சமீப பதிவுகள்

ஆய்வுகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களின் தூய்மையான இரத்தத்தை(ஓட்ட) பதம்பார்க்க பாக்கிஸ்தானின் ஆட்சியாளர்கள், மியான்மர் இராணுவத்திற்கு JF-17 இராணுவ தடவாலங்களை வழங்கியுள்ளார்கள்

pak-burma

முஸ்லீம்களின் எதிரிகளை வலுப்படுத்தும் ஆட்சியாளர்கள்!!!

மியான்மரின் இராணுவ தலைமையிலான ரோஹிங்யா முஸ்லீம்களின் படுகொலை காரணமாக பாகிஸ்தானின் உண்மையான உன்னதமான முஸ்லீம்கள் பல நாட்களுக்கு ஓய்வெடுக்கவில்லை. ரோஹிங்யா முஸ்லீம்கள் பற்றிய சிந்தனையில் அவர்கள் பல நாட்கள் உறங்கவில்லை. மியான்மர் இராணுவம் (Tatmadaw) மற்றும் துணைப்படை படைகளால் ஆகஸ்ட் 25, 2017 முதல் சிறுவர்கள் தலை துண்டித்து, பொதுமக்களை உயிருடன் எரித்தனர். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் செப்டம்பர் 3 வரை தங்கள் வாயைமூடி கள்ள மௌனம் காட்டிவந்தனர், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் ஒரு முதுகெலும்பில்லாத தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டது, இது போன்ற அறிக்கையை வெளியிடுவதற்கு பதிலாக அவர்கள் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பதே சிறந்தது. இன்னும் சொல்ல போனால் தற்போது ஆறுதலான வார்த்தைகளை விட விவேகமிக்க செயல்களே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.

இன்னும் மிக மோசமாக, பாகிஸ்தானின் தற்போதைய ஆட்சியாளர்கள் “Tatmadaw” என்ற மியன்மாரின் இராணுவப் படைகளை பலப்படுத்துவதற்காக JF-17 Thunder ரக இராணுவ விமானங்களை அந்நாட்டிற்கு அளிப்பதற்கு தீவிரமாக உள்ளனர். JF-17 Thunder ரக பதினாறு இராணுவ விமானங்களை தருவதற்கு 2015 ஆம் ஆண்டில், இரு நாடுகளிடையே கையெழுத்தானது. மேலும் 2017 க்குள் முதலாவது விமானம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மியான்மார் (பர்மா), பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் அதன் சொந்த மண்ணில் மூன்றாம் தலைமுறை இராணுவ விமானகளை உருவாக்கும் உரிமத்தையும்க் கொண்டது.

பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் மியன்மாரில் இந்தியாவின் இருப்பை இல்லாமல் செய்யவும் இந்தியாவிற்கு எதிராக தங்களை வலுபடுத்தமுடியும் என்று தாங்கள் செய்யும் காரியத்திற்கு வரட்டு நியாயத்தை கற்பிக்கின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை ஒரே தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டுவதன் மூலம் ஒரு இஸ்லாமிய கிலாஃபா அரசு உருவானால் அது இந்தியாவைக் காட்டிலும் மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும் என்று அவர்கள் கருதவில்லை. ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களின் எதிரிகளை வலுப்படுத்தும் ஆட்சியாளர்களாகவே உள்ளார்கள்.

இந்த முதுகெலும்பற்ற ஆட்சியாளர்கள் இஸ்லாமிய ஆட்சியின் (கிலஃபாத்தின்) சகாப்தத்தில் இந்திய துணைக்கண்டம் (தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்காளம், மியன்மார், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய) எவ்வாறு இருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவில்லை.

சுல்தான் ஔரங்கசீப் ஆலம்கீர் ஆட்சியின் போது மியன்மாரில் பெயர்பெற்ற வலிமைமிக்க பௌத்த மதத்தின் முஷ்ரிக்களின் ஆட்சி நடைபெற்று வந்தது, அப்போது மியன்மாரின் மேற்கு எல்லைப்புற பகுதியில் உள்ள ராஹைன் மாநிலம் தனது முழு அதிகாரத்தையும் இராணுவ பலத்தையும் கொண்டு இஸ்லாமிய ஆட்சியின்கீழுள்ள சிட்டகாங் (Chittagong) பகுதியில் அதாவது தற்போதைய வங்காளத்தில் தனது எல்லையையும் சாம்ராஜ்யத்தையும் விரிவுபடுத்த நினைத்தது. சில நேரங்களில் அவர்கள் முஸ்லிம் பகுதியில் தாக்குதலும் மேற்கொண்டார்கள்.

ஔரங்கசீப் அவர்களின் பிராந்தியத்திலும், மற்ற பரந்து விரிந்த இஸ்லாமிய பிராந்தியத்திலும் உள்ள முஸ்லீம்கள் மீதான அவர்களின் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர உறுதியாகவும் கடுமையாகவும் செயல்பட்டார். சிட்டகாங் பகுதியை போர்த்துகீசிய ஆளுகையின் கீழிருந்து தனிமைப்படுத்தி 1666 ஜனவரியில் விடுவித்தார், 6,500 இராணுவவீரர்கள் மற்றும் 288 போர் கப்பல்கள் துணைக்கொண்டு வெறும் முப்பத்தி ஆறு மணி நேர முற்றுகைக்குப் பிறகு, ராஹைன்னின் கடுமையான அடக்குமுறை இராணுவத்தை வீழ்த்தினார். இது தவறான தலைமையின் வழிகாட்டுதலின் கிழுள்ள அரசாங்கத்திற்கும், இஸ்லாமிய தலைமையின் வழிநடத்துதலால் பாடுபடும் ஒரு தலைமைக்குமான வித்தியாசம்!

பாகிஸ்தானின் முஸ்லிம் இராணுவ வீரர்களே….!

வெற்றியானது உங்களது மகத்தான திறமையின்மையயோ அல்லது நீங்கள் உங்கள் உயிர் தியாகம் செய்யும் ஆசையயோ விரும்புவதில்லை மாறாக, ஒரு வலுவான உறுதிமிக்க இஸ்லாமிய தலைமையை பொருத்துள்ளது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழியிலும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் கூக்குரலுக்கு பதிலளிக்குமாறு ஹிஸ்புத்தஹ்ரி உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்களுக்காக மறுமையில் விசாரிக்க படுவீர்கள்.

وَمَا لَكُمْ لاَ تُقَاتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَانِ

“பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்..”
(சூரா அன்னிஷா 4 : 75)

«اَلْمُسْلِمُ أَخُو اَلْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ، وَلَا يَخْذُلُهُ»

“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லீம்க்கு சகோதரர் ஆவார். அவர் தவறிழைக்கவோ, அநீதம் செய்யவோ கைவிடவோ மாட்டார். (முஸ்லீம்)

உன்னதமான இஸ்லாமிய சகோதரர்களே..!

ஒடுக்கப்பட்டவர்களின் அழுகைக்கு பதிலளிப்பதற்காகவும், உங்கள் உயிரையும், உடைமைகளையும், நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க இந்த முதுகெலும்பற்ற ஆட்சியாளர்களை புறந்தள்ளிவிட்டு மீண்டும் நபித்துவத்தின் பாதையில் கிலாஃபா ஆட்சியை மறு உருவாக்கம் செய்ய அல்லாஹ்வின் தூதருக்கு சஹாபாக்கள் உதவி செய்தது போன்று ஹிஸ்புத்தஹ்ரிருக்கு அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் உங்கள் ஆதரவையும் உதவியையும் செய்ய வேண்டும்

Comments are closed.