சமீப பதிவுகள்

செய்தி பார்வை 19.08.2017

img-1

தலைப்புச் செய்திகள்:

1. டிரம்பின் வெளிப்படையான இனவெறி, பெனானை பதவியிலிருந்து அகற்றியது.
2. பெனானின் நீக்கம், ஆப்கானிய செயல் திட்டத்திற்கான காரணம்.
3. வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், சிரியாவில் ‘சமாதானத்தை’ நிறுவ ஐ.நா., திட்டமிடுகிறது.

1. டிரம்பின் வெளிப்படையான இனவெறி பெனானை பதவியிலிருந்து அகற்றியது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார். இந்த மாதம் அமெரிக்காவின் விர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள சார்லொட்ஸ்வில் (Charlottesville)-ல் என்ற நகரத்தில் நடந்த வன்முறை மோதல்களுக்கு, டிரம்ப் இனவாத கருத்துக்களை கூறினார். இந்த கருத்துகளை மேலும் ஊக்கமளிக்கும் விதத்தில் செயல்பட்ட பெனான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பதவியை இராஜினாமா செய்தார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பிரகாரம்:

வலு வாய்ந்த முக்கிய ஆலோசகரான ஸ்டீஃபென் கே. பெனான், டிர்ம்ப் உடன் இனைந்து தேசியவாத தூண்டுதல்களை தழுவி, அதன் மூலம் 2016-தேர்தலில் வெற்றிப் பெற்றனர். ஜனாதிபதியின் பதவியுடைய முதல் ஏழு மாதங்களில், அலுவலகத்தில் டிரம்பை பிரபலமாக்க கூடிய ஒரு முக்கிய பதவியை எடுத்த பெனான், 18/08/17 வெள்ளிகிழமை அன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.

இந்த மாதம் சார்லொட்ஸ்வில் (Charlottesville)-யில் நடந்த கொடிய வன்முறைக்கு, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் டிரம்ப் குற்றம் சாட்டி சர்சையில் சிக்கிக்கொண்டதும், மேலும், போராட்டத்தில் கலந்துக்கொண்ட வெள்ளை மேலாதிக்கவாதிகள் (white supremacists) மற்றும் நியோ-நாஜிகளை (neo-Nazis) எதிர்த்த இடதுசாரி (left-wing) எதிர்ப்பாளர்களுடன் ஒப்பிட்டு பெனான் கூறியதற்க்கு டிரம்ப் தான் காரணம் என விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவங்கள் தான், தொடரும் மேற்கத்தியப் பிரச்சனைகளின் சமீப பிரச்சனையான பெனானின் வெளியேற்றத்தின் காரணமாகும்.

மேற்கத்திய நாடுகளால், மக்களிடையே இருக்கும் இனவாதத்தின் ஆழமான பிரச்சனையை இதுவரை ஒருபோதும் தீர்க்க முடியவில்லை. பொதுவாக பல்வேறு பழங்குடியினர் அல்லது நாடுகளிலிருந்து தோன்றிய மக்களிடையே ஏற்றுத்தாழ்வு இயற்கையாகவே இருக்கும். இந்த உண்ர்வை எல்லோரும் ஒன்றாக வாழ்கையை கழிப்பதன் மூலம் குறைக்கலாம், தவிர்த்தும் விடலாம். ஆனால், மேற்கத்திய ஆட்சியாளர்கள் கடந்த நூற்றாண்டின் தனது வரலாற்றின் பெரும்பகுதிக்கு வேனுமென வெளிப்படையாக இனவாதத்தை அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளனர். ஏனெனில், மத நம்பிக்கையில்லாத நாத்திக சிந்தனையாளர்களுக்கு, கிறிஸ்துவ மதத்தை அரசியலிருந்து அகற்றி, மேற்கத்திய மேலாதிகத்தை நியாயப்படுத்த இந்த இனவாதம் என்ற விஷயம் தேவைப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது மட்டும் தான், ஜெர்மனியின் நாஜி (Nazi) தலைமையை இழிவுபடுத்தும் வகையில், மேற்குலகம் இனவெறி கோட்பாட்டை பகிரங்கமாக கண்டனம் செய்தது. அதற்கு முன்புவரை, இனவாத சிந்தனை மேற்குலக ஆட்சி கோட்பாட்டில் நன்றாக நிறுவப்பட்டிருந்தது. இதன் விளைவானது, மேற்கத்திய மக்கள் இன்றும் இதை வாய் வழியாக மட்டும் மறுத்து, இதை தங்களுக்குள் ஆழமான சிந்தனையாக சுமந்து கொண்டுள்ளனர். இன்னும், தங்கள் மத்தியிலும், தங்களுடைய நாகரிகத்திலும் மற்றும் உலக முழுவதிலும் மேற்குலகின் மேலாதிக்கத்தை ‘அமெரிக்காவின் விதிவிலக்கு’ போன்ற கருத்துக்களை முன்வைத்து, இந்த இனவாத சிந்தனை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

2. பெனானின் நீக்கம், ஆப்கானிய செயல் திட்டத்திற்கான காரணம்.

ஆஃப்கானில் அமெரிக்காவுடைய திட்டத்தை நிறுவ டிரம்பின் முடிவு தாமதித்ததால், வெள்ளை மாளிகை அலுவலகத்தில் உள்மோதல்கள் ஏற்பட்டன, இந்த மோதலிகளின் காரணத்தால் தான் பெனான் அகற்றப்பட்டார் என்று தெரிகிறது. ஏனெனில், பிளாக் வாட்டர் (Blackwater) நிறுவனர் எரிக் பிரின்ஸால் (Eric Prince) முன்மொழியப்பட்ட ஆஃப்கானிய போர் சூழலை தனியார்மயமாக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களை அதில் சம்பந்தப்படுத்தும் யோசனைக்கு பெனான் ஆதரவு அளித்திருந்தார், இது மற்ற அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை.

Politico-வில் பதிவானது:
ஆஃப்கானுக்கு அதிகமான படைகளை அனுப்ப ஆதரவாக இருக்கும் அனைத்து உயர் நிர்வாக அதிகாரிகள் ஒரு கூட்டாக சேர்ந்து, 16 ஆண்டுக்கால ஆஃப்கானிய போரில் திரும்பவும் அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்த, வெள்ளிக்கிழமை அன்று டிரம்பை சந்தித்து அவரை சம்மதிக்க வைக்க இருக்கிறார்கள்.

பெனானின் யோசனைக்கு நேர்மாறாக, துணை ஜனாதிபதியான மைக் பென்ஸும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மெக் மாஸ்டரும் தங்களின் சூழ்ச்சியை செயல்படுத்த, இராணுவப் படைத்தளபதிகளால் முன்மொழியப்பட்ட 8,400 அமெரிக்க படைகளை ஆஃப்கானுக்கு அனுப்பும் ஆலோசனையில் டிரம்ப்பை இணங்க வைத்து அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் கேம்ப் டேவிட் (Camp David) உத்தி அமர்வில் ஈடுபட்டனர்.

ஆனால், டிரம்ப் ஆஃப்கானுக்கு தன்னுடைய புறத்திலிருந்து எந்த்விதமான முடிவையும் வெள்ளி கிழமை வரை அறிவிக்கவில்லை. ஆஃப்கானில் தாலிபான் வலிமையுடன் செயல்பட்டு வளர்ந்துள்ளது, மேலும் அல் கொய்தா மற்றும் ISIS பயங்கரவாத குழுக்களின் பிடிப்பில் உள்ள நாட்டின் நிலைக்கு, எந்த ஒரு முடிவும் ஜனாதிபதியிடமிருந்து வரவில்லை.

முன்னாள் பிளாக்வாட்டர் (Blackwater) தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவிய எரிக் பிரின்ஸும் இந்த அமர்வில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால், கடைசி தருணத்தில் அவர் தடுக்கப்பட்டார் என்ற தகவல் வெள்ளை மாளிகையின் ஒரு நிர்வாக அதிகாரி மற்றும் ஒரு மூத்த உதவியாளரிடமிருந்து கிடைத்தது. இவரை தடுத்தது மெக் மாஸ்டர் தான் என்றும் இந்த அதிகாரி குறிப்பிட்டார். ஆஃப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சியும் அறிவுறையும் அளித்து போர் முயற்சியை அதிகரிக்க, நிர்வாகத்தில் பகிரங்கமாகவும் தனிமையிலும் பிரின்ஸ் வலியுறுத்து வந்திருந்தார். இவருக்கு சமீபத்தில் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய ஸ்டீவ் பெனானின் ஆதரவுமிருந்தது..

ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகள் இருக்கும்போது, சரியாக ஒரு முடிவு கூட எடுக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் வெள்ளை மாளிகையின் இந்த நிலையின் காரணம், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆஃப்கானில் ஜிஹாத் அதிகமாக பரவி, பல ஆண்டுகளாக போரில் அமெரிக்க தோற்றுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கொண்ட மேற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியா ஆகியவற்றுடன் இணைந்த நாடாக ஆஃப்கானிஸ்தான் இருப்பதினால், அமெரிக்கவின் உத்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. இவ்விடங்களில் உள்ள தன் இராணுவத் தளங்களை வைத்துக்கொண்டு, அதன் கைக்கூலிகளை ஆதரிக்குமாறு, தன் நலன்களை முழுதும் அமெரிக்க பாதுகாத்துக்கொள்ளலாம், அதே நேரத்தில் முஸ்லிம் நாடுகளில் ரஷ்ய மற்றும் சீன போன்ற நாடுகளின் நலன்களையும் சவால் செய்யலாம். ஆனால், இதெல்லாத்தையும் எதிர்த்துக் கொண்டிருக்கும் ஆஃப்கானிய ஜிஹாதை பார்க்கும்போது, இஸ்லாமிய எழுச்சி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. முஸ்லிம்கள் மீண்டும் கிலாஃபாவை நிறுவி தங்கள் நிலத்திலிருந்து வெளிநாட்டு காஃபிர்களை வெளியேற்றும் நாள் மிக அருகில் உள்ளது என்று தெரிகிறது.

3. வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பரில், சிரியாவில் ‘சமாதானத்தை’ நிறுவ ஐ.நா., திட்டமிடுகிறது.

சிரியாவுக்கான சிறப்புத் தூதராக ஐ,நா.விலிருந்து நியமிக்கப்பட்ட ஸ்டாஃபன் டி மிஸ்டுரா (Staffan de Mistura), சிரியா போரின் பல நிலைகளில் மிக உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார், ஆனால், அவருக்கு முன்னேற்றம் எதுவும் கிடைக்கவில்லை. சிரியா பிரச்சனைக்கு மிக விரைவில் முன்னேற்றம் கிடைக்க சாத்தியமுள்ளது என்று சமீபத்தில் இவர் கூறியுள்ளார்.

ராயிடர்ஸின்(Reuters) படி:

“வரும் அக்டோபர் அல்லது நவம்பரில், சிரிய அரசாங்கம் மற்றும் (இதுவரை ஒன்று சேராத) எதிர்த்தரப்பினர் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து, இரு தரப்பினரும் ஒரு சமாதான முடிவுக்கு வரலாம் என்று ஐ.நா., நம்புகிறது”, என்று சிறப்பு தூதர் ஸ்டாஃபன் டி மிஸ்டுரா வியாழன் அன்று கூறினார்.

முன்னேற்றம் கொண்டு வருவது ஒரு புறம் இருக்கட்டும்!, எதிர்ப்பாளர்களை அரசாங்கத்துடன் நேருக்கு நேர் சந்திக்கவைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வைப்பதற்கே இதற்கு முன் ஏழு முறை தவறிவிட்ட பிறகு, அனுபவமிக்க இந்த தூதர் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஆறு ஆண்டுக் காலப் போரை முடிவுக்கு கொண்டுவர, திரும்பவும் பேச்சுவார்த்தைக்கான ஒரு புதிய கால அட்டவணை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஒன்று சேராமல் தனித்தனியாக செயல்பட்டு வரும் மூன்று எதிர்ப்பாளர்களின் புறத்திலிருந்து வரும் பிரதிநிதிகளை சந்தித்து “பிரிவினால் ஏற்படுகின்ற நிலைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு”, இவர்கள் ஒருங்கிணையும் நாளை எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார். இது அனெகமாக சவுதியின் தலைநகரமான ரியாத்தில் அக்டோபர் மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

உண்மையில், ‘அமைதி’ பேச்சுவார்த்தைகள் என்று அழைக்கப்படும் இந்த அமர்வின் நோக்கம், இவர்கள் செய்த ஆக்கிரமைப்பையும் துன்புறுத்தலையும் தடுப்பதற்கல்ல அதை மேன்மேலும் ஆதரிக்கவும் அதிகரிக்கவும் ஆகும்.

போர் என்ற பெயரில் அமெரிக்க சிரியாவில் நடத்திய கொடுமைமிக்க மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளின் நினைவுகளை மறக்கடிக்கவும், தன் சட்டவிரோதமான வெற்றிகளை சட்டபூர்வமாக்குவதும், இதற்கு பின்னரே, ‘சமாதான’ பேச்சுவார்த்தைகளுக்கு மேற்குலகம் வந்துள்ளது. ஐ.நா வின் இநத சிரியா தூதரும் இதே நோக்கத்துடன் செயல்படுகிறார், மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகளையும் செய்துக்கொண்டு வருகிறார். ஏனெனில், இந்த தூதரும், தனது கொடுங்கோல கைகூலியான பஷருல் அஸாத்தின் சார்பில் சிரியா போரை அமெரிக்க வென்றுவிடும் என்கிற பரிபூர்ண நம்பிக்கை கொண்டுள்ளார். அது சமாதான பேச்சுவார்த்தைகளைத் நடத்த திட்டமிடுவதில்லை, மாறாக போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் வெற்றிப் பெற்றவர்களிடம் சரணடைவதற்கான விதிகளை கட்டளையிட அவர்களை அழைக்கிறார்கள். அல்லாஹ்வின் உத்தரவு படி, முஸ்லிம் நிலங்களிலிருந்து ஒரு புது ஆட்சி வருவதை இந்த உலகம் பார்க்கும், அதுதான் நபி(ஸல்)யின் வழிமுறைப்படி நீதியும் நேர்மையும் கொண்ட இஸ்லாமிய கிலாஃபா ஆகும். இது மட்டும் தான், மேற்கு நாடுகளின் நிரந்தரமான மேலாதிக்கத்திலிருந்து நமது நிலங்களை விடுவித்து, முழு உலகத்திற்கும் உண்மையையும் நேர்மையையும் திரும்பவும் வழங்கும்.

Comments are closed.