சமீப பதிவுகள்

ஆய்வுகள்

உலகம் பார்த்துக்கொண்டு இருக்கையில், மிருகத்தனமான யுத்தத்தால் ஏமனின் குழந்தைகள் அழிக்கப்படுகின்றனர்

Yemen_Child

ஏமன் மீது தொடுக்கப்பட்ட போரில், 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரை 201 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 347 குழந்தைகள் தன் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்றும் மேலும், 377 சிறுவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், ஆகஸ்டு 7 ம் தேதி அன்று யுனிசெப் (UNICEF) யின் ஏமனுக்கான பிரதிநிதி மெரிடெக்ஸல் ரிலனோ (Meritxell Relano) தெரிவித்தார். மேலும் ஏமனின் வடக்கு மாகாணமான சாடாவில் போதுமக்கள் கூடியிருக்கும் பகுதியில், சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித்தாக்குதலில், ஒரே குடும்பத்தைச்சார்ந்த 12 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர், இதில் 2 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 4 சிறுமிகளும், 2 சிறுவர்களும் அடங்குவர். இச்செய்தி வெளியாகி சில தினங்களுக்கு பின்னர், மேற்கூறப்பட்ட அறிக்கையை மெரிடெக்ஸல் ரிலனோ தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் ஆதரவுப்பெற்ற ஜனாதிபதி அப்துல் ரபூ மன்சூர் ஹதிக்கும், ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹூயுத்தி போராளிகளுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெறும் இந்த மிருகத்தனமான யுத்தில் இதுவரை ஏரத்தால 4500 குழந்தைகள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், பட்டினி மற்றும் நோய்களாள் அங்குள்ள இளைஞர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இது மேலும் ஆயிரக்கணக்கானோர் மரணத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் நாட்டின் சுகாதாரம், நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவுநீர் வடிகாள்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சவுதிக்கூட்டணி, ஏமனின் துறைமுகங்கள் மற்றும் வான்வெளிகளில் முற்றுகையிட்டு குண்டுப்போட்டு தாக்கியதால் அம்மக்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் பிற மனிதாபிமான உதவிகளைக்கூட செய்ய இயலவில்லை. ஏமன் முலுவதிலும் ஏறத்தாழ 425,000 நபர்கள் காலரா(வாந்தி-பேதி)வால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் பாதிப்பேர் குழந்தைகள், இந்நோயால் 2000ம் பேர் இறந்துள்ளனர் அதில் கால்வாசிப்பேர் குழந்தைகள், யுனிசெப் (UNICEF) ஆய்வின் படி, இந்நோயால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 5 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை மரணிக்கிறது. ஏமனில் 5 வயதுக்குட்பட்ட 1 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது வரலாற்றில் மிக மோசமான காலரா நோய் என்றும், போரின் காரணமாக மருத்துவ வசதிகள் மிக மிக குறைவாக கிடைக்கின்றது என ஆகஸ்டு 1 ஆம் தேதி அன்று, “சேவ் தி ச்சில்ரன்” (Save the Children) என்ற தொண்டு நிறுவனம் அறிவித்தது.

கருத்துரை :
யுத்தம், பட்டினி மற்றும் நோய்களால் ஏமனின் குழந்தைகள் அழிக்கப்படுகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வந்தப்போதிலும், சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகள் மீது குண்டு மழை பொழிந்த போதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யும் அனைத்து வழிகளையும் தடுத்த போதிலும், மனிதாபிமானம் முற்றிலும்மாக துடைத்தெரிந்த போதிலும், இதைத்தடுக்க இந்த உலகம் எவ்வித முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இம்மாத தொடக்கத்தில், ஏமனுக்கான ஐநா அபிவிருத்தி செயற்த்திட்டத்தின் இயக்குனர், ஆக்கு லூட்ஸ்மா (Auke Lootsma) கூறியதாவது, நாட்டில் மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்ட ஐ.நா. விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை இராணுவக்கூட்டணி தடைசெய்தது. மேலும் அவர் கூறினார், ஏமனில் நிலைமை ஒரு வேகமாக ஒடும் பஸ்சைபோல, “அது ஒரு குன்றின் விளிம்பை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது” பிரேக்கை அழுத்தி நிறுத்துவதற்க்கு பதிலாக, “அதன் ஓட்டுனர் ஆக்சிலேட்டரை அழுத்தி அதன் வேகத்தை அதிகப்படுத்துகிறார்.” மேலும் சவுதியின் தலைமையிலான கூட்டணி அந்த நாட்டை முற்றுகையிட்டு கொண்டிருப்பதால், அங்கு 1 மில்லியன் டோஸ் காலரா தடுப்பூசி அனுப்பப்பட்டும், அதை அந்த மக்களுக்கு கொண்டு சேர்க முடியாமல் இருக்கிறது என கடந்த ஜூலை மாதத்தில், ஐ.நா. தெரிவித்தது. இது எல்லாவற்றிற்கும் பொருந்தாமல், குழந்தைகளின் உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் இருந்தது, அது பல ஐ.நா நல திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. தான் அளித்த நிதியை நிறுத்த போவதாக அச்சுறுத்தியதால், சவூதி அரேபியாவை அப்பட்டியலிறுந்து நீக்கியது முதுகெலும்பு அற்ற ஐ.நா. குழந்தைகளுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றங்கள் செய்யும் பொழுதும் மௌனம் காப்பதற்காகவே பல நிதியுதவிகள் செய்யப்படுகிறது,

என்ன நன்நெறியை இந்த ஐ.நா கடைப்பிடிக்கிறது?

இந்த இரத்தம் தோய்ந்த காட்டுமிரண்டிதனமான .யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனசாட்சி அல்லது அரசியல் விருப்பம் கொண்ட நாடோ அல்லது சர்வதேச அமைப்போ இன்றைக்கு இல்லை. மாறாக இன்றைய சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் வழக்கமான முதலாளித்துவ வடிவத்தில், நம் ஏமன் குழந்தைகளின் இரத்தக்களரி மற்றும் துன்பத்திலிருந்து லாபம் பெறுகிறார்கள். கடந்த மே மாதம், ட்ரம்ப் நிர்வாகம் சவூதி அரேபியாவுடன் 110 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, மேலும் இந்த 3 ஆண்டு போர் முழுவதும், இங்கிலாந்து அரசு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டு இராணுவ தலவாடங்களை சவூதி அரசுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 140 பேர்களை கொன்ற கொடூரமான விமானத் தாக்குதல் நடந்த 6 மாதங்களுக்குள் £ 263 மில்லியன் மதிப்புள்ள போர் விமானங்கள் மற்றும் £ 4 மில்லியன் மதிப்புள்ள குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்துள்ளது. (ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரக்குழு [Campaign Against Arms Trade]ஆல் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்).

இன்று ஏமனில் நடக்கிற கொடுமைகள் மனிதனின் மனசாட்சியின் மீது படியக்கூடிய கறை. மேலும், இது நமது ஏமனின் உம்மா மற்றும் அவர்களின் குழந்தைகள் எதிரான கொடூரமான குற்றம், மற்றும் நமது இஸ்லாமிய தீனுக்கு எதிரான கொடூரமான குற்றம், அல்லாஹ் (சுபு) கூறுகிரான்

(وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنً۬ا مُّتَعَمِّدً۬ا فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَـٰلِدً۬ا فِيہَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمً۬ا)
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான், இன்னும் அவனைச்சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் தயாரித்திருக்கிறான். [அன்-நிசா: 93]

«لهدم الكعبة حجرا حجرا أهون عند الله من سفك دم امرئ مسلم»
“ஒரு முஸ்லிம், இரத்தம் சிந்துவதை விட, ஒவ்வோரு கல்லாக காஃபா அழிக்கப்படுவது, அல்லாஹ்வுக்கு இலகுவானது.”

நிச்சயமாக இது இன்னும் எதை வலியுறுத்துகிறது என்றால், நபி வழியின் அடிப்படையில் மீண்டும் கிலாஃபா ரஷீதாவை (நேர்மையுள்ள கிலாஃபா) நிறுவுவதற்க்கான அவசர தேவையை குறிக்கிறது. அவர்கள் தாம் தம் இரானுவத்தைக்கொண்டு உம்மாவின் குழந்தைகளை எதிரிகளிடமிறுந்து காத்து பாதுகாப்பார்கள். இன்றைய ஆச்சியாளர்களைப்போன்று இஸ்லாமி எதிரிகளுக்கு சேவைசெய்யும் முகமாக உம்மாவின் குழந்தைகளை பலியிடமாட்டார்கள்!

ஹிஸ்புத் தஹ்ரீரின் மத்திய ஊடக அலுவலகத்தால் எழுதப்பட்டது,

டாக்டர். நஸ்ரின் நவாஸ்
ஹிஸ்புத் தஹ்ரிரின் மத்திய ஊடக அலுவலகத்தின் மகளிர் பிரிவு இயக்குனர்.

Comments are closed.