சமீப பதிவுகள்

ரோஹினிய இனப்படுகொலையை நடத்துகின்ற கொலைகார மியன்மார் இராணுவத்துடன், கூட்டு நடவடிக்கைகளை முன்வைப்பதன் மூலம் ஹசினாவின் அரசாங்கம் புதிய துரோகத்தின் உச்சத்தை அடைய முயல்கிறது

mynmar-border

 

மியான்மர் இராணுவம் “தடை நீக்குதல் நடவடிக்கை” என்ற பெயரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய துவங்கியுள்ளது. ராகைன் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு, அங்கு உள்ள காவல் சோதனை சாவடி ஒன்றில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலை காரணமாக கூறிவருகின்றது. (அந்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல என்பது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை) இந்த நிலையில் அண்டை நாடான வங்காலதேசத்தை ஆட்சி செய்யும் “ஹசினா”, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மியான்மர் இராணுவத்திற்கு உதவப்போவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 28th (2017 ), திங்கள்கிழமை இந்த செய்தியை வங்காளதேச வெளியுறவு துறை அமைச்சகம், முஸ்லிம்களை கொள்ளும் மியான்மர் அரசிடம் அதிகார பூர்வமாக முன்மொழிந்தது. வங்காளதேச அரசாங்கம் மியான்மரின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்துவதும், கடந்த சில நாட்களாக மிக மோசமான துயரமான சம்பவங்களைக் கண்டிருக்கும் மியான்மரின் 1.1 மில்லியன் துன்புறுத்தப்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்களின் நிலையை கருத்தில் கொள்வதில்லை என்பது இதன் மூலம் வெளிப்படையாக உணரமுடிகின்றது.

இத்தகைய ஆட்சியாளர்களை பற்றி ரசூலுல்லாஹ் ﷺ அறிவிக்கையில் :- “நிச்சயமாக, வாக்களிக்கப்பட்ட அந்த இறுதி நாளின் நாட்களுக்கு முன், ஏமாற்றம் தரக்கூடிய ஆண்டுகள் உள்ளன, அன்று உண்மையாளர்களை நம்ப மறுப்பார்கள், பொய்யர்களின் மீது நம்பிக்கைக்கொள்வார்கள். நம்பகமானவர் துரோகம் செய்வதாக குற்றம் சாட்டப்படுவர், துரோகம் இழைப்பவர்களையே நம்புவார்கள். ருவய்பிதம் பேசுவர்”, “ரூவய்பிதா என்றால் என்ன? என்று கேட்கையில்”, ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள் :- எந்த ஒரு தனி சிறப்பும் இல்லாத, விவேகமற்ற, புத்தியற்ற மனிதன், அவன் பொது மக்களின் விவகாரங்களில் பேசுவான். மக்கள் அவனை ஆட்சி செய்ய நம்பகமானவர் என்று கருதுவர், அவனும் மக்களுக்காக பேசுவான். (அஹ்மத் , இபின் மாஜாஹ்).

நிச்சியமாக, ரோஹிங்ய மக்களை கைவிட்டு, மியான்மர் இராணுவத்துடன் ஒத்துழைத்து முஸ்லிம்களை கொல்வதின் மூலம் ரூவய்பித ஹசீனாவின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24, 2017 முதல், மியான்மர் இராணுவத்தினர், ஆயுதம் ஏந்திய புத்த மத தீவிரவாதிகளுடன் இணைந்து ராகைன் மாநிலத்தில் உள்ள பொது மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்கிவருகின்றனர். ஆயிரக்கணக்கான ரோஹிங்ய மக்கள் வீடுகளை இழந்து, மனிதர்கள் வசிக்காத வங்காளதேச நதிக்கரைகளில் சிக்கியுள்ளனர். அவர்களுடைய கண் முன்னே நடந்த கொடூரங்களிலிருந்து அவர்கள் மீள முடியாத துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆண்களை அவர்களின் குடும்பத்தினர்கள் கண் முன்னே சுட்டு கொல்லப்படுகின்றனர், குழந்தைகள் (பிறந்த சிசுக்கள்), நசுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும் கொல்லப்படுகின்றனர். எல்லைகளை கடந்து தப்பி செல்ல முயலும் மக்களையும் சுட்டு கொல்லுகின்றனர். இந்த நரகத்தை விட்டு தப்பி சென்று அண்டை நாடான வங்காளதூசத்தில் தஞ்சம் புக நினைத்தால், முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் வங்காளதேச அரசு அவர்களை மறுபடியும் அதே நரகத்திற்கு பின் தள்ளுகிறது இல்லையேல் அவர்களை வங்காள விரிகுடாவில் குவித்து விடுகின்றது. கிட்டத்தட்ட 3000 ரோஹிங்ய மக்களை வங்காளதேச எல்லை பாதுகாப்பு ராணுவம் வெட்கமின்றி சுற்றிவளைத்து உள்ளனர். இதில் திருப்தி அடையாத ஹசினாவின் அரசு, முஸ்லிம்களை கொல்லுும் நடவடிக்கைகளில் மியான்மர் அரசுடன் கூட்டு நடவடிக்கைகளில் தானும் இணைந்து உதவுவதாக முன்மொழிந்துள்ளது. ஆனால், சுபஹானல்லாஹ், துரோகம் இழைக்கும் ஹசினா அரசிற்கும், உம்மத்திற்கும் உள்ள இடைவெளி தெளிவாக தென்படுகிறது, வங்காளதேச அரசோ, எல்லை பாதுகாப்பு துறையோ துளி அளவும் இறக்கம் காட்டாத நிலையில், வங்காளதேசத்தில் வாழும் ஏழை மக்கள், அவர்களால் இயன்ற அளவு உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு அவர்களின் இஸ்லாமிய சகோதர சகோதிரிகளுக்கு உதவி வருகின்றனர். ஆகஸ்ட் 27 2017 அன்று தி டெய்லி ஸ்டார்! பத்திரிக்கை செய்தி வெளியிடுகையில், மீண்டும் ஒரு முறை ரோஹிங்யா மூலமாக, முஸ்லிம் உம்மத்தின் உணர்வுகள் ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்கு எதிராக சென்றுள்ளதை நிரூபித்துள்ளது. நாம் ஒரு உம்மத் என்ற சகோதரத்துவ உணர்வுகள், செயற்கையாக நம்முள் நமது ஆட்சியாளர்களால் செலுத்தப்படும் சிந்தனைகளை விட கடந்து நிற்கின்றது.

வங்காளதேச இராணுவத்தில் உள்ள நேர்மையான முஸ்லிம்களே!!!, அரக்கானிலுள்ள உங்களுடைய சகோதர சகோதிரிகளின் இறைஞ்சுதலுக்கு செவிமடுங்கள்!, உங்கள் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு துரோகம் இழைக்கும் போது, அவர்களின் அழு குரலுக்கு நீங்கள் செவி சாய்க்காமல் இருக்காதீர்கள். அவர்களின் இந்த நெருக்கடியான சுழலுக்கு உங்களுடைய கைகளில்தான் நிரந்திர தீர்வு உள்ளது. அது நிச்சியமாக கொலைவெறி கொண்ட மியான்மர் ராணுவத்திடம் அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்தி தருவதல்ல. மாறாக நாங்கள் உங்களுக்கு உங்கள் மீதுள்ள கடமையை நினைவூட்டுகிறோம். கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்காக பாடுபடும் நேர்மையான மற்றும் தைரியமான ஹிஸ்புத்தஹ்ரீரின் தலைமையின் கீழ் நீங்கள் ஒருங்கிணைய வேண்டும், மியன்மரை நோக்கி படையெடுத்து ஆசிர்வதிக்கப்பட்ட கிலாஃபத்தின் நிழலின் கீழ் கொண்டு வர வேண்டும். ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியற்ற நிலை, அவர்கள் மேற்கொள்ளும் துயரங்கள், கிலாஃபத் 1924 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதற்கு பின் முஸ்லிம்களின் இரத்தம் எவ்வளவு மலிவாக மாறியுள்ளது என்பதை தெளிவு படுத்துகின்றது. உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேசியவாத அமைப்புமுறை உங்களை இது மட்டுமே உங்கள் பகுதி என்ற கூண்டில் அடைத்து வைத்துள்ளது. இதனால் தான், ரோஹிங்ய முஸ்லிம்களின் அழுகுரல்கள் உங்கள் காதுகளுக்கு எட்டுவதில்லை. இவ்வாறு இல்லையென்றால் இன்று உங்கள் மத்தியில் ஒரு முகமத் பின் காசிம் எழுந்து அரக்கான் பகுதியை மீட்டெடுத்து இருக்க முடியும். ஆதிகாரத்தின் திறவுகோல் உங்களிடத்தில் தான் உள்ளது. அதிகார பலம் அனைத்தும் நீங்கள் பெற்றிருக்க, இந்த நிர்க்கதியற்ற முஸ்லிம்களை புத்த மத வெறியர்களிடமே திருப்பி விரட்டுவதற்கும், அவர்களை கொல்லுவதற்கு துணை புரிவதற்கு இராணுவத்தை அனுப்புவதற்குமான தைரியத்தை இந்த துரோக ஆட்சியாளர்களுக்கு யார் கொடுத்தது?, ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் கட்டளை உங்களை உலுக்கவில்லையா?

«الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ…»
ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான், எனவே ஒருவர் மற்றவரை ஒடுக்கக்கூடாது, மற்றும் அவர்களை ஒரு ஒடுக்குமுறைக்கு ஒப்படைக்கவும் கூடாது. (புஹாரி)

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் சகோதர சகோதரிகள் கொல்லப்படும் போது மெத்தனமாய் அமர்ந்து இருக்காதீர். உங்களின் துரோக ஆட்சியாளர்கள் உங்களுடைய சகோதர சகோதிரிகளின் உயிரை பறிக்கும் இறைச்சிக்கூடத்திற்குள் தள்ளும் போது, உங்கள் செயலற்ற தன்மைக்கு ஜஹன்னதில் நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்பதை நினைத்து அஞ்சிக்கொள்ளுங்கள். முஸ்லிம் இராணுவ அதிகாரிகளே, நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்!, முஸ்லிம்களின் கௌரவத்திற்கு எல்லைகளை கடந்த அரணாய் இருந்தது கிலாஃபத் மட்டுமே.

வங்காளதேசத்தில் வாழும் முஸ்லிம்களே, உங்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுகிறோம், ரோஹிங்யா முஸ்லிம்களின் துயரத்திற்கு நிரந்தரமான முடிவைக் கொண்டுவரும் உண்மையான நடவடிக்கைகள் எடுக்க முன்வாருங்கள். எங்களுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு, நபி ﷺ வழியில் கிலாஃபத்தை மீள் எழ செய்யுங்கள். கிலாஃபத்தால் மட்டுமே முஸ்லிம்கள் ஒன்று இணைக்கப்பட்டு உறுதியான வலுவான நிலைக்கு திரும்ப முடியும். முஸ்லிம்களின் கண்ணியம், மரியாதை மற்றும் செல்வம் பாதுகாக்கப்படும்.

வங்காளதேசத்தின் எல்லையிலுள்ள ஏழை முஸ்லிம்கள், அவர்களின் ரோஹிங்ய சகோதர சகோதிரிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்கள் உங்கள் பங்கிற்கு உங்களால் இயன்ற, உங்களின் தொடர்பில் உள்ள இராணுவ ஆதிகாரிகளிடம், இந்நிலையில் அவர்களின் கடமைகளை நினைவூட்டுங்கள், முஸ்லிம்களின் இந்த துயர் நிலைக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை உணர்த்துங்கள், வாக்களிக்கப்பட்ட கிலாஃபத்தின் தலைமைத்துவத்துக்கு கீழ் முஸ்லிம்கள் ஒன்றிணைக்கப்பட்டால் மட்டுமே முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை விளக்குங்கள்.

وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22.40)

ஊடக அலுவலகம் வங்காளதேச பிரிவு, செவ்வாய்க்கிழமை, துல் ஹஜ் 7,1438.

Comments are closed.