Z)ஹரின் கல்விமுறையை ஓரம்கட்டி அதை அப்புறப்படுத்துவதற்கான காரியத்தை செய்தனர். அவருடைய திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவெனில் கல்விமுறையை மேற்கத்தியமயமாக்காத வரை ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என்று உறுதியாக இருந்த அவருடைய மகன் இஸ்மாயில் எப்போதும் கூறுவதற்கு ஏற்றவாறு எகிப்தை ஐரோப்பாவின் ஒரு பகுதியாக ஆக்குவது தான்.

பிரஞ்சு பல்கலைக்கழகங்களில் பயின்று மதசார்பற்ற மேற்கத்திய கலாச்சாரத்தால் நிரப்பப்பட்டு பண்படுத்தப்பட்ட இளம் தலைமுறையின் கைகளால் இந்த பாடதிட்டத்தின் மாற்றம் எனும் தொற்று பரவி துனீசியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளுக்கு சென்றடைந்தது. சுதந்திரம் எனும் மாயையை பின்தொடர்ந்து இவர்களில் முதன்மையானவராக துனீசிய அதிபரான போகீபா இருந்தார். இவர் ஒரு பிரஞ்சு மகனாக கருதப்பட்டார் மற்றும் குறிப்பாக உதுமானிய கிலாஃபாவை “கிலாபத்தை” அழித்தவரான முஸ்தஃபா கமாலினால் தாக்கம் பெற்றவர். அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தருணம் முதல், “கல்வியை நவீனப்படுத்துதல்” எனும் பிரம்மாண்டமான தலைப்பின் கீழ் கல்வி பாடதிட்டத்தை மதசார்பின்மையாக்குதலை நோக்கி வேண்டுமென்றே செயல்பட்டார். அவருடைய பார்வையில் “தீனின் அடிப்படையிலான பாரம்பரிய கல்விமுறையை தவிர வேறெதையும் போதிக்காத ஒரு பாரம்பரிய கல்விக்கூடமாக” ஜைத்தூனியா பல்கலைக்கழகத்தை கருதி அதை தேவையற்றதாக கருதினார். மற்றும் இஸ்லாமிய சமூக வரலாற்றில் வேறூன்றிய மதசார்புடைய ஜெய்தூனியா பல்கலைக்கழகத்தை வெறுமனே ஷரீ’ஆ மற்றும் உசூல் உத்-தீனை நவீன வடிவத்திலான நவீன தேச அதிகாரத்திற்கு உட்பட்ட பாடதிட்டம் மற்றும் திட்டங்களுக்கு கீழ்படியும் வண்ணமாக மாற்றியமைக்க நாடினார். அதன் நோக்கமானது அஜ்(Z)- ஜெய்தூனியாவிலிருந்து (மத கல்வி) தோன்றிய பாரம்பரிய குழுவானது அறிவுப்புரட்சி மற்றும் அதன் சீர்திருத்தங்கள் ஒரு வரலாற்று இடைவெளியின் காரணமாக படைப்புத்திறன் மிக்க மனங்கள் மற்றும் தொழில்துறை திறன்களை நோக்கி செலுத்தாத காரணத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக கருதி அதை அரசியல் மற்றும் கலாச்சார ஈடுபாட்டில் இருந்து விலக்கி வைப்பது. இது விளக்குவது என்னவென்றால் இதுவொரு அரபு இஸ்லாமிய கலாச்சாரத்தை அழித்தொழிக்கும் முயற்சி என குறிக்கிறது இதை பின்னடைவுக்கான காரணமாக கருதி போர்கிபா எப்போதும் அதை அவமதித்து வந்தார்.

மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவை பொறுத்தவரை, அரபு மொழியை கீழறுக்கவும், அதை எதிர்த்து போரிடவும் மற்றும் ஆரம்ப பள்ளிக்கூட அளவிலிருந்து பிரஞ்சு மொழியை ஏற்று நடத்திட காலனியாதிக்க சக்தியான பிரஞ்சு நாடி வந்தது. இந்த தீங்கிழைக்கும் பிரஞ்சு திட்டமானது தங்களுடைய மக்களிடத்திலிருந்து பிரிந்து போன, உம்மத்தை இகழக்கூடிய, ஐரோப்பிய நாகரீகத்தில் ஒருங்கிணைந்த, பிரஞ்சு குடியுரிமையை ஏற்றுக்கொண்ட மற்றும் மரணிக்கும் வரை பிரான்சை பாதுகாக்கக்கூடிய ஒரு பண்பட்ட மக்களை சார்ந்த குழுவை வடிவமைக்க முடிந்தது. குறிப்பாக 20ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் மற்றும் இந்த மாற்றமானது ஆழமாகவும் மற்றும் வேறூன்றியதாகவும் வரக்கூடிய தலைமுறையினரின் மீது அழிவை உண்டாக்கும் விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று நாடுபவர்களிடம் இந்த மாற்றத்திற்கான திறவுகோள் இருந்தது. இதன் விளைவாக, கல்வியை மேற்கத்தியமயமாக்குதலின் பணியானது அவர்களுடைய தொடக்க புள்ளியாகவும் மற்றும் அவர்களுடைய நோக்கத்தை குறிப்பிட்டது.

மத்திய தரைக்கடல் பகுதியில் தேவாலயமும் கல்வித்துறையின் பெரும்பகுதியை கண்காணித்து வந்தது அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்த அட்மிரல் டி கெய்டன் ‘வெள்ளை பாதிரியார்களுக்கு’ (பிரஞ்சு மதபோதக அமைப்பின் உறுப்பினர்கள்) “கல்வியின் மூலம் மக்களை ஈர்ப்பதற்காக நீங்கள் பாடுபட்டு நன்மையை நோக்கி அவர்களை நீங்கள் திருப்பி, இதுபோன்ற செயல்கள் செய்வதன் மூலம் நீங்கள் பிரான்சுக்கு மகத்தான சேவையை புரிந்தவர்கள் ஆவீர்கள்” எனக்கூறி 1871ல் கட்டளைகளை வழங்கினார். உங்களுடைய பணியை புத்தி கூர்மையுடன், விவேகத்துடன் மற்றும் ஜாக்கிரதையுடன் தொடர்ந்து செய்து வாருங்கள் உங்களுக்கு என்னுடைய ஆதரவு கிடைக்கும் மற்றும் எங்களை நீங்கள் முழுமையாக சார்ந்திருக்கலாம்”.

லெபனான் மற்றும் சிரியாவில் பாடதிட்டத்தை மதசார்பற்றதாக ஆக்குவதற்கான பணி முழு கவனத்துடன் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இது அரபு கீழ்த்திசை மொழிப்புலமையாளர்கள் குறிப்பாக அரபு மொழியில் சிறந்து விளங்கிய காரணத்தால் கல்வித்திட்டத்தில் ஆதிக்கம் செலுத்த நாடியதை போன்று இருந்தது. ஆகவே அவர்கள் பிரகாசமான இஸ்லாமிய வரலாற்றை சிதைத்து ஒரு அடக்குமுறை செய்யும் சாம்ராஜ்யமாக அதன் வரலாற்றை மாற்றியமைத்தனர். அவர்கள் அரபு மொழியின் மீதும் கவலை கொண்டிருந்தனர் இதன் காரணமாக இன்பம், மனிதன் மற்றும் வாழ்வு குறித்தான மேற்கத்திய மதிப்புகளை தூண்டும் விதத்தில் பிரஞ்சு கவிதைகள், உரைநடைகள் மற்றும் எழுத்துக்களை அரபு மொழியில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய நிலப்பரப்புகளில் அமெரிக்கா நுழைந்த பிறகு கல்வி பாடதிட்டத்தின் மீதான போரின் வீரியம் அதிகரித்தது. இஸ்லாமிய உலகில் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் அரபு வளைகுடா பகுதிகளில் பாடதிட்டத்தை மதசார்பற்றதாக ஆக்குவதை எண்ணமாக கொண்டு பிரச்சாரங்கள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றன. அவை “தீவிரவாதத்திற்கு” எதிரான போரின் ஒரு அங்கமாகவும் அமெரிக்கா, யூத அரசு, மற்றும் பொதுவாக மேற்குலகின் மீதான எதிர்மறையான தோற்றத்தை அழிக்கவும் நடைபெற்றன. கேம்ப் டேவிட் ஒப்பந்தம் மற்றும் ஓஸ்லோ மற்றும் மேட்ரிட் ஒப்பந்தங்களில் வெளியான வாக்குமூலங்கள் இதை தெளவாக காட்டின.

1979ல், யுனெஸ்கோவின் மேற்பார்வையில் லார்ட் கேரடனால் தலைமையேற்று செயல்படும் “இஸ்லாம் மற்றும் மேற்குலகு” எனும் அமைப்பின் அரசியல் நிர்ணயத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: பள்ளி பாட புத்தக தொகுப்பாளர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மதிப்புகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கக்கூடாது ஏனெனில் மதத்தை ஒரு அடிப்படையாகவோ அல்லது இலக்காகவோ முன்வைப்பது சரியாகாது.

எண்.19 அமைப்பு அல்லது ரேண்ட் மற்றும் AIPAC நிறுவனங்கள் போன்ற அமெரிக்க அரசியல் வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்திற்கும் அதிபருக்கு நேரடியாக சில ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர். சில அறிக்கைகளில் “அமெரிக்காவின் ” தீவிரவாதத்திற்கு ” எதிரான பிரச்சாரத்தின் நோக்கத்தை வரும் தலைமுறையினர் மீது வெறுமனே பத்து ஆண்டுகளுக்கு மட்டும் தான் கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் இதை நாம் ஒரு தற்காலிக மயக்கமூட்டுதலாக தான் கருத வேண்டும். இருப்பினும், தொடக்க நிலையிலிருந்து கல்வி பாடதிட்டத்தை மாற்றுவது தான் தீவிரவாதமல்லாத தலைமுறைகள் உருவாவதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, “பாடதிட்டத்தை மதசார்பின்மையாக்குதல்” எனும் நோக்கமானது ஒரு புதிய விஷயம் அன்று மற்றும் அது மதச்சார்பின்மையாக்குதலில் செலுத்திய கவனத்தை காட்டிலும் அறிவின் மீது கவனம் செலுத்தவில்லை. அரபுலகில் கல்வி பற்றிய அமெரிக்க அயலுறவு விவகார அறிக்கையின் படி இந்த விஷயம் தான் பல அரபு தேசங்கள் உலகளாவிய அளவில் கல்வி தரத்தில் பின்தங்கியதற்கு வழி வகுத்ததாக கூறுகிறது. ஆகையால் பாடதிட்டத்தின் மீது இவ்வனைத்து கவனத்தின் நோக்கமானது இஸ்லாமிய தேசங்களில் ஒரு அறிவுப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக அல்ல மாறாக அறியாமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றை பரப்புவதற்கும் இஸ்லாத்துடனான இணைப்பை துண்டிப்பதற்குமாகும்.

முடிவாக, அரபுலகில் பாடதிட்டத்தை மதச்சார்பின்மை ஆக்குவதற்காக வேண்டி சமீபத்தில் வழங்கப்பட்ட மிக முக்கிய அறிவுறைகள் மற்றும் கட்டளைகளை நாம் இங்கே வழங்குகிறோம்:

1 – பாடதிட்டமானது மேற்கின் மீதான விரோதத்தையும் அமெரிக்க கூட்டணியினர், யூதர்கள் மற்றும் பொதுவாக மேற்குக்கு எதிராக ஜிஹாது மேற்கொள்வதை தூண்டுவதிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்.

2 – பாடதிட்டங்களை அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை நோக்கியதாக அமைக்க வேண்டும்.

3 – மேற்கத்திய கலாச்சாரத்தின் வட்டப்பாதையில் சுற்றி வரும் விதத்தில் அமைக்க வேண்டும்.

4 – இஸ்லாமிய கலாச்சாரத்தையும் இஸ்லாமிய குணநலனை அழிக்கும் விதத்தில் அமைக்க வேண்டும்.

5 – பாடதிட்டம் மூலம யூத தேசத்துடன் (சட்டவிரோத) இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிராக போர் புரிவதிலிருந்து தடுக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

6 – பாடதிட்டமானது படைப்பாற்றல் அல்லது பதுமறைகாணல் இல்லாமல் தகவலை மனனம் செய்வதில் கவனம் செலுத்தும் வண்ணமாக இருக்க வேண்டும்.

7 – மிக முக்கிய காரணம் என்னவெனில் தீனுடைய (மார்க்க) ஷரீ’ஆ கல்வியானது அமெரிக்க மற்றும் மேற்கத்திய கொள்கைக்கு முதன்மையான எதிரியாகும்.

எனினும், இஸ்லாமிய உலகின் கல்வி பாடதிட்டத்தின் மீது திணிக்கப்படும் உலகளாவிய சதித்திட்டங்கள் மற்றும் சர்வதேச முயற்சிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அமெரிக்க, பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்க திட்டங்களில் முழுமையாக வெற்றிபெற இயலவில்லை அதேபோல் அவர்களால் அனைத்து தலைமுறையினரையும் கட்டுப்படுத்தி மேற்கத்திய கலாச்சார சாயத்தை அவர்கள் மீது பூசவும் முடியவில்லை. அது எதனால் எனில் உம்மத்தானது இன்று நபித்துவத்தின் வழிமுறையிலான “கிலாஃபத்தை” நிறுவி மீண்டும் இஸ்லாமிய வாழ்வியல் முறையை மேற்கொள்வதை நோக்கி பயணிப்பதையும், மக்கள் தங்களுடைய சிந்தனையிலும் மனங்களிலும் அகீதாவின் வலிமையை பிரதிபலிக்கக் கூடியவர்களாகவும் நாம் காண்கிறோம். உம்மத் விரும்பும் இந்த மறுமலர்ச்சி அடையச் செய்யும் மாற்றமானது உலகின் ஆட்சியமைப்பின் சமநிலையை மாற்றுவது மற்றும் இஸ்லாமிய அதிகாரத்தை மீட்பதன் அடிப்படையில் நிறுவப்படுவதாகும். அதனோடு, முஸ்லிம்கள் மற்றவர்கள் தங்கள் மீது ஏற்படுத்த நாடும் தீங்கின் அளவை நன்கறிந்து அதற்கேற்றவாறு ஒரு அறிவு மற்றும் தொழில்துறை புரட்சி ஏற்படுத்தும் வகையிலான ஒரு அறிவுசார் மற்றும் சித்தாந்ந புரட்சியை அடைவதற்காக தொடர்ந்து முன்னோக்கி செலகிறார்கள்.

அவர்கள் இதுபோன்ற பாடதிட்ட தொகுப்பை நம்பி இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவை முதலும் இறுதியுமாக அவர்களுக்கு நன்மையையோ வெற்றியையோ நாடாத ஒரு மேற்கத்திய தயாரிப்பாகும். இஸ்லாத்தை பொறுத்தவரை, அது அவர்களுக்குள் தொடர்ந்து நீடித்து வருகின்றது அது எதனால் எனில் அல்லாஹ் (சுபு) உடைய வேதம் அவர்களிடத்தில் உள்ளது. எதுவரை அவர்கள் அதை பற்றிப்பிடித்திருக்கின்றனரோ, அதன் பின்னர் ஒருபோதும் அவர்கள் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்.

ஹிஸ்புத்தஹ்ரீரின் மத்திய ஊடக அலுவலகத்திற்காக

நிஸ்ரீன் புஜா(Z)ஃப்ரி

Comments are closed.