சமீப பதிவுகள்

ஆய்வுகள்

நாங்கள் உங்கள் பின்னால் (உறுதுணையாக) நிற்கிறோம்!!!

turkey-burma

துருக்கிய வெளியுறவு அமைச்சர் Mevlüt Çavuşoğlu (மௌலுத் கௌசகொலு) ஈதுல் அல்ஹா நிகழ்வில் பேசுகையில் மியன்மாரின் மேற்கு பகுதியில் உள்ள ராஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வங்காளம் அதன் கதவுகளை திறக்க வேண்டும் என்றும் மேலும் துருக்கி அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை உம்மாவுக்குள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளைத் தூண்டி விடுகிறது. இது நமது இஸ்லாமிய அக்கிதாவில் இருந்து நேரடியாக பெறப்பட்ட ஒரு இயல்பான செயலாகும்,

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

«تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى

“நீங்கள் முஃமின்களாக இருப்பதை அவர்கள் காண்பார்கள், அவர்கள் தங்களுக்குள்ளே இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்; முஸ்லிம் உம்மாவானது மனித உடலை ஒத்திருக்கிறது ஏனெனில் உடலின் எந்த ஒரு பகுதிக்கும் சிறு துன்பம் ஏற்பட்டால் முழு உடலும் பாதிப்படையும்.”(ஸஹிஹ் புகாரி)

முஸ்லிம் உம்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களை பற்றிய கவலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக அறிக்கை வெளியிடுவது அவசியமாகிறது இதனால் துருக்கிய மந்திரி ஆரம்பத்திலேயே அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஏனெனில் வங்காளத்தின் பிரதமர் ரோஹிங்கியா முஸ்லிம்களை பற்றி “மியன்மாரில் வன்முறை காரணமாக அந்த நாட்டை விட்டு வெளியேறும் முஸ்லீம் அகதிகளுக்கு வங்காளம் பொறுப்பு ஏற்காது (அதாவது அடைக்கலம் தராது) என்று கூறியுள்ளார்”. இவரது இந்த அறிக்கை முஸ்லிம் உம்மாக்களின் மத்தியில் கடும்கோபத்தையும் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் பற்றவைத்துள்ளது.

நம்முடைய அகீதா நம்மை வடிவமைக்கிறது. முஸ்லிம்களின் நிலைமையை நாம் கருத்தில் கொள்ளும்போது நாமோ அல்லது நமது நேசத்திகுரிய இரத்தபந்த உறவினர்களோ, நண்பர்களோ அதே சூழ்நிலையில் இருப்பதை கற்பனை செய்ய வேண்டும் என்று அது நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அப்படியானால், ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க முடியும். அப்போதுதான், நாம் சரியான சீரான முறையில் செயல்பட முடியும்.இப்போது ரோஹிங்கியா முஸ்லிம்களின் இக்கட்டான நிலையை ஒரு கணம் சிந்திக்கலாம். லாயி லாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை) என்று கூறிய ஒரே காரணத்திற்க்காக மியான்மர் அரசாங்கத்தின் மிருகத்தனமான இராணுவக் கொலைத் தாக்குதலுக்கு உள்ளனார்கள். அந்த கொலைவெறி தாக்குதலிலிருந்து தப்பிக்க தங்கள் வீடுகளையும் கிராமங்களையும் விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட முஸ்லிம் சிறுபான்மை மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் குறித்து தற்போது துருக்கிய மந்திரி வெளியிட்டு இருக்கும் அறிக்கை பதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? இந்த மிருகத்தனமான ஆட்சியில் ஏற்கனவே கொல்லப்பட்டோரின் உயிருக்கு நியாயம் வழங்கப்படுமா? அது(அந்த அறிக்கையானது) பிரச்சினையை தீர்ப்பதோடு, மியன்மார் இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்களை நிறுத்த முற்படுமா? ஆனால் மிக மிக முக்கியமானது, பெரிய அநீதிக்கு எதிராக நாம் எழுந்து நிற்காமல் இருந்ததே, ஒரு முஸ்லீமாக இப்போது நாம் தாக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

மியான்மர் இராணுவத்தின் படுகொலைகளுக்கும், அநியாயத்திற்க்கும் முடிவுகட்டுவதற்கு, NATO அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவப்படையைப் பெற்றுள்ள துருக்கி ஒரே ஒரு சொல் சொன்னால் போதும், அவர்களின் இராணுவப்படையைப் முஸ்லீம் சகோதர சகோதரிகளை பாதுகாப்பதற்காக களத்தில் நிற்கும். எனவே, மியான்மரில் நிலவும் சூழ்நிலையை எதிர்நோக்கும் துருக்கிய மந்திரிக்கு இது பொருத்தமான தருணம். எனவே துருக்கி குறைந்த பட்சம் தனது அறிக்கையில் இராணுவத்தின் வன்முறை தறபோது நிறுத்தப்படாவிட்டால் துருக்கிய இராணுவம் தலையிட்டு முஸ்லிம்களை காப்பதற்கு தயாராக இருப்பதாக கூறலாம், ஆனால் அதை விடுத்து அவர்கள் பொருளாதார செலவினங்களை ஏற்று கொள்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

நாம் அனைவரும் ஒரே உம்மத்தாக இருப்பதால் நாம் நமது பிரச்சினைகளை அணுகும் அதே விதத்தில் மற்ற முஸ்லிம் சகோதரர்களின் பிரச்சனைகளையும் நாம் ஒரு உம்மாவாக அணுக வேண்டும் – அப்போதுதான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அதன் வேரை உண்மையில் களைய இயலும். இதன் பொருள் என்னவென்றால், பிரச்சினையின் அறிகுறிகளையும், சிக்கல்களுக்கான காரணங்கள் மற்றும் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றிற்கும் இடையே வேறுபாடுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் தற்போதைய நிலைமையை ஆராயும் போது, முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு, வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளர்கள் என்ற அறிகுறிகள் தெரிகின்றன மேலும் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டும் வெளியேற்றபட்டனர். ரோஹிங்கியா முஸ்லிம்களைப் பாதுகாக்கும் எந்தவொரு அமைப்பும், அதிகாரமும் இல்லை என்பதே இந்த பிரச்சினைக்கான காரணம். எந்த இராணுவமும் அவர்களை பாதுகாப்பதற்கு வருவதில்லை! இந்த (மியன்மார்) குற்றவாளிகளை நீதிக்குமுன் (நிறுத்த) கொண்டுவர (அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர) எந்த அதிகாரமும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

தங்களை முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று கூறிகொள்ளும் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் நாடுகளை கட்டமைக்கும் (ஒழுங்கமைக்கும்) போது அல்லது தங்கள் படைகள் (கட்டமைத்து) ஏற்பாடு செய்யும் போது அல்லாஹ்வின் ஷரியா (முக்கியத்துவத்தை பற்றியோ அல்லது அல்லாஹ்வின் ஷரியாவை மேலோங்க செய்வதன் அவசியத்தை) பற்றியோ குறிப்பிடுவதில்லை என்பதே இந்த பிரச்சினைக்கான காரணம்.

கட்டுரையின் தொடக்கத்தில் துருக்கியின் மந்திரி கூறியது போல (ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வங்காளம் அதன் கதவுகளை திறக்க வேண்டும் மேலும் துருக்கி அனைத்து செலவினங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்) பொருளாதார உதவி செய்வது என்பது பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையாது. மேலும் வங்காளம் அதை செய்தால். அது எந்தவொரு நியாயத்தையும் கொண்டுவராது, ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதிக்கப்படக்கூடிய நிலைப்பாட்டை நிச்சயமாக மாற்றாது.

இந்த பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு முஸ்லீம் உலகின் படைகளை (இராணுவத்தை) ஒரே தலைமையின் கீழ் ஒருங்கமைப்பதும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு இந்த செய்தியை பரப்புவதுமே ஆகும். அப்போதுதான் நாம் நாங்கள் உங்கள் பின்னால் (உறுதுணையாக) நிற்கிறோம்.! என்று உறுதியாக கூறமுடியும்.

وَإِنِ اسْتَنْصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் (சூரா அன்ஃபால்: 72)

யாஸ்மின் மாலிக்

Comments are closed.