சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப் பார்வை 06.09.2017

north-korea

தலைப்புச் செய்திகள்:

மியான்மர் மோதல்

சிரிய இராணுவம் டேர் அல் ஜொருக்குள் நுழைகிறது

வட கொரியா அமெரிக்காவைச் சீண்டுகிறது

மியான்மர் மோதல்

ஒரு வாரத்திற்கு முன்பு ராஹைன் மாநிலத்தில் வன்முறை வெடித்தது பலர் கொல்லப்பட்டனர் மேலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டனர். மியான்மர் பாதுகாப்புப் படையினர் மற்றும் பௌத்த கும்பல்கள் தங்கள் கிராமங்களை எரிப்பதாக ராஹைன் பகுதியுலுள்ள மக்களும் அகதிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.ரோஹிங்கியா போராளிகளால் கடந்த மாதம் 20 க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுப்பதாக மியன்மார் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த மோதலால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லீம் பொதுமக்கள் என்பது தெளிவு. மியான்மரில் உள்ள மிக வறட்சியான பிராந்தியமான ராஹைன் பகுதியில் ஒரு மில்லியனுக்கும் மேலாக ரோஹிங்கியா முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் உள்ளன. ஆனால் பெளத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் அவர்கள் பல கட்டங்களாக (தசாப்தங்களாக அல்லது சந்தர்பங்களில்) துன்புறுத்துதலை அனுபவித்து வருகின்றனர், பெளத்த நாடுகளின் பூர்வ குடிகளாக முஸ்லிம்கள் இருந்தபோதிலும் அங்கு அவர்கள் குடிமக்களாக கருதப்படவில்லை. இவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஷேக் ஹசீனா (அல்லாஹ் தனது கடுமையான தண்டனையை அவளுக்கு துரிதப்படுத்தட்டும்) முஸ்லிம் எதிரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு ரோஹிங்கியாவிலிருந்து முஸ்லிம்கள் தங்கள் உடமையையும் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு அங்கிருந்து தப்பித்து வங்காளதிற்க்குள் தஞ்சம் புகுவதை தடுக்க காவல்துறையினருக்கு முஸ்லீமுக்கு எதிராக உத்தரவு கொடுத்துள்ளார். மாறாக அல்லாஹ் பொருத்தத்தை அடைவதற்காக வங்கதேச காவல்துறையினர் அவரது நேரடி உத்தரவை புறக்கணித்துள்ளனர். அல்லாஹ் அவர்களை பொருந்திகொல்வானாக..! மியான்மர் நாட்டில் எங்கள் சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கும் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைதியை நிலைநாட்டவும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் கிலாஃபத் வந்தே தீரும். ஆனால் அதற்கான நேரம் வரும் வரை அங்கு(மியன்மார்) வன்முறை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

சிரிய இராணுவம் டேர் அல் ஜொருக்குள் நுழைகிறது

இந்த வாரம் சிரியா போரில் அதன் இராணுவம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ISIS இன் தலைநகரம் டேர் அல் ஜொரை தனது கட்டுபாட்டுக்குள் எடுத்துக் கொள்ள சிரியன் இராணுவம் முற்பட்டது. அல் அசாத், ரஷ்யா, ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் ஆகியவற்றின் கூட்டணி மூலம் ஊடுருவி ஏற்கனவே தனது வெற்றியை அறிவிக்க தொடங்கியது. ஈராக்கைப் போன்றே, படைகளை பலப்படுத்துவதற்காக இத்தகைய பெரும் நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன, முறையாக சட்டபூர்வமாக அப்பகுதியை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தங்கள் ஆட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும். இது சிரியா போருக்குப் பிறகு ஆட்சி செய்வதற்கான ஒரு சாத்தியமான வாய்ப்பாக அது அமையும். எனினும் கழுத்தில் உள்ள எதிர் சக்திகள் அதை அனுமதிக்காது.

வட கொரியா அமெரிக்காவை சீண்டுகிறது

வட கொரியா தனது அணு ஆயுதச் சோதனையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் நடத்தியது. வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனை சில நிலச்சரிவுகளை உருவாக்கியுள்ளதாக தோன்றுகிறது. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) மற்றும் சீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு 6.3 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது. வட கொரியாவின் இந்த அணு குண்டு சோதனை ரிக்டர் அளவுகோலில் 6.3 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுகுண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. முன்னதாக, மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணு ஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை intercontinental ballistic missile (ICBM) மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது. பல வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் அதற்கு பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், வட கொரியா இப்போது அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது மேலும் ஏவுகணைகளையும் செலுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ தலையீடு சியோல்லில் உள்ளது, தென் கொரிய தலைநகர் சியோல் வட கொரிய எல்லையில் இருந்து வெறும் 30 மைல்கள் தொலைவில் உள்ளதால் அதன் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் ஆகியவை அமெரிக்க நட்பு நாடுகளின் பேரழிவுக்கு காரணமாக அமைவதோடு அவற்றிற்க்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும். ஒரு சிற்றரசு பேரரசை அடக்க நினைக்கிறது.

Comments are closed.