சமீப பதிவுகள்

ஆய்வுகள்

வடகொரியாவில், அமெரிக்காவின் மூர்க்கத்தனமான அரசியல் சூழ்ச்சி

kim-jong-un-donald-trump

10 ஆகஸ்ட் 2017 நியூயோர்க் டைம்ஸ் அறிவித்தது

ஜனாதிபதி டிரம்ப் வியாழக்கிழமை வட கொரியாவுடன் தனது போர் வார்த்தைகளை அதிகப்படுத்தினார்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது இந்த எச்சரிக்கை விமர்சனம் செய்யபட்டது, இந்த விமர்சனத்தை சமாளிக்க அவர் வட கொரியா மற்றும் அதன் அதிருப்திமிக்க தலைவர் கிம் ஜோங்-ஐன் ஆகியோர் அமெரிக்காவையும், உலகின் ஏனைய பகுதிகளையும் இத்தகைய சுழ்நிலைக்கு தள்ளியுள்ளனர் என்று கூறினார்.

மேலும், வெளிப்படையாக, அவர் கூறிய அறிக்கையிலிருந்து “இது மிகவும் கடினமானதா?” என்று ட்டரம்பிடம கேட்டனர். பெட்மின்ஸ்டர், NJ இன் கோல்ஃப் கிளப்பில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “அவர்கள் பல வருடங்களாக நம் நாட்டிற்கு இந்தமாதிரியான பிரச்சனையை செய்து வருகிறார்கள், யாரோ ஒருவர் இந்த நாடு மற்றும் மற்ற நாடுகளின் மக்களுக்காக செயல்படும் நேரம் இதுவேயாகும்.

வட கொரியா, நீண்ட தூர அணு ஆயுதங்களை தயாரிப்பதில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பசிபிக் தீவு குவாமுக்கு, அமெரிக்காவின் ஏவுகணை மற்றும் மூலோபாய தளத்தை நோக்கி ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தபோவதாக வட கொரியா அமெரிக்காவிற்கு ஒரு அச்சுறுத்தலை கொடுத்தது. அதே நேரத்தில் குவாமில் ஏதாவது செய்தால், வட கொரியாவில் இது போன்ற ஒரு நிகழ்வை யாரும் கண்டிருக்க முடியாது என்று அச்சுறுத்தும் வன்னமாக டிரம்ப் பதில் கொடுத்தார்.

அது ஒரு தைரியமா செயலா என்று கேட்க, டிரம்ப் கூறினார்: “இது ஒரு தைரியமா செயல் இல்லை. இது ஒரு அறிக்கை. அவர் குவாமை அச்சுறுத்த போவதில்லை, அவர் அமெரிக்காவை அச்சுறுத்த போவதில்லை, அவர் ஜப்பானை அச்சுறுத்த போவதில்லை, அவர் தென் கொரியாவை அச்சுறுத்த போவதில்லை. நீங்கள் சொல்வது போல, அது ஒரு தைரியம் அல்ல. அது உண்மையான ஒரு அறிக்கை. “

நிர்வாகத்தில் மற்றவர்களின் முயற்சிகள் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்பின் குரல்வழி அறிக்கைகளை அளவிடக்கூடியதாக மற்றும் சூழ்நிலைப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், வட கொரியா மீது மோதலை தீவிரமடையச்செய்வதற்கு அமெரிக்கா முழுமையாக உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாக உள்ளது.வட கொரிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினையாற்றுவதில் சட்டரீதியான மற்றும் நியாயமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும்விதமாக அமெரிக்கா தன்னை சித்தரிக்கிறது.ஆனால் உண்மை என்னவென்றால், கொரிய தீபகற்பத்தில் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் அமெரிக்கா மேற்கொண்ட போரின் காரணமாக அந்த பகுதி வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு நாடாக பிரிந்து செல்வதற்கு வழிவகுத்தது. தென் கொரியாவைச் சுற்றி நிறுவப்பட்டுள்ள பரந்த இராணுவ முன்னிலையில் இருந்து, வட கொரியாவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை அமெரிக்கா கொடுத்து வருகிறது. உத்தியோகபூர்வமாக, கொரியப் போர் முடிவுக்கு வரவில்லை, ஆனால் போர்நிறுத்தத்தில் மட்டுமே உள்ளது.பல ஆண்டுகளாக அமெரிக்க இராணுவதின் ஆத்திரமூட்டும் செயல்கள் வட கொரியாவை அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்யும் அளவிற்கு மிக ஆக்கிரோஷமாக இராணுவமயமாகும் அளவிற்கு இட்டுச்சென்றுள்ளது.வட கொரிய இராணுவமயமாக்கும் செயல்பாட்டில் அமெரிக்கா ரகசியமாக மகிழ்ச்சியடைந்துள்ளது, இன்னும் இப்பகுதியில் அமெரிக்ககா தன் தலையீட்டிற்கு வட கொரியாவின் இச்செயலை காரணம் காட்டுவதும் அதன் தலையீட்டை நியாயப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமெரிக்காவிற்கு அமைந்துள்ளது.

கவனமாக ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அமெரிக்காவின் கொரிய ஆக்கிரமிப்பும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்த வியட்னாம் ஆக்கிரமிப்பும் சீனாவின் எழுச்சிக்கு எதிரான அமெரிக்காவுடைய அரசியல் தந்திரம் என்பது தெளிவாகிறது. கொரியா,அமெரிக்காவிற்கு சீன எல்லையில் நேரடியாக தன்னுடைய இராணுவத்தை நிறுத்துவதற்கு சரியான காரணத்தை வழங்குகிறது.இந்த நெருக்கடி சீனத் தலைமையை இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இருந்து அதை திசைதிருப்பி அதில் கவனம் செலுத்த விடாமல் இந்த பிரச்சனையில் ஈடுபடுத்த உதவுகிறது.

அமெரிக்காவின் புறத்திலிருந்து பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தப்படும் செயலிற்கு பதில் கொடுக்கும் வன்னமாக கொரிய எல்லையில் இன்னும் கூடுதலான இராணுவ அணிதிரளலை சீனா மேற்கொள்ள வேண்டும்.எனவே அமெரிக்க அச்சுறுத்தல்கள் மற்றும் வடகொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் உண்மையில் ஒரு பெரும் நோக்கத்தைத் தொடர அமெரிக்கா மேற்கொள்ளும் ஒரு அரசியல் சூழ்ச்சியாகும். இஸ்லாமிய அரசாங்கத்தில் கூட அரசியல் சூழ்ச்சி என்பது அங்கீகரிப்பட்ட ஒரு இயல்பான விஷயமாகும். மதீனாவில் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அரசின் நிலைத்தன்மை மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியத்துவமாக அமைந்த ஹுதிபியாவின் உடன்படிக்கை கூட அரசியல் சூழ்ச்சியின மூலம் பெறப்பட்டவை, போர் மூலம் அல்ல. அதற்கு முன்னர், மதீனா தெற்கிலிருந்து மக்காவுடைய குறைஷிகள் மூலமாகவும், வடக்கிலிருந்து கைபருடைய யூதர்கள் மூலமாக மதீனா அஹ்ஸாப் போரின் போது முற்றுகைப்பட்டது. அகழ் தோண்டி எதிரிகளை தாக்கும் பாரசீக போர் தந்திரத்தை நடைமுறைப்படுத்திய போதும், எதிரிகள் மதீனாவில் வசிக்கும் பனு குறைழாவிடம் சேர்ந்து மதீனாவை தாக்க திட்டம் தீட்டினார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நுஐம் பின் மஸ்ஊது என்ற நபரின் மூழியமாக ஒரு அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டுதான் இந்த கூட்டணியை உடைத்தார்கள். அவர் (நுஐம் பின் மஸ்ஊது) மிக திறமையுடன் எதிரி கூட்டு படைகளுக்கிடையே பிரிவினையை உண்டாக்கி அவர்களை பிரித்து ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ளும் அளவிற்கு அந்த கூட்டணியை உடைத்தார். இது முஸ்லிம்கள் வெற்றிபெருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிகைக்காக மேற்கொண்ட தொடர்ச்சியான செயல்கள் அனைத்தும் அஹ்சாப் போருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கையாக நம்மால் காணமுடிகிறது.கைபருக்கும் மக்காவிற்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட தொடர்பு பற்றிய செய்தியை அறிந்த நபி(ஸல்) இந்த அபாயகரமான கூட்டணியை உடைப்பதற்கு நபி (ஸல்) குரைஷீயை அரசியல் ரீதியாக நசுக்குவதற்கு மக்காவில் உள்ள காபாவிற்கு வருகை ஹஜ் புரிய போவாதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.அந்த ஆண்டு அவரை புனித யாத்திரைக்கு அனுமதியை அளிக்க மறுத்தனர் ஆனால் அறியாமல் அவர்கள் அதைவிட முக்கியமானதும் நபி எதிர்பார்த்ததுமான வெற்றிகரமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை (ஹுடதைபியா உடன்படிக்கையை) அளித்தார்கள். குறைஷிகலிடம் ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி, உடனடியாக கைபரை தாக்கி, அஹ்ஸாபின் வடக்கு பகுதியை அகற்றினர். குறைஷிகளுடைய கூட்டாலிகளான கைபர் யஹூதிகளை வீழ்த்தி வெறும் இரண்டு வருடங்களில், இஸ்லாமிய அரசின் வளர்ச்சியை பார்த்து அதற்கு முட்டுக்கட்டை போடும் செயல்களில் ஈடுபடும்விதமாக ஒப்பந்தத்தை மீறிய மக்கத்து குறைஷிகலின் செயல் மக்காஹ் வெற்றிக்கு வழிவகுத்தது. அல்-அஹ்சாப் மற்றும் ஹூதைபியாவின் சம்பவங்கள், அரசியல் சூழ்ச்சி என்பது ஒரு அரசாங்கத்தின் முக்கியமான மற்றும் உன்னதமான அம்சமாகும் என்பதை தெளிவுபடுத்துகிறது.மேலும் பொறில்லாமல் ஒரு நாட்டை கைப்பற்றி அங்கு இஸ்லாத்தை நடைமுறைபடுத்தும் விதத்தில் அரசியல் சூழ்ச்சி என்பது முக்கியமான விஷயமாகும்.

இருப்பினும், இஸ்லாதில் உள்ள அரசியல் சூழ்ச்சி மற்றும் மேற்குலகில் உள்ள அரசியல் சூழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நேர்மையான இஸ்லாமிய அரசு அதன் சொல் அல்லது செயல்களில் ஷரியத்திற்கு முரனாக நடக்க அனுமதியில்லை. உதாரணமாக, சமாதான காலத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதற்கு அனுமதி இல்லை, இது அரசியல் சூழ்ச்சி முதன்மையாக பயன்படுத்தப்படும்போது. அதேபோல், இஸ்லாமிற்கு முரண்படுகின்ற மதிப்புகள் அல்லது செயல்களுக்கு அழைப்பு விடுக்க அனுமதியில்லை. நபி (ஸல்) அவர்கள் மெக்காவிற்குச் சமாதானமாக வருவார் என்று அறிவித்தார். மேலும், அவரது மக்களிடமிருந்து சண்டையிடும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும்படி பல தூண்டுதல்கள் இருந்தபோதிலும்கூட, அவர்கள் மீது கொடுத்த வார்த்தையை முழுமையாக காப்பாற்றினார்; எதுவரை என்றால் குறைஷிகள் தங்களாகவே ஒப்பந்தத்தை மீறி செயல்படும்வரை.நபி (ஸல்) அவர்கள், இஸ்லாமிய நாடு அல்லாத இஸ்லாமிய சக்திகளுடன் இஸ்லாமிய அரசுக்கு இராணுவ உதவி கேட்டபதற்கு அனுமதியில்லை, ஆகையால் அல்-அஹ்ஸாப் யுத்தத்தில் நபி (ஸல்) வேறு ஒரு கோத்திரத்திடம் உதவி கேட்ககிவில்லை.

இது மேற்கு நாடுகளுக்கு அப்படியே மாறுபட்டது. மேற்கு நாடுகள் போர் அல்லது சமாதானத்தில் ஏமாற்றுவதையே நம்பியுள்ளது. மேற்குலகின் சொந்த கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் வெளிப்படையாக முரண்படுகின்ற மதிப்புகள் மற்றும் செயல்களுக்கு ஆதரவளிக்கிறது. மற்றவர்களின் இறையாண்மை விவகாரங்களில் குறுக்கிடாததற்காக மேற்கு நாடுகள் அழைப்பு விடுக்கின்றன, ஆனால் சுதந்திரமாக நிற்க விரும்பும் அரசாங்கங்களை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மேற்கதிய நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூருகிறார்கள்; ஆனால் உலகெங்கிலும் உள்ள பல மோதல்களை உண்மையில் இவர்கள் தான் தூண்டுகிறார்கள், இதன்மூலம் இவர்கள் எங்கு வேண்டுமானாலும் தலையிட ஒரு தவிர்க்க முடியாத காரணமாக இந்த பிரச்சனையை பயன்படுத்துவதை காணலாம்.மேற்குலகம் மனித உரிமைகளை பாதுகாக்கிறது எனக் கூறுகிறது, ஆனால் அதன் சொந்த நலன்களுக்காக அணுஆயுதப்போரின் விளிம்பிற்கு உலகத்தை எடுத்து செல்லும் விஷயத்தை பற்றி கவலை இல்லாமல் இருக்கிறார்கள்.சர்வதேச சட்டத்தை புனிதமானதாகக் கருதுவதாக கூறுகிறது, ஆனால் அந்த சட்டங்கள் அவர்களது நோக்கங்களுக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் அவர்களது சொந்த விருப்பங்களுக்கேற்ப அதன் விதிகளை மாற்றியமைக்கும் செயலை காணமுடியும்.மேற்கின் பாசாங்குத்தனமானது, முதலாளித்துவ மதசார்பற்ற தாராளவாதத்தின் தவறான கருத்தியல் மற்றும் சுதந்திரம், ஜனநாயகம் ஆகுயவற்றின் நாத்திக அரசியல் கொள்கையின் வெளிப்பாடாகும். சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மேற்கத்தியர்கள் தங்களைக் கவனித்துக்கொள்பவர்களாகவும் மற்றவர்களை புறக்கணிப்பவர்களாக ஆகியுள்ளனர். இதன் விளைவாக, நடைமுறையில், ஆட்சி செல்வந்தர்களுக்கும், வெளியுறவு கொள்கை ஏகாதிபத்திய அமைப்பாக ஆகியுள்ளது. முதலாளித்துவம் மேற்கு உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் வரையில் உலகம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது.

நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றலின் அடிப்படையில் இஸ்லாமிய கிலாஃபா அரசின் மறுசீரமைப்பை நாம் விரைவில் பார்ப்போம், மற்றும் அதன் நடத்தை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும், அல்லாஹ் (சுபு) கூறியது போன்று வெளிப்படுவதை நாம இன்ஷா அல்லாஹ் காண்போம்.

அல்லாஹ் (சுபு)கூறுகிறான்
وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا﴾
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.—(17:81).

Comments are closed.