சமீப பதிவுகள்

ஆய்வுகள்

நமது இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய அஃகிதா மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்

Yemeni-Children-Killed

சவுதி அரேபியா இராணுவ கூட்டணி. இது யு.எஸ் மற்றும் இங்கிலாந்திலிருந்து இராணுவ தளவாடங்கள், ஆயுத உதவிகள் மற்றும் அரசியல் ஆதரவை பெருகிறது. மேலும் யேமனில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நமது இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய அஃகிதா மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்.

சவுதி அரேபியா இராணுவ கூட்டணி, யு.எஸ் மற்றும் இங்கிலாந்திலிருந்து இராணுவ தளவாடங்கள், ஆயுத உதவிகள் மற்றும் அரசியல் ஆதரவை பெருகிறது- மேலும் யேமனில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இது இரகசியமான ஐ.நா. அறிக்கையாகும்.

யேமனில் கடந்த ஆண்டு இறந்த மற்றும் காயமடைந்த குழந்தைகளில் 51 சதவீதம் சவுதி தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக இருந்தாகவும், இந்த மரணங்கள் “ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உயர்ந்தவை” எனவும் ஐ.நா. ஒரு அறிக்கையை தயார் செய்துகொண்டுயிருக்கிறது. இவ்வறிக்கை இன்னுமும் மாற்றம் பெரும் என்பதால் அவைகள் முடிந்தவுடன் அதை பொதுமக்களிடம் சமர்பிக்கப்படும். மேலும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாக சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. [The Independent]

மேலே கூறப்பட்ட கட்டுரையைப் படித்தபின், பெரும் அநீதிகள் நிறைந்த இந்த யுத்தத்தைப்பற்றி, இஸ்லாமிய பார்வையிலிருந்து நம் பல கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.

ஆனால் சவூதி அரேபியா வலியுறுத்துகின்ற கடைசி வாக்கியத்துடன் தொடங்குவோம்: “இது சர்வதேச சட்டத்தின்படி செயல்படுகின்றது”, அதன் இராணுவ நடவடிக்கையின் மூலம் அதிகமான குழந்தை இறப்பிற்க்குபின்னும் இவ்வாறு வலியுறுத்துகிறது. சவுதியின் இந்த பதில் மூலம் உம்மத்தின் இதயத்தில் மையம் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு பற்றிய எந்த சிந்தனையும் அதற்கு இல்லை என்பதை மீண்டும் இஸ்லாமிய உலககிற்கு தெளிவாக வெளிப்படுத்தி காட்டுகிறது. இஸ்லாமிய அஃகிதாவின் அடிப்படையில் அரசியலமைப்பு, சட்டங்கள், வெளியுறவு கொள்கை போன்றவற்றை கொண்ட ஒரு நாடு, இந்த பிரச்சினையில் இன்னும் சந்தேகப்படக்கூடிய சிலருக்கு நாம் கேட்கும் கேள்வி என்னவேன்றால் அப்பாவி முஸ்லீம்கள் இரத்தத்தின் பெரும் இழப்பை நியாயப்படுத்த “சர்வதேச சட்டம்” வேண்டுமா அல்லது அல்லாஹ்(சுபு) விதித்த விதிமுறைகள் வேண்டுமா.

சவூதி அரேபியா உண்மையிலேயே, உம்மத்தின் இதயத்தில் மையம் கொண்டிருக்கும் இஸ்லாத்தால் ஆளப்படும் நாடாக இருந்தால், “சர்வதேச சட்டத்தை” விட மிக அதிகமான எடையைக் கொண்டதாக இஸ்லாமிய ஷரியா இருந்திருக்கும்.

وَمَن يَقْتُلْ مُؤْمِناً مُّتَعَمِّداً فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَالِداً فِيهَا وَغَضِبَ اللّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَاباً عَظِيماً
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டணை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான், இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (அன்-நஸா: 93)

« لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم »
ஒரு முஸ்லீம் கொல்லப்படுவதை விட இந்த உலகம் அழிவது அல்லாஹ்விற்கு மிகவும் இலேசானது. (திர்மிதி)

இவ் அறிக்கையில், “இது சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றது”, இவர்களின் தீர்மானங்கள் மற்றவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்று உம்மத்திற்கு தெளிவாக தெரியும். இவ் விஷயத்தில் முஸ்லீம் குழந்தைகளின் உயிரைவிட, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவர்களிடமிருந்து போர் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்கி அவர்களுக்கு லாபம்யிட்டி அவர்களிடம் நல்லுறவை பேனுவதே இவர்களின் கொள்கை. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர்களுக்கு பிரிட்டன், சவுதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சவூதி அரேபியாவுக்கு சென்று வந்த பின்னர் அவர் கூறியதாவது, “மிகப்பெரிய நாள், அமெரிக்காவிற்கு மிகப்பெரிய முதலீடு,” மேலும் “அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடுகள் மற்றும் வேலைகள், வேலைகள், வேலைகள்.” என்று.

இந்த விஷயத்தில் மீண்டும் இஸ்லாமிய ஆட்சியாளர்களை பொருத்தவரை, காலனித்துவ ஆக்கிரமிப்பு காலத்திலிருந்து அவரது உண்மையான எஜமானர்களுக்கு தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வந்தனர், தற்போது பிரின்ஸ் பின் சல்மான் அவ்வாரே செயல் படுகிறார். மேலும் கூறுவதென்றால் தற்போதைய ஆட்சியாளர்கள் இஸ்லாமிய அஃகிதாவின் அடிப்படையில் தங்களுடைய அரசியல் செயல் பாடுகளை மேற்கொள்ளாதவரை உம்மத்திற்கு எவ்வித பயனும் அளிக்கப்போவதில்லை. முஸ்லீம் உம்மத்தாகிய நாம் உண்மையில் யேமனின் குழந்தைகள் மேல் அக்கறை உள்ளவர்களாயின், தங்கள் காலனித்துவ எஜமானர்களின் கை பொம்மைகளாக செயல் படும் இந்த முஸ்லீம் தலைவர்களின் உண்மை முகத்தை வெளிபடுத்த வேண்டும்.

« نَهَى رَسُولُ اللَّهِ عَنْ قَتْلِ النِّسَاءِ وَالْوِلْدَانِ »
பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டித்துள்ளார்கள்.

யாஸ்மின் மாலிக்

Comments are closed.