சமீப பதிவுகள்

ஆய்வுகள்

யேமனின் வறுமையை கிலாஃபா தீர்க்கும்

yemen-children-airstrike

–சமீபத்தியயுத்ததிற்கு முன்பே, யேமன் மத்திய கிழக்கில் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. அதன் மக்கள் தொகை 25.4 மில்லியனாகும், அதில் ஏறத்தாழ 54% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், மேலும் சுமார் 45% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள். யுத்ததிற்கு பிறகு, 82% மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைபடுகிறது. மேலும் 19.3 மில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் இல்லாமல் உள்ளனர். இந்த யுத்தத்தால் குறிப்பிடத்தக்க அளவு பொருளாதார சரிவுகள் ஏற்பட்டது. யேமனின் முக்கிய வருவாயான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. முக்கிய உணவு மற்றும் ஆற்றல் இறக்குமதி இதன் மூலம் குறைந்தது. 2015 இல் 30 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்தது, நிதிச் செயல்திறன் மேலும் பலவீனம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (borgenproject.org)

–யேமன் உண்மையில் ஒர் வளமான தேசம், அது தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், காபி, பருத்தி போன்ற வளங்களை கொண்டுள்ளது. பால் பொருட்கள், கால்நடைகள் (செம்மறி, ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள்), கோழி மற்றும் மீன் வளமும் உள்ளது. மேலும் அது குறிப்பிடத்தக்க கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளைக்கொண்டுள்ளது, மேலும் சிறிய ரக நெசவு, தோல் பொருட்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, அலுமினிய பொருட்கள், சிமெண்ட், வணிக கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி போன்றவகைகளும் உள்ளன. விவசாயம் யேமனின் மிக முக்கிய பொருளாதாரமாக கருதப்படுகிறது, 1990 ல் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 20 சதவிகிதத்திற்கும் மேலாக விவசாயம் இருந்தது. உழைக்கும் மக்களில் பாதிக்கும் மேல் (2003 ல் 54.2 சதவிகிதம்) விவசாயிகளே. மேலும், ஏமனின் விரிவான பிராந்திய நீர் மற்றும் கடல் வளங்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் 8,40,000 டன் மீன் உற்பத்தி செய்யக்கூடிய அலவுக்கு ஆற்றல் பேற்றிறுக்கிறது. இருப்பினும், மீன்பிடி தொழில் ஒப்பீட்டளவில் வளரவில்லை காரனம் பெரும்பாலான மீனவர்களிடம் சிரிய வகை படகுகளே உள்ளன.

–இங்கு போதுவாக தோன்றக்கூடிய கேள்வி என்னவென்றால், உண்மையில் மக்கள் மிகவும் வளமான பகுதியில் இருக்கிறார்கள், பின் எப்படி அவர்கள் ஏழ்மையாக இருக்க முடியும்? இதற்கு ஒரே ஒரு காரணம் தான், முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் இத்தகைய பெருஞ்செல்வத்தை மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்தும் எண்ணம் சிரிதும் இல்லை. நமது நிலங்களை அபகரித்த காலனித்துவ சக்திகளால் உறுவாக்கப்பட்ட கலகக்காரர்கள். அவர்கள் வெளியேறுகையில் நமது நிலங்களை சிறிது சிறிதாக பிரித்து அந்த கலகக்காரர்ளின் வாரிசுகளுக்கு உரிமையாக்கி அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொண்டனர்.

–யேமன் போருத்தவரை, குறுகிய பார்வையுள்ள ஆட்சியாளர்களும் அவர்களின் உறுதியற்ற அரசியல் தன்மையும், முதலாளித்துவ சித்தாந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் இன்றைய முஸ்லீம் உலகில் வறுமை நிலவுவதற்கு அடிப்படையான காரணமாகும், இது செல்வத்தின் விநியோகத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி மேலும் அவர்களின் மோசமான கட்டமைப்பு சீரமைப்பு கொள்கைகள் ஆகியவை முஸ்லீம் உலகின் பொருளாதார சிக்கலுக்கு நேரடி காரணமாக உள்ளது. இத்தகைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட பொதுவான தீர்வு, வறுமையிலிருந்து வெளியேறுவதைத்தடுக்கிறது. உண்மையில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை தங்களோடு போட்டியிடும் அளவிற்கு வளர்வதைத்தடுப்பதற்கு பல தடைகளை விதித்துள்ளனர்.

–முஸ்லீம் உலகில் நிலவும் சூழ்நிலை காலனித்துவ சகாப்தத்தில் இருந்து வந்துள்ளது என்று டேவிட் ஃப்ரெர்கின் (David Fromkin) கூறினார் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் பொருளாதார வரலாற்றில் நிபுணர். அவர் கூறியதாவது, “இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் கிறிஸ்தவ ஐரோப்பாவை கைப்பற்ற நூற்றாண்டுகளாக முயன்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ஆனால் பழைய ஓட்டோமான் பேரரசின் செல்வத்தின் பாரிய அளவு இப்பொழுது வெற்றி கொள்ளப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட அம் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள், மேற்கத்திய நலன்களை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் இந்த நாடுகள் ஒருபோதும் இணையாதவாறு பார்த்துக்கொண்டணர். பல நூற்றாண்டுகள் வியாபார அனுபவத்துடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உறுதியற்ற சிறிய நிலங்களாக பிரித்து தங்களின் ஆதரவாளர்களை அதிகாரத்தில் வைத்தனர். இதனால் இந்த நாடுகளின் வளர்ச்சியையும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தி மேற்குலகிற்கு அச்சுறுத்தலக ஆகுவதைத் தடுத்தனர். இந்த வெளிநாட்டு சக்திகள், அரேபிய வளங்களை மலிவாக வாங்க தங்கள் பொம்மை ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தங்கள் செய்தனர், வறுமையில் பெரும்பாலான குடிமக்கள் வாடும்போது இந்த ஆட்சியாளர்கள் பெரும் செல்வத்தை சேர்க்கின்றனர்.”

நபித்துவத்தின் அடிப்படையான கிலாஃபா இவ்வாறு ஏமனின் வறுமையை தீர்க்கும்:

–இஸ்லாம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையை வறுமை என வரையறுக்கிறது. அடிப்படை தேவை என்றால் உணவு, உடை, தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரம் என இஸ்லாம் வரையறுத்துள்ளது. இங்கு இஸ்லாம் முதலாளித்துவத்துடன் வேறுபடுகிறது, ஏனேனில் முதலாளித்துவம் வறுமையை வரையறுத்துள்ளது அதன் வரையறு மாற்றதக்கதல்ல.

–அதன் கொள்கையாக, கலிஃபா அனைத்து அத்தியாவசிய பயன்பாட்டு பொருட்களையும் பொது சொத்தாக அறிவிப்பார். இஸ்லாம் சொத்துக்களை மூன்றாக பிரிக்கிறது ; அது அரசு, பொது மற்றும் தனியார் சொத்து. பொது சொத்து சமூகத்திற்கு இன்றியமையாததாக கருதப்படும், இது பொதுமக்களுக்கு சொந்தமானது அதன் மூலம் ஈட்டும் வருவாய் அனைத்து குடிமக்களின் நன்மைக்காக வழங்கப்படும்.

இது நபி ﷺ ஹதீஸிலிருந்து பெறப்பட்டது.
‏الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلاَثٍ فِي الْمَاءِ وَالْكَلإِ وَالنَّارِ

முஸ்லிம்கள் மூன்று விஷயங்களில் பங்காளிகள்: நீர், மேய்ச்சல் நிலம் மற்றும் எரிபொருள்.

–உற்பத்தியை மட்டும் பெருக்குவதால் வறுமையின் பிரச்சனை தீராது மாறாக பொருளாதாரத்தைச் சுற்றிறுக்கும் விவசாய வளங்களை விநியோகம் செய்ய வேண்டும். கிலாஃபா விவசாய உற்பத்தியின் விநியோகத்தை உறுதி செய்யும். பல்வேறு கொள்கைகளால் இதை அடைய முடியும். உதாரணமாக, கைவிடப்பட்ட அல்லது தரிசு நிலத்தை ஒருவர் சாகுபடி செய்தால், அவர் அந்த நிலத்தின் உரிமையாளராவார்.

இது நபி ﷺ ஹதீஸிலிருந்து பெறப்பட்டது.

مَنْ أَعْمَرَ أَرْضًا لَيْسَتْ لأَحَدٍ فَهْوَ أَحَقُّ

எவருக்கும் உரிமையற்ற நிலத்தை யார் ஒருவர் பயிரிட்டாரோ அவரே அந்த நிலத்தைப்பயன்படுத்த தகுதியுடையவர்.

இந்த விதி அடிப்படையில் முஸ்லீம் உலகின் விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க முடியும். அரேபிய உலகின் பெரும்பகுதிகளில் ஏராளமான தண்ணீர் மற்றும் மிகவும் வளமான நிலங்கள் உள்ளன. நாட்டின் பெரும்பகுதி மக்கள் அந்த வளமான நிலங்களை விட்டு நகரங்களில் வசிக்க தொடக்கியதால் இந்த நிலம் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

கிலாஃபாவின் விவசாயக் கொள்கை, யேமன் நிலத்தின் விவசாய திறனைப் பூர்த்தி செய்யும், மேலும் இந்த கொள்கையால் கீழ் உள்ளவற்றை அடையும்:

1- சமீபத்திய இயந்திரங்கள் மற்றும் விவசாய நுட்பங்களை அபிவிருத்தி செய்யும், அதன் மூலம் உணவு தயாரிப்புகளை மேம்படுத்தும்.

2- பருத்தி, கம்பளி மற்றும் பட்டு போன்ற ஆடை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும், இவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அடிப்படைத் தேவைகள்.

3- வெளிநாட்டு சந்தையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தும், அவை சிட்ரஸ் பழங்கள், பேரித்தபழங்கள் போன்ற உணவுப் பொருட்களாக இருந்தாலும் அல்லது துணி வகைகள்ளாக இருந்தாலும் சரியே.

–கிலாஃபா அதன் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், குறிப்பாக அதில் நிபுணத்துவம் கொண்டவர்களை கண்டரிய வேண்டும். தற்போதைய முஸ்லீம் பகுதிகளுக்கு விவசாய முறைகளில் இந்த திறன்கள் இல்லை. துருக்கிய விவசாயிகளிள் சிலர் உலகில் மிகவும் திறமையானவர்களாக உள்ளனர், பாக்கிஸ்தானிய விவசாயிகளிள் சிலர் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளனர். விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலமும் அதற்கு தேவையான நிதி ஆராரங்களை நேரடியக வழங்குவதன் மூலமும் பெரிய பகுதியை விவசாய நிலங்களாக மாற்றலாம்.

–வேளான் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கும் விவசாய உற்பத்தியாளர்களை சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கும், இயற்கை மற்றும் காலநிலை சூழ்நிலைகளின் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும், விவசாய உற்பத்திக்கு தேவையான மூலபொருள்களை விநியோகிக்க கூடியவர்களாகவும், உற்பத்தி செய்யப்பட்ட விவசாய பொருள்களை வாங்கக் கூடியவர்களாகவும் கிலாஃபா அரசு சந்தைகளை உருவாக்க வேண்டும்.

ஃபிக்கா கொமாரா

ஹிஸ்புத் தஹ்ரீரின் மத்திய ஊடக அலுவலகத்தின் உறுப்பினர்.

Comments are closed.